Thursday, November 06, 2008

கிளாஸ் ரூம் விளையாட்டுகள் : ஜாலிபாஸ், FLAMES இன்னபிற

அமித்து அம்மா போட்டிருக்கும் இந்த போஸ்ட் என் நினைவுகளையும் கிளறிவிட்டது. விளையாட்டுக்காக, இந்த போஸ்ட்!இது கிளாஸ் ரூமில் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றி! டீச்சர் வருவதற்குள்ளாகவோ, அல்லது பாடம் டீச்சருக்குத் தெரியாமலோ விளையாடப் படுபவை! ஒன்பதாம் வகுப்பு வரை இவற்றை விளையாடியதாக நினைவு!

ஜாலிபாஸ் : இது இடது/வலது உள்ளங்கையின் ஒரத்தில் பேனாவினால் வட்டவடிவத்தில் பொட்டு போல வைத்துக் கொள்ளவேண்டும்.அருகிலிருப்பவரிடம் அதைக் காட்டவேண்டும். அவர்கள் கையிலும் அதே போல் இருந்தால் ஜாலி என்று சொல்லிவிட்டு விட்டுவிட வேண்டும்.அப்படி அவர்கள் கையில் இல்லையென்றால் நமக்கு சாக்லேட் வாங்கித் தரவேண்டும்!! இதற்காக, காலை பிரேயர் முடித்த கிளாஸ் ரூம் வந்தவுடன் மார்க் வைத்துக் கொள்வோம்! அதன் விளைவு இன்றும் status meeting-ல் போரடிக்கும் போது மார்க் செய்துக் கொள்கிறேன்! ஆனால் அருகிலிருப்பவருக்கு தெரியவேண்டுமே இவ்விளையாட்டு! ;-)

புக் கிரிக்கெட் : பாட புத்தகத்தை திருப்பிக் கொண்டே வந்து ஏதாவதொரு பக்கத்தில் நிறுத்த வேண்டும். வலது பக்கத்தின் கடைசி எண்தான் நீங்கள் எடுத்த ரன். பையன்களிடம் தான் இவ்விளையாட்டு பேமஸ்,வழக்கம்போல !

FLAMES : இதில் இருவரது பெயர்கள் தேவை.அதாவது விளையாடுபவர் மற்றும், அவரது தோழனோ/தோழியோ அவரது பெயர்!இது அவர்களுக்கிடையே உள்ள உறவை கண்டுபிடிக்கும் விளையாட்டு! இருவரின் பெயர்களை எழுதி, பொதுவாக இருக்கும் எழுத்துகளைஅடித்துக் கொண்டே வர வேண்டும். ஆனால், எப்படிக் கண்டுபிடிப்போம் என்பது மறந்து போய் விட்டது! யாருக்காவது தெரியுமா?
F - FriendL = LoveA = AdoreM = MarriageE = Enemy S = Sister.
எழுத்து விளையாட்டு : Name, Place, Animal, Thing
ஒரு எழுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் Name, Place, Animal, Thing எழுத வேண்டும்.நான்காம் வகுப்பில் இது ரொம்ப பேமஸ்! x அல்லது e வந்தால் கொடுமை!

வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்!!அநேகமாக 80களில் 90களில் பள்ளி முடித்தவர்கள்இதையெல்லாம் மிஸ் செய்திருக்கமுடியாது!! :-)

26 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

மலரும் நினைவுகள்!!!

அந்த புக் கிரிக்கெட்டும், FLAMES-ம் மறக்க முடியாத விளையாட்டுக்கள்...

(ஹிஹி...FLAMES ரூல்ஸ் பத்தி நானும் ரொம்ப நேரமா யோசிச்சி பாக்குறேன்...ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது...:-(((...)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா

இதுல புக் கிரிக்கெட், FLAMES நல்லாவே விளையாடி இருக்கோம்.

CHRISTMASIS விளையாடி இருக்கீங்களா. இதுக் கூட க்ளாஸ் ரூம் விளையாட்டுதான். க்ளாஸில் உள்ள எல்லாருடைய பேரும் எழுதி சீட்டுக் குலுக்கி போடவேண்டும். நமக்கு யார் பெயர் வருகிறதோ, அவர்களுக்கும் நாம் கிரிஸ்மா, அவர் நமக்கு சைல்ட். நாம் யாருக்கோ குழ்ந்தையாய் இருப்போம். ஆனால் பேர் வெகு சீக்ரெட். யாருக்கு யார் அம்மா, குழந்தை என்று தெரியக்கூடாது.
தினமும் குழந்தைக்கு பிடித்த கிப்ட் ஏதாவது ஒன்றை அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களுக்கு கொடுக்க வேண்டும். (நீங்க பப்பு பர்த்டே-க்கு கிப்ட் எழுதி க்ளூ கொடுத்தீங்களே, அது மாதிரியெல்லாம் கூட நடக்கும்)

மேக்ஸிமம் ஒன் வீக், 10 நாள் என்று ஓடும், கடைசி நாள் கொஞ்சம் பெரிய கிப்ட்டாக எடுத்துக்கொண்டு போய் நாந்தான் உன் கிரிஸ்மா, நீ தான் என் பேபி என்று சொல்லி கொடுக்கவேண்டும். அந்த கடைசி நாள்தான் செம இண்ட்ரஸ்டிங். க்ளாஸில் நமக்கு வேண்டாத, வேண்டப்பட்ட என இருக்கும் க்ரூப் கூட நெகிழ்ந்து போய் ஃப்ரண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த கேம் டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் வரும் போது தான் விளையாடுவோம்.

Kamal said...

நான் தான் பர்ஸ்ட் :)))
Flames என்பது ஒரு உன்னத விளையாட்டு :))))
நீங்கள் சொல்லியது போல ஒத்த எழுத்துக்களை அடித்து கொண்டே வரவேண்டும்...கடைசியில் ஒத்த எழுத்துக்களை அடித்தது போக மீதமிருக்கும் எழுத்துக்களை என்ன வேண்டும்.உ.தா.மீதமிருக்கும் எழுத்துக்கள் 6 என்று வைத்துக்கொண்டால் F L A M E S ஐ இடமிருந்து வலமாக எண்ணி எங்கு 6 முடிகிறதோ அந்த எழுத்தை அடித்து விட வேண்டும். இங்கு S அடிந்துவிடும்... அப்பாடா sister இல்ல அப்படின்னு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க :))))))))...
இப்படியாக எண்ணிக்கொண்டு வந்தால் கடைசியில் மிச்சம் இருக்கும் எழுத்து தான் மேட்டர் :)))
இதை நான் இன்னும் செய்துகொண்டு இருக்கிறேன் :)))

Kamal said...

நான் மூனாவுதா :(((((

Kamal said...

நாங்க புக் கிரிக்கட்ட world cup ரேஞ்சுக்கு ஆடுவோம் :)))
அப்பறம் Pen fight இதுவும் செம ஜாலியா இருக்கும்...பென்ச்ல இந்த பக்கம் ஒருத்தன் அந்த பக்கம் ஒருத்தன் பேனாவ தள்ளனும் நம்ம பேனாவ வெச்சு எதிரியோட பேனாவ கீழ தள்ளனும்...அப்படி தள்ளினா ஒரு பாயிண்ட்..இப்படி 10 பாயின்ட் க்கு விளையாடுவோம்...

இது விளையாடி விளையாடி நான் ஏகப்பட்ட பேனாவ ஒடச்சுருக்கேன் :)))

விஜய் ஆனந்த் said...

:-)))...

கமல் சூப்பரா FLAMES ரூல்ஸ விளக்கிட்டாரு!!!

அதேபோல CHRISTMASIS-ம் நல்ல விளையாட்டுதான்...ஆனா பொண்ணுங்க விளையாட்டு...இதோட பாய்ஸ் Version கலக்கலா இருக்கும்...

:-)))...

சந்தனமுல்லை said...

நன்றி விஜய் ஆன்ந்த்!
கமல் விளக்கிவிட்டாரே! நீங்கதான் ஃபர்ஸ்ட்!! FLAMEs பொண்ணுங்ககிட்டதான் பேமஸ்-ன்னு நினைச்சேன்!

rapp said...

இதுல flames தான் செம பேமஸ். இதோட உண்மையான ஜாலி தாத்பர்யம் தெரியாம இத ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருந்தப்பவும் எழுதி விளையாட ஆரம்பிச்சேனா, அங்க இருந்த கசின்ஸ் பார்த்துட்டு செமையா கிண்டல் பண்ணாங்க:):):)

சந்தனமுல்லை said...

நன்ற் அமித்து அம்மா!
ஓ..இதை விட்டு வைப்போமா..ஆனா பள்ளியில் விளையாடியதில்லை! காலேஜில் க்ரிஸ்மா/க்ரிஸ் சைட் விளையாடியிருக்கிறோம்.ஆனால் பேர் வந்து சீக்ரெட் ப்ரெண்டு அல்ல்து எஸ் எப் என்று சொல்லுவோம். செம கலாட்டாவாக இருக்கும்! ஏன்னா, சொன்னதை பாலோ பண்ணனுமே..எதிரிகிட்டே மாட்டினா,
அவ்வளவுதான்! பாத்ரூம் செப்பல் போட்டு காலெஜ் வா..ரெட்டை ஜடை என்று காமெடியா இருக்கும்! இப்போவும் எங்க ஆபிஸில் விளையாடுகிறோம்!

சந்தனமுல்லை said...

நன்றி கமல்! விளக்கம் சூப்பர்! நல்ல ஞாபகம் வந்துவிட்டது!ஆமா நீங்கதான் மூணாவது!!

//அந்த பக்கம் ஒருத்தன் பேனாவ தள்ளனும் நம்ம பேனாவ வெச்சு எதிரியோட பேனாவ கீழ தள்ளனும்...அப்படி தள்ளினா ஒரு பாயிண்ட்..இப்படி 10 பாயின்ட் க்கு விளையாடுவோம்...//

பென் பைட் - :-))
நல்லா இருக்கே!

சந்தனமுல்லை said...

விஜய்..

//இதோட பாய்ஸ் Version கலக்கலா இருக்கும்//

என்ன அது??

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய் இப்ப கூடவா. ஆபிஸ்லியா. ஜாலியா இருக்கும்ல.

நான் என்னுடைய முதல் ஆபிஸில் இதை அறிமுகப்படுத்தி, கடைசியில் அது சண்டையில் போய் முடிந்தது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இங்கு S அடிந்துவிடும்... அப்பாடா sister இல்ல அப்படின்னு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க :))))))))...

ம்ஹூம் என்ன ஒரு அல்ப சந்தோஷம்.

பாய்ஸ் Version கலக்கலா இருக்கும்...
சொல்லுங்க விஜய் ஆன்ந்த். தெரிஞ்ச்சிக்கறோம்.

சந்தனமுல்லை said...

நன்றி ராப்!
இதுல என்ன ஜாலின்னா, இதோட லாஜிக் தெரிஞ்சுடுச்சின்னா, நாமளே நமக்கு என்ன வரணுமோ அதை வரவைச்சிடலாம்! manipulating!!

சந்தனமுல்லை said...

//பாய்ஸ் Version கலக்கலா இருக்கும்...
சொல்லுங்க விஜய் ஆன்ந்த். தெரிஞ்ச்சிக்கறோம்.//

நானும் அதுக்குதன் வெயிட்டிங் அமித்து அம்மா!

//நான் என்னுடைய முதல் ஆபிஸில் இதை அறிமுகப்படுத்தி, கடைசியில் அது சண்டையில் போய் முடிந்தது//

அச்சச்சோ! எங்க ஆபிஸீல் பெண்கள் மட்டும்தான் விளையாடுவோம்! எல்லாரையும் சேர்த்தா, ஏடாகூடமா ஆகிட்டா! :-))

rapp said...

நோ நோ, இங்க நெறயப் பேர் தப்பா சொல்றீங்க. ஸ்கூல்ல 'S'னா Sweet Dreams:):):) காலேஜ்லன்னா Sweat Dreams:):):)

ஆயில்யன் said...

ம்ம் பழைய ஞாபகங்கள் எல்லாத்தையும் கிளறிவிட்டு பெரியவங்க எல்லாம் வெளையாடிக்கிட்டிருக்கீங்க போல தெரியுது!

ஆயில்யன் said...

//டீச்சர் வருவதற்குள்ளாகவோ, அல்லது பாடம் டீச்சருக்குத் தெரியாமலோ விளையாடப் படுபவை! ஒன்பதாம் வகுப்பு வரை இவற்றை விளையாடியதாக நினைவு!///


வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம்ங்கறது பிறகுதான் உணர ஆரம்பிச்சிருக்கும் :)))))

சின்ன அம்மிணி said...

ஏப்ரல் மாதம் முதல் நாள் எல்லார் வெள்ளை சட்டைலயும் இங்க் தெளிச்சு மாட்டிக்கிடதில்லையா நீங்க

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜாலிபாஸ் விளையாண்டிருக்கேன்.. ஃப்ளேம்ப்ஸும் உண்டு.. இந்த அனிமல் திங்க்ஸ் இப்ப என் பொண்ணு விளையாடறா.. ட்ரையின்ல் போகும் போது நாங்களும் விளையாடனும்..
இன்னோன்னு அட்லஸ் ன்னுஒரு விளையாட்டு விளையாடறா. எழுத்து முடியற இடத்திலிருந்து இன்னோரு ஊர் சொல்லனும்..

நாங்க புத்தகத்துல ஒவ்வொரு கார்னர்லயும் குச்சிக்கால் மனுசன் வரைஞ்சு கார்டூன் செய்வோம்.. அடுத்தடுத்து பக்கம் இல்லாட்டி இத்தனாம் பக்கம் போ ன்னு வரும்..

தமிழ் பிரியன் said...

நாங்க படிக்கும் போது, அருகருகில் இருப்பவர்கள் ஒரு பேப்பரில் பென்சிலில் 20*20 கட்டம் போட்டுக் கொள்வோம். பின்னர் அதில் ஒரு சதுரத்தில் ஒரு புறத்தில் வரி வரியாக போட்டுக் கொண்டு வர வேண்டும். கட்டம் யார் வரி இழுக்கும் போது முழுமையடையும் போது அந்த கட்டத்தில் அவரது இனிஷியல் போட்டுக் கொள்ளலாம். இறுதியில் அதிக கட்டங்களை பெறுபவரே வெற்றியாளர்.
(பாடம் நடந்து கொண்டு இருக்கும் போதே இது நடந்து கொண்டு இருக்கும் என்பது சிறப்பு!)

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

ம்ம் பழைய ஞாபகங்கள் எல்லாத்தையும் கிளறிவிட்டு பெரியவங்க எல்லாம் வெளையாடிக்கிட்டிருக்கீங்க போல தெரியுது!///

ஆயில் அண்ணே! எப்பவுமே காமெடி தானா உங்களுக்கு.. உங்க பழைய காலத்தைப் பற்றியும் சொல்லுங்க

ஆகாய நதி said...

//
Flames என்பது ஒரு உன்னத விளையாட்டு :))))
//
ரீப்பீட்டே....
//
இதை நான் இன்னும் செய்துகொண்டு இருக்கிறேன் :)))
//

ஆபிசில் டிரெயினிங் போது சும்மா பொழுத ஓட்ட :)

gils said...

flames.. namma "manmadhan" simbu atha international rangeku ethi utu olympicsla sethupangalanu kekara alavuku senjiruparay antha game thana? :) book cricket fav game..aana intha jolly boss mater new..kelvipatathilla..oru vela gals school mattero? :)

gils said...

//CHRISTMASIS விளையாடி இருக்கீங்களா.//

echuseme athu chrisma chisdad ila?? chris sis kuda unda??

பொன்ஸ்~~Poorna said...

ராஜா ராணி திருடன் போலிஸ் கூட இந்த மாதிரி க்ளாஸ்ரூம் நடுவில் விளையாடுவோமே!