Thursday, December 21, 2006

கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 2

கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 1

கௌத்தம் ப்ளேன் ஏறினவுடனே வீட்டுல ...
அம்மா..அம்மா..- என்னோட ஜக்கம்மா ஓடி வந்தா!
ஜக்கம்மா யாருன்னு சொல்லல இல்ல! அது எங்களோட பொண்ணு!3வது வருஷமா மூணாவது வகுப்புல ஃபெயில் ஆகிட்டு இருக்கா!

என்னடின்னு கேட்டா, அவங்க ஸ்கூல்ல ஒரு ப்ராஜக்ட் செய்ய சொல்லி இருக்காங்களாம்!

கௌத்தமுக்கு ஒரு பழக்கம், சின்ன வயசுலேர்ந்து! யார் நல்லா படிக்கறாங்களோ அவங்க நோட், ரெக்கார்ட்-ல்லாம்
திருடி வச்சிக்கறது. அது மாதிரி நிறைய டப்பா எங்க வீட்டுல இருக்கு!

"சரி..போய் நம்ம செக்யூரிட்டிய கூப்பிட்டுட்டு வா. உங்க அப்பா யாரோட அசைன்மெண்டையாவது திருடி வச்சிருப்பார். நான் தேடி தரேன்-ன்னு சொன்னேன்.
எப்படியாவது ஜக்கம்மா பாஸ் பண்ணனுமே!!

கடைசில ஒரு அட்டை பெட்டியத் தேடி கண்டுபிடிச்சோம்.அதுல பார்த்தா ஒரு ஹீல்ஸ் பிஞ்சி போன செருப்பு (ஹீல்ஸ் பிஞ்சி போற அள்வுக்கு யார்கிட்டயோ நல்லா அடி வாங்கியிருக்கான்!), கொஞ்சம் காஞ்சி போன மல்லிப் பூ, ஒரு ரிப்பன் இதுல்லாம் கிடந்தது. அதோட ஒரு டைரியும்!

அந்த டைரிய படிச்சு பார்த்தா தான் தெரியுது...கௌத்தம் ஒரு குட்டிச் சுவர்ன்னு! மாட்டினேடா..மவனே..நீ செத்த!

முதல் வருஷம்

ஃபெமினாவை பார்த்தேன். காலேஜ்ல அவ போற இடத்துகெல்லாம் நானும் போனேன். கடைசில் அவ எனக்கு கிடைக்கல. அவ தலயில வச்சிருந்த பூ தான் கிடைச்சுது!!

ஃபெமினா

நீ இல்லாம நான்
காத்து போன பலூனா!!

(கஷ்ட காலம்..இவனோட கவிதையெல்லாம் வேற நாம படிக்க வேண்டியிருக்கு!!)

இரண்டாம் வருஷம்

ஒரு ஃப்ரெஷ் ரோஜாவா எங்க காலேஜ்ல வந்து சேர்ந்தா சோனியா! இப்ப என் கண்ணு எல்லாம் அவ மேலதான்!
அவ முன்னாடி நான் ஹீரோவா தெரிய ஆசைப் பட்டேன்.
(அடப்பாவி, இப்படில்லாம் நினைக்க உனக்கு ரொம்ப தன்னம்பிக்கை வேணும்டான்னு நான் நினைச்சுகிட்டேன்!)
ப்ரோப்போஸ் பண்ணேன். அவ செருப்ப எடுத்து அடில ஹீல்ஸ் பிஞ்சிடுச்சு!


சோனியா..
நீ என் இதயத்தில்
வந்து
போனியா!!
- ன்னு ஒரு கவிதை வேற!

மூன்றாம் வருஷம்

இப்போ எனக்கு ஒரு டஜன் அரியர்ஸ் வேற சேர்ந்து போச்சு!

ஜக்கம்மா

(ஓ..உங்க பாட்டி பேருனு சொன்னியே குழந்தைக்கு பேர் வைக்கும்போது ..உன் லவ்வர் பேரா அது!! இருடா இரு!!)

இவதான் என் கனவுகன்னி! என் தேவதை. இவளைதான் நான் இப்போ லவ் பண்றேன். அவளும் என்னை! ரெண்டு பேரும் க்ளாஸுக்கே போகாம எப்பவும் கேண்டீன்ல தான் இருப்போம். நாங்க காசு கொடுக்காம சாப்பிட்டதால கடன் தொல்லை அதிகமாய்டுச்சு! அதுக்கு பயந்து நான் காலேஜ்க்கு வராம இருந்தேன். அதுக்குள்ள 'ஜக்கு' வேற காலேஜ்க்கு போய்ட்டா!

ஜக்கு...

ஜாங்கு ஜக்கு
ஜஜக்கு ஜக்கு...
ஜாங்கு ஜக்கு ...ஜா....ஆ..ஆ!!

(அடப்பாவி தலைவர் பாட்ட சுட்டு உன் கவிதைன்னு வேற சொல்றியா!!)

இதைப் படிச்சுட்டு குந்தவைக்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆகிடுது. தனியா போய் சுவத்தில முட்டிகிட்டு அழறா! என் கௌத்தம்க்குள்ள இப்படி ஒரு சோகமா...ன்னு நினைக்கற அவ ஒரு முடிவு செய்றா..! அது என்னன்னா...??

9 comments:

நன்மனம் said...

//ஃபெமினா

நீ இல்லாம நான்
காத்து போன பலூனா!!//

//சோனியா..
நீ என் இதயத்தில்
வந்து
போனியா!!//

//ஜக்கு...

ஜாங்கு ஜக்கு
ஜஜக்கு ஜக்கு...
ஜாங்கு ஜக்கு ...ஜா....ஆ..ஆ!!//
.
.
.
.

//என் கௌத்தம்க்குள்ள இப்படி ஒரு சோகமா...//

ஓ.. சோகம் யாருக்கு படிச்ச குந்தவைக்கா இல்ல கெளத்தமுக்கா....

கொலக்கலா ..... சி.... கலக்கலா போகுதுங்க...

Senthil said...

kalakala erukudhuga.. waiting for next part..:)

Mayavi said...

kalakala erukudhuga.. waiting for next part..:)

தேவ் | Dev said...

எப்படி? எப்படி?

கவித.. கவித...

கொட்டுது.. கொட்டுது..

ம்...

முடியல்ல..ஆமாங்கோ.... முடியல்ல...

தேவ் | Dev said...

அடுத்தப் பாகம் போட்டவுடனே மறக்காம ஒரு தந்திக் கொடுங்க

ஜி said...

//அது எங்களோட பொண்ணு!3வது வருஷமா மூணாவது வகுப்புல ஃபெயில் ஆகிட்டு இருக்கா!//

கல்யாணம் ஆகி அஞ்சு வருசத்துல, மூனாப்பு மூனு தடவ படிச்சிட்டு இருக்குற ஒரு புள்ளையா?

அட... கதைக்கு எதுக்கு லாஜிக்கெல்லாம். சூப்பரா கலாய்க்கிறீங்க... அடுத்தப் படம் இன்னாது (நானும் இத்த மாதிரி ஒரு பதிவு போட்டேன். அதான், நீங்க எந்தப் படம்னு முன்னாலேயே சொல்லிட்டீங்கன்னா, நான் அப்டீயே டகால்டி பண்ணிறுவேன்)

சந்தனமுல்லை said...

வருகைக்கு நன்றி நன்மனம்.அடிக்கடி வலைப்பக்கம் வாங்க!

மாயவிதான் செந்திலோ..:-)?

சந்தனமுல்லை said...

வருகைக்கு நன்றி தேவ்...எல்லாம் நம்ம தமிழ் சினிமா பார்த்து தான்!!

சந்தனமுல்லை said...

ஜி என்ன பேசுறீங்க...
லாஜிக்கா? அதெல்லாம் கதைக்கு..ச்சே..ச்சே! அதெல்லாம் ரொம்ப தூரம்!!

தொடர்ந்து வருகை தாங்க, ஜி!!உங்க பல்லவன் சூப்பரா இருக்கே!!