Saturday, November 08, 2008

ஞானம் பிறந்த”தடி”!!

ஏதோ விளையாடிக்கொண்டிருக்கும்போது, பப்புவைக் குழந்தை என்று சொன்னேன்!

பப்பு கேட்டாள், ஏன் என்னை குழந்தைன்னு சொன்னே?

என்ன சொல்வதென்று யோசித்துக்கொண்டிருக்கும்போது

"தெரியாம சொல்லிட்டியா?"

ம்ம்..ஆமா பப்பு, ஏன் குழந்தைன்னு சொன்னா என்ன? நீ குழந்தை தானே!

நான் குழந்தை இல்லை, பப்பு! சொல்லு, நான் பப்பு!!


****************************************************************

பப்புவை அதிகம் அடிப்பதில்லை. ஆனால் சில நேரங்களில் அப்படி நேர்ந்துவிடும், அதாவது அவள் செய்வது சரியல்ல என்று உண்ர்த்த! அன்றும் அப்படித்தான் ஒரு அடி பின்னால் கொடுத்தேன்! வழக்கம்போல் அடித்தவுடன் ஓடி வருபவள்/அழுபவள், வந்து என்னை அடித்தாள்! நச்-சென்று வேகமாய் ஒரு அடி! அடித்தது மட்டுமல்ல..அடித்துவிட்டு சொன்னாள்..”வலிக்கும் இல்ல”!!


பப்புக் கற்றுக்கொண்டாள்...அடிக்கு பதிலடி கொடுக்க! அதற்கு மேலாய் உணர்ந்ததை சொல்லவும்!!


ஓக்கே!இனி இந்தபாடம் உதவாது !

சோ, இப்போது tantrums தாங்க முடியாது போனால், அவள் மன்னிப்பு கேட்பது வரை யாரும் எதுவும் கேட்பது இல்லை..சிறிது நேரம் கழித்து பொறுமையாக எடுத்துச் சொல்கிறேன் ”அது நல்ல பழக்கமல்ல பப்பு” என்று!!

29 comments:

கானா பிரபா said...

//அடித்துவிட்டு சொன்னாள்..”வலிக்கும் இல்ல”!!//

அது!!!!!

ஆயில்யன் said...

//பப்புக் கற்றுக்கொண்டாள்...அடிக்கு பதிலடி கொடுக்க! அதற்கு மேலாய் உணர்ந்ததை சொல்லவும்!!
//


அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்!

சொல்லி கொடுத்திருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள் தங்கச்சி!

உங்களின் ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படும் தாய்மை உணர்வு என் தாயினை நினைத்துப்பார்க்க வைக்கிறது!அவரும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படியான நிகழ்வுகளில் கண்டிப்பாய் மனதில் நினைத்திருக்கக்கூடும்!

:)

cheena (சீனா) said...

ஆம் முல்லை - குழந்தைகளை அடிக்காமல் வளர்க்க முயலலாம். தவறில்லை. பப்பு வளர்கிறாள் - அறிவிலும். நல்வாழ்த்துகள்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நானே கேக்கனும்ன்னு நினைச்சேன் முல்லை.. ஆனா நீங்க சொல்ற மெத்தட் சாரி கேப்பதெல்லாமும் இங்க நடக்கமாட்டேங்குது..
அடித்தால் திருப்பி அடிக்கிறான்.. சரி அடிக்காமல் எனக்கு கோபம் வரும்டா அடிப்பேன்னு மிரட்டிட்டிருந்தேன் இப்ப அதுவும் போச்சு.. மிட்டாய் தரமாட்டியா.. அம்மா எனக்கு இப்ப கோபம் வரப்போது ( அம்மா மேரேக்கோ குஸ்ஸா ஆயேகா) ன்னு சொல்லறான் இப்ப.. அழறதா சிரிக்கிறதா..?

எனக்கு ஒரு வழிய சொல்லுங்க..

தமிழ் பிரியன் said...

:)))

பிரேம்குமார் said...

//
நான் குழந்தை இல்லை, பப்பு! சொல்லு, நான் பப்பு!!//

அது சரி.... :)

பிரேம்குமார் said...

//.சிறிது நேரம் கழித்து பொறுமையாக எடுத்துச் சொல்கிறேன் ”அது நல்ல பழக்கமல்ல பப்பு” என்று!!//

இந்த முறை நல்லா வேலை செஞ்சா அப்புறம் நீங்க எல்லோருக்கும் இதை பரிந்துரை செஞ்சிடுங்க... நாங்களும் பின்பற்றுகிறோம் :)

பிரேம்குமார் said...

/எனக்கு ஒரு வழிய சொல்லுங்க..//

முத்தலெட்சுமி அக்கா,

என்ன உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சு :)

சந்தனமுல்லை said...

நன்றி கானாஸ்! :-)

நன்றி ஆயில்ஸ்! ஒவ்வொரு அம்மாவுமே பீல் செய்திருப்பார்கள்..என்ன..அவர்களுக்கு அப்போது தளமும் இந்தமாதிரி வசதியும் இருந்திருக்காது!! இப்ப மட்டும் என்ன..ஒரு பிளாக் உங்க அம்மாவுக்கு ஆரம்பிச்சு பாருங்க..அப்போ பீல் செய்த்தை கொட்டிடுவாஙக..என்ன பாடு படித்தினீங்களோ?

சந்தனமுல்லை said...

நன்றீ சீனா!!

நன்றி முத்துலெட்சுமி...ஹஹா...இன்னும் அந்த கட்டம் வரலை!! நான் இப்பொ பொறூமையா சொல்றதுகூட, உடனடி ரியாக்‌ஷனை எதிர்பார்த்து இல்லை..:-))..ஆனால் புரிந்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடந்தான்!!

நன்றி தமிழ் பிரியன்!

சந்தனமுல்லை said...

நன்றி பிரேம்!

//இந்த முறை நல்லா வேலை செஞ்சா அப்புறம் நீங்க எல்லோருக்கும் இதை பரிந்துரை செஞ்சிடுங்க... நாங்களும் பின்பற்றுகிறோம் :)//

ம்ம்...வேலை செய்யுமா இல்லையாங்கறதை கொஞ்ச நாள் கழிச்சித்தான் சொல்லமுடியும்! :-))
ஏன்ன இவ்ளோ நாள் சொல்லி தான் இப்போ நன்றி, சாரி வார்த்தைகளை உபயோகிக்கிறாள். ஆனா இதே முறையைதான் அவள் தேவையில்லாம் கீச் கீச் சென்று கத்தும் போது உபயோகித்தேன்..அப்போ அவள் இன்னும் சிறீயவள்!!கத்தும்போது விட்டு விட்டு, பிறகு இரவு தூங்குபோதோ அல்லது கதை சொல்லும்போதோ சொல்லுவேன்..நீ கத்தினா உனக்கு என்ன வேணும்னு எனக்கு புரியாது! என்ன வேணும்னு சொன்னாதான் நான் உனக்கு ஹெல்ப் பண்னமுடியும்னு! கொஞ்சம் பலன் இருந்தது! அதை வச்சிதான் இப்போ இதுவும்!! :-))) பார்ப்போம்!

பிரேம்குமார் said...

ஆகா, நிறைய விசயம் இருக்கும் போல இருக்கே..... இந்த மாதிரி பதிவுகள் அடிக்கடி போடுங்க....

எங்களை மாதிரி புது அப்பா அம்மாவுக்கு பயனுள்ளதா இருக்கும் :)

ஆயில்யன் said...

2 முத்துலெஷ்மியக்காவுக்கு!

அக்கா மேரேக்கோ குஸ்ஸா ஆயேகா!


எங்களுக்கு எப்ப ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் சொல்லி தரப்போறீங்க?

ஜீவன் said...

சிறிது நேரம் கழித்து பொறுமையாக எடுத்துச் சொல்கிறேன் ”அது நல்ல பழக்கமல்ல பப்பு” என்று!!


குழந்தையோடு சேர்ந்து நாமும் தான் வளர்கிறோம்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல பழக்கம் இல்லைன்னு சொல்லனுமா.. ஹ்ம்.. அதையும் செய்து பார்த்தாச்சு.. டேய் அப்படி செய்தா பேட் பாய்னு சொல்வாங்கடா ன்னா.. போம்மா ..ஆப் கலதி போல் ரஹா ஹை.. (நீதான் தப்பா சொல்ற பேட் பாய்ன்னு, யாரும் சொல்லமாட்டாங்கன்னு ) அழுத்தமா பதில் சொல்றானே.. நான் என்ன பண்ணுவேன் :((((

தாமிரா said...

இனி இந்தபாடம் உதவாது ! //

நல்ல புரிதல்.!

SK said...

நல்ல புரிதல் :) :)

சந்தனமுல்லை said...

//. டேய் அப்படி செய்தா பேட் பாய்னு சொல்வாங்கடா ன்னா.. போம்மா ..ஆப் கலதி போல் ரஹா ஹை.. (நீதான் தப்பா சொல்ற பேட் பாய்ன்னு, யாரும் சொல்லமாட்டாங்கன்னு ) அழுத்தமா பதில் சொல்றானே.. நான் என்ன பண்ணுவேன் :((((//

ரசிச்சி சிரிங்க...முத்துலெட்சுமி!!
சொல்றதுக்கு ஈசியாத்தான் இருக்கும்! ஆனா, பெரும்பாலும் அவங்க இஷ்டத்திற்கு தடைபோடும்போதுதான் இப்படி பிஹேவ் பண்ணுவாங்க..கொஞ்சம் அவங்க போக்குலயே விட்டு பிடிக்கலாம்..டிரை பண்ணிட்டு சொல்லுங்க..ஏன்னா இன்னும் கொஞ்ச நாள்ல அந்த ஸ்டேஜ் எனக்கும் வரலாம்!!

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா!

நன்றி sk!!

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் பிரேம்!!

//
எங்களை மாதிரி புது அப்பா அம்மாவுக்கு பயனுள்ளதா இருக்கும் :)//

சொல்லவேயில்ல!! :-) பாப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்!

rapp said...

சூப்பர்:):):) பேசாம நீங்க இதைவேச்சு ஒரு புக்கே எழுதலாம்னு நினைக்கிறேன்:):):)

ராமலக்ஷ்மி said...

முதல் தடியை விட இரண்டாவது அஹிம்சா தடிக்கு effect அதிகம்தான். வொர்க் அவுட் ஆகுமுங்க. இன்னும் சற்று வளர்ந்த பின்னும் அவர்கள் செய்வது சரியல்ல என்பதை உணர்த்த நாம் அவர்களுடன் பேசாமல் மவுனம் காத்தால் தானாக சரியாகி வந்து விடுவார்கள்[அனுபவத்திலிருந்து:))].

தீஷு said...

நான் உபயோகிக்கும் technique - போசாமலிருத்தல். அம்மா உன் கூட பத்து நிமிஷங்களுக்கு பேச மாட்டேனு சொன்னவுடனே reaction தெரியும். ஆனா இது இன்னும் எவ்வளவு நாளைக்கு உதவும் என தெரியல.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் குழந்தை இல்லை, பப்பு! சொல்லு, நான் பப்பு!!

ஆமா பப்பு குழந்தை இல்ல. பப்பு வளர்கிறாளே மம்மி.

தீஷூ அம்மா சொன்ன டெக்னிக் கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகும்.
இதே டெக்னிக்தான் எங்க அக்கா பெண்ணும் அவ பையனிடம் பாலோ பண்றாள்.

தமிழன்...(கறுப்பி...) said...

கானா பிரபா said...
//அடித்துவிட்டு சொன்னாள்..”வலிக்கும் இல்ல”!!//

அது!!!!!
\\

ரிப்பீட்டு...:)

தமிழன்...(கறுப்பி...) said...

\
நான் குழந்தை இல்லை, பப்பு! சொல்லு, நான் பப்பு!!
\

எங்க சொல்லு பப்பு...:)

கலக்கல் பப்பு....

மங்களூர் சிவா said...

//
பப்புக் கற்றுக்கொண்டாள்...அடிக்கு பதிலடி கொடுக்க! அதற்கு மேலாய் உணர்ந்ததை சொல்லவும்!!


ஓக்கே!இனி இந்தபாடம் உதவாது !
//

:)

மங்களூர் சிவா said...

//அடித்துவிட்டு சொன்னாள்..”வலிக்கும் இல்ல”!!//

அது!!!!!

சந்தனமுல்லை said...

நன்றி ராப்! போட்டுட்டா போச்சு!

நன்றி ராமலஷ்மி..//அவள் மன்னிப்பு கேட்பது வரை யாரும் எதுவும் கேட்பது இல்லை//
இப்போவும் அதைதான் செய்றேன்..

நன்றி தீஷூ! ம்ம்..பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!:-)

நன்றி தமிழன்...(கறுப்பி...), சிவா!