Friday, November 14, 2008

பப்பு டைம்ஸ்

சம்பந்தியம்மா..என்னா சம்பந்தியம்மா!!

பப்பு இப்படித்தான் என்னை எதிர்கொண்டாள் கடந்த வாரத்தில் ஒருநாள் மாலையில் நான் வீடு திரும்பியதும்!! திகைப்பும், ஆச்சரியமும், எங்கிருந்துக் கற்றுக் கொண்டாளிவள் என்ற ஆர்வமும் மேலிட ஆயாவை நோக்கினேன்! ம்ம்..புரிந்தது, ஆனந்தம் எனும் தொடர்நாடகம் விட்டுச் சென்ற மிச்சம்!!


பப்புவிற்கு பேனாக்கள் மேது அலாதி பிரியம். மர அலமாரிகளும், சுவர்களும், நோட்டுகளும் நிரம்புகின்றன், அவள் எழுத்துருக்களாலும், வட்டங்களாலும். எத்தனை பேனாக்கள் இருந்தாலும் எல்லாம் அவளுடையதாகி விடுகின்றன. கையில் ஒரு கொத்துப் பேனாக்களுடன் தான் இருப்பாள், சில சமயம். அப்படி ஒரு இரவு, பேனாக்களை படுக்கையில் போட்டுவிட்டு தூங்கிவிட்டாள். காலையில் எழுந்தவுடன், அவற்றை கைகளில் எடுத்துக் கொண்டபோது, ஆயா பேனாவே இல்லையென்று சொன்ன நினைவு வந்தவளாக அவளிடம் சொன்னேன்,

ஆயாகிட்டே பேனாவை கொடுத்திடலாம், பப்பு!

இது என்னோட பேனாதானே..? - பப்பு.

ஆமா

அப்புறம் ஏன் ஆயாகிட்டே கொடுக்கணும்? நானே வச்சிக்கறேன் என் பேனாவை- பப்பு.

***********

கற்பனைகளும், பள்ளி நண்பர்களும், கேள்விகளும், தூக்கத்தில் கனவுகளும் நிரம்பியதாயிருக்கிறது அவளது நாட்கள்!! ஆனால், என் சின்னஞ்சிறு மூளை நினைவு வைத்துக்கொள்ள திணறுகிறது..:-(..அந்த நேரத்து ரசிப்போடு கடந்துப் போகிறது அக்கணங்கள்!!

************

புதிதாக Fox என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டிருந்தாள். இதுநாள் வரை தமிழில்தான் சொல்லிக் கொடுத்திருந்தோம். இப்போது இரண்டு மொழிகளிலும் விலங்குகளை அடையாளம் காண்கிறாள்! Fox என்று சொல்லிவிட்டு, என்னது Six-ஆ என்றாள்! ரைமிங் வார்த்தைகள்..:-))!


சிலசமயம் நான் கோபப்படும்போது அல்லது சத்தமாக வீட்டினருடன் பேசுவதைக் கேட்டால்,
ஏன் கஷ்ஷ்ட்ட்ப்படறே ஆச்சி? - என்று மிகவும் கரிசனத்துடன் கேட்பதில் கோபம் மறந்து சிரித்துவிடுகிறேன் நான்!

பப்புவுக்கும் மற்ற அனைத்து குழந்தைகளுக்கும் "குழந்தைகள் தின வாழ்த்துக்கள்"!!

15 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏன் கஷ்ஷ்ட்ட்ப்படறே ஆச்சி? - என்று மிகவும் கரிசனத்துடன் கேட்பதில் கோபம் மறந்து சிரித்துவிடுகிறேன் நான்!

-ஹி ஹி
அய்யோ பப்பு நல்லா பேசற போ.

ஆனந்தம் எனும் தொடர்நாடகம் விட்டுச் சென்ற மிச்சம்!!
மெகா சீரியல்களை நம்மை விட நம் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கின்றது.

நானே வச்சிக்கறேன் என் பேனாவை- பப்பு.
ஆமா பப்புவோட பேனாவை பப்புகிட்ட கொடுத்துடுங்க, இப்படி ஏன் கஷ்ஷ்ட்ட்ப்படுத்தறே ஆச்சி?

அமிர்தவர்ஷினி அம்மா said...

fox, six
ரைமிங் வார்த்தைகள்..:-))!
அதுவும் டைமிங்கா வருது.
கலக்கறே பப்பு

(என் அக்கா பெண்ணும் இப்படிதான், சின்னப்பிள்ளையாய் இருக்கும்போது
அம்மா அம்மா
சி ஏ டி - கேட் வருதும்மா
டி ஓ ஜி - டாக் பாரும்மா
என்று சொல்லுவாள்
நீளமான லிஸ்ட் இது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சம்பந்தியம்மா..என்னா சம்பந்தியம்மா!!

சூப்பர் சம்பந்தியம்மா

நல்லா இருக்கீங்களா சம்பந்தியம்மா

ராமலக்ஷ்மி said...

பப்புவுக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்:)!

அமுதா said...

/*ஏன் கஷ்ஷ்ட்ட்ப்படறே ஆச்சி? - என்று மிகவும் கரிசனத்துடன் கேட்பதில் கோபம் மறந்து சிரித்துவிடுகிறேன் நான்!*/
நல்ல பப்பு... :-)

ஆயில்யன் said...

//பப்புவுக்கும் மற்ற அனைத்து குழந்தைகளுக்கும் "குழந்தைகள் தின வாழ்த்துக்கள்"!!
//


நன்றி ஆச்சி!

எங்களுக்கும் தனியா ஒரு பதிவு போட்டு வாழ்த்து சொன்னதுக்கு!

(ஹய்ய்ய்ய் ஜாலி இன்னிக்கு லீவுதானே வீட்ல குந்திக்கிட்டு கார்ட்டூன் நெட் ஒர்க் பாக்கலாமே!)

ஆயில்யன் said...

//என் சின்னஞ்சிறு மூளை நினைவு வைத்துக்கொள்ள திணறுகிறது..:-(..///


ஆண்டவன் படைப்புல இது மாதிரி சின்ன சின்ன மேனுபாக்சரிங்க் மிஸ்டேக்ஸ் நடக்கும் பாஸ் நோ ஃபீலிங்க்ஸ்!

இன்னாருக்கு இன்னாரென்று கொடுத்திருக்கானே மூளை அன்று!

அப்படின்னு பாடிக்கிட்டு அதிகம் யூஸ் பண்ணாம் போய்க்கிட்டே இருங்க பாஸ்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கஷ்டப்படறேன்னு கேட்டாளா...ம்..:))

SUREஷ் said...

Fox என்று சொல்லிவிட்டு, என்னது Six-ஆ என்றாள்! ரைமிங் வார்த்தைகள்..:-))!

எதிகால டி.ஆர்

SUREஷ் said...

சாரி.. சாரி........


விஜய டி.ஆர்.

SUREஷ் said...

ஏன் கஷ்ஷ்ட்ட்ப்படறே ஆச்சி? - என்று மிகவும் கரிசனத்துடன் கேட்பதில் கோபம் மறந்து சிரித்துவிடுகிறேன் நான்!
உண்மை.....

cheena (சீனா) said...

அன்பின் அழகு பப்புவிற்கு இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துகள். மழலை சொவதெல்லாம் பதிவு செய்யவும் - பிற்காலத்தில் அப்பதிவுகளை அவளே படிக்க வேண்டும் - ரசிக்க வேண்டும் - மகிழ வேண்டும்.

cheena (சீனா) said...

அன்பின் அழகு பப்புவிற்கு இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துகள். மழலை சொவதெல்லாம் பதிவு செய்யவும் - பிற்காலத்தில் அப்பதிவுகளை அவளே படிக்க வேண்டும் - ரசிக்க வேண்டும் - மகிழ வேண்டும்.

rapp said...

இதுல முத்துவுக்கு ஒரு ரிப்பீட்டு:):):)

மங்களூர் சிவா said...

பப்புவுக்கும் மற்ற அனைத்து குழந்தைகளுக்கும் "குழந்தைகள் தின வாழ்த்துக்கள்"!!