இவை கடந்த ஆண்டு புத்தக சந்தையில் வாங்கியவை - Eureka - AID India -விலிருந்து.
எல்லாமே ஒரு பக்க கதைகள். தனித்தனி அட்டையில் இருக்கும். எளிதான கதைகள். ஐந்து வரி கதைகளிலிருந்து ஆரம்பித்து சற்றே பெரிய குழந்தைகளுக்கான கதைகள் வரை இருக்கும். பெரிம்மா அவற்றை கவரில் போட்டு தனித்தனி தாளாக வைத்தார். தமிழ் படிக்கத் தெரியாவிட்டாலும், கதையை பார்த்து அதைப்போலவே சொல்ல சாரி..படிக்க முயற்சி செய்தபோது எடுத்தது.
அருண் என் நண்பன் என்று ஆரம்பிக்கும் மீன்நண்பனை பற்றிய கதை. கடைசியில் ‘அவன் யார்?, நான் வளர்க்கும் மீன் தான்' என்று முடியும். சமயங்களில், அது 'நான் வளர்க்கிற ஆச்சிதான்' என்றும் ‘நான் வளர்க்கிற அப்பாதான்' என்றும் ஒலிக்கிறது!! அவ்வ்வ்!
இதுவும் அதே போன்ற கதைதான் - தாமு வாங்கிய சட்டை பற்றி.
இந்த ஆண்டும் AID -India வில் புத்தகங்கள்வாங்கினோம். ஆனால் இதே போல ஒரு பக்க கதைகள் ஒரே புத்தகமாக இருந்தது.
ஆங்கில புத்தகங்கள் ஒன்றிரண்டுதான் வாங்கினோம். தமிழில், நல்ல கதைகள் - சுவாரசியமான கதைகள் இல்லையென்ற குறை இந்தமுறை தீர்ந்தது. CBT, AID - India, பூவுலகின் நண்பர்கள், NCBH, பாரதி புத்தகாலயம் இன்னும் பல ஸ்டால்களில் குழந்தைகள் விரும்பக்கூடிய எளிய தமிழ் புத்தகங்கள் கிடைத்தன.
14 comments:
நீங்கல்லாம் சொல்லித்தெரிய வேண்டிய ரவுடியா என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.
நீங்களும் உங்க அம்மாகிட்ட போய் நான் வளர்கிறேனே மம்மின்னு சொல்லுங்க :)
//நான் வளர்க்கிற ஆச்சிதான்' என்றும் ‘நான் வளர்க்கிற அப்பாதான்' என்றும் ஒலிக்கிறது!!//
இது ஜூப்பருங்கோ!!!.
ஆச்சியை நல்லா வளத்திருக்கே பப்பு. நீ வாழ்க. :-)))).
ஆச்சியை நல்லா வளத்திருக்கே பப்பு. நீ வாழ்க. :-)))).]]
ஹா ஹா ஹா
இன்னும் பப்புவின் குரலை கேட்க்கவில்லை - கேட்டுவிட்டு மீண்டும் வரிங் ...
//நான் வளர்க்கிற ஆச்சிதான்' என்றும் ‘நான் வளர்க்கிற அப்பாதான்' என்றும் ஒலிக்கிறது!!//
:)) cute...
:-))
//நான் வளர்க்கிற ஆச்சிதான்' என்றும் ‘நான் வளர்க்கிற அப்பாதான்' என்றும் ஒலிக்கிறது!!//
:)
:) பகிர்வுக்கு நன்றி
மீன் நண்பன் கதைய முதல்ல வலையேத்திட்டு அப்புறம் இந்த புத்தக சந்தை பந்தால்லாம் இருக்கட்டும்:):):)
அழகு :)
//தமிழில், நல்ல கதைகள் - சுவாரசியமான கதைகள் இல்லையென்ற குறை இந்தமுறை தீர்ந்தது//
உங்க கதையெல்லாம் பப்புக்கு பிடிக்கலையா ?
இப்பதான் தெரியுமா முல்லை. பப்புமா, ரவுடிக்கு ரவுடி,நல்லவங்களுக்கு நல்லவங்க,.
இன்னும் நிறைய கதைகள் சொல்லுங்க. அப்படியே பேரன்களுக்கு அனுப்பறேன்:)
நீங்க ஏற்கனவே ரவுடின்னு நான் படிச்சிறுக்கிறேன்.... இதுல எங்களுக்கு எந்த
சந்தேகமும் இல்லை... உங்களுக்கு....?
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
:-))
Post a Comment