எழுதியபின் ஒவ்வொருவரையும் வாசிக்கச் சொன்னார் பாரி அங்கிள்.
எல்லோரும் காந்தி நேரு விவேகானந்தர் ரஜினி கமல் கவுண்டமணி செந்தில் அன்னை தெரசா எல்கேஜி டீச்சர் சச்சின் என்று எழுதியிருந்தார்கள். ஒவ்வொருவரும் எழுந்து வாசிக்கும்போது எனக்கு 'வட போச்சே' என்பது போல இருந்தது. :-) என் முறை வந்தபோது லிஸ்ட்டில் இருந்த பெயர்களை எழுந்து நானும் வாசித்தேன். வீரப்பனும், மோனிகா செலஸும் வனஜா டீச்சர் மற்றும் பெரிம்மா.
பெரிம்மாவை ஏன் பிடிக்கும்? என்று அங்கிள் கேட்டபோது ஏனென்று சரியாகக் காரணங்கள் சொல்லத் தெரியவில்லை.
எனது தம்பியும் எழுந்து வாசித்தான். அவன் முடித்தபோது எனக்கு மிகுந்த சந்தோஷமாக, பிரமிப்பாக, பெருமையாக இருந்தது. ஏனெனில், அவனுக்கு என்னை பிடிக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. அப்படியே பிடித்தாலும் இப்படி முதல் ஐந்திற்குள் நான் இருப்பேனென்று கண்டிப்பாக நம்பியிருக்கவில்லை. எப்போதும் சண்டைதான். போட்டிதான். அவன் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது எனது சைக்கிளை பூட்டி சாவியை ஒளித்து வைத்திருந்தேன். வாடகை சைக்கிளில்தான் அவனுக்குக் கற்றுக்கொடுத்தேன். இப்படி எத்தனையோ!!
(பாரி அங்கிள் அவனிடமும் ஏன் பிடிக்குமென்று சொல்ல சொல்வாரென்று பார்த்தேன், ஆனால் கேட்கவில்லை!..ஹிஹி..)
தம்பியை நான் நேசிக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று.
அந்த கோடை முகாமில் ஏற்பட்ட அதே பிரமிப்பு, மகிழ்ச்சி எல்லாமும் நேற்றும் ஏற்பட்டது - தீபா அழைத்துச் சொன்னபோது.
முதல் கட்ட வாக்கெடுப்பின்போதும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின்போதும் வாக்களித்த எனதன்பு பதிவர்கள், வாசகர்கள் அத்தனை பேருக்கும் மிகுந்த நன்றிகள்.
இந்த பதக்கத்தை பதிவுலகத்திற்கும் வாசகர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.தமிழ்மணத்திற்கும், என்னை எனக்குக் காட்டும் பப்புவுக்கும் நன்றிகள்! தொலைபேசியிலும், மடலிலும் பின்னூட்டங்களிலும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!
39 comments:
வாழ்த்துக்கள்.. காணிக்கை எல்லாம் என் வங்கி கணக்குக்கு வந்தா நல்லா இருக்கும்
தம்பியை நான் நேசிக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று. ]]
நெகிழ்வாய் ...
வாழ்த்துகள்.
//உங்களுக்கு இந்த உலகத்திலேயே பிடிச்ச அஞ்சு பேர் பேரை எழுதுங்க" //
You have mentioned only four names.)
நோ பிரியாணி , நோ சாக்லேட் ஒன்லி பதக்கம் காணிக்கை..என்னப்பா இது முல்லை.. ;)
வாழ்த்துக்கள் முல்லை.. .. :)
மனமார்ந்த வாழ்த்துக்கள் முல்லை
அவன் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது எனது சைக்கிளை பூட்டி சாவியை ஒளித்து வைத்திருந்தேன். வாடகை சைக்கிளில்தான் அவனுக்குக் கற்றுக்கொடுத்தேன். //
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//நோ பிரியாணி , நோ சாக்லேட் ஒன்லி பதக்கம் காணிக்கை..என்னப்பா இது முல்லை..
//
அதானே! :-)
வாழ்த்துக்கள் ஆச்சி!
/சின்ன அம்மிணி said...
//உங்களுக்கு இந்த உலகத்திலேயே பிடிச்ச அஞ்சு பேர் பேரை எழுதுங்க" //
You have mentioned only four names.)/
ஆச்சிக்கு முதலில் அவங்களை பிடிக்கும். அப்புறம் தான் மத்தவங்க போல:)
/அவன் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது எனது சைக்கிளை பூட்டி சாவியை ஒளித்து வைத்திருந்தேன். வாடகை சைக்கிளில்தான் அவனுக்குக் கற்றுக்கொடுத்தேன்./
இதே வில்லத்தனத்தை பப்புகிட்ட காட்டுனீங்க பெரிய போராட்டமே வெடிக்கும்:)
பப்பு பேரவை
சிங்கப்பூர்
தங்களது நுட்பமான பார்வைக்கும், இயல்பான எழுத்துகளுக்கும் தாங்கள் இன்னும் உயரங்களுக்குச் செல்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் இந்த விருதுக்கு.
அட.. கலக்கிட்டீங்க..வாழ்த்துகள்ங்க முல்லை.
விட்டுப்போச்சுங்க.. தலைப்பு சூப்பர்.
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் முல்லை.
வாழ்த்துக்கள் பப்பு.. அம்மாவை ஜெயிக்க வெச்சதுக்கு! :)
//என்னை எனக்குக் காட்டும் பப்புவுக்கும் நன்றிகள்!//
நல்லது....மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
சைன் Q/காஸ் Q = ?
"சைன் Q/காஸ் Q = டேன் Q"
ஆச்சிக்கு இது கூட தெர்ல!
அவ்வ்வ்வவ்...
வாழ்த்துக்கள் சந்தன முல்லை...
வாழ்த்துகள் முல்லை.
உங்கள் அன்புக்குக் கிடைத்த பரிசும்,அறிமுகமும் இது.
மனம் நிறைவாக இருக்கு. மீண்டும் பப்புவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் பா.
வாழ்த்துக்கள் சந்தனமுல்லை!
//நானும் வாசித்தேன். வீரப்பனும்//
அவ்வ்வ்வ்வ்
நான் கூட ஒருநிமிடம் அக்காவும் தம்பியும் ஒரே கிளாசில் படிச்சாங்களோன்னு:)) திரும்ப படிச்சேன் அங்கிள் என்று இருந்தது, ஏன்னா இதுமாதிரி விளையாட்டு எல்லாம் ஸ்கூலில் தான் நடக்கும்!
மனமார்ந்த வாழ்த்துக்கள் முல்லை
:)
மாதவராஜ் said...
//தங்களது நுட்பமான பார்வைக்கும், இயல்பான எழுத்துகளுக்கும் தாங்கள் இன்னும் உயரங்களுக்குச் செல்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.//
இதைவிட கூடுதலான வார்த்தை என்னிடம் இல்லை முல்லை.
வாழ்த்துக்கள்!
அன்பின் முல்லை,மீண்டும் சொல்லுவேன். சகலரையும் நேசிக்கிற,உயர்வுதாழ்வை வெறுக்கிற எண்ணம் எழுத்து எல்லாமே உயரத்தில் நிற்கும்.அதற்குத் தகுதியான தங்கைக்கு தகுதியான விருது வாழ்த்துக்கள்.
வாவ்.. வாழ்த்துகள் முல்லை..
Congratz.. keep rocking.....
//என்னை எனக்குக் காட்டும் பப்புவுக்கும் நன்றிகள்!//
credit goes to Pappu only.... :)
வாழ்த்துக்கள் பாஸ், அப்புறம்...வந்து...வந்து... அந்த சிக்கன் பிரியாணி மேட்டர்...
// தம்பியை நான் நேசிக்கக் கற்றுக் கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று.//
உறவுகளின் நேசிப்பை அறிந்து கொள்ளும் தருணம் அற்புதம்.
தமிழ்மணம் பதக்கம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
முல்லை,இன்னும் நிறைய விருதுகள்
பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஆச்சி! இன்றைக்கு செவ்வாய்க்கிழமை.
நன்றி நசரேயன்...வங்கி எண்ணையும், யூசர் விவரங்களையும் மடல் அனுப்புங்க...ஹிஹி! :-)
நன்றி ஜமால். அநேக நேரங்களில் என்னுடைய எல்லா இடுகைகளிலும் தங்களுடையதே முதல் பின்னூட்டமாக இருக்கு..அதையும் நெகிழ்வாக நினைவுகூர்கிறேன்!
சின்ன அம்மிணி மேடம்...ஏழாவது படிக்கும்போது நடந்தது...my memory is fading away..hehe
நன்றி முத்து...இப்போதைக்கு இதை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..:-)
டார்க் சாக்லேட் ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன்...சீக்கிரம் ரெசிப்பி கண்டுபிடிச்சுடுவேன்! :-)
நன்றி அமித்து அம்மா...இதுக்கேவா.இன்னும் டெரர் கதையெல்லாம் இருக்கு.:-)
நன்றி தீபா..:-)
நன்றி நிஜம்ஸ் அண்ணா, எங்கே...பப்புகிட்டே என் வேலையெல்லாம் பலிக்க மாட்டேங்குதே..இங்கே ஒளிச்சு வந்திருந்தாலும் எடுத்துக்கிட்டு வந்து ‘இதையே அன்னிக்கு தேடினே'ன்னு கேக்கறாங்களே மேடம்! அவ்வ்வ்!
நன்றி மாதவராஜ் சார்!
நன்றி பின்னோக்கி. அடுத்த வருடத்தில் இந்த பின்னூட்டத்தை தங்கள் இடுகையில் பார்க்க விரும்புகிறேன்!
நன்றி கையேடு...நீங்கள் அந்த இடுகையை தங்கள் தளத்திலே பகிர்ந்திருந்தீர்கள்..நெகிழ்ச்சியாக இருந்தது. தலைப்பை ரசித்தமைக்கு நன்றி..ஸ்கூல் டேஸ் ஞாபகத்திலே இந்த தலைப்பு! :-)
நன்றி பதி!
நன்றி ஹூசைனம்மா!
நன்றி காயத்ரி சித்தார்த், ரொம்ப சரியா சொன்னீங்க...:-)
நன்றி க.பாலாசி!
நன்றி பாலகுமாரன், தம்பி.. நீங்க ஒரு ஜீனியஸ்! :-)
நன்றி ஜாக்கி! தங்களுக்கும் வாழ்த்துகள்!
நன்றி வல்லியம்மா, தங்களின் மகிழ்ச்சிக்கும் ஆசிக்கும் மிகுந்த நன்றிகள்!
நன்றி குசும்பன், அவ்வ்வ்...அது ஒரு கோடை முகாம். jaycees நடத்துவாங்க..வாழ்த்துகள்!
நன்றி தாரணி!
நன்றி பா.ரா! தங்களுக்கும் வாழ்த்துகள்!
நன்றி காமராஜ் அண்ணா, மிகுந்த மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது - தங்கள் வார்த்தைகள்.
நன்றி தியானா!
நன்றி பத்மஜா..கண்டிப்பாக..அவள்தான் என்னை அம்மாவாக வளர்த்துக்கொண்டிருக்கிறாள்.
நன்றி பெரியபாண்டி...ஆம்பூர்க்கு வாங்க...இல்லேன்னா இங்கேர்ந்து ஒரு பாயை அங்கே அனுப்பி விடவா! :-))
நன்றி கோமதி அம்மா...தங்கள் வார்த்தைகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி!
நன்றி த்மிழ்பிரியன் அண்ணா..இன்னைக்கு புதன்கிழமை. சீக்கிரம் அந்த பெட்டியை கொடுங்க..(ஹிஹி...அந்தகாலத்து கடத்தல் சீன்..)
அம்மாவைக் காட்டிக் கொடுக்கும் :))) பப்புவுக்கும் முல்லைக்கும் வாழ்த்துக்கள்.
அழகாய் நெகிழ்வாய் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் முல்லை உங்களுக்கும் பப்புவுக்கும்.
சமூகம் பிரிவில் என் கூடவே வந்தது நீங்கள் என அறிய வந்த போது, உங்கள் எழுத்தை எப்போதும் ரசித்து வியக்கும் வாசகியாக பெருமகிழ்ச்சி கொண்டேன் முல்லை.
வாழ்த்துக்கள் ஆச்சி...
அப்படியா! தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்.
சொல்லவே இல்லை
வாழ்த்துக்கள் பப்பு
வணக்கம் தோழர் முல்லை,
வலைப் பதிவில் நான் ஒரு தத்தக்கா பித்தக்கா.
"முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும்
அல்லது
கீர்த்திக் குட்டி முல்லை போல் வரக்கூடும்"
என்ற் உங்களைப் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன். மாதவராஜ் கூட அதை உங்களுக்கு அனுப்பினால் நல்லது என்றார். எப்படி அனுப்புவது தெரியவில்லை. எனவே இயலுமெனில் எனது ப்ளாகில் அதை பார்க்கவும்
www.eraaedwin.blogspot.com
Post a Comment