Wednesday, May 26, 2010

பப்பு டைம்ஸ்

”பப்பு, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணப்போறேன்..வெளிலே போ!

....


”போ பப்பு!”

”ட்ரெஸ் சேஞ்ச் பண்ணும்போது இருக்கலாமா இருக்கக் கூடாதா?

”இருக்கக்கூடாது பப்பு...

”நான் உன்னை பத்திரமா பார்த்துக்கறதுக்காகத்தான்.. ஆச்சி..ரைனோ ஏதாவது வந்து உன்னை கடிச்சுடாம இருக்கறதுக்குத்தான்!

கொஞ்சநாட்களாக இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது! ஹட்ச் விளம்பரம் போல!

”அம்மா,நீங்க என்ன பண்ணாலும் நல்லா பண்றீங்கம்மா”
(இத்தனைக்கும் தலைகாணியையோ அல்லது கீழே கிடக்கும் துணியையோதான் எடுத்து வைத்திருப்பேன்!)


”அம்மா இந்த ட்ரெஸ்லே நீங்க சூப்பரா இருக்கீங்கம்மா”
(அது ஏழு வருடத்திற்கு முன்பான அரதபழசான சாயம்போன உடையாக இருந்தாலும்...!)

”உங்களை பாத்தா எனக்கு ஆசையா இருக்குமா! ”

”நீங்கதாம்மா என் ஃப்ரெண்ட்..உங்களுக்கு எப்போவும் சேலஞ்தாம்மா! ”

ஒரே அடோரேஷன்.

அவள் கண்களிலேயே அது தெரியும். உடுத்திக்கொண்டு கண்ணாடியில் சரிபார்க்கும் போதும்...தலைமுடியை சீவிக்கொண்டிருக்கும்போதும்..ஏன் தண்ணீர் எடுத்து குடிக்கும்போதும் கூட விடாமல் கூடவே வருவாள். என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள். திடீரென்று வந்து இடுப்பை கட்டிக்கொள்வாள் அல்லது தூக்கச் சொல்லி முத்தமிட்டு இறுக்கப்பிடித்துக்கொள்வாள்.

கொடிகளில் தொங்கிக்கொண்டிருக்கும் துணிகளில் கூட, "அம்மா உங்க ட்ரெஸ்தான் சூப்பரா மாட்டி இருக்குங்கம்மா..அப்பாவோடது கச்சா முச்சா.. நல்லாவே இல்ல இல்லைங்கம்மா" என்றும் அடித்து விடுவாள். ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்தி பேசினால் ரசிப்பார்கள் என்ற எண்ணத்தை நான் புன்னகைப்பதின் மூலம் அவளுக்கு விதைத்துவிடாமலிருக்க முயற்சி செய்தாலும் அவளது அடோரேஷனை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை.

”அம்மா,உங்களைதாம்மா எனக்கு பிடிக்கும், நீங்க குட்-மா” என்றோ

”நீங்கதாம்மா என் ஃப்ரெண்ட் ” என்றோ உத்திரவாதம் கொடுப்பாள்.

சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் அவள் உணர்ந்து சொல்கிறாள் என்பதை , பாராட்டை அவள் கண்களிலேயே என்னால் காண முடியும்.அவளுக்கு நான் தேவைப்படுவதைவிட எனக்குதான் அவள் அதிகமாக தேவைப்படுகிறாளோ என்று எண்ணும் அளவுக்கு - உள்ளுக்குள் எனக்கு பிடித்திருந்தாலும்,சமயங்களில் மிகுந்த தொந்திரவாக இருக்கும்.

'ஒரு அஞ்சு நிமிஷம் சும்மா இரேன்,பப்பு' என்றாலும் பின்னாலேயே வருவாள். ”நான் உங்க கூடவேதான் இருப்பேம்மா” என்று எதையாவது பேசிக் கொண்டிருப்பாள். நமது முழு கவனத்தை எப்படி ஈர்த்து வைத்திருப்பதென்று அவளுக்கு நன்றாகவேத் தெரியும்!

”அம்மா,கேர்ல்ஸ்ல்லாம் குட்மா...guu..girls...guu good வருதுல்லே-அதான் good girlsம்மா.bu boys..bu bad வருது இல்லம்மா..bad boysம்மா. நீங்க குட் கேர்ல்...அப்பா பேட்..பேட் பாய்..இல்லம்மா!”

அவளது பள்ளியில்,வீட்டில் எந்த ஃபொனடிக்ஸும் சொல்லித்தர வேண்டாமென்று சொன்னதிலிருந்து வார்த்தைகளையோ எழுத்துக்களையோ சொல்லித் தருவதில்லை.ஆனாலும், இதை அவள் கோரிலேட் செய்து கொண்டது, (”நோ பப்பு,அப்பாவும்தான் குட்” என்று சொன்னாலும்) :-)

நேற்று இரவு, பாத்ரூமிலிருந்து வந்த என்னை கண்டதும் தூக்கம் கலைந்து எழுந்து அருகில் “அம்மா,உங்களை பாக்கணும்னு எனக்கு ஆசை வந்ததும்மா” வந்து கட்டிக்கொண்டாள். இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டு, என் வலது கையின் மேல் தலை வைத்து உறங்கிப்போனவளைப் பார்த்த போது எனது இதயம் வெளியில் வந்து உறங்கி கொண்டிருப்பது போலிருந்தது.

(அவளது 13 வயதில் அவளுக்கு இதை நினைவூட்டுங்கள் என்று நீங்கள் சொல்வது எனக்கு சத்தியமாகக் கேட்கவில்லை! )

43 comments:

Uma said...

சொல்லத் தெரியவில்லை, முயன்று பார்க்கிறேன் - அழகு, அருமை.

அமைதிச்சாரல் said...

ச்சோ ஸ்வீட் பப்பு..

//(அவளது 13 வயதில் அவளுக்கு இதை நினைவூட்டுங்கள் என்று நீங்கள் சொல்வது எனக்கு சத்தியமாகக் கேட்கவில்லை!)//

பப்பு அப்பவும் ஸ்வீட்தான்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) அப்படியே இருங்கள்

சுந்தரா said...

நாலைந்து வருடங்கள் பின்னால் சென்று வந்த உணர்வு முல்லை.

//”அம்மா,நீங்க என்ன பண்ணாலும் நல்லா பண்றீங்கம்மா”//

இதையே என் மகளும் சொல்லுவாள். ஆனா, பின்னாலிருந்து, "ஏய்ய், ஐஸ்... ஐஸ்" என்று, அவளைக் கிண்டல் பண்ணுவான் என் மகன் :)

இந்தப் பெண்குழந்தைகளே இப்படித்தான்...பாசத்தில் நம்மைத் திணறவைப்பார்கள்.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வு.

Deepa said...

//என் வலது கையின் மேல் தலை வைத்து உறங்கிப்போனவளைப் பார்த்த போது எனது இதயம் வெளியில் வந்து உறங்கி கொண்டிருப்பது போலிருந்தது.//
ஆஹா!

வாய் விட்டுச் சிரிக்கலாமென்று உற்சாகத்துடன் பப்பு டைம்ஸ் படிக்க வந்தேன். நெகிழ்ந்து கண்கள் கசிய வைத்து விட்டார்கள் அம்மாவும் மகளும்.

சின்ன அம்மிணி said...

நல்ல விஷயங்களைப்பாராட்டுவதற்கு குழந்தைகளிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

கையேடு said...

nice.

Dr.Rudhran said...

brilliant - இதயம் வெளியில் வந்து உறங்கி கொண்டிருப்பது போலிருந்தது

தாரணி பிரியா said...

நிறைய பிடிச்சு இருக்கு இந்த போஸ்ட் :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

///உள்ளுக்குள் எனக்கு பிடித்திருந்தாலும்,சமயங்களில் மிகுந்த தொந்திரவாக இருக்கும்.///

பாஸ்! சூயிங் கம் வாங்கிதரேன் என்று சொல்லி மைன்ட டைவேர்ட் பண்ணிடாதீங்க.

ராசா said...

கலக்குறீங்க சகோதரி! அருமையான சொல்லாடல்!!

பா.ராஜாராம் said...

விடு பட்டு போயிருந்த எல்லாம் வாசித்தேன்.

பேசாம, உங்க வீட்ல பிறந்திருக்கலாம் போல என்று வந்தது. :-)

பப்பு, உன் கையை தாயேன். தலையணை போல வச்சு தூங்குறேன்.

நசரேயன் said...

//எனது இதயம் வெளியில் வந்து உறங்கி கொண்டிருப்பது போலிருந்தது.//

ம்ம்ம்

ஆயில்யன் said...

//பேசாம, உங்க வீட்ல பிறந்திருக்கலாம் போல என்று வந்தது. :-)//

மீ டூ த ஸேம் பீலிங்கு !
ஆயில்யன் டைம்ஸ்க்காக இல்லாவிடிலும் ஆம்பூர் பிரியாணிக்காகவாவது !

ஆயில்யன் said...

//அப்பா பேட்..பேட் பாய்..///


ஸோ ஸேட் முகில் பாஸ் டோட்டல் டேம்ஜு

கவலை தோய்ந்த முகத்துடன்

முகில் முன்னேற்ற கழகம்
ஆஸி தலைமை

டம்பி மேவீ said...

எங்க வீட்டு ரித்தி குட்டி ....இதே மாதிரி தான் செய்வாள். ஆனால் ஒரு படிக்கு மேல் தன்னை சுற்றியுள்ள் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்துவாள்சில சந்தோஷங்கள் அம்மாவுக்கு மட்டுமே உண்டானது.....

அம்பிகா said...

முல்லை,
இந்த பதிவு...
படிக்கும் போதே சந்தோஷமாய்,
ஆசையாய்...உணர்கிறேன்.

The Analyst said...

Wow! So sweet.

காமராஜ் said...

இந்த இரண்டு சுட்டிகளையும் பார்க்கணும்னு ஆசை வருது.
அசத்துக்கடா செல்லங்களா.பெரிய பப்பு,சின்ன முல்லை.

மாதவராஜ் said...

பப்பு டைம்ஸில், கவிதையாய் தாய் மகள் உறவு. அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள் முல்லை.

Mahi_Granny said...

மகள் அம்மா இருவரையுமே . ரசிக்கிறேன்

தீஷு said...

நீங்க‌ள் கொடுத்து வைத்த‌வ‌ர் முல்லை :-))

தீஷு said...

NOT TO PUBLISH : I am trying to reach you for past 2 days. I tried several times on Jan 1st too. I think the number you gave me is not working. Give me your new number or call me at 09481475733. I am coming to Chennai tomorrow. Sorry Mullai... I can't meet you this time too. But atleast we can talk.

ஜெகநாதன் said...

So poetic! Each line makes reading as living..!

ஜெகநாதன் said...

//அவள் கண்களிலேயே அது தெரியும்//

//அவளுக்கு நான் தேவைப்படுவதைவிட எனக்குதான் அவள் அதிகமாக தேவைப்படுகிறாளோ//

Throbs!

கையேடு said...

//அவளது பள்ளியில்,வீட்டில் எந்த ஃபொனடிக்ஸும் சொல்லித்தர வேண்டாமென்று சொன்னதிலிருந்து வார்த்தைகளையோ எழுத்துக்களையோ சொல்லித் தருவதில்லை.//
இப்படியெல்லாமா சட்டதிட்டம் போட்றாங்க..!!!???

thought, might be distracting அதனால் நேற்று இதைப் பற்றி பின்னூட்டலை.

நட்புடன் ஜமால் said...

“அம்மா,உங்களை பாக்கணும்னு எனக்கு ஆசை வந்ததும்மா” வந்து கட்டிக்கொண்டாள்]]

மிக மிக நெகிழ்வாய்...

எங்கள் அன்பு பப்பு :)

கானா பிரபா said...

ஆயில்யன் said...

//அப்பா பேட்..பேட் பாய்..///


ஸோ ஸேட் முகில் பாஸ் டோட்டல் டேம்ஜு

கவலை தோய்ந்த முகத்துடன்

முகில் முன்னேற்ற கழகம்
ஆஸி தலைமை//

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளைக் கண்டு ஏமாறாதீர்

கானா பிரபா said...

என் வலது கையின் மேல் தலை வைத்து உறங்கிப்போனவளைப் பார்த்த போது எனது இதயம் வெளியில் வந்து உறங்கி கொண்டிருப்பது போலிருந்தது.//

நெகிழ வச்சிட்டீங்க ஆச்சி

சந்தனமுல்லை said...

நன்றி உமா.

நன்றி அமைதிச்சாரல், ஹோப்பிங் சோ..;-)

நன்றி முத்து

நன்றி சுந்தரா, இங்கே அந்த வேலையை எங்க ஆயா செய்றாங்க! :))

நன்றி ராமலஷ்மி...ஜஸ்ட் லைக் தட் போஸ்ட்தான்..

நன்றி தீபா, இதுக்கே கண்லே தண்ணியா..இது பஞ்சராக்கும் முயற்சி இல்லே..இல்லே! :-)

நன்றி சின்ன அம்மிணி, இதை எனக்கு மட்டும் சொல்லலைதானே, எல்லாருக்கும் சேர்த்துதானே சொன்னீங்க!! ;-)

நன்றி கையேடு, நீங்க கடைசிலே கேட்டதுக்கு - சட்ட திட்டம்ல்லாம் இல்லே..அவங்க உச்சரிக்கும் விதமும் நாம் சொல்லிக்கொடுக்கும் விதமும் மாறுபடலாம்..அனாவசியமாக குழந்தைகள் குழம்பிவிடலாம்..நங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். அதான்..:-)

நன்றி டாக்டர், நீங்க சொன்னா சரியா இருக்கும்! :-)

நன்றி தாரணி

சந்தனமுல்லை said...

நன்றி பாலா, நானா டைவர்ட் பண்றேன்...அவ்வ்வ்


நன்றி ராசா!


நன்றி ராஜாராம், லதாவுக்கும் உங்க அம்மாவுக்கும் ப்லாக் கிடைச்சிருந்தா இன்னும் செமையா இருந்திருக்கும்! :-)


நன்றி நசரேயன்!

நன்றி ஆயில்ஸ்..எல்லாம் ஜாலியா சொல்றீங்க..அந்த கொடுமை அனுபவிச்சாதான் தெரியும்! :)) பிரியாணிக்கு ஆம்பூர் வந்தாலே போதும்..முதல்ல சங்கத்த கலைங்க....:))

நன்றி மேவீ, ரித்துவுக்கு எங்கள் அன்பு!

நன்றி அம்பிகா அக்கா

நன்றி அன்னா!


நன்றி காமராஜ் அண்ணா, தங்கள் மறுமொழி புன்னகையை கொண்டு வந்தது!

நன்றி மாதவராஜ்

நன்றி க்ரானி..உங்க பக்கத்துக்கு வந்தேன்..ஏன் எதுவும் எழுதலை?


நன்றி தியானா..தீஷீ இந்த கட்டத்துக்கு வரும்போது பகிர்ந்துக் கொள்ளுங்கள்!


நன்றி ஜெகநாதன் :-)

நிஜமா நல்லவன் said...

ஆச்சி...நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க!

நிஜமா நல்லவன் said...

/
ஆயில்யன் said...

//பேசாம, உங்க வீட்ல பிறந்திருக்கலாம் போல என்று வந்தது. :-)//

மீ டூ த ஸேம் பீலிங்கு !
ஆயில்யன் டைம்ஸ்க்காக இல்லாவிடிலும் ஆம்பூர் பிரியாணிக்காகவாவது !/

பாஸ்...ஆம்பூர் பிரியாணி எவ்ளோ இருந்தாலும் ஆச்சிக்கே பத்தாது...பப்புக்கு கூட கொடுக்க மாட்டாங்களாம்:))

நிஜமா நல்லவன் said...

/
கானா பிரபா said...

என் வலது கையின் மேல் தலை வைத்து உறங்கிப்போனவளைப் பார்த்த போது எனது இதயம் வெளியில் வந்து உறங்கி கொண்டிருப்பது போலிருந்தது.//

நெகிழ வச்சிட்டீங்க ஆச்சி/

பெரிய பாண்டி சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு:)

ச.செந்தில்வேலன் said...

அழகாய் இருக்குதுங்க உங்க ரெண்டு பேருக்கும் இடையில நடப்பவை. அதை அழகாகப் பதிவு செய்துவைக்கிறீர்கள். சில வருடங்கள் கழித்து பப்பு வாசித்துப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவாள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான பதிவு.

எதுக்கும் ரெண்டு பேரும் சுத்திப்போட்டுக்கோங்க :)

வல்லிசிம்ஹன் said...

பப்பு எப்போதிலிருந்து இப்படிச் சொல்லுகிறாள் முல்லை?.எப்படியானாலும் இந்த லவிங் டைம் அழகா இருக்கு. பட்டுச் செல்லம்டா பப்பு.
பேரன் (31/2) வயது.
அப்பா வேர் இஸ் மை பியூடிஃபுல் கெர்ள்'' என்று கேட்கிறானாம்:) யாரட சொல்கிறே என்று மாப்பிள்ளையும் கேட்க 'ஓ த ஒன் அண்ட் ஒன்லி மாம்' என்று கை தட்டுகிறதாம். இந்த உலகம் எவ்வளவு அருமையா இருக்கு முல்லை. ரொம்ப நன்றி எங்களுக்கும் அதைக் காட்டிக் கொடுத்ததற்கு.

மாதேவி said...

"அம்மா,நீங்க என்ன பண்ணாலும் நல்லா பண்றீங்கம்மா”
பப்புவின் அன்புநெகிழவைக்கிறது. மகிழ்ந்திருங்கள்.
இருவருக்கும் வாழ்த்துகள்.

ரவிசங்கர் said...

//எனது இதயம் வெளியில் வந்து உறங்கி கொண்டிருப்பது போலிருந்தது//

கவிதை.

வேல்முருகன் அருணாசலம் said...

எனது மகள் அவள் அம்மாவிடம் கூறிய அதே வார்த்தைகள் தங்கள் மகளும்.......... இனிமையாகதான் இருக்கிறது gu good girls. வாழ்த்துக்கள்

வேல்

பின்னோக்கி said...

//அவளுக்கு நான் தேவைப்படுவதைவிட எனக்குதான் அவள் அதிகமாக தேவைப்படுகிறாளோ என்று எண்ணும் அளவுக்கு

மிகவும் உண்மையான விஷயம். நிறைய தடவை படித்தேன், இந்த வாக்கியங்களை. மகள், அம்மாவை பாராட்டுவது, அதிசயமானது :)

தீபாதேன் said...

I'm a mother too. Unlike you I rarely cook, but still my girl says I'm the best cook. Enakku sirippu adakkave mudiyathu. My happiness is in two folds now. yes, i have 2 gals. Both shower me with love & care than what i give them. They are the ones that keep me alive & living. I pray every day to live upto their expectations.
Naan feel pannara santhosatha neenga azhagiyea thamizhla ezhuthi irukaratha padikkum pothu romba romba santhosam :)
Aana en amma va naan ippo ellam ippadi parattarathu illai nenaikum pothum en methey kovamavum, naalai enni bayamavum irukku.