Wednesday, May 19, 2010

Mamma Mia - Me the Mamma?

”சூயிங்கம்லாம் சாப்பிடக்கூடாது, தெரியாது?” - மிரட்டலுக்கு
பயந்ததுபோல தலையாட்டுகிறேன்.

பேப்பரை கிழித்து அதில் துப்பிவிடுவதைப் போல பாசாங்கு
செய்கிறேன் - மேலண்ணத்தில் ஒளித்துவைத்தபடி.

நம்பியும், நம்பாமலும் சந்தேகப்பார்வையால் துழாவி சமாதானமாகிறாய்.

சிறிது நேரத்தில் அனிச்சையாய் அசையும் வாயைப் பார்த்து
மறுபடியும்
மிரட்டத் துவங்குகிறாய்.
இம்முறை, மாட்டிக்கொண்ட பாவனையோடு பாதியை
உள்ளடக்கி மீதியை பிய்த்து தூர எறிகிறேன் உன்கண்முன் .

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் திரும்ப கைவிலங்கிடுகிறாய்.
ஒருசிலரை மெல்வதற்கு பதிலாக சூயிங்கத்தை மெல்கிறேனென்பதை
உன்னிடம் விளக்குவது எப்படி என விழிக்கும்போது,

”புடிக்குமா..?” - உனது கேள்வியில்

கண்கள் விரிய ஆமாமென்கிறேன்.

“அப்போ சாப்பிடு, ஆனா முழுங்க கூடாது, ஓக்கே!” என்கிறாய்
பெருந்தன்மையுடன்!


உன் உலகின் நியதிகளும்/காரணங்களும் தான் எவ்வளவு எளிதானவை,பப்பு!

(படம் : பப்பு @ விழுப்புரம்)

25 comments:

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ரைட்டு!!!
பப்பு பேரவை,
குவைத்.

அன்புடன் அருணா said...

/“அப்போ சாப்பிடு, ஆனா முழுங்க கூடாது, ஓக்கே!” என்கிறாய்
பெருந்தன்மையுடன்!/
அப்பப்போ நமக்குத்தான் இந்தப் பெருந்தன்மை இருக்க மாட்டேனெங்கிறது!

அமைதிச்சாரல் said...

ooooo...mamma mia.

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகான பதிவு முல்லை, பப்பு போட்டோவும்.

Jeeves said...

ஹ்ம்ம்... பப்பு சொன்னா கேட்டுக்கனும். பப்பு நல்லது சொன்னா ஏன் கேக்கறதில்லை தங்கச்சிக்கா நீங்க ?

Uma said...

//ஒருசிலரை மெல்வதற்கு பதிலாக சூயிங்கத்தை மெல்கிறேனென்பதை
உன்னிடம் விளக்குவது எப்படி என விழிக்கும்போது,
”புடிக்குமா..?” - உனது கேள்வியில்
கண்கள் விரிய ஆமாமென்கிறேன்.
“அப்போ சாப்பிடு, ஆனா முழுங்க கூடாது, ஓக்கே!” என்கிறாய்
பெருந்தன்மையுடன்!//
:))

KVR said...

//“அப்போ சாப்பிடு, ஆனா முழுங்க கூடாது, ஓக்கே!” என்கிறாய்
பெருந்தன்மையுடன்!//

அந்தக் குழந்தை மனம் நமக்கும் வாய்த்துவிட்டால்!!!

nice one

செல்வநாயகி said...

///உன் உலகின் நியதிகளும்/காரணங்களும் தான் எவ்வளவு எளிதானவை,பப்பு////

cute.

ஆயில்யன் said...

பப்பு கூட பக்கத்தில புடவைகட்டிக்கிட்டு டெரரா உக்காந்திருக்கிறது ஆச்சி இல்லத்தானே?!

மயில் said...

பப்பு :))) சூப்பர்டா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பொண்ணு பப்பு..

\\ அன்புடன் அருணா said...

/“அப்போ சாப்பிடு, ஆனா முழுங்க கூடாது, ஓக்கே!” என்கிறாய்
பெருந்தன்மையுடன்!/
அப்பப்போ நமக்குத்தான் இந்தப் பெருந்தன்மை இருக்க மாட்டேனெங்கிறது!//

ஆமாங்க.. ;)

கவிதா | Kavitha said...

(படம் : பப்பு @ விழுப்புரம்)//

அட பப்புவுக்கும் சொந்த ஊர் விழுப்புரம் தானா... ?!!

(இல்ல ஆம்பூர் ன்னு சொல்லி ஆச்சி பொங்காம இருந்தா.. சாக்லெட் பப்பு க்கு வாங்கி தரும் போது ஒன்னே ஒன்னு ஓசியில எடுத்துக்க விடுவேன்...)

போட்டோ நைஸ்... பக்கத்துல இருக்கிற பெரியம்மாவை பாத்த பிறகுதான்......... சரி சரி... நோ நோ டென்ஷன்.. தனியா பேசிக்கலாம்....

பப்பு ஐ லவ் யூ ... :) பெரிய ப(பீ)ப்பூ.. ஐ லவ் யூ டூஊஊஊ!! :)

பிரசன்னா said...

Very nice :)

அம்பிகா said...

///உன் உலகின் நியதிகளும்/காரணங்களும் தான் எவ்வளவு எளிதானவை,பப்பு////

குழந்தைகளின் உலகம் எளிதானது மட்டுமல்ல, அழகானதும் கூட...
பப்புவின் போட்டோவைப்போல...

ஜெயந்தி said...

/////உன் உலகின் நியதிகளும்/காரணங்களும் தான் எவ்வளவு எளிதானவை,பப்பு////

குழந்தைகளின் உலகம் எளிதானது மட்டுமல்ல, அழகானதும் கூட...
பப்புவின் போட்டோவைப்போல...
//
:)

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

பப்பு சொல்லுரது சரிதான்..! மென்னு துப்பிடுங்க..! முழுங்கினா அவஸ்தை ...!

அன்னு said...

அருமையான கவிதை. சில சமயம் இப்படித்தேன் எங்க வூட்டு வாலையும் எதுக்காவது மெரட்டுவேன். பின்னாடி, சரி போன்னு விட்டுடுவேன். அதுக்கப்புரமும் அது 'ஹா'ன்னு க்ளைமாக்ஸ் எங்கேன்னு காத்துகிட்டிருக்கும். :)

The Analyst said...

:) Very cute.

சின்ன அம்மிணி said...

Pappu looking cute

தோழர் மோகன் said...

அருமையான மற்றும் அழகான பதிவு முல்லை... உங்களின் ஒவ்வொரு பதிவும் மனத்தை லேசாக்குகிறது... என்னுடைய குழந்தையும் எப்படியெல்லாம் செய்யுமா? என்ற கற்பனையே மகிழ்ச்சி தருகிறது.... தொடர்ந்து எழுதுங்கள்.... ஒரு குழந்தை வளர்ப்பு புத்தகத்துக்கு முயற்சிக்கலாமே?

தோழமையுடன்,
மோகன்....

Deepa said...

//”புடிக்குமா..?” - உனது கேள்வியில்
கண்கள் விரிய ஆமாமென்கிறேன்.
“அப்போ சாப்பிடு, ஆனா முழுங்க கூடாது, ஓக்கே!” என்கிறாய்
பெருந்தன்மையுடன்!//
Pappu...hats off da!

Photo super...Lovely expression captured.

நசரேயன் said...

"நான் பேசும் போது பேசக்௬டாது, தெரியாது?" மிரட்டலுக்கு
பயந்து தலையாட்டுகிறேன்.
வாயை அசைத்து பேசுவது போல பாசாங்கு
செய்கிறேன் - மேலண்ணத்தில் என்ன கொடுமை இதுவேன்னபடி
நம்பியும், நம்பாமலும் சந்தேகப்பார்வையால் பூரி கட்டையை எடுக்கிறாய்
சிறிது நேரத்தில் அனிச்சையாய் அசையும் வாயைப் பார்த்து
மறுபடியும் மிரட்டத் துவங்குகிறாய்.
இம்முறை, மாட்டிக்கொண்ட பாவனையோடு வாயை
உள்ளடக்கி கையைக் கட்டுகிறேன் உன்கண்முன்
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் திரும்ப கைவிலங்கிடுகிறாய்.
ஒருசிலரை சொல்வதற்கு பதிலாக அடிப்பதே மேல் என்கிறாய்
உன்னிடம் விளக்குவது எப்படி என விழிக்கும்போது,
”அடிக்க புடிக்குமா..?” - எனது கேள்வியில்
கண்கள் விரிய ஆமாமென்கிறாய்
“அப்போ பேசாம இருகிறேன், ஓக்கே!” என்றேன்
பெருந்தன்மையுடன்!

உன் உலகின் கொடுமைகளும்/காரணங்களும் தான் எவ்வளவு கஷ்டமானவை,________________ (கோடிட்ட இடத்தை நிரப்பிகொள்க)

ராமலக்ஷ்மி said...

படத்தில் பப்புவும் அழகு. கவித்துவமான உங்கள் பகிர்வும் அழகு:)!

மாதேவி said...

நைஸ் பப்பு.

தீஷு said...

சூப்பர் பதிவு முல்லை..