Saturday, November 01, 2008

வாங்க பழகலாம், குழந்தைகளிடம்!!!

ஏதாவதொரு இடத்திற்கு திருமணத்திற்கோ அல்லது கெட் டூகெதருக்கோ செல்கிறோம்...அறிமுகமில்லாத பலர் குழுமியிருக்கிறார்கள். எத்தனை பேரிடம், புதிதாய் இருப்பவரிடம் நாம் சென்று பேசுகிறோம் அல்லது பழகுகிறோம்?
(நன்றி : படம் - www)

குழந்தைகளும் அதே போல்தான்! பழகிய முகங்கள், இடங்களைத் தவிர அவர்கள் எல்லாரிடமும் பாய்ந்து சென்று விட மாட்டார்கள் அல்லது அவர்களிடம் பேசி விடமாட்டார்கள். சில குழந்தைகள் அப்படியும் இருக்கலாம், ஆனால் இது அவர்களைப் பற்றியது அல்ல! ;-). ஆனால், ஏதாவது பொது இடத்திற்குச் சென்றால், நமது குழந்தைகள் எல்லாரிடமும் பயமின்றி, தயக்கமின்றி பழக வேண்டுமென்று ஒரு எழுதப் படாத விதி/எதிர்பார்ப்பு இருக்கிறது.

பப்பு பொதுவாக புதியவர்களிடம்(குழந்தைகள்பெரியவர்கள்) பழக தயக்கம் காட்டுவாள்! சிறிது நேரம் ஆக ஆக, கொஞ்சம் புன்னகை வரும், அவ்வளவுதான். யாராவது அவளிடம் வலிய வந்து பேசினால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசுவாள்.அதுவும், one at a time! ஆனால் அமைதியாக அப்சார்ப் செய்துக் கொண்டிருப்பாள். வீட்டிற்கு வந்த பிறகு அவர்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருப்பாள். அவர்களை அடுத்தமுறை பார்த்தால் கொஞ்சம் பரிச்சயம் ஏற்படும்!!

”பேச மாட்டாளா?” அல்லது ”என்ன மிங்கிள் ஆக மாட்டாளா?” என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு. அதுக்கு பதில் சொல்வது அவசியமா என்று என் மனதிற்குத் தோன்றினாலும், “இல்ல, கொஞ்சம் நேரம் ஆகும், பழகணும்” என்று கூறியிருக்கிறேன். இப்போது நானே ஒரு பார்க்குக்கு செல்கிறேன், அதற்காக, பார்க்கும் மனிதர்களிடமெல்லாம்
பேசிக் கொண்டா இருக்கிறேன்? எனக்குத் தெரிந்தவர்களிடம் மட்டும் தானே!! நமக்கே இப்படி என்றால், குழந்தைகள்..they come with the enviroment!

பப்பு, அமைதியாக இருக்க முடிவெடுத்திருந்தால், அதை மாற்ற நான் யார்! அவள் பேச/பழக் வேண்டுமா என்று முடிவெடுப்பது அவளது உரிமை. அதே சமயம், அவளுக்கு பேச/பழக வேண்டுமென தோன்றினாலும் அதை தடுப்பதும் என்னால் இயலாத காரியம்! சில சமயங்களில், நானுமே அவளை பிறருக்காக அவளை வற்புறுத்தியிருக்கிறேன், ஆனால் எனக்கு மனமில்லாமல்! ஆனால் எனக்குத் தெரியும் அவள் வீட்டில் எப்படியென்று, அதே சமயம் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளிடம் எப்படி பழகுகிறாள் என்று!! பின் ஏன் கவலைப்படவேண்டுமென்றும் தோன்றியதுண்டு! இப்போது பள்ளியில் கேள்விப்படுகிறேன், அவளுக்கென்று ஒரு க்ரூப் இருக்கிறது...வெண்மதி, ஆகாஷ், சஞ்சய், தண்ணொளி,பவன் கார்த்தி!! அது அவளுக்கான ஒரு comfortable circle. பக்கத்து வீட்டு ஆதி, மோனேஷ், நவீன்,சிந்து மற்றும் உறவினர்களின் குழந்தைகள் என்று இன்னொமொரு வட்டம்! ஒருவேளை அவளுக்கு ஒரு பெரிய நண்பர்கள் வட்டம் தேவைப்படாமலிருக்கலாம், ஒரே ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட் மட்டும் போதுமாயிருக்கலாம். அப்படி ஒரு நட்பைவட்டத்தை தேடிக்கொள்ளும் நம்பிக்கை அவளுக்குண்டு! அதுவரை நான் செய்யக்கூடயதெல்லாம் ,socialize ஆகும்படி வற்புறுத்த மாட்டேன். புதியவரிடம் தயக்கமின்றி பழகினால், ஊக்கப்படுத்துவேன்!!

கடவுளே..பப்புவை வளர்க்க பொறுமையையும் ஞானத்தையும் கொடு..அவள் இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவதைக் எனக்குக் கொடு!!
நீண்ட நாட்களாக இதைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்திருந்தது, இன்றுதான் முடிந்தது!!

The irony is, பேசி பழகவே மாட்டேனென்கிறார்கள் என்று கவலைப்படுபவர்கள் பிற்காலத்தில் அப்படி என்னதான் பேசுவாங்களோ என்று கவலைப்படுகிறார்கள், இல்லையா!!

33 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆம் அக்கா பப்புவிற்கு ஒரு சிறந்த அம்மா!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

கடவுள் உங்க வேண்டுதலை கட்டாயம் நிறைவேற்றுவார்.

All the best Sister !!!

ஆயில்யன் said...

//எத்தனை பேரிடம், புதிதாய் இருப்பவரிடம் நாம் சென்று பேசுகிறோம் அல்லது பழகுகிறோம்?
//

பட்! அது போன்ற சந்தர்ப்பங்களில் முடிந்த அளவு எந்தவொரு முன்யோசனையும் நினைக்காமல் பேசிப்பார்க்க முயற்சியுங்களேன்!

நட்பு வட்டம் பல நல்லவர்களையும் கூட புதிதாய் அறிமுகமாககூடும்!

ஆயில்யன் said...

//ஏதாவது பொது இடத்திற்குச் சென்றால், நமது குழந்தைகள் எல்லாரிடமும் பயமின்றி, தயக்கமின்றி பழக வேண்டுமென்று ஒரு எழுதப் படாத விதி/எதிர்பார்ப்பு இருக்கிறது.//

ம்ம் ஆமாம்! நான் கூட நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்! அப்ப பெத்தவங்களுக்கு கொஞ்சம் திட்டும் கூட விழும் - எப்படி வளர்த்திருக்காங்க பாருங்களேன்! - அப்படின்னு!

(தங்கச்சி உன்னையா யாராச்சும் திட்டுனாங்கன்னா என்கிட்ட சொல்லும்மா! ஒ.கே!)

ஆயில்யன் said...

//தண்ணொளி//

அழகாய் இருக்கிறது !

:))

நந்து f/o நிலா said...

முதலில் குழந்தையிடம் மற்றவர்கள் எப்படி பழகுகிறார்கள் என்பது ஒன்று இருக்கிறது.
முதன்முதலில் பார்த்த உடனேயே வலுக்கட்டாயமாக (பாசமிகுதியாலானாலும்)
தூக்க முயற்சி செய்தால் எந்த குழந்தையும் போகாது.

கொஞ்ச நேரம் அந்த இடத்தில் குழந்தையை கண்டு கொள்ளாமல் இருந்து அதன்பின் பொறுமையாக எதையாவது சொல்லி டைவர்ட் செய்தால் வெகு எளிதாக ஒட்டிக்கொள்ளும்.

என் சின்ன வயசிலிருந்தே என்னிடம் வர மறுத்த குழந்தைகள் வெகு சிலதான். இதில் எனக்கு மஹா பெருமை. :)

நிஜமா நல்லவன் said...

/
கடவுளே..பப்புவை வளர்க்க பொறுமையையும் ஞானத்தையும் கொடு..அவள் இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவதைக் எனக்குக் கொடு!!
நீண்ட நாட்களாக இதைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்திருந்தது, இன்றுதான் முடிந்தது!!/

நல்லாவே எழுதி இருக்கீங்க...!

நிஜமா நல்லவன் said...

/இப்போது நானே ஒரு பார்க்குக்கு செல்கிறேன், அதற்காக, பார்க்கும் மனிதர்களிடமெல்லாம்
பேசிக் கொண்டா இருக்கிறேன்? எனக்குத் தெரிந்தவர்களிடம் மட்டும் தானே!! நமக்கே இப்படி என்றால், குழந்தைகள்..they come with the enviroment!/


மிகச்சரி....!

தாமிரா said...

நல்ல சிந்தனை.

நிஜமா நல்லவன் said...

/நந்து f/o நிலா said...

முதலில் குழந்தையிடம் மற்றவர்கள் எப்படி பழகுகிறார்கள் என்பது ஒன்று இருக்கிறது.
முதன்முதலில் பார்த்த உடனேயே வலுக்கட்டாயமாக (பாசமிகுதியாலானாலும்)
தூக்க முயற்சி செய்தால் எந்த குழந்தையும் போகாது.

கொஞ்ச நேரம் அந்த இடத்தில் குழந்தையை கண்டு கொள்ளாமல் இருந்து அதன்பின் பொறுமையாக எதையாவது சொல்லி டைவர்ட் செய்தால் வெகு எளிதாக ஒட்டிக்கொள்ளும்.

என் சின்ன வயசிலிருந்தே என்னிடம் வர மறுத்த குழந்தைகள் வெகு சிலதான். இதில் எனக்கு மஹா பெருமை. :) /


என் சின்ன வயசிலிருந்தே(இப்பவும் சின்ன வயசு தான்) என்னிடம் வர மறுத்த குழந்தைகளே இல்லை....அப்படின்னா இதில் எனக்கு மஹா மஹா பெருமை...சரியா நந்து அண்ணா???

பிரேம்குமார் said...

நீங்கள் சொல்வது சரிதான் முல்லை. யாருடனும் பழகவில்லையென்றால் தான் சிக்கல். அதுவரைக்கும் மகிழ்ச்சியே

//பேசி பழகவே மாட்டேனென்கிறார்கள் என்று கவலைப்படுபவர்கள் பிற்காலத்தில் அப்படி என்னதான் பேசுவாங்களோ என்று கவலைப்படுகிறார்கள், இல்லையா!!//

ஆகா, செம பஞ்ச் ;)

மங்களூர் சிவா said...

/
இப்போது பள்ளியில் கேள்விப்படுகிறேன், அவளுக்கென்று ஒரு க்ரூப் இருக்கிறது...
/

:))))))))))

மங்களூர் சிவா said...

/
கடவுளே..பப்புவை வளர்க்க பொறுமையையும் ஞானத்தையும் கொடு..அவள் இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவதைக் எனக்குக் கொடு!!
/

all the best akkaa

அமுதா said...

"The irony is, பேசி பழகவே மாட்டேனென்கிறார்கள் என்று கவலைப்படுபவர்கள் பிற்காலத்தில் அப்படி என்னதான் பேசுவாங்களோ என்று கவலைப்படுகிறார்கள், இல்லையா"

:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

The irony is, பேசி பழகவே மாட்டேனென்கிறார்கள் என்று கவலைப்படுபவர்கள் பிற்காலத்தில் அப்படி என்னதான் பேசுவாங்களோ என்று கவலைப்படுகிறார்கள், இல்லையா!!

சூப்பர்பா. நல்லா இருக்குப்பா

அமிர்தவர்ஷினி அம்மா said...

//தண்ணொளி//

அழகாய் இருக்கிறது !

வழிமொழிகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடவுளே..பப்புவை வளர்க்க பொறுமையையும் ஞானத்தையும் கொடு..அவள் இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவதைக் எனக்குக் கொடு!!

ஏன் இவ்வளவு பீலிங். டோண்ட் வொரி. எல்லாம் நல்லவண்ணமாகவே நடக்கும். பப்புவுக்கு இப்போதுதானே 3 வயது ஆகிற்து. இன்னும் காலம் இருக்கிறது.

நான் வேலைக்கு வரும் காலம் வரை எவ்வளவு ரிஸர்ட்வ் டைப் தெரியுமா. இப்போது சில வருடங்களாகத் தான் என்னிடம் நிறைய மாற்றங்கள் மற்ற்வர்களிடம் பழகுவதில், பழகும் விதத்தில். சோ காலம் தான் வகுப்பறை. அனுபவங்களே ஆசிரியர். அதுவே பேசப், பழக வைத்துவிடும். குழந்தைகளின் இயல்பில் குழந்தைகளாய் வளரட்டும். நாமாய் எதற்கும் அதிகமாய் முற்படவேண்டாம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொஞ்ச நேரம் அந்த இடத்தில் குழந்தையை கண்டு கொள்ளாமல் இருந்து அதன்பின் பொறுமையாக எதையாவது சொல்லி டைவர்ட் செய்தால் வெகு எளிதாக ஒட்டிக்கொள்ளும்.

ஆம் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

(தங்கச்சி உன்னையா யாராச்சும் திட்டுனாங்கன்னா என்கிட்ட சொல்லும்மா! ஒ.கே!)

ஆமாம் சொல்லிடுங்க. “கதார்” ரிலிருந்து அண்ணன் அடுத்த ஃப்ளைட்ல ஆஜர் ஆகிடுவார்.

தங்கவேல் said...

As a father 2 yrs old son, I can appreciate your views. Thank you

rapp said...

இதுக் கூட பரவாயில்லை. என்னை மாதிரி ஒரு அரட்டை குழந்தை(சின்ன வயசுல) இருந்துட்டா அவ்ளோதான். மத்த நார்மல் குழந்தைகள 'நீ ஏன் அவள மாதிரி இல்லேன்னு' கொடுமைப்படுத்துவாங்க. இந்த எரிச்சலிலேயே, நான் கொஞ்சம் கொஞ்சமாக ரிசர்வ்டு டைப்பாக மாறினேன். இப்போவும் ஒருத்தங்க தானா வந்து பேசினாத்தான் பேசுவேன் ஒழிய, நானா யார்கிட்டயும் போய் பேச மாட்டேன்:(:(:(

சந்தனமுல்லை said...

மிக்க நன்றி சுடர்மணி!

நன்றி ஆயில்ஸ்!
//பட்! அது போன்ற சந்தர்ப்பங்களில் முடிந்த அளவு எந்தவொரு முன்யோசனையும் நினைக்காமல் பேசிப்பார்க்க முயற்சியுங்களேன்!

நட்பு வட்டம் பல நல்லவர்களையும் கூட புதிதாய் அறிமுகமாககூடும்!//

ம்ம்..அப்ப்டியாவது மலர்கள் வந்து விழாதான்னு வெயிட் பண்றது புரியுது!

//(தங்கச்சி உன்னையா யாராச்சும் திட்டுனாங்கன்னா என்கிட்ட சொல்லும்மா! ஒ.கே!)//

ஏன், கூட சேர்ந்து திட்டவா? ;-))

////தண்ணொளி//

அழகாய் இருக்கிறது !

:))//

ம்ம்..ஆமாம்! ரொம்ப நாள் கண்ணொளி என்று சொல்லிக் கொண்டிருந்தாள்..இப்போதுதான் தெரிகிறது தண்ணொளி என்று!

சந்தனமுல்லை said...

நன்றி நிலா அப்பா!
//கொஞ்ச நேரம் அந்த இடத்தில் குழந்தையை கண்டு கொள்ளாமல் இருந்து அதன்பின் பொறுமையாக எதையாவது சொல்லி டைவர்ட் செய்தால் வெகு எளிதாக ஒட்டிக்கொள்ளும்.//

அது முற்றிலும் உண்மை! வீட்டிற்கு வருபவர்களிடம் பழகுவதில் அவ்வளவு தயக்கம் இருக்காது. ஏன்னா, அது அவங்க இடமாச்சே! ஆனால், வெளியில் மற்ற புதிய இடங்களில் தான்! புதிய முகங்கள், புதிய இடம், கூட்டம்....

//என் சின்ன வயசிலிருந்தே என்னிடம் வர மறுத்த குழந்தைகள் வெகு சிலதான். இதில் எனக்கு மஹா பெருமை. :)//

ஆஹா..கிட்ஸ் ப்ரெண்ட்லியா நீங்க வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

நன்றி நிஜமா நல்லவர்!
//என் சின்ன வயசிலிருந்தே(இப்பவும் சின்ன வயசு தான்) என்னிடம் வர மறுத்த குழந்தைகளே இல்லை....அப்படின்னா இதில் எனக்கு மஹா மஹா பெருமை...சரியா நந்து அண்ணா???//

நீங்களுமா..சூப்பர்தான் போங்க!

நன்றி தாமிரா!

நன்றி பிரேம்!
நன்றி மங்களூர் சிவா! என்ன அக்காவா..கேக்க நல்லாவா இருக்கு? தங்கச்சின்னு சொல்லுங்க

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா!

//ஏன் இவ்வளவு பீலிங். டோண்ட் வொரி. எல்லாம் நல்லவண்ணமாகவே நடக்கும். பப்புவுக்கு இப்போதுதானே 3 வயது ஆகிற்து. இன்னும் காலம் இருக்கிறது.//

அது உண்மைதான்.
//குழந்தைகளின் இயல்பில் குழந்தைகளாய் வளரட்டும். நாமாய் எதற்கும் அதிகமாய் முற்படவேண்டாம்//

இதுக்காகதான் அந்த பிரார்த்தனையே! என் கவலையெல்லாம், பிறரின் ஒப்பீடுகளுக்கு என்றும் மதிப்பு கொடுத்து பப்புவை படுத்திவிடக் கூடாதேயென்றுதான்!

சந்தனமுல்லை said...

//ஆமாம் சொல்லிடுங்க. “கதார்” ரிலிருந்து அண்ணன் அடுத்த ஃப்ளைட்ல ஆஜர் ஆகிடுவார்.//

ஆமாம், வந்து கூட சவுண்ட் கொடுப்பார். ஏன்னா தனியா சவுண்ட் கொடுக்க அவ்ளோ பயம்!! ;-))))

நன்றி தங்கவேல்!


நன்றி ராப்!!

//இந்த எரிச்சலிலேயே, நான் கொஞ்சம் கொஞ்சமாக ரிசர்வ்டு டைப்பாக மாறினேன். //

:((

தீஷு said...

முல்லை.. தீஷுகூட யாரிடமும் எளிதாக பழக மாட்டாள். ஆனால், நான் சில இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முன், அங்கு யார் யார் வர போகிறார்கள், ஹாய் சொன்னா ஹாய் சொல்லனும் அப்படினு சொல்வேன். No forcing.. Just a casual talk.. அவளிடம் நல்ல மாற்றம். இப்பொழுது எல்லோரிடமும் பதில் சொல்கிறாள்.அவள் confidence level வளர்ந்து இருக்கிறது. நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என் கருத்து, குழந்தையின் உரிமையில் தலையிடாமல், we can teach them the joy of mingling with new people.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என் பெண் எல்லாரிடமும் தானாகவே பேசுவாள்.. பேச்சை நிறுத்தத்தான் முடியாது...ஆனா பையன் ஆப்போஸிட் கேக்கறவங்க எல்லாரும் இதேமாதிரி என்ன இவன்னு கேக்கத்தான் செய்யறாங்க..அது அவங்க அப்பா மாதிரி..பொண்னும் என்ன மாதிரின்னு சொல்லி சிரிச்சிட்டுவ்ந்துடுவேன்.. ஆனா உண்மையில் ரெண்டு பேருமே நல்லா சிரிச்சி விளையாடற பெரியவங்களிடம் பழகிடுவாங்க.. டீஸ் பண்ர , கிள்ளி, கை யில் வச்சிருக்கறத பிடிங்கிட்டு எப்படி எடுப்பன்னு சொல்ற ஆளுங்கள கண்டாலே ஓடுவாங்க.. ஆனா அப்படிப்பட்ட ஆளுங்கதான் நிறய இருக்காங்க.. எனக்கு எரிச்சலா வரும் அப்படி ஆளுங்க வீட்டுக்கு போறதை அவங்களுடன் என் நட்பை என் குழந்தைகளுக்காக குறைச்சுக்கிட்டதும் உண்டு..:(

புதுகைத் தென்றல் said...

பொதுவா பிள்ளைகள் அப்படித்தான்.
அடுத்தவங்க விமர்சனத்திற்காக வருத்தப்படாதீங்க.

புதுகைத் தென்றல் said...

ஐய்யயோ! என்ன கொடுமை இது?

நிஜமா நல்லவன், ஸ்மைலி மட்டும் தான்
போட்டுகிட்டு இருந்தாரு. இம்மாம் பெரிய பின்னூட்டம் எப்ப எப்படி? போட்டாரு?!!!! :)))))))))))))))))

சந்தனமுல்லை said...

நன்றி புதுகை தென்றல்!
வருத்தமெல்லாம் இல்லை..

நானானி said...

பப்புவை என்னிடம் கொண்டுவந்து விடுங்கள். சிறிது நேரத்தில் என்னிடம் ஒட்டிக்கொள்ளும். எங்கள் குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் என்னைப் பிடிக்கும். தொடமாட்டேன்...அவ்ர்கள் மொழியிலேயே பேசிப் பேசி வழிக்கு கொண்டு வந்துவிடுவேன். இப்படித்தான், என் பேரன் பிறந்தபோது அந்த மருத்துவமனையில் பார்த்த ஒரு அமெரிக்க குழந்தையைப் பார்த்து சிரித்தவாறு கையை ஆட்டினேன், நீட்டியை கையைப் பிடித்துக் கொண்டு என்னோடு வந்துவிட்டது. ஆகவே கவலை வேண்டாம் பப்பு சீக்கிரமே எல்லோருடன் பழகுவாள்...பழகுவாள்.

சந்தனமுல்லை said...

நன்றி நானானி!
எனக்கு கவலையெல்லாம் இல்லை! எனக்கு என் குழந்தையைப் பற்றித் தெரியும்.ஆனால், பொதுவாக ஒரு தடவையோ அல்லது எப்போதாவது ஒருமுறஒயோ ஒரு குழந்தையை மீட் செய்துவிட்டு, "cranky" என்றும், "எப்பப் பார்த்தாலும் அழுவான்" என்றும் லேபிள் குத்துவதைப் பார்த்துதான்!நம்க்கே மூட் ஸ்விங்ஸ் வரும்போது குழந்தைகளுக்கு இருக்காதா என்ன!!