Tuesday, November 18, 2008

பப்பு சீன்ஸ்!!

சீன் - 1

சோபாவில் அமர்ந்து எதிரில் நாற்காலில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தேன். பெரிம்மா வந்து உட்கார்வத்ற்காக நாற்காலியின் ஓரத்தில் கை வைத்தபோது காலை எடுத்துக் கொண்டேன். அதுவரை அங்கே நின்றபடி டீவி பார்த்துக் கொண்டிருந்த பப்பு, பெரிம்மாவிடமிருந்த நாற்காலியை இழுத்து என் காலருகே வைத்ததுமல்லாமல், என் காலைத் தூக்கி அந்த நாற்காலியில் வைத்தாள். :-)

சீன் - 2

ஏதோ பேசிக்கொண்டிருந்த போது, “எனக்குத் தெரியாது பெரிம்மா” என்றுக் குரலில் சலிப்போடு சொன்னேன். விளையாடிக்கொண்டிருந்த பப்பு, வேகமாய் பெரிம்மாவிடம் வந்து,

“ஏன் ஆச்சியை திட்டீனீங்க?” என்று கோபமாய்/வேகமாய் கேட்டாள்.

பெரிம்மா, ”நான் திட்டல பப்பு, சும்மா கேட்டேன்” என்றபோது, சமாதானமாகாமல்,

”சாரி சொல்லுங்க...சாரி சொல்லுங்க” என்று பெரிம்மா சாரி சொன்னப்பின் அமைதியானாள்.இதைத் தான் சொல்வார்களோ, சொர்க்கம் என்று, to get pampered by my mom and pappu?!

***************

சீன் - 3

பெரிம்மா ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். கதவருகில் வைத்திருந்ததை அவர்கள் பை காணவில்லை. பப்புவின் வேலை!! அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு அறையில் வைத்துவிட்டிருந்தாள். பையை எடுக்க முற்படுகையில், ஊருக்கு போக வேண்டாமென்று அரற்றத் தொடங்கினாள். அப்போது நான் சொன்னேன், ”பாரு நீ சாப்பிடலையில்ல அதான் ஊருக்குப் போறாங்க” என்றபோது ”நான் சாப்பிடறேன்” என்று ரசம் சாதம் போட்டுத் தர சாப்பிட்டாள்! சாப்பிட்டுவிட்டாலும், அவர்கள் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என்றறியாமல் சாப்பிடும் பப்புவை பார்க்க கஷ்டமாயிருந்தது. ஆனால், என்ன செய்வது? அடுத்த வாரம் வருவாங்க என்று சமாதானப் படுத்தி “பை” சொல்ல வைக்கவேண்டியதாயிருந்தது!

முன்பெல்லாம், போகாதீங்க என்று மட்டும் சொன்ன பப்பு, பையை இழுத்துக் கொண்டு ரூமில் வைத்த பப்பு, இப்போது பையை தூக்கி ஒளித்து வைக்குமளவிற்கு வளர்ந்ததை பார்த்து புன்னகைக்கிறேன்!!

ஒருநாள் இந்தப் பெண் கல்லூரிக்கோ,வேலைக்கோ, உலகத்தை explore செய்ய பையைத் தூக்கி செல்லப் போகிறாள்..அப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?! ஏன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப் படுகிறேன்?! (ம்ம்..அடுத்த போஸ்ட்டுக்கு மேட்டர் ரெடி!!)

24 comments:

புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷ்டு ???

புதுகை.அப்துல்லா said...

(ம்ம்..அடுத்த போஸ்ட்டுக்கு மேட்டர் ரெடி!!)
//

நா முந்திக்கிறேன் :))

கானா பிரபா said...

//அவர்கள் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என்றறியாமல் சாப்பிடும் பப்புவை பார்க்க கஷ்டமாயிருந்தது. //

ஏகலைவன் said...

மன்னிக்கவும்,
அப்படியே பப்புவுக்கு பெரியவர்களுக்கு மரியாதை தரத்தான் அப்படி செய்தேன் என்பதையும் சொல்லிக்கொடுத்திருப்பீர்கள் என் நம்புகிறேன்

கானா பிரபா said...

//ஒருநாள் இந்தப் பெண் கல்லூரிக்கோ,வேலைக்கோ, உலகத்தை explore செய்ய பையைத் தூக்கி செல்லப் போகிறாள்..அப்போது நான் என்ன செய்யப் போகிறேன்//


இதை நீங்க சொன்னபோது சிலிர்த்தது. இதே மாதிரி தான் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் கதை உருவாக்க கோவாவில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த இயக்குனர் மகேந்திரன் காலையில் ஜாக்கிங் போய் கொண்டிருந்த ஒரு பெண்ணை காண்கிறார். "இந்த அதிகாலை வேளை ஓடிக்கொண்டிருக்கும் பெண்ணே நாளை உன் வாழ்வில் எத்தனை விதமான வாழ்வு ஓட்டங்களை நீ காணப்போகிறாய்" என்று நினைத்த அவருக்கு உடனே கதைக்கரு பிறந்ததாம். இந்த படம் பிறந்த கதையை றேடியோஸ்பதியில் சொல்லியிருக்கேன்.

சந்தனமுல்லை said...

நன்றி அப்துல்லா! நீங்க்தான் முதலில்!

நன்றி கானா!

ஏகலைவன், எதற்கு மன்னிப்பு? நல்லவேளை நினைவூட்டினீர்கள்..இல்லையேல் விட்டுப் போயிருக்கும்!
அவள் இன்னொரு நாற்காலியை காட்டி, பெரிம்மாவின் கையை இழுத்து அதில் உட்காரச் சொன்னாள்! சொல்வதற்கு விட்டுப் போயிற்று! நன்றி!! மரியாதை...என்னிடமும்/அவள் அப்பாவிடம் தவிர மற்ற அனைவரிடமும் வாங்க/போங்க என்கிறாள்!!இப்போது நாங்களும் அவளிடம் "ங்க" போட்டு பேசத்தொடங்கியிருக்கிறோம்..பார்க்கலாம்..
சிறிது நாளில் தெரியும்!

ராமலக்ஷ்மி said...

சீன் - 4 க்குக் காத்திருக்கிறோம்.

அமுதா said...

/*ஒருநாள் இந்தப் பெண் கல்லூரிக்கோ,வேலைக்கோ, உலகத்தை explore செய்ய பையைத் தூக்கி செல்லப் போகிறாள்..அப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?! */
ம்ம்ம்.... நான் கூட இப்படித்தான் யோசிப்பேன்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சூப்பர்.. முல்லை.. நீங்க எழுத எழுத எனக்கும் என் குழந்தைகளோட இதை எழுதி வைக்கலையே அதை எழுதி வைக்கலையேன்னு தோணுதுப்பா...இப்பத்தாம் இன்லாஸ் ஊருக்கு போனதை அங்க வேலை இருக்காம்ன்னு ஏமாத்தினோம்.. தாத்தா போட்டுமே அப்ப ஆச்சி ஏன்.. ஏன்னா அம்மா வேலைக்குபோகாததால் பெண்கள் வீட்டில் இருப்பாங்கன்னு அவனுக்கு தோணிப்போச்சுப்பா.. ஆச்சியும் வேலைக்கு போனவங்கன்னு அவனுக்கு தெரியாது ...:)

தாமிரா said...

ஒருநாள் இந்தப் பெண் கல்லூரிக்கோ,வேலைக்கோ, உலகத்தை explore செய்ய பையைத் தூக்கி செல்லப் போகிறாள்..அப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?! // உங்கள் எழுத்துகள் மிக சுருக்கமாக, எளிமையாக இருப்பினும் மிக ஆழமாக உணர்ச்சிவசப்படவைப்பதாய் இருக்கின்றன.. இந்த வார்த்தைகளுக்கு படிக்கும் நானே உணர்ச்சிவசப்பட்டேன் எனில் நீங்கள் உணர்ச்சிவசப்படுவதில் ஆச்சரியமில்லை..

rapp said...

ஹ ஹ ஹா சூப்பர்:):):) இதே மாதிரி பீலிங்க்தான் முதல்ல ஸ்கூல்ல விடும்போதும் வருமில்லையா?:):):)

SK said...

அழகா எழுதி இருக்கீங்க

ஆயில்யன் said...

//ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என்றறியாமல் சாப்பிடும் பப்புவை பார்க்க கஷ்டமாயிருந்தது. ஆனால், என்ன செய்வது? அடுத்த வாரம் வருவாங்க என்று சமாதானப் படுத்தி “பை” சொல்ல வைக்கவேண்டியதாயிருந்தது!///


நாட்கள் கடந்து நினைவுகளின் வழி பயணிக்கிறேன்!

ஏனோ மனத்தினை பாரத்தில் ஆழ்த்தியிருக்கிறது :(

கப்பி | Kappi said...

super :)

பிரேம்குமார் said...

//
இதைத் தான் சொல்வார்களோ, சொர்க்கம் என்று, to get pampered by my mom and pappu?! //

எனக்கு என்னமோ பப்புவும் உங்களையும் உங்க அம்மா மாதிரி தான் பாத்துக்குறாங்களோன்னு தோனுது :)

பிரேம்குமார் said...

//அவள் இன்னொரு நாற்காலியை காட்டி, பெரிம்மாவின் கையை இழுத்து அதில் உட்காரச் சொன்னாள்! சொல்வதற்கு விட்டுப் போயிற்று! நன்றி!! /

இதை பதிவிலேயே சேர்த்து விடுங்கள். இல்லையேல் எல்லோரும் தப்பாக நினைக்க கூடும்

Thooya said...

:)

சந்தனமுல்லை said...

//இதை நீங்க சொன்னபோது சிலிர்த்தது. இதே மாதிரி தான் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் கதை உருவாக்க கோவாவில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த இயக்குனர் மகேந்திரன் காலையில் ஜாக்கிங் போய் கொண்டிருந்த ஒரு பெண்ணை காண்கிறார். "இந்த அதிகாலை வேளை ஓடிக்கொண்டிருக்கும் பெண்ணே நாளை உன் வாழ்வில் எத்தனை விதமான வாழ்வு ஓட்டங்களை நீ காணப்போகிறாய்" என்று நினைத்த அவருக்கு உடனே கதைக்கரு பிறந்ததாம். இந்த படம் பிறந்த கதையை றேடியோஸ்பதியில் சொல்லியிருக்கேன்.//

நன்றி கானா! ம்ம்..ஆமா..!
ஹை..சுவாரசியமா இருக்கே! எல்லா அம்மாக்களுக்கும் அந்த ஃபீல் இருக்கும் போல! ஆனா தைரியமா அதை எதிர்க்கொள்ளூமாறு நான் வளர வேண்டும்!

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி! சீக்கிரம் போடறேன்..நிறைய சீன்கள் இருக்கு, எழுததான் முடியலை! :-))

நன்றி அமுதா!

நன்றி முத்துலெட்சுமி!
//நீங்க எழுத எழுத எனக்கும் என் குழந்தைகளோட இதை எழுதி வைக்கலையே அதை எழுதி வைக்கலையேன்னு தோணுதுப்பா//
மேடம்..நீங்க இப்படி பீல் பண்ணலாமா? :-)..

நன்றி தாமிரா...
//உங்கள் எழுத்துகள் மிக சுருக்கமாக, எளிமையாக இருப்பினும் மிக ஆழமாக உணர்ச்சிவசப்படவைப்பதாய் இருக்கின்றன.. இந்த வார்த்தைகளுக்கு படிக்கும் நானே உணர்ச்சிவசப்பட்டேன் எனில் நீங்கள் உணர்ச்சிவசப்படுவதில் ஆச்சரியமில்லை..//
:-)..சிலசமயங்களில் அப்படிதான் ஆகிவிடுகிறது!!

சந்தனமுல்லை said...

நன்றி ராப்! ஆமா..ஒரு கடிதம் பப்புவிற்கு எழுதினேனே..அவள் பள்ளி செல்ல ஆரம்பித்தபிறகு!!

நன்றி SK!

நன்றி ஆயில்ஸ்!
//நாட்கள் கடந்து நினைவுகளின் வழி பயணிக்கிறேன்!//

ம்ம்..புரிகிறது! :-))

நன்றி கப்பி!!

சந்தனமுல்லை said...

நன்றி பிரேம்!

//
எனக்கு என்னமோ பப்புவும் உங்களையும் உங்க அம்மா மாதிரி தான் பாத்துக்குறாங்களோன்னு தோனுது :)//

ம்ம்..சமயங்களில் அப்படிதான்!!
:-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

யோசிக்க வைக்கும் பப்புவும், பதிவும்.

ம்ம்..அடுத்த போஸ்ட்டுக்கு தலைப்பும் ரெடி

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒருநாள் இந்தப் பெண் கல்லூரிக்கோ,வேலைக்கோ, உலகத்தை explore செய்ய பையைத் தூக்கி செல்லப் போகிறாள்..அப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?! //

நெகிழ்ச்சியா இருக்குதுப்பா.

மங்களூர் சிவா said...

நல்ல 'சீன்'ஸ்!
சூப்பர்ப்.