Monday, November 24, 2008

சில அம்மாக் கணங்கள்!!

”நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்”

- பப்பு என்னிடம் சொன்னபோது சிரிப்பு வந்தது. அதை விட அவளின் செய்கை..ப்ரெண்ட்ஸ்-ன்னா தோளில் கைப் போட்டு கொள்ள வேண்டுமாம். இருவரும் தோளில் கைப்போட்டுக் கொண்டு Jataka tales பார்த்தோம்!

ம்ம்..ஆமாம் பப்பு, எப்போதும் உன் ப்ரெண்டாகவே இருக்க விரும்புகிறேன்!“பப்புவுக்கு ஆச்சி பிடிக்கும், ஆச்சிக்கு பப்பு பிடிக்கும்!”

-இதுவும் பப்புவால் அடிக்கடி சொல்லப்படும் வார்ததைகள். முதன்முறை சொன்னபோது,
ஆச்சிக்கு பப்பு பிடிக்கும், பப்புக்கு பப்பு பிடிக்கும்!” என்று. :-)) பின்னர் அவளாகவே சரி செய்துக் கொண்டாள்! அப்படி சொல்லும்போது ரெக்கார்ட் செய்துக்கொள்ளலாமென்று தோன்றும், அவளது டோனுக்காவாவது! :-)

உன் அன்பு கொடுக்கும் இதமான உணர்வு அலாதியானது!பப்பு போனில் தொடர்ச்சியாக பேசுவது இல்லை என்று நாங்கள் கவலைப் பட்டதுபோய், இப்போது ஒரு மணி அடித்தால் எடுப்பது அவள்தான். வைப்பதே இல்லை. :-)
அப்படி ஒரு நாள் மதியம் பள்ளியிலிருந்து வந்துவிட்டாளா என்றறிய நான் போன் செய்தபோது எடுத்த பப்புவிடம்,

“என்ன பண்றே?” என்று கேட்டேன்.

நான் ட்ரெஸ் போடாம இருக்கேன்! (I dont want to embarass pappu here, but i am reserving a future laugh. :-))

22 comments:

தமிழ் பிரியன் said...

நல்ல உணர்வுகள்..:)

ராமலக்ஷ்மி said...

’சில அம்மாக் கணங்கள்’ சிலிர்க்க வைத்தது, பின்னர் சிரிக்கவும் வைத்தது:))))!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

;))
முல்லை யார் போன் ஆனாலும் அவன் ஒரு ஹலோ வாவது சொல்லனும் என் பையனுக்கு.. இப்ப என்ன ஆச்சு , அப்பாவோட ஆபிஸ் அங்கிள் டா ன்னாலும் .. ஏன் அவங்க என் கிட்ட பேசமாட்டாங்களான்னு கேக்கறான்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

”நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்”

ரொம்ப நல்லா இருக்கவே, நீங்க எழுதுனதை சொல்லிப் பாக்கும்போது.

ம் நீங்க கொடுத்து வெச்ச அம்மாங்க.

உன் அன்பு கொடுக்கும் இதமான உணர்வு அலாதியானது!
:)-

“என்ன பண்றே?” என்று கேட்டேன்.
நான் ட்ரெஸ் போடாம இருக்கேன்! //
CHO CHWEET PAPPU DEAR

உண்மையில் குழந்தைப் பருவம் எவ்வளவு அழகாயிருக்கிறது. தான் செய்வதையும், மனதில் பட்டதையும் அப்படியே சொல்வதும் செய்வதுமாக

குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று நமக்கு அடிக்கடி தோன்றும்படி செய்துவிடுகிறார்கள் நம் மக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...
;))
முல்லை யார் போன் ஆனாலும் அவன் ஒரு ஹலோ வாவது சொல்லனும் என் பையனுக்கு.. இப்ப என்ன ஆச்சு , அப்பாவோட ஆபிஸ் அங்கிள் டா ன்னாலும் .. ஏன் அவங்க என் கிட்ட பேசமாட்டாங்களான்னு கேக்கறான்..//

பெரிய மனுசனாயிட்டோம்ல, எங்ககிட்டயும் கொஞ்சம் பேசச் சொல்லுங்கக்கா.
:)-

rapp said...

ஆஹா, இந்த டெலிபோன் விஷயமா:):):)எங்க வீட்ல அண்ணாந்து பாக்குற எடத்துல வெச்சிருந்தோம் ரொம்ப நாள். அப்புறம் நெட் கநெஷனுக்காக கீழே வெச்சப்போல இருந்து எங்கக்கா பையனோட சாம்ராஜ்யம்தான்:):):) இதுல பகீர் முன்னேற்றம்னா, அவனே இஷ்டத்துக்கு ராங்கால் பண்ணி வெக்கிறது, அப்புறம் அந்த நம்பர்ல இருந்து போன் பண்ணி எங்கள திட்டுவாங்க. அதுக்கப்புறம் அவங்கம்மாப்பாவோட போனப்புறம் அங்கருந்து இங்க(time diff 6 hrs) நடுராத்திரியில் எல்லாம்கூட இஷ்டத்துக்குக் கால் பண்ணி கட் பண்ணிடுவான்:):):) இப்போதான் கொஞ்ச நாளா ஓஞ்சிருக்கு:):):)

rapp said...

நீங்க ரெண்டு பேரும் வாழ்நாள் முழுவதும் நட்போட இருக்க வாழ்த்துக்கள்(ஏன்னா கண்டிப்பா ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துலயாவது நீங்க நண்பர்களா இருக்கிறது தடைப்படும், ஆனா அதுவும் பப்பு தன்னை வளர்த்துக்கிற ஒரு கட்டம்ங்கறதால் அழகாத்தான் இருக்கும்:):):))

rapp said...

செம சூப்பர் தொகுப்பு :):):)

uma kumar said...

இந்த் கணங்களுக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடாகாது.முடிந்த வரை பதிவு செய்து கொள்ளுங்கள்.

ஆயில்யன் said...

நல்ல உணர்வுகள் அதை அழகாய் வெளிப்படுத்தும் பப்பு! அதை திரும்ப ரீ புரொடீயூஸ் செய்யும் ஆச்சி!

பாஸ் கலக்குறீங்க பாஸ்!

ஆயில்யன் said...

// ஏன் அவங்க என் கிட்ட பேசமாட்டாங்களான்னு கேக்கறான்..//

குட் கொஸ்டீன்!

ஏன் பாஸ் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் சபரியண்ணாக்கிட்ட பேச அம்புட்டு கூச்சமா?

ஆயில்யன் said...

/ம் நீங்க கொடுத்து வெச்ச அம்மாங்க.//

ம்ஹுக்கும்

நானும் பப்பு பர்த்டேக்கு கேக்கு கேட்டேன் தர்லயே ஆச்சி :(

மிஸஸ்.டவுட் said...

//”நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்” //

" பாப்புவும் மம்மியும் பிரெண்ட்ஸ் "

எந்த ஒரு அம்மாவுக்கும் தேன் தடவிய மாம்பழ வார்த்தைகள் அல்லவா இது!!!
என் பாப்பு கூட தினம் ஒரு தடவை சொல்வாள் சந்தனமுல்லை.அவள் மறந்து விட்டால் என்று தோன்றினால் நானே ஆரம்பித்து வைப்பேன் தினம் ஒருமுறை...!!!

ஆகாய நதி said...

//
ம்ம்..ஆமாம் பப்பு, எப்போதும் உன் ப்ரெண்டாகவே இருக்க விரும்புகிறேன்!
//

ம்ம்ம்.... சபாஷ் சரியான முடிவு... :)

//
உன் அன்பு கொடுக்கும் இதமான உணர்வு அலாதியானது!
//

:) எல்லா பெற்றோர்களுக்கும் கிடைக்கும் கிடைக்கும் உன்னத பரிசு...

அமுதா said...

”நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்”

இனிய கணங்கள். இன்று வரை என் பெண்கள் இருவரும் "ப்ரெண்ட்ஸ்" என்று தான் சொல்கிறார்கள். அதன் உரிமை தரும் சுகமே அலாதி...

பிரேம்குமார் said...

//..ப்ரெண்ட்ஸ்-ன்னா தோளில் கைப் போட்டு கொள்ள வேண்டுமாம். இருவரும் தோளில் கைப்போட்டுக் கொண்டு Jataka tales பார்த்தோம்! //

பப்பு கொடுத்து வச்ச பாப்பாவா இல்லை நீங்க கொடுத்த வச்ச அம்மாவான்னு தெரியலை :)

புதுகை.அப்துல்லா said...

நானும் பப்புவும்கூட ஃபிரண்ட்ஸ் தான் :))

uma kumar said...

thanks for visitng my blog

PoornimaSaran said...

//நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்//

Superrrrrrrrrrr

நாங்களும் இதையே ஃபாலோ பண்ணறோம்...

சந்தனமுல்லை said...

நன்றி தமிழ் பிரியன்!

நன்றி ராமலஷ்மி!

நன்றி முத்துலெட்சுமி! ஆகா..அதானே? பேசமாட்டாங்களா என்ன?

நன்றி அமித்து அம்மா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..அமித்து வந்துடுவாங்க..அப்புறம் சொல்வீங்க..:-)ம்..குழந்தையா இருக்கும்போது எப்போடா வளர்ந்து பெரியவங்களாவோம்னு இருக்கும்..இப்போ இப்படி இருக்கும்..அதான் லைஃப்..;-)

சந்தனமுல்லை said...

நன்றி ராப்! :-))..உங்க அக்கா பையன்..சூப்பர்! பப்பு அப்படிதான் ஒருதடவை 100-க்கு கால் பண்ணிட்டா..அப்புறம் சாரி தெரியாம குழந்தை பண்ணிடுச்சுன்னு சொல்லி வச்சிட்டோம். அதே மாதிரி லேண்ட்லைனில் கரெக்டா ரீடையல் பண்ணிடுவா....ஆனா யாராவது பேசினாதான் அவ சரியா பேசமாட்டாளே! இப்போ அப்படியே தலைகீழ்..வச்சாதானே ரீடையல் செய்ய!! :-))

//ஏன்னா கண்டிப்பா ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துலயாவது நீங்க நண்பர்களா இருக்கிறது தடைப்படும், //

கரெக்ட ராப்! அதைதான் உண்மையில் நான் மீன் பண்ணேன்! ஏன்னா, அப்போ முதல் எதிரியே அம்மாதான் தோணும்..அந்த பருவத்தில். அதை நான் ஒழுங்கா டீசண்டா, கிரேஸ்புல்லா கையாளணுமேன்னு இருக்கு! :-))


நன்றி உமாகுமார். உங்க பதிவுகள் சூப்பர். இப்போதான் எட்டிப் பார்த்தேன்!

நன்றி ஆயில்ஸ்! :-)

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ், நீங்கதானே கேக் உங்களுக்கு ஆகாதுன்னு சொன்னீங்க!

நன்றி மிஸஸ்.டவுட்! சுவாரசியம்தான்!

நன்றி ஆகாய நதி! பொழிலன் எப்படி இருக்கார்?

நன்றி அமுதா!

நன்றி பிரேம்..இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு. இருங்க பொழிலன் பேச ஆரம்பிக்கட்டும்!! :-))

நன்றி அப்துல்லா!

நன்றி பூர்ணிமாசரண்! :-)