Saturday, December 23, 2006

கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 3

கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 1
கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 2


அது என்னன்னா...அந்த் ஜக்கம்மாவோட ஒரு நாள் கௌத்தமை எப்படியாவது மீட் செய்ய வைக்கிறது! உடனே, ஆர்குட்-ல போய் ஜக்கம்மாவை தேடறா.
பார்த்தா ஜக்கம்மா டுமீல்குப்பம்-ல வடை சுட்டு விக்கறா.
ஓவர் டூ குந்தவை.

குந்தவை : ஜக்கம்மா, நான் கௌத்தமோட மனைவி.
ஜக்கு : அது ஓன் தலையெழுத்து. வந்துட்ட..சொல்றதுக்கு!
குந்தவை : அப்படி சொல்லாதீங்க!
ஜக்கு : சரி, எருமை!
குந்தவை :வந்து
ஜக்கு: அப்போ கய்தே!!

சரி விடுங்க! நான் எதுக்கு உனங்களை பார்க்க வந்தேன்னா, கௌத்தமுக்கு ஒரு ஆசை!உங்க கூட ஒரே ஒரு நாள் அதே காண்டீன் - ல வடையும், டீயும் சாப்பிடனும்னு! ஏமாத்திடாதீங்க..ப்ளீஸ்!

சரி..வரேன். ஆனா ஒரு கண்டிஷன்!என்னன்னா, பில்லுக்கு நான் காசு குடுக்க மாட்டேன்.

கௌத்தம் வீடு!அழைப்பு மணி அடிக்கிறது. கதவை திறந்த கௌத்தம், அதிர்ச்சியில் !

ஐயயோ! இவ வந்துட்டாளா! பழைய பாக்கி 500யை கேப்பாளோ..கடங்காரி!!
அப்போ குந்தவை "கௌத்தம், நாந்தான் இவங்களை வர சொன்னேன். உன் டைரிய படிச்சு பார்த்தேன்.நீங்க உங்க இஷ்டபடி, வடை சாப்பிடுங்க! ஆனா, எனக்கு மீதி வைங்க!" ன்னு சொல்லிட்டு, ஸ்லோமோஷன்ல ஓடி போய்டறா!

ஜக்கு "என்னா கௌத்தம், இவ்ளோ டீசண்டா மாறீட்ட!சரி. வா நம்ம காலேஜுக்கு போய் அதே காண்டீந்ல வடை, சுடுதண்ணி ச்சீ..டீ சாபிடலாம்.நீ பாதி..நான் பாதி..இன்னா!!" னு சொல்றா!

ரெண்டு பேரும்,ஊசி போன வடைய பிச்சி பிச்சி, நூல் எடுத்து காத்தாடி விடுறாங்க!கொக்கு பற..பற..கொழி பற..பற!! ட்ண்ட்ண்டடாய்ங்!!

அப்படியே குந்தவைக்கு ஷாக்கடிச்ச மாதிரி இருந்தது!...இதுமாதிரில்லாம் நடந்துச்சின்னா!ஃபாஸ்ட் ஃபார்வார்டுல ஓடி வர்றா!

அங்க கௌத்தம், பொறுப்பா எல்லா பாட்டில்லயும் தண்ணி ஊத்தி ஃப்ரிட்ஜ்-ல வைக்கிறான்.

ஜக்கம்மா எங்க?
அவ போய்ட்டா! உனக்கு ஒரு ஆர்குட்-ல ஒரு ஸ்க்ராப் எழுதி வச்சிருக்கா!

ஓடி போய் அத படிக்கிறா குந்தவை!

அதுல,

நான் போறேன்! அவனுக்கு நான் சுடற வடைய விட நீ சுடற வடைதான் பிடிக்குது!அதனால, ஒரு வடைதான் நானும் அவனும் சாப்பிட்டோம்.
இனிமே உன் வடைல சாரி வாழ்க்கைல குறுக்கிட மாட்டேன்!
ஜக்கு!

இத படிச்சுட்டு, குந்தவை பெருமூச்சு விடறா!"அப்பாடி, நான் ஃப்ரிஜ்-ல வச்சிருந்த வடைமாவு அப்படியேதான் இருக்கு!எங்க, அதை எடுத்து காலி பண்ணிடுவீங்களோன்னு நினைச்சு பயந்துட்டேன்!"ன்னு மனசுகுள்ள நினைச்சுக்கிட்டு, கௌத்தமை பார்த்து சிரிக்கறா!!
================================================

13 comments:

அரை பிளேடு said...

யப்பா.. என்னா ஒரு ஜாலியான காதல் வடை.. சாரி.. காதல் கதை...

இந்த கதையில இருந்து நமக்கு இன்னா பிரியுதுன்னா... வாய்க்கைன்றது வடை மாதிரி..

அத ஃபிரிட்ஜிக்குள்ளாற வச்சு நாம மட்டும்தான் சாப்படணும்...

வடையோ வாய்க்கையோ அது இரண்டு பேர் சம்பந்தப்பட்டதா மட்டுந்தான் இருக்கணும்...

இல்லாட்டி டிரபிள்தான்...

அப்பாடா கத முடிஞ்சி போச்சா.. இல்ல மாவு எக்ஸ்ட்ராவா பிரிட்ஜில இருந்து இன்னொரு தபா வட சுடற ஐடியா இருக்கா...

:))))

சுதர்சன்.கோபால் said...

நீங்களா இப்படி???? :-)))))

நன்மனம் said...

வடைய..... சாரி.... கதைய ரொம்ப இழுத்தா உசிப்போய் வடை மாதிரி நூல் வந்திரும்னு சீக்கிரம் முடிச்சிட்டீங்க போல!!!!

:-))))

ஜி said...

அல்டிமேட்....

நான் இத்த மாதிரி எழுதுறத விடப் போறேன். போட்டி பயங்கர ஸ்ட்ராங்கா இருக்குது :(

Senthil said...

Pretty good..
Climax_a ennum konjam eluthu erukalam.
Best wishes for ur next movie..

Sridhar Venkat said...

சிரிக்க சிந்திக்க வைத்த நல்ல கதை.

சிரிச்சது சரி... அது தேவை இல்லாம சிந்திக்கிற அப்படின்னு கேக்கறீங்களா? ஜக்கம்மாவும் கௌதமும் சாப்பிட்ட அந்த ஒரே வடை அவங்க காலேஜ் காண்டீன்ல சுட்டதா இல்ல குந்தவை பிரிட்ஜ்-ல வச்சு இருந்த வடை மாவுல ஜக்கம்மா சுட்டதா?
ரொம்ப சிந்திக்க வைத்த கேள்வி இது...

ப்ளீஸ்... இதுக்கு விளக்கம் சொல்றேன்னு பாகம்-4 மட்டும் போட்டுடாதீங்க...

நன்மனம் said...

//சிரிக்க சிந்திக்க வைத்த நல்ல கதை. //

//ப்ளீஸ்... இதுக்கு விளக்கம் சொல்றேன்னு பாகம்-4 மட்டும் போட்டுடாதீங்க... //


தமிழ்ல இதுக்கு பேரு தான் வஞ்சம் புகழ்ச்சி.

:-))))))))

சந்தனமுல்லை said...

வாங்க அரைபிளேடு..கரெக்டா கதைய புரிஞ்சிக்கிட்டீங்க ! நிறைய சினிமா பார்ப்பீங்களோ?

//நீங்களா இப்படி???? :-))))) //

வாங்க சுதர்சன்..
நானேதான்..நல்லாதான் இருந்தேன். தினமும் 8 மணிநேரம் தமிழ்மணம் படிக்கறதோட விளைவு..ஹிஹி!!

சந்தனமுல்லை said...

வாங்க நன்மணம்..
ரொம்ம நூல் சுத்த வேணாமேன்னுதான் முடிச்சிட்டேன்..வேணும்னா சொல்லுங்க..பாகம் 4 போட்டுடலாம்..:-)..!

ஜி, தங்கள் வருகைக்கு நன்றி,
வாங்க..ரெண்டு பேரும் சேர்ந்தே கலக்குவோம்..

சந்தனமுல்லை said...

வாங்க செந்தில்,
அடுத்த படத்துல சரி செஞ்சுடறேன்!!

வாங்க ஸ்ரீதர் வெங்கட்,
உங்களை சிந்திக்க வச்சிட்டேன் பார்த்தீங்களா! அந்த வடை எப்படி வந்திருக்கும்ன்னு சொல்றவங்களுக்கு ஒரு தங்க நாணயம் பரிசு! அதுவும் இயக்குனர் கையெழுத்து போட்டது!!

Anonymous said...

இனிமே யாருமே சினிமா எடுக்க முடியாது போல இருக்கே .. முடிந்தால் பாடல்களையும் உல்டா
செய்து போடுங்கள்.. -- யோகேஸ்வரன்

இம்சை அரசி said...

எப்படிங்க உங்களால இப்படியெல்லாம் முடியுது????

nice :)

கலக்குங்க.........

சென்ஷி said...

ச்சான்ஸே இல்ல அக்கா.. கலக்கிட்டீங்க.. இருங்க உங்க எல்லா பதிவையும் படிச்சுட்டு வர்றேன் :-)

எனக்கு இந்த தொடர் ரொம்ப பிடிச்சிருக்குது...+