என் பேரு குந்தவை. எனக்கு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ்!
அவங்க பேரு நிற்பவை மற்றும் நடப்பவை. எங்க ஸ்கூல்ல படிக்கறத தவிர மீதியெல்லாம் சொல்லி கொடுப்பாங்க! வாழ்க்கைல எங்க மூணு பேரோட லட்சியமே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகறதுதான். அதுவும் திருட்டு கல்யாணம்! ஸ்கூலுக்கு போறதுகூட சைட் அடிக்கறதுக்குத்தான்! ஆனாலும் யாரும் மாட்டற மாதிரி தெரியல. ஆனா நாங்க யாரும் மனம் தளராம எல்லாரயும் மடக்க பார்த்தோம். அதுல நிற்பவையும் நடப்பவையும் பாஸ் ஆகிட்டாங்க! அவங்க ரெண்டு பேரும்
அவங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ஃபிகர கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க! நான் கொஞ்சமும் மனம் தளராம +12 வை 4வது தடவையா எழுதினேன். பாஸ் மட்டும் கடைசி வரை பண்ணல! அது கதைக்கும் தேவையில்ல!!
அந்த நேரத்தில தான், இந்த கௌத்தம் மாட்டுனான். சரி, நமக்கு இந்த தகர டப்பா மூஞ்சி போதும்னு கழுத்த நீட்டுனேன்!
5 வருடங்களுக்குப் பின்
கௌத்தம் ஒரு சைக்கிள் கம்பெனியில வேல பார்க்குறான்.
அப்போ ஒரு மீட்டிங்! திடீர்னு கௌத்தம் எழுந்து பேசறான்.
"சார், நான் என்ன சொல்றேன்னா இந்த மாடல் நம்ம ஊருக்கு ஒத்து வராது. ஹேண்டில் இல்லாத சைக்கிள் இங்க ஓட்ட லாயக்கில்லை! அதனால.. "
"நிறுத்து..நீ எதுவும் சொல்ல வேண்டாம்! நான் என் மாடல்ல ஜன்னல் வச்ச சைக்கிள் தான் ப்ரஸ்ண்ட் பண்ணுவேன். யு கெட் லாஸ்ட்! " - அப்படின்னு் அவங்க மேனேஜர் சொல்றார்.
கௌத்தம் வெளில வந்துடறான். அவன் மூளைய ரொம்ப கசக்கி ஒரு மாடல் கண்டுபிடிக்கறான். அதாவது, சைக்கிள்ல ஸ்டெப்னி மாட்டிக்கறது! அதுனால அவனுக்கு அமெரிக்கா போக ஒரு சான்ஸ் கிடைக்குது!
அவனும் அப்பாடா குந்தவைகிட்ட இருந்து தப்பிச்சோம்ன்னு ஓடி போய்டறான்.
6 comments:
//என் பேரு குந்தவை. எனக்கு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ்!
அவங்க பேரு நிற்பவை மற்றும் நடப்பவை.//
கலக்குங்க...கலக்குங்க
சென்ஷி
//என் பேரு குந்தவை. எனக்கு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ்!
அவங்க பேரு நிற்பவை மற்றும் நடப்பவை.//
:-)))))))))))))
வருகைக்கு நன்றி சென்ஷி மற்றும் நன்மனம்..!
அடிக்கடி நம்ம வலைப்பக்கம் வந்து போங்க..!!
கலக்குறீயளே முல்லை....
நன்றி சுதர்சன்!!
Post a Comment