
அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளில் அடியிருந்ததை இழுத்த போது, தென்பட்டது இது!
அவசரத்திற்கு, அல்லது உடனே பத்திரப்படுத்தப்படும்படியான பொருட்களை துணிகளில் அடியில் வைப்பது வழக்கம். இதுவும் அப்படி நான் பத்திரப்படுத்தியதுதான்!! இருவாரங்களுக்கு முன், கடுமையான தலைவலியென்று அலுவலகத்திலிருந்து வந்ததும் படுத்திருந்தேன். பாட்டியிடம் எப்போதும் க்ரோசின் ஸ்டாக் உண்டு. பப்பு பாட்டியிடம் சென்று, ஒரு அட்டையை வாங்கி வந்து, ஒரு மாத்திரையை பிரித்து எனக்கு எடுத்துக் கொடுத்தாள். வீட்டில் யார் மாத்திரை சாப்பிட்டாலும், அவர்கள் வாயில் மாத்திரையை கொடுப்பது பப்புவின் வழக்கம். அன்று எனக்கும் அப்படியே ஆயிற்று. மாத்திரை உட்கொண்ட உடனேயே,
"தலவலி சரியாய்டுச்சா?"என்று பப்பு.!!
"இல்ல பப்பு, இப்போதானே சாப்பிட்டிருக்கேன், தூங்கினாதான் சரியாகும்" - தூங்கவிட்டால் போதுமென்ற நிலையில் நான்.
"அப்போ, இதை மட்டும் சாப்பிடேன் " என்று கையில் இன்னொரு மாத்திரையை பிரித்துவிட்டாள்.
வேணாம், பப்பு ஒன்னுதான் சாப்பிடனும்!!
ப்ளீஸ், இது மட்டும் சாப்பிடேன் என்று கெஞ்சும் தொனியில்.
நான் ஒன்றும் பேசவில்லை.!!
"சரி, அப்போ இதுல பாதி மட்டும் சாப்பிடு, மீது ஆயா(வு)க்கு கொடுத்துடலாம் -"பப்பு.
ரெண்டுலாம் சாப்பிடக்கூடாது பப்பு, போய் ஆயாகிட்டே கொடுத்துட்டு வா!!
"இதை மட்டும் சாப்பிட்டுடேன்!! " - என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.
சரி, இப்போதானே சாப்பிட்டேன், காலையில் எழுந்ததும் சாப்பிடறேன், கொடு என்று வாங்கி தலையணை அடியில் வாங்கி வைத்தேன். அதன்பிறகுதான் அவளது நச்சரிப்பு ஓய்ந்தது.
ஆனால், காலையில் எழுந்ததும், என் தலையணையின் அடியில் கைவிட்டு எடுத்து, "இப்போ சாப்பிடு" என்றபோதுதான், "எனக்கு சரியாய்டுச்சி" என்று சொல்லி வாங்கி பத்திரபடுத்தினேன்!! சாதாரண க்ரோசின் தானே என்று விட்டுவிட முடியாமல், அதன் மதிப்பு இப்போது மிகப் பெரிதாய் தோன்றியது எனக்கு...
26 comments:
பாருங்க... உங்களை கவனித்துக் கொள்ள பப்பு என்ற மாமியார் இருக்காங்க.. அதிர்ஷ்டக்கார மாமியார் & மருமகள்!
//கடுமையான தலைவலியென்று அலுவலகத்திலிருந்து வந்ததும் படுத்திருந்தேன்.//
தங்கச்சி என்னம்மா ஏன்?????
அதான் ஆபிஸ்லயும் தூங்கிட்டுத்தானேம்மா வர்ற :))))))))))
என்றுமே தீராது இந்த முத்தம்.!
///ஆயில்யன் said...
//கடுமையான தலைவலியென்று அலுவலகத்திலிருந்து வந்ததும் படுத்திருந்தேன்.//
தங்கச்சி என்னம்மா ஏன்?????
அதான் ஆபிஸ்லயும் தூங்கிட்டுத்தானேம்மா வர்ற :))))))))))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
மாத்திரையை அப்படியெல்லாம் வைக்காதீர்கள், குழந்தை உள்ள வீட்டில் அவர்களுக்கு எட்டாமல் வைக்கவேண்டும்.
மிகவும் எச்சரிக்கை தேவை.
மிகவும் எச்சரிக்கை தேவை.
மிகவும் எச்சரிக்கை தேவை.
பப்புவின் பாசம் மெச்ச வைக்கிறது.ஆனால் உங்கள் மேல் சிறிது கோபம் வருகிறது.
//அதான் ஆபிஸ்லயும் தூங்கிட்டுத்தானேம்மா வர்ற :))))))))))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே//
தன்னைப் போலவே பிறறையும் எண்ணும் தானைத் தம்பி ஆயில்ஸ் வாழ்க
//கானா பிரபா said...
//அதான் ஆபிஸ்லயும் தூங்கிட்டுத்தானேம்மா வர்ற :))))))))))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே//
தன்னைப் போலவே பிறறையும் எண்ணும் தானைத் தம்பி ஆயில்ஸ் வாழ்க
//
இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம்
ஒரு சொல் தாங்க கூடலயே!!!!!
ஒரு சொல் தாங்க கூடலயே!!!!!
(தல நான் தங்கச்சியத்தானே சொன்னேன் உங்களுக்கு ஏன் கோவம் வருது! - உங்களை பத்தி இப்படியா பப்ளிக்ல சொல்லுவேன்!)
//இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம்
ஒரு சொல் தாங்க கூடலயே!!!!!
ஒரு சொல் தாங்க கூடலயே!!!!!//
விடுகதையா ஆயில்ஸ் வாழ்க்கை விடை சொல்லுமா கட்டார் வேலை?
//ஆபிஸ்லயும் தூங்கிட்டுத்தானேம்மா வர்ற //
வழிமொழிகிறேன்:):):)
so cute:):):)
பப்பு மாதிரி எங்கக்கா பையன் மாத்திரைக் கொடுக்க மாட்டான். ஆனா கண்ணை முடிக்கச் சொல்லிட்டு கண்ல முத்த மழை பொழிவான். அவ்ளோ சூப்பரா இருக்கும்:):):)
தாமிரா said...
//என்றுமே தீராது இந்த முத்தம்.!//
வழிமொழிகிறேன்:)!
வருங்கால முதல்வர் said...
//மாத்திரையை அப்படியெல்லாம் வைக்காதீர்கள், குழந்தை உள்ள வீட்டில் அவர்களுக்கு எட்டாமல் வைக்கவேண்டும்.
மிகவும் எச்சரிக்கை தேவை.//
அப்படியே இதையும் வழிமொழிகிறேன். நீங்கள் சாப்பிடவிருக்கும் ஒரு மாத்திரையை மட்டும் அவள் கையில் கொடுத்து வாங்குங்கள். முழுப் பட்டையோ, வேறு மாத்திரைகளோ அவள் கைக்குக் கிடைக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.
மாத்திரையை அப்படியெல்லாம் வைக்காதீர்கள், குழந்தை உள்ள வீட்டில் அவர்களுக்கு எட்டாமல் வைக்கவேண்டும்.
மிகவும் எச்சரிக்கை தேவை.
ரிப்பீட்
சரி, அப்போ இதுல பாதி மட்டும் சாப்பிடு, மீது ஆயா(வு)க்கு கொடுத்துடலாம் -"பப்பு.
என்ன பப்பு இதெல்லாம்.
மாத்திரை உட்கொண்ட உடனேயே,
"தலவலி சரியாய்டுச்சா?"என்று பப்பு.!!
அடக் குட்டிமா.
நன்றி தமிழ்பிரியன்..என்ன மாமியார்-மருமகள் ஆக்கிட்டீங்க எங்களை அதுக்குள்ள..இன்னும் இருக்கு காலம் அந்த குடுமிப் பிடி சண்டைக்கு..:-))
ஹலோ ஆயில்ஸ்...எல்லாரும் உங்களை மாதிரி இருப்பாங்களா..!! ஆனா, உண்மையில் அன்று டீம் அவுட்டிங்!! :-))
நன்றி தாமிரா!
தமிழ் பிரியன்..நீங்களுமா ஆயில்ஸ் கிளப்பில்!!
தங்களின் வருகைக்கும், அக்கறைக்கும் நன்றி வருங்கால முதல்வர். மத்திரைகள் அவளது ஆக்சிசில் இல்லை..:-), அப்படி இருந்தாலும் குடும்பத்தினரின் மேற்பார்வையில் தான் எதுவுமே!! தங்களின் மேலான அன்பிற்கு நன்றி!
நன்றி கானாஸ், பெரிய பாண்டிக்குத்தான் சின்ன பாண்டி அடங்குவார் போல!! :-)
நன்றி ராப்! ஆஹா..குழந்தைகள் அன்பை வெளிப்படுத்தும் விதமே அலாதி!! உங்கள் அக்கா பையனின் பெயர் என்ன? அன்பு வாழ்த்துக்கள் அவனுக்கு!!
நன்றி ராமலஷ்மி! உண்மையில் அப்படிதான் நடக்கிறது வீட்டில். மாத்திரைகளை அவள் தொடக்கூடிய இடத்தில் வைப்பத்தில்லை. வாயில் இடுவது மட்டுமே..அதுவும் அவளது திருப்திக்காக..அவள் கவனிக்காவிடில் அதுவும் இல்லை! தங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி!
நன்றி ஜீவன்! தங்களின் அன்பிற்கும் ஆலோசனைக்கும் நன்றிகள்!!
நன்ரி அமித்து அம்மா..
//சரி, அப்போ இதுல பாதி மட்டும் சாப்பிடு, மீது ஆயா(வு)க்கு கொடுத்துடலாம் -"பப்பு.
என்ன பப்பு இதெல்லாம்.//
என்னை மாத்திரை சாப்பிட கன்வின்ஸ் பண்றாங்களாம்!! ;-))
/கானா பிரபா said...
//அதான் ஆபிஸ்லயும் தூங்கிட்டுத்தானேம்மா வர்ற :))))))))))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே//
தன்னைப் போலவே பிறறையும் எண்ணும் தானைத் தம்பி ஆயில்ஸ் வாழ்க/
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
/ ஆயில்யன் said...
//கானா பிரபா said...
//அதான் ஆபிஸ்லயும் தூங்கிட்டுத்தானேம்மா வர்ற :))))))))))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே//
தன்னைப் போலவே பிறறையும் எண்ணும் தானைத் தம்பி ஆயில்ஸ் வாழ்க
//
இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம்
ஒரு சொல் தாங்க கூடலயே!!!!!
ஒரு சொல் தாங்க கூடலயே!!!!!
(தல நான் தங்கச்சியத்தானே சொன்னேன் உங்களுக்கு ஏன் கோவம் வருது! - உங்களை பத்தி இப்படியா பப்ளிக்ல சொல்லுவேன்!)/
அதானே...என்கிட்டே கூட சீக்க்ரட்டா வச்சுக்குங்கன்னு தானே தல கானா பத்தி சொன்னீங்க...:)))
/சந்தனமுல்லை said...
தமிழ் பிரியன்..நீங்களுமா ஆயில்ஸ் கிளப்பில்!!/
நானும்...:)
தலைவலிக்கெல்லாம் மாத்திரை போடுற பழக்கத்தைக் குறைச்சிக்கோங்க. முடிஞ்ச அளவுக்கு மாத்திரையெல்லாம் சாப்பிடாம இருக்கப் பாருங்க. நான் கடந்த 13 வருஷத்திலே மாத்திரை சாப்பிட்டது 3 அல்லது 4 முறை மட்டுமே (யாரும் கண்ணு வெச்சிடாதிங்கப்பா)
நன்றி நிஜமா நல்லவ(ர்)ன்!
///சந்தனமுல்லை said...
தமிழ் பிரியன்..நீங்களுமா ஆயில்ஸ் கிளப்பில்!!/
நானும்...:)//
grrrrrrrrrrr!
நன்றி கேவிஆர்! நிலா எப்படி இருக்காங்க?மாத்திரை போடாம இருக்கத்தான் முயற்சி செய்வேன்..ரொம்ப ரேர் கேஸ்-லதான்!!
மொதல்ல இப்படி தலை வலிக்கு மாத்திரை சாப்பிடறதே தப்பு. அதை வேறு விதமா சரி பண்ண முயற்சி செய்யுங்க.
இல்லை அதே பழகிடும். எங்க அம்மா '' மாத்திரை வெச்சு இருப்பாங்க. அதுவே அப்பறம் ரொம்ப கெடுதல் ஆகி உலகீர் வரைக்கும் போய்டிச்சு. கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க
:)
Post a Comment