Tuesday, November 25, 2008

Friends 4 லைப்!!

எனக்கு ஒரு தோழி இருந்தாள் கல்லூரியில், ஒரு சில பழக்கவழக்கங்கள் இருவருக்கும் ஒன்றாக! ஜீன்ஸூம், முக்கால் பேண்டும், செமஸ்டருக்கு ஒரு ஹேர்ஸ்டைலும் எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையின் மேல் தீராக்காதலுடனும்(crazy over life?!)!
பட்டங்கள் பெற்று அவள் மனித வள நிர்வாகத்தின் பக்கமும், நான் கணினி பயன்பாட்டுவியலுமாகப் பாதைகள் பிரிந்தன! நடுவில் ஒருமுறை ஃப்ரெண்ட்ஷிப் டே கெட் டூ கெதரில் சந்தித்தப் பிறகு ஒரு பெரிய இடைவெளி. நீண்ட பிரிவிற்கு சமீபத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறோம் - கிண்டலும், கேலியும்,அவரவர்களின் எடையைப் பற்றியும், குழந்தைகளப் பற்றிய விசாரிப்புகளுமாய்! whoa! ஒன்று மட்டும் மாறவேயில்லை..attitude towards life! அவளும் நானும் அப்படியேதான் இருக்கிறோம்..வாழ்க்கையின் மீதான ரசனைகளில்..சின்னச்சின்ன ஆசைகளில்...பற்பல மாற்றங்களுக்குப்பின்னும்!

ஒருசில விஷயங்கள் மாறுவதில்லை!!

15 comments:

rapp said...

me the 1ST?

rapp said...

super:):):)

புதுகை.அப்துல்லா said...

என் சக கல்லூரி தோழர்களிடமும் அதையே உணர்கிறேன் :)

அருமை!அருமை!

பிரேம்குமார் said...

இன்றும் கல்லூரி தோழர்களை சந்திக்கும் போது அதே குறும்பு அதே நையாண்டிகள் தான்....

Yep, Friends are for life time :)

ஜீவன் said...

உருவங்கள் மாறலாம் ஆனால் ?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

உண்மை முல்லை.. நாம எப்படி மாறுவோம்..

இன்னைக்கூட காலையில் பூராவும் என் தோழி ஒருத்தியோட ரொம்பநாள் கழிச்சு கூகிளில் வாய்ஸ் சேட் செய்தேன்.. :) மகிழ்ச்சியா இருந்தது.

தீரன் said...

இம்மாதிரி மகிழ்ச்சி தரும் செய்திகளைப் பகிர்ந்து/தெரிந்து கொள்ளுதல் கூட ஒரு சந்தோசம்.... பகிர்தளுக்கு நன்றி...

ஆயில்யன் said...

:((


//சந்தித்தப் பிறகு ஒரு பெரிய இடைவெளி. நீண்ட பிரிவிற்கு //


நான் இந்த கேப்ல இருக்கேன் போல!

இருக்கட்டும் ஆச்சி சந்தோஷப்படுறத பார்த்து எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கு எதிர்காலத்தில எனக்கும் கூட இப்படியான தருணங்கள் கிடைக்கும்ன்னு :)))

சின்ன அம்மிணி said...

அட இது என்ன பழைய உறவுகளைப்புதுப்பிக்கும் வாரமா, என் கல்லூரி ஜூனியர் கிட்ட இருந்து நேத்து தான் ரொம்பநாளைக்கப்பறம் ஓர்குட் மூலமா தொடர்பு கிடைச்சுது.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

தாமிரா said...

சில பழைய நண்பர்களை சந்திக்கும் போது நானும் இதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் நட்பைத் தொடர்வதுதான் கடினமான விஷயமாக இருக்கிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மாற்றங்கள் ஒன்றே மாறாதது.

வாழ்த்துக்கள் உங்கள் ரசனையோடு ஒத்துப்போன தோழமையுடன் மீண்டும் நட்பு தொடர்வதற்கு.

சந்தனமுல்லை said...

நன்றி ராப்! நீங்கதான் முதலில்!

நன்றி அப்துல்லா!

நன்றி பிரேம். ஆமா, அது ஒரு சில நண்பர்கள் அப்படிதான்..இல்லையா!!

நன்றி ஜீவன்! :-)..உருவங்கள் மாறினாலும் மனங்கள் மாறுவதில்லை!

நன்றி முத்துலெட்சுமி! ம்ம்..அப்போ செம அரட்டைன்னு சொல்லுங்க!


நன்றி தீரன். ஆமா..ஒன்னு அதுல சேர்க்க மறந்துட்டேன். ஆர்குட்டுக்கு நன்றி!!

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ்! என்னது..யாரு கேப்-ல இருக்கறது?

நன்றி சின்ன அம்மிணி. எனக்கும் அப்படித்தான்..ஆர்குட்டிற்கு நன்றி!

நன்றி தாமிரா! சிலசமயங்களில் அபப்டியும் பீல் செய்திருக்கிறேன்..ஏன் அப்படி?


நன்றி அமித்து அம்மா! ஆமா..lol

அமுதா said...

/*அவளும் நானும் அப்படியேதான் இருக்கிறோம்..வாழ்க்கையின் மீதான ரசனைகளில்..சின்னச்சின்ன ஆசைகளில்...பற்பல மாற்றங்களுக்குப்பின்னும்! */
great...