ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க ஒரு மரத்துக் கீழே வடை சுட்டுகிட்டு இருந்தாங்களாம்.அந்த மரத்துல ஒரு காக்கா இருந்துச்சாம். அது பாட்டி ஏமாந்த நேரமா ஒரு வடைய எடுத்துகிட்டு பறந்து போய் ஒரு மரத்து மேலே உட்கார்ந்துகிச்சாம்.
அந்த வழியா வந்த நரி காக்கா கையிலே இருந்த வடைய பார்த்துட்டு, வடைய சாப்பிடறதுக்கு திட்டம் போட்டுச்சாம்.மெதுவா, காக்கா இருந்த கிளைக்கு கீழே போய். காக்கா பாப்பா காக்கா பாப்பா...நீ ஒரு பாட்டு பாடுன்னு சொல்லிச்சு. உடனே காக்காவும், வடையை கால்ல வச்சிக்கிட்டு கா..கா ன்னு கத்திச்சு..! காக்கா கத்தினா வடை கீழே விழுந்திடும்..நாம வடையை எடுத்துக்கலாமுன்னு நினைச்ச நரி ஏமாந்து காட்டுக்குள்ள ஓடி போச்சு.காக்காவும் வடைய ரசிச்சு சாப்பிட்டுச்சு!
கொஞ்ச நேரம் பறந்து விளையாடிச்சு காக்கா! வடை
சாப்பிட்டுச்சு இல்லையா?அப்போ ஒரு வீட்டு பின்னாடி ஒரு ஜாடி இருந்தத பார்த்துச்சு. அதுக்கிட்ட போனாதான் தெரியுது...தண்ணி ரொம்ப கீழே இருக்குதுன்னு. அந்த புத்திசாலி காக்கா என்ன பண்ணுச்சு தெரியுமா.?
பக்கத்துல இருந்த குட்டி குட்டி கூழாங்கல்லை எல்லாம் எடுத் ஜாடியில போட்டுச்சு. கல்லு கிழே போனது தண்ணி மேல வந்துச்சு. அந்த தண்ணிய குடிச்ச காக்கா சந்தோஷமா பறந்து போச்சு!
அந்த ஏமாந்த நரி என்ன பண்ணுச்சு தெ
ரியுமா...காட்டுக்குள்ள போகும்போது ஒரு திராட்சை தோட்டத்தை பார்த்துச்சு.சரி..வடைதான் கிடைக்கல..நாம திராட்சையாவது சாப்பிடலாமுன்னு அதுக்குள்ள போய் எட்டி எட்டி பார்த்துச்சு. ஆனா, திராட்சை பழம் எட்டல. உடனே நரி சீ..சீ..இந்த பழம் புளிக்கும்ன்னு சொல்லிட்டு ஓடி போய்டுச்சு!!
(எங்கோ படித்தது....மனதில் ஒட்டிக் கொண்டது!!!!)
சாப்பிட்டுச்சு இல்லையா?அப்போ ஒரு வீட்டு பின்னாடி ஒரு ஜாடி இருந்தத பார்த்துச்சு. அதுக்கிட்ட போனாதான் தெரியுது...தண்ணி ரொம்ப கீழே இருக்குதுன்னு. அந்த புத்திசாலி காக்கா என்ன பண்ணுச்சு தெரியுமா.?பக்கத்துல இருந்த குட்டி குட்டி கூழாங்கல்லை எல்லாம் எடுத் ஜாடியில போட்டுச்சு. கல்லு கிழே போனது தண்ணி மேல வந்துச்சு. அந்த தண்ணிய குடிச்ச காக்கா சந்தோஷமா பறந்து போச்சு!
அந்த ஏமாந்த நரி என்ன பண்ணுச்சு தெ
ரியுமா...காட்டுக்குள்ள போகும்போது ஒரு திராட்சை தோட்டத்தை பார்த்துச்சு.சரி..வடைதான் கிடைக்கல..நாம திராட்சையாவது சாப்பிடலாமுன்னு அதுக்குள்ள போய் எட்டி எட்டி பார்த்துச்சு. ஆனா, திராட்சை பழம் எட்டல. உடனே நரி சீ..சீ..இந்த பழம் புளிக்கும்ன்னு சொல்லிட்டு ஓடி போய்டுச்சு!!(எங்கோ படித்தது....மனதில் ஒட்டிக் கொண்டது!!!!)
3 comments:
Chain story huh?
சின்ன வயதில் எந்தனை முறை இந்த கதைகளை கேட்டிருப்போம்!!
ஆமாம் திவ்யா!!
ஆனால் தனித்தனிக் கதைகளாகத்தான் கேட்டிருப்போம் இல்லையா! இது ஒரு வித்தியாசமான கோணமாக இருந்தது!!
அதுதான் இந்த பதிவு!!
தொடர்ந்து வந்து செல்லுங்கள்!!
Sandhana mullai....unga matha jokes and kadhai ellam padichu ore siruchittu irukum podhu..idhu konjam "chappu" innu irundhudhu..but mathadhu ellam super...ellathaiyum padichuttu comment pannalam innu irundhen...sree
Post a Comment