Tuesday, May 25, 2010

பெரிம்மா_அம்மா விசிட் :-) மற்றும் :-(

. என்ன காய்கறிகள் ஸ்டாக் இருக்கிறதென்று பார்க்கத் தேவையில்லை.

. நாளைக்கு என்ன சமையல் என்று கொட்டாவி விட்டபடி யோசிக்கத் தேவையில்லை.

. வெரைட்டியான உணவு பண்டங்களோடு கிளம்பும் நேரத்தில் உணவு டப்பா கைகளை வந்தடையும்.

. அதற்கு மறுபக்கமும் உண்டு! ஸ்ட்ராங் நோ டூ ஜங்க் ஃபுட் - வாரயிறுதிகள் பரோட்டா கட்!

. பதிலாக,'உடலுக்கு நல்லது' என்ற பெயரில் புதினா/கறிவேப்பிலை தொகையல் அல்லது கிர்ணி பழ/வெள்ளரி பழ வகைகளை உண்ணுவதிலிருந்து எஸ்கேப் ஆக முடியாது!

. ”என்னது,தலைக்கு நீ எண்ணெயே வைக்கறது இல்லையா” மாதிரியான அதிர்ச்சிகளோடு எண்ணெய்_வைக்காத__குலதெய்வ_குற்றத்தால்_ தான்_உன்_முடி_இப்படி_கொட்டிப்போகிறது உலகமகா கண்டுபிடிப்புகளை புள்ளிவிவரங்களோடு கேட்கலாம்.

. “உன் பெட்ரூம் என்ன இப்படி குப்பையா இருக்கு,இந்த குப்பையிலேயா படுத்து தூங்கறே” - அறியாத வயதில் தெரியாத்தனமாக ரொம்ப சுத்தபத்தமாக நீட்டாக பொருட்களை வைத்துக்கொண்ட குற்றத்திற்காக பழைய வாழ்க்கைசரித குறிப்புகள் மற்றும் திட்டுகள் aka அட்வைசை இன்று கேட்க நேரிடலாம்.

. திட்டுகளின் உப விளைவாக அலமாரி ஒழுங்கமைக்கப்பட்டு காணாமல் போன துப்பட்டாவோ, நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருக்கும் சட்டையோ கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.

.சம்மர் ஷாப்பிங் என்பது கோ-ஆப்டெக்ஸில் தொடங்கி கோ-ஆப்டெக்ஸிலேயே முடிந்துவிடும். ( டீச்சர் பசங்களாகிப் போன சோகங்கள் - பார்ட் டூ!)


இவையெல்லாம் இந்த வாரத்தோடு முடிவுக்கு வந்துவிடுமென்பதுதான் மிகப்பெரிய :-(

உங்களது அனுபவங்களையும் ஸ்டார்ட் மீசிக்....!

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

”என்னது,தலைக்கு நீ எண்ணெயே வைக்கறது இல்லையா”//
:)

ஆமா அப்பறம் குளமா எண்ணை விட்ட தலையோட பின்னல் போட்டுக்கனும்.. ;)

காணமப்போனதெல்லாம் கிடைப்பதும் உண்மை.. அல்லது அப்போ தான் ஒழு்ங்கமைப்புக்கே வரும்:)

விதம்விதமான சாப்பாடும் அப்ப கிடைக்கும்கறதும் மறுக்கமுடியாத உண்மை..

குழலி / Kuzhali said...

//சம்மர் ஷாப்பிங் என்பது கோ-ஆப்டெக்ஸில் தொடங்கி கோ-ஆப்டெக்ஸிலேயே முடிந்துவிடும். ( டீச்சர் பசங்களாகிப் போன சோகங்கள் - பார்ட் டூ!
//
எல்லா வாத்தியார் ஊட்லயும் இதானா? ம்ம்ம்ம் சம்மர் ஷாப்பிங் மட்டுமில்லை தீபாவளி பொங்கல் ஷாப்பிங் எல்லாம் அப்போ கோ-ஆப்டெக்ஸ்லில் தான்

Uma said...

//நாளைக்கு என்ன சமையல் என்று கொட்டாவி விட்டபடி யோசிக்கத் தேவையில்லை.// ஆஹா... why all good things in life are only short lived ?!

அமுதா கிருஷ்ணா said...

பெரிய பப்புவுக்கு ஜாலியா...

சின்ன அம்மிணி said...

//ம்மர் ஷாப்பிங் என்பது கோ-ஆப்டெக்ஸில் தொடங்கி கோ-ஆப்டெக்ஸிலேயே முடிந்துவிடும். ( டீச்சர் பசங்களாகிப் போன சோகங்கள் - பார்ட் டூ!//

கோ-ஆப்டெக்ஸ்ல வாங்கின ஒரு புடவை இன்னும் நான் பத்திரமா வைச்சிருக்கேன்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நாங்களும் டீச்சர் பசங்க தான்!
ஆனா எங்க வீட்ல போர்வை, பெட் சீட் தான் கோ-ஆப்டெக்ஸில் வாங்குவாங்க :-)
எஸ்கேப்!!!
///வெரைட்டியான உணவு பண்டங்களோடு கிளம்பும் நேரத்தில் உணவு டப்பா கைகளை வந்தடையும்.///
அவ்வ்வ்வ்!!!
கொடுத்துவச்சவுங்க பாஸ் நீங்க!!!

மாதவராஜ் said...

ரசிக்க முடிந்தாலும், ஒரு வலியும் கூடவே...

ராமலக்ஷ்மி said...

:)!

வல்லிசிம்ஹன் said...

அவங்க எல்லாம் இப்படி கொஞ்ச நாட்கள் வந்தாதான் அருமை தெரியும்:)
பப்புவோட ஆங்கிள் என்னன்னு சொல்லலியே முல்லை?