Monday, May 10, 2010

பாஸ் பாஸ்..நீ இப்ப பாஸ் பாஸ் - தொடர்பதிவு

மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி...
சிறகுகள் விரித்தபடி இளங்குருவிகள் பறந்ததடி...

- இந்த பாட்டை கொஞ்ச நாள் முன்னாடிதான் முதல்முதலா பார்த்தேன். நிரோஷாவும் - ராம்கியும். அதுவரைக்கும் அந்த பாட்டுக்கு குணசுந்தரியை தான் கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். இந்த பாட்டும், குணசுந்தரி ஞாபகமும் பிரிக்க முடியாத ஒண்ணு. அட்டெனன்ஸ் -லதான் குணசுந்தரி. எங்களுக்கு குணாதான்.

அக்கார்டிங் டூ பெரிம்மா & மத்த டீச்சர்ஸ், பாட்டு புக் வாங்குறவங்க,பாட்டை நோட் புக்லே எழுதி வைக்கறவங்க எல்லாம் படிக்காத பசங்க. இதெல்லாம் விட்டுட்டு உருப்படற வழியை பாருன்றதுதான் அவங்க சொல்ற அட்வைஸா இருக்கும். குணா என்னை மாதிரியே ஆவரேஜ் ஸ்டூடண்ட்...எப்படியோ நாங்க திக் ப்ரெண்டாஸிகிட்டோம். ஏழாவதுலே, கில்லடின்லே கொலை பண்ணுவாங்களே, அந்த வரலாற்று பாடம் படிக்கும்போது புக் நடுவிலே இந்த பாட்டு புக்கை வச்சு பாடி காட்டினா. அதுலேருந்து எனக்கும் இந்த பாட்டு பிடிச்சுடுச்சு. அதுவரைக்கும், சினிமா பாடல்களை நான் கேட்டிருந்தது, ஆகாசவாணிலேயும், பி-கஸ்பாவிலேருந்து ஸ்பீக்கர்லே ஒலிக்கிற பாடல்களையும்தான். அதுலே பெரும்பாலும், ‘பாலை குடிச்சுப்புட்டு பாம்பா கொத்துதடி'மாதிரி இல்லேன்னா ‘ராஜா கைய வச்சா' மாதிரி பெப்பியா இருக்கும்.

குணாவும், நானும் ஸ்கூல்லே சில பாடங்களை ஒண்ணா படிச்சு முடிச்சுடுவோம். ஒண்ணா படிக்கிறதுன்னா, ரெண்டு பேரும் சத்தம்போட்டோ/மனசுக்குள்ளேயோ அவங்கவங்க புக்லே இருக்கிறதை படிச்சுட்டு மாத்தி மாத்தி ஒப்பிச்சுக்கிறது. +2 ஸ்டடி ஹால்ஸ் அப்போ ரொம்ப உருக்கமா நெருக்கமா எல்லாம் பேசிட்டு ஆட்டோகிராஃப் வாங்கிட்டு பிரிஞ்சாச்சு. அன்னைக்கு பிசிக்ஸ் எக்ஸாம். எங்க எல்லாருக்குமே பிசிக்ஸ் மாஸ்டரை பிடிக்கும்ன்றதாலே பிசிக்ஸையும் பிடிக்கும். பார்த்தா கொஸ்டின் பேப்பர் டஃப் (எங்க பேட்ச்-லே பிசிக்ஸ் பேப்பர் டஃப்-ஆ வந்துச்சு). டஃபா இருந்தாலும், படிச்சதை வேஸ்ட் பண்ணாமே (!) எழுதிடனும்னு தெரிஞ்சதையெல்லாம் எழுதிக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு, ஒரே சலசலப்பு.பியூன் ஒருத்தர் வந்து எங்க ரூம் சூபர்வைஸ்ர்கிட்டே ஏதோ சொல்லிட்டு போறார். ஏதோ நடக்குதுன்னு மட்டும் தெரியுது. ஆனா, ஒண்ணும் புரியலை. எல்லாரும் மும்முரமா எழுதிக்கிட்டிருந்தோம்.

வெளிலே வந்தப்புறம் தெரிஞ்ச விஷயம் - பிசிக்ஸ் பேப்பர் டஃப்ன்னு பார்த்ததும், குணா டென்ஷன் ஆகிட்டா. கை காலெல்லாம் உதறுது. அவளாலே எழுத முடியலை.மயக்கம். தண்ணியெல்லாம் கொடுத்து ஆசுவாசப்படுத்தின அப்புறமும், அவளாலே எழுத முடியலை. பாஸ் மார்க் வாங்கிற அளவுக்குக்கூட அவ எழுதலை. எழுதவும் முடியலை,அவளாலே. ஒரு எக்சாம் இப்படி கோட்டை விட்டுட்டோம்னு கவலைலே அடுத்த மேஜர் பேப்பரையும் எழுதலை.

வீட்டுலே அவ எதையோ தாண்டிட்டா இல்லே மிதிச்சுட்டான்னும் அப்புறம் செய்வினைன்னும் சாமியார்/பூஜாரிகிட்டேயெல்லாம் கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட். அக்டோபரிலும் சரியா எழுதலை. இதுலேருந்து மீண்டு வர்றதுக்கு அவளுக்கு ரெண்டு வருஷம் ஆச்சு.அதாவது, அந்த மெண்டல் ட்ராமா!அப்புறம் பேருக்கு ஆப்டெக்-லே கம்ப்யூட்டர் படிச்சுட்டு இப்போ மேடம் ஏதோ ஒரு ஊருலே இல்லத்தரசியா இருக்காங்க.


எம்சிஏ பேட்ச்-லே UG கம்ப்யூட்டர் பண்ணினவங்க தவிர மத்த மேஜர் எடுத்து வந்தவங்களும் நிறைய பேர் இருந்தாங்க. வசுதா கெமிஸ்ட்ரி மேஜர்.அவளது, ஐஐடி அண்ணாவின் சொல்படி எம்சிஏ சேர்ந்திருந்தாள். முதல் செமஸ்டர் அக்கவுண்டன்ஸியோட கொஞ்சம் தீவிரமாவே போனது. சொல்லப் போனால், நாங்க எல்லாரும் ஒரே படகில்தான் இருந்தோம்.அதுவே ஒரு தைரியமா இருந்தது. தமிழ்செல்வி கூட சேர்ந்து பண்ணின ப்ரேயர் மேல பாரத்தை போட்டுட்டு கொஸ்டின் பேப்பரை வாங்கி எழுத ஆரம்பிச்சாச்சு.


சரி,அவங்களுக்கு தெரிஞ்சதை அவங்க கேட்டு இருக்காங்க,நமக்கு தெரிஞ்சதை நாம எழுதி வைப்போம்னு எழுதிக்கிட்டிருந்தோம். பின்னாடி பெஞ்ச்லே இருந்த வசுதாவுக்கு கை கால் உதறுது. தண்ணி கொடுத்ததும் வாங்கி குடிக்க முடியாம இழுக்க ஆரம்பிச்சது. வாயில் நுரை. டிஸ்க்ரீட் மேத்ஸ் பேப்பரிலிருந்து அந்த செம்ஸ்டரின் எந்த பரீட்சையையும் எழுத முடியாமல் போனது வசுதாவிற்கு. வீட்டிலிருந்து பெற்றோர் வந்து அழைத்து சென்று டாக்டரிடம் ட்ரீட்மெண்ட். ஏற்கெனவே, வசுதாவிற்கு தான் மட்டுமே கெமிஸ்ட்ரி மேஜர் என்றும், மற்ற அனைவரையும் பார்த்து கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் உண்டு.

அடுத்த செமஸ்டரின் பிராக்டிகல்ஸில் எனக்கு பின்னால் வசுதா. நான் முடித்ததும் அதே சிஸ்டம்தான் அவளுக்கு. அவுட்புட் மற்றும் முதல் கம்பைலேஷன் காட்டியபிறகு வசுதா என்னை அழைத்தாள். அவளுக்கும் அதே ப்ரோக்ராம். நான் அமைதியாக அலைன்மெண்டில் மூழ்கி இருந்தேன். வசுதாவிற்கு, லேசாக கைகள் உதற ஆரம்பித்தது. 'வெயிட் பண்ணு' என்று சைகை காட்டிவிட்டு அவளது பெயரில் அதே ப்ரோக்ராமை காப்பி செய்துவிட்டு எனது பிரிண்ட் அவுட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு வெளியே வந்தபின்தான் என் படபடப்பு நீங்கியது. அப்புறம்,வசுதா முதல் செமஸ்டர் பேப்பரை க்ளியர் செஞ்சு இப்போ நல்லப்டியா பொட்டி தட்டிக்கிட்டு இருக்கா.

+1 சேர்ந்த புதிதில், வசுதா நிலையை,குணாவின் நிலையை நானும் அனுபவித்திருக்கிறேன். கண்களைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது முதல் இரண்டு மாதங்களில். புரிந்தாற் போலும் இருந்தது - எதுவும் புரியாதது போலவும். , 'ஸ்டொமக் அப்செட்' -னு சொல்லிட்டு முதல் டெர்ம் டெஸ்ட் முழுசும் போகாம இருந்தேன். பயம் மற்றும் டென்ஷன்தான் காரணம். அப்புறம் தெளிஞ்சுடுச்சு.

நான் ஒன்றும் கிளாஸ் டாப்பர் எல்லாம் கிடையாது. ஆனால், 'நல்லா படிக்கணும்,வேலைக்கு போகணும்,நல்லா சம்பாதிக்கணும்'கிற குதிரை கடிவாளம் போட்டுக்கிட்டு ஓடிக்கிட்டிந்தேன். படிக்கணும்கிறது, 'ஏன் எதுக்கு எப்படி'ன்னு கேள்வி எல்லாம் இல்லாம,'இது இப்படிதான்'ன்னு புக்லே இருக்கிறதை மனப்பாடம் பண்ணனும், பின்னாடி இருக்கிற கேள்விகளுக்கு பாடத்துலே பதில் குறிச்சுக்கிட்டு அதை அப்படியே மனப்பாடம் பண்ணணும்..பரீட்சையிலே எழுதணும்.மார்க் வாங்கணும்..ஃப்ர்ஸ்ட் ரேங்க் வரணும்..ஃப்ர்ஸ்ட் ரேங்க் வந்தா கேட்டது கிடைக்கும்.இதுதான் என்னோட கல்விச் செல்வம் - காலேஜ் வரைக்குமே!

மேலும், டீச்சரை பிடிச்சிருந்தா அந்த பாடம் ரொம்ப பிடிக்கும். டீச்சர் பிடிக்கலைன்னா கஷ்டம்தான். ஹிஸ்டரியும், கெமிஸ்ட்ரியும் பிடிக்காம போனதுக்கு காரணம் இதேதான்.பெரியவங்க என்னதான் புரிஞ்சுக்கிட்டு படி,படின்னு கரடியா கத்தினாலும் இதுதான் மார்க் வாங்கி கொடுக்கும். ஏன்னா, என்னோட வார்த்தைகளில் நான் எழுதியிருந்ததைவிட, புக்லே இருந்தா மாதிரியே ஞானசௌந்தரி எழுதியிருந்ததுக்குத்தானே முழு மார்க் கிடைச்சது!

பாடப்புத்தகங்கள் எல்லாம் சின்ன சின்னதா இருந்தப்போ படிச்சு நல்ல மார்க் வாங்கியிருந்ததாலேயோ என்னவோ ' நல்லா படிக்கற பொண்ணு' இமேஜ் வந்திருந்தது. அஞ்சாவது வரைக்கும், தினமும் கிளாஸுலே நடத்தினதை எல்லாம் படிச்சு ஆயாகிட்டே ஒப்பிக்கணும். கணக்கு எல்லாம் தினமும் போடணும் - கூடவே மனக்கணக்கு. பக்கத்துலேயே உட்கார்ந்து படிக்க வைப்பாங்க ஆயா. நான், ஆறாவது வந்ததுக்கு அப்புறம் மாடர்ன் மேத்ஸ் ஆயாவுக்கு தெரியாததாலே தப்பிச்சுட்டேன்.சொன்ன பேச்சு கேக்காத பழக்கமும் வந்திருந்தது.ஆனா, விதி அப்போ வேற ரூபத்திலே விளையாடிச்சு.

ஆறாவதுலேருந்து பெரிம்மாவோட ஸ்கூல். ‘டீச்சர் பொண்ணு' இமேஜ் வேற. டீச்சர் பசங்கன்னா ரெண்டு வித கஷ்டம். ஒன்னு, மத்த டீச்சர்ஸ் முன்னாடி டீச்சர் மானத்தை காப்பாத்த நாம நல்ல படிக்கவேண்டி இருக்கும். ரெண்டாவது, டீச்சர் பொன்ண்ணுன்னு மார்க் போடுட்டாங்கன்னு சொல்றவங்க வாயை அடக்கணும். சோ ,எப்பவுமே இருதலை கொள்ளி எறும்புதான். அரைபரிட்சை, கால் பரீட்சை லீவுலே கூட விடமாட்டாங்க.சொல்லப்போனா, லீவுலேதான் நாங்க ஒழுங்கா படிப்போம்.நடந்து முடிஞ்ச பரிட்சை பேப்பரை கரைச்சு குடிச்சிருப்போம்.

காலையில் ஆறரைக்கு மாடிக்கு போய்டணும் - நோட்டு, பாய்,தண்ணி ,புத்தகம் - ஓ யெஸ்...அதே ரென் அண்ட் மார்ட்டின் சகிதம்! எட்டு மணிக்கு ஆயா ராகி கஞ்சி எடுத்துக்கிட்டு மாடிக்கு வந்துடுவாங்க..கண்டிப்பா அதைக் குடிச்சே ஆகணும். அதையும் அவங்க கண் முன்னாடிதான் குடிக்கணும். நோ காஃபி..அதுக்கு அப்புறம்தான் டிஃபன். எல்லோரும் காம்ப்ஃளான்- போர்ன்விட்டா குடிச்சப்போ எங்க வீட்டுலே இந்த கொடுமை...911 மாதிரி நம்பர் இருந்திருந்தா...

பொண்ணுங்களுக்கு நடுவிலே காப்பி/பிட்-ன்னு எதுவும் பெரிசால்லாம் இல்லை - பத்தாவது வரைக்கும். பொருத்துக,சரியான விடையை தேர்ந்தெடு மாதிரி கேள்விகளுக்கு மட்டும் சைகையாலேயே கேட்டுப்போம். அதுதான் மேக்ஸிமம் காப்பி. கன்னத்துலே கை வச்சிக்கிற மாதிரி எந்த கேள்வியோ அத்தனை விரலை வச்சிக்கணும். யார்கிட்டே கேக்கிறோமோ அவங்க விடையை சொல்றதுக்கு அதே மாதிரி கன்னத்துலே கை வச்சிருப்பாங்க.

பிட் வச்சு எழுத இப்போவரைக்கும் முயற்சி செஞ்சது இல்லே. படிச்சதை வேஸ்ட் செய்யக் கூடாதுன்னு அந்தக் கேள்விக்கு தொடர்பா என்னென்ன தெரியுமோ அதை எழுதிடறதுதான் ஆல்வேஸ் பழக்கம். இப்படிதான், தமிழகத்தின் மான்செஸ்டரை கேட்டதுக்கு நான் எழுதிட்டு வந்தது இந்தியா மேப்லே பாம்பே இருக்கிற இடத்துலேன்னு. எக்ஸாம் ஹாலை விட்டு வெளிலே வந்ததுக்கு அப்புறம் தெரிஞ்சு என்ன பண்ண? அன்னைக்கு ராத்திரி நினைப்பெல்லாம், தமிழ்நாட்டின் மான்செஸ்டரை பாம்பேக்கு உடனே மாத்திட மாட்டாங்களான்னு இருந்துச்சு.

அடுத்தவங்க பேப்பரை பிடுங்கி எழுதுவாங்கன்னு +1/+2 வந்தப்புறம்தான் தெரியும். மன்த்லி டெஸ்ட்-லேல்லாம் பசங்க தொல்லை தாங்க முடியாது. எழுதி வச்சிருந்தா, முன்னாலேருந்து 'ட க்'ன்னு எடுத்துடுவாங்க.அப்புறம்,நம்ம பேப்பர் நம்ம கைக்கு வர்றதுக்குள்ளே வாய் வழியா ஹார்ட் வெளிலே வந்துடும். இத்தனைக்கும், நாமே திக்கி திணறிதான் எழுதியிருப்போம்னாலும்!

காலேஜ் - ஸ்கூலைவிட மோசம். சர்ப்ரைஸ் டெஸ்ட், அசைன்மெண்ட், செமினார்ன்னு கடம் அடிச்சதுலே +1,+2 வை கூட செமஸ்டர் டைப்லே மாத்திட்டா நல்லாருக்குமேன்னுதான் தோணுச்சு!

எம்சிஏ -விலே எங்களுக்கு கிளாஸ் எடுக்க ஒரு மேடம் வந்தாங்க. யூஜிசி எல்லாம் முடிச்சு ப்ரெஷ்ஷா வந்திருந்தாங்க. ரொம்ப் நல்லா க்ளாஸ் எடுப்பாங்க. அவங்க பேர் நந்தினி. செம க்யூட்டாவும் இருந்தாங்க. அழகா சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க.எங்க எல்லாருக்குமே அவங்களை பிடிச்சிருந்தது. அடுத்த செமஸ்டர்லே அவங்க வரவே இல்லை. வரவும் மாட்டாங்கன்னு சொன்னாங்க.தீ வச்சி கொளுத்திக்கிட்டாங்களாம். காதல் தோல்வி! 'அவங்க அப்படியே உட்கார்ந்திருந்தாங்களாம் அக்கா'ன்னு ஜூனியர் சொன்னது இன்னும் என் காதுக்குள்ளே கேட்குது!

PG..UGC..முடிச்ச ஒரு மேடம்....ஒரு காதல் தோல்விக்காக....
கல்வி என்ன கத்துக்கொடுக்குது.... பொருளீட்டலையா... வெறும் டொமைன் நாலெட்ஜையா....அப்போ வாழ்க்கையை, நம்பிக்கையை, உரத்தை, பக்குவத்தை...?

படிக்கும் படிப்புக்கும்,நிஜ வாழ்க்கைக்குமே ஏகப்பட்ட இடைவெளி இருக்கும்போது... இதெல்லாம் எம்மாத்திரம்? கேம்ப்ஸ்லே நம்மை அள்ளிட்டு போற கம்பெனி நமக்கு என்ன லைன் பிடிக்கும்னு கேட்டா வேலை கொடுக்கறாங்க? அப்போதைக்கு எந்த பிராஜக்ட்லே காலி இடம் இருக்கோ... அதுலேதான். சில கம்பெனிகளில் ப்ஃரெஷ்ர்ஸ்-ன்னா நேரா டெஸ்டிங்தான்! அவங்களும் அதுலே உருண்டு பிரண்டு ஆட்டோ கேட்சப்...அப்படின்னு காலத்தை ஓட்ட தொடங்குவாங்க. நமக்கு என்ன வேண்டும்னு தெளிவா இல்லேன்னா கேரியர் அதன் போக்குலே போய்டும் - எத்தனை பேரு நான் இந்த வேலை செய்யமாட்டேன்னு சொல்றோம்...கிடைச்ச வேலையத்தானே செய்றோம்?!

சுகந்தியும் லெக்சரர்தான். வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் என் பக்கத்து ரூம்-மேட். புதுக்கோட்டை பக்கம் அவங்க ஊர். ஒருநாள் விடிகாலையிலே சுகந்தியின் குடும்பம் - அம்மா,அப்பா,ரெண்டு தங்கச்சி,அத்தை எல்லாரும் வந்தாங்க. சுகந்தி லவ் பண்றது வீட்டுக்கு தெரிஞ்சதாலே கையோட கூட்டுட்டு போகலாம்னு வந்துட்டாங்க. அந்த நேரம் பார்த்து சுகந்தியோட லவ்வர் வேலை விஷயமா வேற ஊருக்கு போயிருந்தார். சுகந்தியோட ப்ரெண்ட் மூலமா அவருக்கு போன் பண்ணினதும் ஏதோ ஏற்பாடு செய்றதா சொல்லியிருக்கார்.

ஒன்பது மணிக்கு 'நான் காலேஜுக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரேம்மா'ன்னு வெளிலே போன சுகந்தி வரவே இல்லே. அவரோட ஃப்ரெண்ட் வந்து சுகந்தியை பைக்லே கூட்டிட்டு போய்ட்டார். நாங்க எல்லோரும் சாயங்காலம் வர்ற வரைக்கும் ஏன் நாங்க ராத்திரி சாப்பிட போற வரைக்கும் அவங்க குடும்பமே 'சுகந்தி வந்துடுவா'ன்னு காத்துக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இனிக்கிற காதல் மத்தவங்களுக்கு கொடுக்கக் கூடிய வலியை/வேதனையை அன்று நாங்கள் கண் முன் பார்த்தோம்.

'பி எஃப் லோன் எடுத்து படிக்க வச்சேன்மா' ன்னு சுகந்தியோட அப்பாவும் ‘இந்த ரெண்டு பொண்ணுங்களை எப்படி இனிமே நம்பி படிக்க வைப்பேன்,வெளிலே அனுப்புவேன்னு' அவங்க அம்மாவும் அழுதது ஹாஸ்டல் சுவர்களில் அன்றிரவு முழுக்க எதிரொலித்தது. சுகந்தி நிலையிலிருந்து அவங்க செஞ்சது நியாயமா இருக்கலாம். ஆனால், தங்கச்சிகளை, பெற்றோரின் கஷ்டத்தை புரிஞ்சுக்க வைக்காத கல்வி - அது கொடுக்கும் அறிவு?

ஷைனி அக்கா பத்தாவது படிக்கும்போது அவங்க அப்பா இறந்துட்டாங்க. அவங்க அம்மா அவங்களுக்கு இருந்த ரப்பர் தோட்டத்தையும்,அப்பாவோட பென்சனையும் வைச்சு அக்காவை எம்சிஏ படிக்க வைச்சாங்க. அக்காதான் ஒரு தங்கையை எம்பிஏவும், இன்னொரு தங்கையை பி ஈ யும் படிக்க வைச்சாங்க. அவங்க காதலிச்சவரையே கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க.

இட ஒதுக்கீட்டுலே படிச்சுட்டு, ‘இட ஒதுக்கீடே தேவையில்லை, மெரிட்தான் சரி'ன்னு பேசறவங்களையும், ‘கால பைரவர் கோயில்லே மிளகு விளக்கு ஏத்தறது எப்படி'ன்னு டவுட் கேக்கறவங்களையும், ஒரு செண்ட் அதிகமாக் கொடுத்துட்டாங்கன்னு சொத்து தகராறுலே உடன் பிறந்தவங்ககூடவே பேசாம இருக்கிறதையும் பார்க்கும்போது....

கல்வின்றது நாம படிக்கிற பாடப்புத்தகத்திலேர்ந்து மட்டும் வர்றதா என்ன?!

தேர்வு பற்றிய தொடர்பதிவை ஆரம்பித்த வினவுக்கு நன்றி!

தங்களது சுவாரசியமான பகிர்வுகளின் மூலம் இத்தொடரைத் தொடர்ந்திட
அழைப்பது :

ராப் (கம் பேக்,ராப்..உங்க ஹைபர்னேஷன் முடியும் நேரம் வந்தாச்சு :-) )
குசும்பன் (அடிச்சு தூள் கிளப்புங்க, சார்)
அன்புடன் அருணா (பெர்மிஷன் கேக்காம டாக் பண்ணிட்டேன்,கோச்சுக்காதீங்க!)
நான் ஆதவன் (பாஸ்...நோ ஒளிவுமறைவு!!)
தாரணி பிரியா (மேடம், காணாம போனா இப்படிதான்..;-) )

29 comments:

குசும்பன் said...

//தேர்வு பற்றிய தொடர்பதிவை ஆரம்பித்த வினவுக்கு நன்றி!
//

அவ்வ்வ் நடந்ததை எல்லாம் எழுதினா போராட்டம் எல்லாம் செஞ்சு என்னை திரும்ப பத்தாவது படிக்கவெச்சிடுவாங்களே:)))அவ்வ்

*************
//கன்னத்துலே கை வச்சிக்கிற மாதிரி எந்த கேள்வியோ அத்தனை விரலை வச்சிக்கணும். யார்கிட்டே கேக்கிறோமோ அவங்க விடையை சொல்றதுக்கு அதே மாதிரி கன்னத்துலே கை வச்சிருப்பாங்க.//

காம்ப்ளான் எல்லாம் குடிச்சாவது வளர்ந்திருக்கனும்:)))சின்னபுள்ள தனமா கன்னத்துல கை வைப்பாங்களாம், மாத்தி சொன்னா ரிசல்ட் வந்த பிறகு பர்மெணெண்டா கை வெச்சிடவேண்டியதுதான்:)))

☀நான் ஆதவன்☀ said...

தமிழ்நாட்டோட மான்ஸ்செஸ்டரை பாம்பேக்கு மாத்துறதா? அவ்வ்வ் பாஸ் அல்ரெடி நமக்கும் அவய்ங்களுக்கும் வாயக்கா தகராறு. (என்ன வாய்க்கா தகராறுன்னு கேட்டுறாதீங்க பாஸ்.. அழுதுடுவேன்)

தாறுமாறா ஆரம்பிச்சு செண்டிமெண்டா முடிச்சுட்டீங்க பாஸ்

எனிவே அழைப்பிற்கு நன்றி பாஸ். என்னோட தேர்வு அனுபவத்தையும் பதிஞ்சிடுறேன் பாஸ்.

சென்ஷி said...

//மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி...
சிறகுகள் விரித்தபடி இளங்குருவிகள் பறந்ததடி...

- இந்த பாட்டை கொஞ்ச நாள் முன்னாடிதான் முதல்முதலா பார்த்தேன். நிரோஷாவும் - ராம்கியும்.//


இந்த பாட்டு ஹீரோ முரளி- பூனைக்கண் உள்ள நடிகையும் நடிச்ச படம்.. தங்கமனசுக்காரன் படம் பேருன்னு நினைக்கிறேன்..

ஆயில்யன் said...

உள்ளேன் ஐயா!

Kaargi Pages said...

நல்ல பதிவு - சுவாரசியமான எழுத்து நடையும் சொல்லவந்ததை நன்றாக விவரிக்கும் திறனும் உங்களுக்கு இருக்கிறது.

//வெளிலே வந்தப்புறம் தெரிஞ்ச விஷயம் - பிசிக்ஸ் பேப்பர் டஃப்ன்னு பார்த்ததும், குணா டென்ஷன் ஆகிட்டா. கை காலெல்லாம் உதறுது. அவளாலே எழுத முடியலை.மயக்கம். தண்ணியெல்லாம் கொடுத்து ஆசுவாசப்படுத்தின அப்புறமும், அவளாலே எழுத முடியலை.//

கண் முன்னே பழைய நினைவுகள். ஒரு பேப்பர் கஷ்ட்டமா வந்திருச்சின்ன உடனே ஒரு பரபரப்பு அப்படியே பரவும் பாருங்க.. அதுவும் நாம்
எழுதியிருந்த ஒரு மார்க் கேள்விகளுக்கு வெளியே வந்து வேற பதில் தான் சரியானது என்று தெரிந்தவுடன் தொண்டையில் அப்படியே
அடச்சிக்கும்.

//சரி,அவங்களுக்கு தெரிஞ்சதை அவங்க கேட்டு இருக்காங்க,நமக்கு தெரிஞ்சதை நாம எழுதி வைப்போம்னு எழுதிக்கிட்டிருந்தோம். //

அடடா.. சேம் ப்ளட்.. முதல் வரியும் கடைசி வரியும் கேள்வியோடு சம்பந்தப்பட்டிருக்கும். மத்தபடி நடுவில வர்றது எல்லாம் "அசோகர் ஏன்
மரம் நட்டார் என்றால், அவர் மரம் நட்டார். மரம் நடவேண்டும் எனும் விருப்பத்திற்கு மரம் நட்டார். மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று
மரம் நட்டார். மரம் பெரிதாகும் என்பதால் மரம் நட்டார். சாலையோரம் இடம் இருந்ததால் மரம் நட்டார்...." இப்புடியே ஒரு ரெண்டு பக்கத்துக்கு
எழுதுவதில் நாங்களெல்லாம் கில்லாடிகளாக்கும்.

//கல்வின்றது நாம படிக்கிற பாடப்புத்தகத்திலேர்ந்து மட்டும் வர்றதா என்ன?!//

சரியான கேள்வி. இதுக்கு யாருனாச்சும் பிட் அடிக்காம பதில் சொல்லுங்கப்பா..

வினவு said...

நன்றி முல்லை! பல இடுகைகளுக்கான விசயங்கள் உங்கள் கட்டுரையில் இருக்கின்றன.பயம், தீக்குளிப்பு, காதல் எல்லாம் சேர்ந்து இறுதியில் கேட்ட கேள்வியின் நியாயத்தை வலுவாக்குகின்றன.ஆங்கில வார்த்தைகள் அதிகமாக இருக்கின்றன.அதை குறைக்கலாமென்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!

சின்ன அம்மிணி said...

குணசுந்தரிக்கும் வசுதாவுக்கும் உடம்பு சரியில்லாம போனதுக்கு நீங்கதான் காரணம்னு நினைக்கிறேன் ஆச்சி :)

சுகந்தி செய்தது முழுதும் தப்புன்னு தோணலை. வீட்டுல ஒத்துக்காத பட்சத்துல அப்படி செய்திருக்காங்க.

? said...

அந்த லெக்சர்ர் தீக்குளித்த்து ஆணாதிக்க சமூகத்தாலா அல்லது ஏட்டுப்படிப்பின் குறைபாடாலா..

சுகந்தி அப்பாவுக்காக தாமதம் செய்திருந்து அதனால் காதல் கைகூடாமல் போயிருந்தால் அது சரியா.. சைனி அக்காவுக்கு கிடைத்த வாய்ப்பு யாருக்கும் எப்போதுமே கிடைத்துக் கொண்டா இருக்கிறது..

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான பகிர்வு.

//கல்வின்றது நாம படிக்கிற பாடப்புத்தகத்திலேர்ந்து மட்டும் வர்றதா என்ன?!//

சிந்திக்க வைக்கும் கேள்வியுடன் முடித்தவிதம் அருமை.

பா.ராஜாராம் said...

// எழுதணும்.மார்க் வாங்கணும்..ஃப்ர்ஸ்ட் ரேங்க் வரணும்..ஃப்ர்ஸ்ட் ரேங்க் வந்தா கேட்டது கிடைக்கும்.இதுதான் என்னோட கல்விச் செல்வம் - காலேஜ் வரைக்குமே!//

//911மாதிரி நம்பர் இருந்திருந்தா...//

//அன்னைக்கு ராத்திரி நினைப்பெல்லாம், தமிழ்நாட்டின் மான்செஸ்டரை பாம்பேக்கு உடனே மாத்திட மாட்டாங்களான்னு இருந்துச்சு.//

:-)


//PG..UGC..முடிச்ச ஒரு மேடம்....ஒரு காதல் தோல்விக்காக....
கல்வி என்ன கத்துக்கொடுக்குது.... பொருளீட்டலையா... வெறும் டொமைன் நாலெட்ஜையா....அப்போ வாழ்க்கையை, நம்பிக்கையை, உரத்தை, பக்குவத்தை...?//

//நமக்கு இனிக்கிற காதல் மத்தவங்களுக்கு கொடுக்கக் கூடிய வலியை/வேதனையை அன்று நாங்கள் கண் முன் பார்த்தோம்.//

கலந்து கட்டி, கலக்கி இருக்கீங்க முல்லை...

பிரமிப்பான, சந்தோசமான மனநிலை வாய்த்தது. அற்புதம்!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

யப்பா!!!
என்ன இவ்வளவு பெரிய தொடர்பதிவு?????
பாண்டி ப்ரதர்ஸ விட்டுடீங்க பாஸ்!!!

naathaari said...

நல்ல எழுத்தென்பது நமக்குள் படிந்திருக்கும் படிமங்களை எழுப்பவேண்டும்

கொஞ்சம் படிப்பதை நிறுத்திவிட்டு அசைபோடவைக்கவேண்டும்
அநத வலிமை இந்த எழுத்தில்இருக்கிறது

முல்லை தேர் கொடுக்கிறது
பல பாரிகளுக்கு

சுந்தரா said...

அப்பா! ஒரே பதிவில இவ்வளவு விஷயங்களா?

குணா, வசுதா மாதிரி நிறைய பிள்ளைகள் இப்பவும் நிறைய இருக்காங்க.

அப்புறம்,டீச்சர் பொண்ணு இமேஜால நானும் நாலஞ்சு வருஷம் கஷ்டப்பட்டிருக்கேன் :(

//911 மாதிரி நம்பர் இருந்திருந்தா...//

:)

அன்புடன் அருணா said...

/அன்புடன் அருணா (பெர்மிஷன் கேக்காம டாக் பண்ணிட்டேன்,கோச்சுக்காதீங்க!)/
அட இதுக்கெல்லாமா கோச்சுக்குவாங்க!???நிறைய இருக்கே !எதை விட?எதை எழுதன்னு ஒரே கவலை!கொஞ்சம் டைம் கொடுங்க!

முகுந்த் அம்மா said...

அருமையான இடுகை.

//கல்வின்றது நாம படிக்கிற பாடப்புத்தகத்திலேர்ந்து மட்டும் வர்றதா என்ன?!//

நல்ல கேள்வி.

நசரேயன் said...

//மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி...
சிறகுகள் விரித்தபடி இளங்குருவிகள் பறந்ததடி...

- இந்த பாட்டை கொஞ்ச நாள் முன்னாடிதான் முதல்முதலா பார்த்தேன். //

மாத்தீட்டாங்களா சொல்லவே இல்லை

நசரேயன் said...

தொடர் இடுகையை ஒரு நெடுந் தொடர் மாதிரியே எழுதி இருக்கீங்க, இடையிடையே பெரிய பெரிய படிப்பு பெயர் எல்லாம் வருது.

//நான் ஒன்றும் கிளாஸ் டாப்பர் எல்லாம் கிடையாது.//

இதையெல்லாம் நீங்க சொல்லி நாங்க தெரிய வேண்டிய அவசியமே இல்லை

//ஏன்னா, என்னோட வார்த்தைகளில் நான் எழுதியிருந்ததைவிட, புக்லே இருந்தா மாதிரியே ஞானசௌந்தரி எழுதியிருந்ததுக்குத்தானே முழு மார்க் கிடைச்சது!//

அதாவது நீங்க படிக்கவே இல்லை என்பதற்கு இப்படி ஒரு பில்ட் அப்

//விதி அப்போ வேற ரூபத்திலே விளையாடிச்சு.//

இப்பவும் அதே விதிதான் எழுத்து ரூபத்திலே எங்க ௬ட விளையாடுது

//இந்த கொடுமை...911 மாதிரி நம்பர் இருந்திருந்தா...//

போலீஸ் வரும்

//பொண்ணுங்களுக்கு நடுவிலே காப்பி/பிட்-ன்னு எதுவும் பெரிசால்லாம் இல்லை//

இருந்தா நீங்க மாநிலத்திலே முதல் மதிப்பெண் எடுத்து இருப்பீங்களா ?

//
எத்தனை பேரு நான் இந்த வேலை செய்யமாட்டேன்னு சொல்றோம்...கிடைச்ச வேலையத்தானே செய்றோம்?!
//

நானும் அப்துல் கலாம் மாதிரி ஒரு அணு விஞ்ஞானி ஆகணும் ஆசைப் பட்டேன்.

நசரேயன் said...

//ராப் (கம் பேக்,ராப்..உங்க ஹைபர்னேஷன் முடியும் நேரம் வந்தாச்சு :-) )//

கண்டிப்பா பழைய படி கும்மி அடிச்சி கல்லாகட்டனும்

விஜய்கோபால்சாமி said...

அக்கா, பாட்டு புத்தகத்தைப் பத்தி சொல்லி பழைய ஞாபகத்தை எல்லாம் கிளறிவிட்டுட்டீங்க. சிறுவாடு சேக்குற பழக்கமே கெடையாது. கைக்கு கெடைச்ச காசையெல்லாம் பாட்டு புக்கா வாங்கி சேத்து வச்சிருப்பேன். லோக்கெல் கேபிள் டிவியில் ஒரு முறை பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசாக வாங்கிய மூடி போட்ட எவர்சில்வர் டப்பா ஒன்றுதான் பாட்டுப் புத்தகம் வாங்கிய பலன்.

கடைசி சில பத்திகள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. என் மகள் என் வயதடையும் முன்பாகவாவது அவற்றுக்கெல்லாம் விடை கண்டறிய வேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present madam

கோமதி அரசு said...

நல்ல பதிவு முல்லை.

//கல்வின்றது நாம படிக்கிற பாடப் புத்தகத்திலேர்ந்து மட்டும் வர்றதா என்ன?!//

நல்ல சிந்திக்க வைக்கும் கேள்வி.

Dr.Rudhran said...

எழுத்துத் திறன், மட்டுமல்ல சிந்தனையின் சாரமும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்.

அம்பிகா said...

ஒரு சுவாரஸ்யமான பதிவு, மீண்டும் முல்லையிடமிருந்து.
//சரி,அவங்களுக்கு தெரிஞ்சதை அவங்க கேட்டு இருக்காங்க,நமக்கு தெரிஞ்சதை நாம எழுதி வைப்போம்னு எழுதிக்கிட்டிருந்தோம். //
அட அட அடடா!!
`மணிக்குயில் இசைக்குதடி’
பாட்டு முரளி, சிவரஞ்சனி தானே.

தாரணி பிரியா said...

ஒவ்வொரு வரியையும் கோட் பண்ணலாம் போல இருக்கே. எக்ஸாம் ஸ்கூல் லைப் பத்தி கேட்டா பேசிக்கிட்டே இருப்பேனே கண்டிப்பா எழுதிடறேன் முல்லை :). ஆனா கொஞ்ச டைம் வேணுமே

அமைதிச்சாரல் said...

நிறைய கேள்விகள்.. பதில் கிடைக்குமா?.. இன்னொரு செறிவான பதிவு உங்களிடமிருந்து.

//சரி,அவங்களுக்கு தெரிஞ்சதை அவங்க கேட்டு இருக்காங்க,நமக்கு தெரிஞ்சதை நாம எழுதி வைப்போம்னு எழுதிக்கிட்டிருந்தோம். //

எப்டீங்க.. ஃபிசிக்ஸ்ல கேள்வி கேட்டா, பயாலஜில பதில் எழுதுனீங்களா :-))))))

ஜெயந்தி said...

படிப்பு, எக்ஸாம் இந்த வார்த்தைகளைக் கேட்டாலே இப்போது கூட பயம்தான்.
// கேம்ப்ஸ்லே நம்மை அள்ளிட்டு போற கம்பெனி நமக்கு என்ன லைன் பிடிக்கும்னு கேட்டா வேலை கொடுக்கறாங்க? அப்போதைக்கு எந்த பிராஜக்ட்லே காலி இடம் இருக்கோ... அதுலேதான். //

Deepa said...

அட்டகாசம் முல்லை.
நான் படிச்சிட்டு வர்றதுக்குள்ள நிறைய‌ பேர் நான் நினைச்சதையே அழகா சொல்லிட்டாங்க‌.

மிகவும் ரசித்தது:
//1. naathaari said...
நல்ல எழுத்தென்பது நமக்குள் படிந்திருக்கும் படிமங்களை எழுப்பவேண்டும்

கொஞ்சம் படிப்பதை நிறுத்திவிட்டு அசைபோடவைக்கவேண்டும்
அநத வலிமை இந்த எழுத்தில்இருக்கிறது
முல்லை தேர் கொடுக்கிறது
பல பாரிகளுக்கு// Super!

//2. சின்ன அம்மிணி said...

குணசுந்தரிக்கும் வசுதாவுக்கும் உடம்பு சரியில்லாம போனதுக்கு நீங்கதான் காரணம்னு நினைக்கிறேன் ஆச்சி //
:)))))

//3. நசரேயன் said...

//ஏன்னா, என்னோட வார்த்தைகளில் நான் எழுதியிருந்ததைவிட, புக்லே இருந்தா மாதிரியே ஞானசௌந்தரி எழுதியிருந்ததுக்குத்தானே முழு மார்க் கிடைச்சது!//

அதாவது நீங்க படிக்கவே இல்லை என்பதற்கு இப்படி ஒரு பில்ட் அப் //
:)))

ஹுஸைனம்மா said...

//பெற்றோரின் கஷ்டத்தை புரிஞ்சுக்க வைக்காத கல்வி - அது கொடுக்கும் அறிவு?//

கல்விங்கிறது வாழ்வியல் பாடமாகவும்தான் இருந்தது முதலில். அது வியாபாரமாகவும், பணம் சம்பாதிக்கும் வழிகாட்டியாகவும் ஆகத் தொடங்கியதுதான் இந்த மாதிரி விளைவுகள்/ கேள்விகள் வர ஆரம்பித்தன.

மணிஜீ...... said...

நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்