Saturday, February 06, 2010

A page from my teenage diary

இன்னைக்கும் யாரோ என்னோட சைக்கிள்லே ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருந்தாங்க. ஆட்டின் ஸ்டிக்கரும் க்யூபிட் ஸ்டிக்கரும். அன்னைக்கு மாதிரியே லேடீஸ் பார்லேயும் ஹாண்டில் பார்லேயும் . போன வாரம் வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரை செருகி இருந்தது. அதுலேயும் இந்தே ஹாட்டின்தான்.நல்லவேளை,யாரும் பாக்கறதுக்கு முன்னாடி எடுத்து போட்டுட்டேன். வீட்டுலே சொல்லலமா வேணாமான்னு வேற தெரியல. ஏற்கெனவே ஆயா வேற என்னை சந்தேகப்படற மாதிரி தெரியுது. அன்னைக்கு ஜூனைத், பிரபு, ரேணு, சபீனா-லாம் வீட்டுக்கு வந்துட்டு போனப்போ வேற, ஒரு மாதிரி சொன்னாங்க. 'எதுக்கு உனக்கு படிக்கற வயசுலே இவ்ளோ ஃப்ரேண்ட்ஸ்'- ன்னு. எனக்கு ஸ்கூல் ஃபுல்லா ப்ரெண்ட்ஸ் இருக்காங்க..அப்புறம் ட்யூஷன். அதுவும் அன்னைக்கு பார்த்து மேத்ஸ் ட்யூஷன் சீக்கிரம் முடிஞ்சுடுச்சு. 'எங்க வீட்டுக்கு வாங்க'ன்னு நாந்தானே கூப்பிட்டேன். அதுவுமில்லாம,'உன் ப்ரெண்ட்ஸ் யாரை வேணா வீட்டுக்கு கூப்ட்டு வா'ன்னு தானே பெரிம்மா சொல்லியிருக்காங்க.

ஆனா, ஆயா கொஞ்சம் மாறிட்ட மாதிரி தெரியுது. நான் கிச்சன் பால்கனிலே உட்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டு இருந்தா, (சுண்டலா இருந்தா காக்கா-க்கு போடறதுக்கு)
இல்லன்னா தெரு பால்கனிலே தலை ஆத்திக்கிட்டிருந்தா பின்னாடியே வந்து நிக்கறாங்க. முதல்ல நான், அயர்ன்காரம்மாவைக் கூப்பிடறதுக்குதான் நிக்கறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன், அவங்க எட்டி எட்டி பாக்கறதைப் பார்த்து. ஆனா, அப்புறம்தான் புரிஞ்சது...அவங்களை தேடறதுக்கு இல்லன்னு. அன்னைக்கும் ஜன்னல்கிட்டே இருக்கற பெட்லே உட்கார்ந்து கதை படிச்சுக்கிட்டிருந்தப்போ ஆயா பக்கத்துலே வந்து ஏன் ஜன்னலை சார்த்திட்டு போனாங்க..இவங்க பண்றதெல்லாம் புதுசா இருக்கு...அன்னைக்கு நான் பாத்ரூம்லேருந்து ரூம்க்கு வந்தப்போ ஆயா என்னோட நோட்டெல்லாம் புரட்டி பார்த்துக்கிட்டு இருந்தாங்க. செக் பண்றாங்களா?! எனக்கு கோவம் கோவமா வந்துச்சி..ச்சே..இவங்க ஏந்தான் இப்படி இருக்காங்களோ!அப்புறம் இந்த சைக்கிள்லே லெட்டர் இருக்கறதை சொன்னா அவ்வளவுதான்! என்னை என்ன நினைச்சுப்பாங்க..பேசாம கண்டுக்காம விட்டுடலாம். சந்திரா கூட சொல்லியிருக்கா,அம்மால்லாம் ஃப்ரீயா விட்டாகூட ஆயாங்கதான் இப்படி டார்ச்சர் பண்ணுவாங்கனு. ஆனா, அனு,ரேணுகாக்குல்லாம் தெரிஞ்சா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்களே...ஏற்கெனவே எல்லோரும், யார் யாருக்கு ஆள் இருக்குன்னு வேற கிண்டல் அடிக்கறாங்க. ம்ம்..நான் தான் யாரைய்ம் லவ் பண்ணலையே..சே..அது எப்படி வரும்..நான் எங்க வீட்டைத்தான் லவ் பண்றேம்ப்பா...முதல்ல லவ் எப்படி வரும்...படிக்கற பசங்களுக்கெல்லாம் லவ் வராதுன்னு கெஜா அம்மா, சுஜா ஆன்ட்டி, ஆயால்லாம் பேசும்போது சொல்லிக்கிட்டாங்களே. கெஜா இந்த வருஷம் பப்ளிக்.

ஆனா, இந்த பேப்பர் எப்போ வைக்கறாங்கன்னுதான் தெரியலை..யாராயிருக்கும்?



ஜெயஸ்ரீ, அனு, 'பல்லு' கவிதா - நாங்கல்லாம் ப்ரேயர் முடிஞ்சு க்ளாசுக்கு போறப்போ பேசிப்போம்.அப்போ என்ன சொன்னா? ஜெயஸ்ரீயை சைக்கிள்லே யாரோ ஃபாலோ பண்றாஙக்ன்னு வீட்டுலே சொன்னதுக்கு அப்புறம் அவங்கம்மா அவளை ரொம்ப கண்காணிக்கறா மாதிரி ஃபீல் பண்றான்னுதானே. அதுவும் கதவை சாத்திக்கிட்டு படிச்சா அப்போப்போ வந்து திறந்து பார்க்கிறாங்களாம். அவ திட்டுனப்புறம் அவங்கம்மா கதவை திறக்கறது இல்லேயாம். ஜன்னலேர்ந்து மட்டும் எட்டி பாக்கறாங்களாம். அப்போ அவ சொன்னதுதான் - செம ஃபன்! 'அவங்க எபட்டி பாக்கறப்போ, நான் வேற ஏதாவது பண்ணிக்கிட்டிருந்தா...ஒரு வேளை ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டிருந்தா' அப்படின்னு! ஆனா, அவ சொல்றதும் சரிதானே...ஆயாவும் என்னை சந்தேகப்படற மாதிரி...கண்காணிக்கற மாதிரிதான் தெரியுது...ஆனா,பெரிம்மா இருக்கறதாலே தப்பிச்சேன். சங்கீதாவை அவங்கம்மா சந்தேகமே படமாட்டாங்களாம். ஏன்னா, அவ எல்லாத்தையும் போய் அவங்கம்மாக்கிட்டே சொல்லிடுவாளாம்,ஒன்னுவிடாம. அதனலே அவங்கம்மா அவளை கண்காணிக்கவே மாட்டாங்களாம்.

நானும் ஆயாக்கிட்டே அப்படி சொல்லத்தான் டிரை பண்ணேன். எக்சாம் நடந்தப்போ ஒரு பையன் டெய்லி என்னை ஃபாலோ பண்ணான். நித்யா சொன்னா, ஒருத்தன் உன்னை ஃபாலோ பண்றானான்னு தெரிஞ்சுக்கணும்னா, நீ போகும்போது அங்கங்கே நில்லு, நீ நிக்கறப்போல்லாம் அவனும் நின்னான்னா அவன் உன்னைதான் ஃபாலோ பண்றான்னு. நானும் அன்னைக்கு அப்படி பண்ணேன். அப்புறம் டெலிபோன் எக்ஸ்சேஞ் கிட்டே நின்னப்போதான் திடீர்னு ஐடியா வந்தது. அதுக்கு நேரா ஒரு போலிஸ் ஸ்டேஷன் இருந்துச்சு. என்னை ஃபாலோ பண்றியான்னு கேட்டேன், அவன்கிட்டே. ஸ்கூல்லே பார்த்து இருக்கேன், அந்த மூஞ்சியை. ஆமான்னு சொன்னான். போலீஸ் ஸ்டேஷ்ன்லே சொல்லிடுவேன்னு சொன்னதும் சைக்கிள்லே டெலிபோன் எக்ஸ்சேஞ் சந்துக்குள்ளே போய்ட்டான். இத்தனைக்கும் அது ரூரல் போலிஸ் ஸ்டேஷன். எங்க மேல் வீட்டுத் தாத்தா அங்கே தான் வேலை செய்றார். எனக்கு ரொம்ப சிரிப்பா வேற வந்துது...ஆனா, அப்படி கேக்க எப்படி தைரியம் வந்துதுன்னு தெரியலை! ஆனா, இதை நான் ஆயாகிட்டே சொன்னதும் அவங்க என்னை பாராட்டிதானே இருக்கணும். ஆனா, என்மேலே இன்னும் சந்தேகம் பட்ட மாதிரிதான் தெரிஞ்சது. அதனாலே, நான் ஏன் ஆயாகிட்டே சொல்லனும்? என் ப்ரெண்ட்ஸ் கிட்டே நான் என்ன வேணா பேசிப்பேன்.

அன்னைக்கு பெரிம்மா பேங்க்குக்கு போய் டிடி எடுத்துட்டு வரசொன்னப்போ கேஷியர் அண்ணா என்னை பார்த்து சிரிச்சாரே...அவர் எங்க தெருவிலேதான் இருக்கார். அவரை நான் நிறைய வாட்டி பார்த்துருக்கேன்,ஷட்டில் விளையாடும்போது. அவங்க கோர்ட்லே விழுந்துடுச்சுன்னா எடுத்து போடுவார். அவர் எஸ்பிஐலேதான் வேலை செய்றார்ன்னு அப்போதான் தெரிஞ்சது. போஸ்ட் ஆபிஸ் போயிருந்தப்போ ஒரு ஆன்ட்டி என்னை பார்த்து சிரிச்சாங்க. நீதானே சந்தனமுல்லைன்னு கேட்டாங்க. 'டிவிலே பார்த்தேன்'ன்னு சொன்னாங்க. எனக்குதான் யாருன்னு தெரியலை.. வீட்டுலே ஷ்யாமும் பவானியும் பேசிக்கிட்டிருப்பாங்கன்னு.சொன்னாங்க. அப்போதான் தெரிஞ்சது -ஷ்யாமோட அம்மான்னு. பவானி ஷ்யாமோட தங்கச்சி.ஸ்கூல் ஆனுவல் டேலே நான் பேசினதை பார்த்தாங்களாம். அதை கேபிள்லே போட்டாங்க போல. அவங்கம்மா டாக்டர். நல்லா பேசினாங்க. ஆனா நான் வீட்டுலே சொல்லல..ஆயா திட்டுவாங்க..தெரியாதவங்க கூட என்ன பேச்சுன்னு!


ஷ்வேதா சொல்றா..ஆயாவை எல்லாம் கூட சமாளிச்சுடலாம்ப்பா...ஆனா அண்ணாங்கதான் ரொம்ப பயமாம். ஷ்வேதாவும் கவிதாவும் ஒரே ஸ்கூல். என் ட்யூஷன் ப்ரெண்ட்ஸ். ஷ்வேதா, ஸ்பெஷல் கிளாஸ் முடிச்சுட்டு கவிதா வீட்டுக்கு வந்துட்டு போனாளாம். வீட்டுக்கு போய் தண்ணி குடிக்க தம்ளரை எடுக்கும்போது அவங்க அண்ணா வந்து கையை பிடிச்சுக்கிட்டு 'எங்கே போனேன்னு சொல்லுன்னு'. 'குடிச்சுட்டு சொல்றேன், விடுண்ணா''ன்னு சொன்னாக்கூட விடலையாம்.'சொல்லிட்டு குடி'ன்னு கையை விடவே இல்லையாம். 'தண்ணி தாகம் எடுக்குது..குடிச்சுட்டு சொல்றேன்'னு சண்டை போட்டுக்கிட்டுருந்தப்போ அவங்கம்மா வந்ததும்தான் விட்டாங்களாம். கவிதா வீட்டுக்கு தான் போய்ட்டு வரேன்னு சொன்னப்புறம்தான் விட்டாங்களாம். நல்லவேளை எனக்கு அண்ணாங்க யாரும் இல்ல.ஆனா ஆயாதான்! ச்சே..நான் வேற வீட்டுலே பொறந்து இருக்கலாம். ஐரின் ஆண்ட்டி அமெரிக்கா போய்ட்டு வந்தாங்க இல்லே. அவங்க வீட்டுக்கு வந்தப்போ சொன்னாங்களே...'அமெரிக்காலேல்லாம் அம்மா அப்பா பசங்களை கண்டுக்கவே மாட்டாங்களாம்'. அவங்க இஷ்டத்துக்கு இருப்பாங்களாம். அப்புறம் பதினாறு வயசானா தனியா வீடெடுத்து போய்டுவாங்களாம். எனக்குக்கூட ஆசையா இருக்கு....


நானும் நல்லா படிச்சு தனியா எங்கியாவது வேலைக்கு போவேன்...அப்போ எனக்கும் நிறைய ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. ஜாலியா இருக்கும். இவங்க யாருக்குமே அட்ரஸ் தரவே மாட்டேன். நான் மட்டும் போன் பண்ணி பேசுவேன், ஆனா என் அட்ரசை சொல்லவே மாட்டேன். அப்போ, இவங்க எல்லோரும் என்னை தேடி பீல் பண்ணனும்...

குறிப்பு 1 : உண்மையில், இது ஒரு பக்கமல்ல...(எனது 14-15 வயதிருக்கும்போது என் வசமிருந்த) டயரியின் ஒரு சில பக்கங்களின் தொகுப்பு. 90களில் டீனேஜராக இருந்தால் பொதுவாக இந்த அனுபவங்கள்/ஃப்லீங்ஸ் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இப்போல்லாம் அம்மாக்கள்/ஆயாக்கள்/அண்ணாக்கள் மாறியிருக்கிறார்களாவென தெரியவில்லை - டீனேஜர்களும்தான்!

குறிப்பு 2
:
முத்துலெட்சுமி, அம்பிகா அக்கா, ஷ்ரேயா, சின்ன அம்மிணி - இவர்களின் டீனேஜ் டயரியின் ஒரு சில பக்கங்களை (விருப்பமிருந்தால் ) பகிர அழைக்கிறேன்.

51 comments:

சின்ன அம்மிணி said...

//படிக்கற பசங்களுக்கெல்லாம் லவ் வராதுன்னு கெஜா அம்மா, சுஜா ஆன்ட்டி, ஆயால்லாம் பேசும்போது சொல்லிக்கிட்டாங்களே. //

பச்சப்புள்ளையா இருந்திருக்கீங்களே.
நானும் கொஞ்சம் யோசிக்கறேன்.

முகிலன் said...

இண்ட்ரஸ்டிங்கா இருந்தது டைரி..

//குறிப்பு 2 : முத்துலெட்சுமி, அம்பிகா அக்கா, ஷ்ரேயா, சின்ன அம்மிணி - இவர்களின் டீனேஜ் டயரியின் ஒரு சில பக்கங்களை (விருப்பமிருந்தால் ) பகிர அழைக்கிறேன்//

நாங்களும் படிக்க ஆர்வமாக இருக்கிறோம்.. :))

nanrasitha said...

நல்ல பதிவு

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

யாரு காகிதம் சொருகி ஸ்டிக்கர் ஒட்டினதுனு கண்டுபுடிக்கவே இல்லையா?

எங்க வீடு சங்கீதா வீடு மாதிரி.. நான் போய் எல்ல்ல்லாத்தையுமே ஒப்பிக்காம இருந்தாலும் கூட அம்மா நோண்ட மாட்டாங்க.

அழைச்சதுக்கு நன்றி ஆச்சி.. சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.

சிங்கக்குட்டி said...

வாழ்கையின் எதார்த்த பக்கங்கள் :-).

Rithu`s Dad said...

முல்லை பாரட்டுக்கள்.. அந்த டைரியெல்லாம் பத்திரப்படுத்தி நினைவுகளை மீட்டெடுப்பதற்க்கு..:) நிஜமாகவே டீனெஜென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வரு நினைவுகளை தன்னுள் கொண்டுள்ளது.... காலம் தான் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது..ஏற்படுத்துகிறது..

முல்லை இந்த போட்டோ எங்க தேடிப்பிடிச்சீங்க..!!? திருமலை நாயக்கர் மஹால் தூனை கட்டிகொண்டு எடுத்த உங்கள் போட்டோ நினைவிருக்கிறதா??

அமைதிச்சாரல் said...

//நானும் நல்லா படிச்சு தனியா எங்கியாவது வேலைக்கு போவேன்...அப்போ எனக்கும் நிறைய ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. ஜாலியா இருக்கும். இவங்க யாருக்குமே அட்ரஸ் தரவே மாட்டேன். நான் மட்டும் போன் பண்ணி பேசுவேன், ஆனா என் அட்ரசை சொல்லவே மாட்டேன். அப்போ, இவங்க எல்லோரும் என்னை தேடி பீல் பண்ணனும்...//

அப்பவே இப்படி டெரர் பார்ட்டிதானா???. :-))).

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நல்லாஇருக்கு!!!
நானும் ஒரு பொண்ண ப்ளஸ் ஒன் படிக்கும்போது ஃபாலோ பண்ணேன்.
மூணுநாள் பார்த்துச்சு அந்த பொண்ணு.
நாலாவது நாள் நேரா என் கிளாசுக்கு வந்து..........
ராக்கி கட்டிவிட்டு போய்டுச்சு.
அன்னக்கி முடிவு பண்ணதுதான், இனிமேல் யாரையும் ஃபாலோபண்ணகூடாது என்று!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இப்பதான தெரியுது, தொடர் பதிவோட ஆர்ஜின்!!!

Deepa said...

//ஆயா என்னோட நோட்டெல்லாம் புரட்டி பார்த்துக்கிட்டு இருந்தாங்க. //

இதப் படிச்சிட்டு உங்க ஆயா தான் கேடின்னு நெனச்சேன். ஆனா நீங்க அதுக்கும் மேல!
//இவங்க யாருக்குமே அட்ரஸ் தரவே மாட்டேன். நான் மட்டும் போன் பண்ணி பேசுவேன், ஆனா என் அட்ரசை சொல்லவே மாட்டேன். அப்போ, இவங்க எல்லோரும் என்னை தேடி பீல் பண்ணனும்... /
இதெல்லாம் கொஞ்சம் ஓவரில்ல? :))))

Photo super! பேப்பர் வெச்சதுல ஆச்சரியமென்ன? ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தலைப்புல ய பேஜ் ந்னு போட்டுட்டு உள்ள பல பேஜை ஒன்னா ஆக்கிட்டீங்களா.. :)

எனக்கு அவ்ளோ சின்ன வயசுல டைரி எழுதற பழக்கமில்லை.. ஆனால் தொண்ணுறுல டீனேஜின் க்டைசியில் இருந்தப்ப கொஞ்சம் எழுதியது உண்டு.. கண்டிப்பா தொடர்கிறேன்.. நன்றி..

\\இப்போல்லாம் அம்மாக்கள்/ஆயாக்கள்/அண்ணாக்கள் மாறியிருக்கிறார்களாவென தெரியவில்லை - டீனேஜர்களும்தான்!//

இன்னும் இரண்டே வருசத்தில் இந்த கேள்விக்கு பதில் தெரியவரும் எனக்கும்.. :)

பா.ராஜாராம் said...

யதார்த்தமான பகிர்வு முல்லை.அப்பவே நல்லா எழுதி இருக்கீங்க.எழுத்தாளர்கள் டைரியில் தான் பிறக்கிறார்களோ என்னவோ...
:-)

மாதவராஜ் said...

:-))))

நட்புடன் ஜமால் said...

ச்சே வேற வீட்ல பொறந்திருக்கலாம்

நிறைய பேர் நினைக்கிறது தான் போல

----------

நான் நல்ல அண்ணாவாக்கும்

கேட்ப்பேன் - ஒரு ஜாக்கிரதைக்காக மட்டுமே - மற்றபடி தொந்தரவுறதில்லை

நட்புடன் ஜமால் said...

ஆனா என் அட்ரசை சொல்லவே மாட்டேன்]]


நான் யார் அட்ரசையும் கேட்க்கவே மாட்டேன் - இப்பவும் தொடருது இந்த பழக்கம் - ஆனா என்னோடதை தெளிவா குடுத்திடுவேன் ...

நட்புடன் ஜமால் said...

ஆச்சி தயவுல நிறைய டைரி வெளியே வரப்போகுது

ஆஹா! அதை படிப்பதே ஒரு த்ரில் தான் (அனுமதி இருப்பதால் படிக்கிறோம்)

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு முல்லை.

//எழுத்தாளர்கள் டைரியில் தான் பிறக்கிறார்களோ என்னவோ...//

பா ரா சொல்லியிருப்பதையும் வழிமொழிகிறேன். அத்தனை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.

செல்வநாயகி said...

//படிக்கற பசங்களுக்கெல்லாம் லவ் வராதுன்னு கெஜா அம்மா, சுஜா ஆன்ட்டி, ஆயால்லாம் பேசும்போது சொல்லிக்கிட்டாங்களே. //


:))

.:: மை ஃபிரண்ட் ::. said...

எனக்கு மத்தவங்க டைரி படிக்கிற பழக்கமில்ல அக்கா.. அதனால பதிவை படிக்கலை.. அட்டெண்டண்ஸ் மட்டும் போட்டுக்குறேன் :-)

ஷங்கர்.. said...

ஒரு கைதியின் டைரிக்கு அப்புறம்..
உங்க டைரிதான். :))

சினேகிதி said...

ஆச்சி போட்டோ நல்லாயிருக்கு.

இப்பத்த அம்மாக்கள் றூமை எட்டிப்பார்ப்பாங்கதான் பட் கணனியையும் நோண்டிப்பார்க்க தெரிஞ்சிருக்கணும்.அப்பிடியே அவை தெரிஞ்சுகொண்டாலும் அவைக்குத் தெரியாதமாதிரி என்ன என்ன தில்லுமுல்லு பண்ணலாம்னு நான் இப்பத்தான் என் தங்கச்சி மற்றும் cousins ட்ட தெரிஞ்சிக்கிறன்.

மற்றது வெளிநாட்டில அம்மா அப்பா கண்டுக்காம விட்டுடுவாங்கதான் ஆனால் சில பிள்ளைகள் அம்மா அப்பா தங்களைப் பற்றிக் கவலைப்படேல்ல என்டும் feel பண்ணுவினம்..சுதந்திரம் கொஞ்சநாளைக்குத்தான் சுகமா இருகு்கும்.

ஜீவன் said...

;;)

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.புதிய நண்பர்களும், புதுப்புது அனுபவங்களும் கொண்ட டீனேஜ் பருவம் யாராலும் மறக்கமுடியாது.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

//குறிப்பு 2 : முத்துலெட்சுமி, அம்பிகா அக்கா, ஷ்ரேயா, சின்ன அம்மிணி - இவர்களின் டீனேஜ் டயரியின் ஒரு சில பக்கங்களை (விருப்பமிருந்தால் ) பகிர அழைக்கிறேன்//

ஏன் எங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்குமா?
டயரி படிக்கிறது ஒரு த்ரில்தான்.அடுத்தவுங்க டயரி

அம்பிகா said...

முதல் முறையாக ஒரு தொடர்பதிவு.
விரைவில் பதிகிறேன்.

\\பா.ராஜாராம் said...
யதார்த்தமான பகிர்வு முல்லை.அப்பவே நல்லா எழுதி இருக்கீங்க.எழுத்தாளர்கள் டைரியில் தான் பிறக்கிறார்களோ என்னவோ...
:-)\\
உண்மைதான்.

பிரியமுடன்...வசந்த் said...

ஒருத்தன் உன்னை ஃபாலோ பண்றானான்னு தெரிஞ்சுக்கணும்னா, நீ போகும்போது அங்கங்கே நில்லு, நீ நிக்கறப்போல்லாம் அவனும் நின்னான்னா அவன் உன்னைதான் ஃபாலோ பண்றான்னு//

:))

டம்பி மேவீ said...

நல்ல பகிர்வுங்க ....

(நமக்கெல்லாம் PG முடிக்கிற வரைக்கும் படிப்பே ஒரு பெரிய போராட்டமா இருந்துச்சு .........இன்னொரு விஷயம் எங்க வீட்டில் செம STRICT ....அதனால் என்னை CHECKING , CROSS CHECKING ங்கிற பெயர்ல ரொம்ப இம்சை படுத்தி இருக்காங்க )

முகிலன் said...

கேக்க மறந்துட்டேனே, அந்த ஃபோட்டோல இருக்கிறதுதான் உங்க ஆயாவா?

காமராஜ் said...

நிழற் படத்திலிருப்பது முல்லையா.
நன்று முல்லை பார்க்க கிடைத்தமைக்கு.

Dr.Rudhran said...

neat. keep going.

ஹுஸைனம்மா said...

//ஆனா அண்ணாங்கதான் ரொம்ப பயமாம். //

ஆமா, ஃபிரண்ட்ஸ் அனுபவங்கள்ல இருந்து நல்லவேளை எனக்கு அண்ணன்கள் இல்லைன்னு பலமுறை சந்தோஷப் பட்டிருக்கேன்.

ஆமா, இந்த ஃபோட்டோ நீங்களா?
(பதில் சொல்வீங்களான்னு தெரியல. பின்னூஸ்ல வர்ற கேள்விகளுக்கு நீங்க பதிலே சொல்றதில்லை. இன்னும் அந்த சினேகா-ஆட்டா விவகாரம் என்னன்னு முழுசா பிடிபடவேயில்ல. நானெல்லாம் ஒரு விஷயம் தெரியலன்னா மண்டை வெடிக்கிற கேஸ்!!)

;-D

☀நான் ஆதவன்☀ said...

nice post again boss :) keep rocking

சுரேகா.. said...

நல்லா இருக்கு!
ஞாபகப்பெட்டகத்திலிருந்து ஒரு துணுக்கை எடுத்துப் பறக்கவிட்டாலும்,
அது அழகாக மிளிரும்.

:)

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு. உங்க ஆயா கண்ணுக் கொத்திப் பாம்பா வளர்த்திருக்கார்கள். ஆனா தேவை இல்லாத சந்தோகம் நிம்மதியைக் கெடுக்கும். பரிபூர்ண சுதந்திரம் வாழ்வைக் கெடுக்கும். நன்றி.

naathaari said...

உங்களுடய எழுத்துக்கள் ந்ல்ல ஆவணமாக மாறிவருகிறது வாழ்த்துக்கள் முல்லை. இன்னும் நிரைய எழுதுங்கள் ஏன் உங்கள் பதிவுகளில் சிறந்தவற்றை எடுத்து ஒரு புத்தகம் போடக்கூடாது

சிங்கை நாதன்/SingaiNathan said...

:)

ஓஹோ அப்படியா

Who is Ritu's Dad?? From Ambur?

அன்புடன்
சிங்கை நாதன்

தமிழன்-கறுப்பி... said...

இப்படி பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கு... அப்ப டயரின்னுல்லாம் எழுதுறது கிடையாது இப்பவும்தான் ஆனா அப்பப்ப சாமி வந்தது மாதிரி விடிய விடிய இருந்து எழுதி வச்சது இருக்கும்.

தமிழன்-கறுப்பி... said...

//படிக்கற பசங்களுக்கெல்லாம் லவ் வராதுன்னு கெஜா அம்மா, சுஜா ஆன்ட்டி, ஆயால்லாம் பேசும்போது சொல்லிக்கிட்டாங்களே//

அது சரி...:))

போட்டோவுல இருக்கிறது பழைய ஆச்சியா?

சந்தனமுல்லை said...

நன்றி சின்ன அம்மிணி, சீக்கிரம் யோசிச்சி சொல்லுங்க...:-)

நன்றி முகிலன்...உங்க டைரியையும் எழுதுங்களேன்..பைதிவே..எங்க ஆயா இப்படி இருந்திருந்தாதான் பிரச்சினை இல்லையே! :-)

நன்றி செந்தில்!


நன்றி ஷ்ரேயா...ஆமா..அது ஒரு மர்மமாவே இருக்கு....கொடுத்த வைச்ச பொண்ணுங்க நீங்க! :-)

நன்றி சிங்கக்குட்டி!

நன்றி ரகு...:-)) இன்னும் ஞாபகம் இருக்கா...தேடிப்பார்க்கணும்..யாஹூ மெயிலெல்லாம் மூட்டை கட்டியாச்சு இல்லே!

நன்றி அமைதிச்சாரல், டெரர் பார்ட்டியா.....ஃபியர் பார்ட்டிங்க (பயந்தாங்கொள்ளி) நான்! :-)

ஆகா, பாலா..இவ்வளவு நடந்திருக்கா...பார்க்க பவ்யமா இருந்துக்கிட்டு ஒரு பொண்ணை இப்படி பயமுறுத்தி இருக்கீங்க..:-))

சந்தனமுல்லை said...

நன்றி தீபா....இருங்க..ஆயாக்கிட்டே சொல்றேன்.:-))

நன்றி முத்து, காத்திருக்கிறேன்..தங்கள் இடுகைக்கு! :-)

நன்றி ராஜாராம், இப்போ உங்க சான்ஸா...:-))

நன்றி மாதவராஜ் சார்!

நன்றி ஜமால், நீங்களும் அப்படி நினைச்சிருக்கீங்களா? அப்புறம் நாங்கள்ல்லாம் டைரின்னு ஒன்னு இருந்தா யாருதுன்னு பார்க்க மாட்டோம்..எடுத்து படிச்சுடுவோம்..டைரி, ஆட்டோகிராஃப் நோட்டெல்லாம் படிச்சிருக்கேன்! :-)

நன்றி ராமலஷ்மி, மகிழ்ச்சியாக இருக்கிறது தங்கள் வார்த்தைகள்!

குடுகுடுப்பை said...

டைரி நல்லாதான் இருக்கு.நானும் கூட யாரையாவது பாலோ பண்ணனும்னு நெனச்சது உண்டு, அப்பாவோட சைக்கிள்ல உக்காந்தே போனதினால நான் பாலோ பண்ணது அவரத்தான்.எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான் இல்லாட்டி யாரு டைரிலாவது எம்பேரும் வந்திருக்கும்.

சந்தனமுல்லை said...

நன்றி செல்வநாயகி, நிஜமாத்தான் சொல்லிக்கிட்டாங்க...ஒருவேளை எங்க காதுலே விழணும்னு சொல்லியிருப்பாங்கன்னு தோணுது! :-))

நம்பிட்டேன்..மைஃபிரண்ட் அனு மேடம்! :-)

நன்றி ஷங்கர்...ஒரு வகையில் கைதியின் டைரிதானே..ஹிஹி!

நன்றி சிநேகிதி...உங்க பின்னூட்டம் பார்த்தா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...ஒரு போஸ்ட் போட மாட்டேங்குறீங்க..ரசிகர்களுக்காக தயவு பண்ணுங்க மேடம்! :-) நான் என்னவெல்லாம் கத்துக்கணூமோ..அவ்வ்வ்!

நன்றி ஜீவன்!

நன்றி ராஜா...ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறீர்கள்!

நன்றி சாந்தி லெட்சுமணன், மன்னிச்சுடுங்க..தங்களையும் பகிர அழைக்கிறேன். எங்களுக்கும் அந்த த்ரில்லை தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்! :-)

நன்றி அம்பிகா அக்கா...நான் முந்திக்கொண்டேனா..:-)

நன்றி மேவீ..சேம் பிளட்...அவ்வ்வ்வ்
!

நன்றி காமராஜ் அண்ணா, அடியேன் தான்...சிறு வயதில்! :-)

சந்தனமுல்லை said...

நன்றி டாக்டர்.ருத்ரன் சார்! மிகுந்த உற்சாகமாக இருக்கிறது - தங்களின் வரவும் வாழ்த்தும்!


நன்றி ஹூசைனம்மா, படத்தில் இருப்பது நானேதான். பின்னூட்டத்திற்கு பதில் - எல்லாம் ஒரு சோம்பேறித்தனம்தான்...சமயங்களில் மனநிலையைப் பொறுத்தும்! அதுவுமில்லாமல், பிரபலமானவர்கள் பின்னூட்டத்திற்கு மறுமொழி அளிப்பதில்லை என்று நம்புவதாலும்..(ஹிஹி..அப்படியாவது ஜீப்பில் ஏறலாமே!)

ஆதவன் பாஸ், மிகக் நன்றி பாஸ்...பாறை எப்படி செய்றது பாஸ்..எல்லாம் உங்ககிட்டே கத்துகிட்டதுதான்! :-))

நன்றி சுரேகா..நீங்க அனுபவிச்சு சொல்றதை பார்த்தா உங்க டைரி ரொம்ப சுவாரசியமா இருக்கும் போல இருக்கே! ;-)

நன்றி பித்தனின் வாக்கு!

நன்றி லட்சுமணன்/நாதாரி...மிகுந்த சங்கோஜமாக இருக்கிறது...ஆனாலும் என் மீது வைத்திருக்கும் தங்கள் நம்பிக்கைக்கு நன்றி! :-)

நன்றி சிங்கைநாதன் அண்ணா, ரகு எனது யாஹூ காலத்து நண்பர். நட்பாலானவர்! அவரைப் பற்றிச் சொல்ல பின்னூட்டம் பத்தாது! :-)

நன்றி தமிழன் - கறுப்பி, அப்போ உங்க நோட்டையும் படிக்க தாங்களேன்...அப்புறம், ஃபோட்டோவிலே இருக்கறது நான் தான்!

சந்தனமுல்லை said...

நன்றி குடுகுடுப்பையார்,அவ்வ்வ்..கொடுமைதாங்க...அதுவும் அப்பாவை ஃபாலோ பண்றது! :-)

தமிழ் பிரியன் said...

அப்ப நாங்க கொடுத்த\கொடுக்கும் லட்டருக்கு எல்லாம் இவ்வளவு தான் மரியாதையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது அப்பமே தெரிஞ்சு இருந்தா இந்த நேரத்தில் நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போய் இருப்போமே.. வடை போச்சே.. ;-)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பா.ராஜாராம் said...
யதார்த்தமான பகிர்வு முல்லை.அப்பவே நல்லா எழுதி இருக்கீங்க.எழுத்தாளர்கள் டைரியில் தான் பிறக்கிறார்களோ என்னவோ...
:-)


repeattu

பின்னோக்கி said...

//அவ திட்டுனப்புறம் அவங்கம்மா கதவை திறக்கறது இல்லேயாம். ஜன்னலேர்ந்து மட்டும் எட்டி

:)

டிவியில வந்திருக்கீங்களா ? நியூஸ் வாசிச்சீங்களா ?.

பதின்ம வயதில் (கரெக்ட்டா ?) இயல்பான விஷயங்களை அழகாக எழுதியிருக்கிறீர்கள். அண்ணன்களா ? பாடிகார்டுங்க அவங்க. தானும் என்சாய் பண்ணமாட்டானுங்க மத்தவனுங்களையும் விட மாட்டாங்க :).

இப்பொழுதும் கண்காணிப்புகள் தொடர்கின்றன. என்ன வழிமுறைகள் வித்தியாசமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அமுதா said...

:-))

cheena (சீனா) said...

அன்பின் சந்தன முல்லை

எங்கள் பதின்ம வயதில் நாங்கள் நாட்குறிப்பெல்லாம் எழுத வில்லை. ம்ம்ம்

டைரியில் பல பக்கங்கள் சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறது. நன்று நன்று - பழைய குறிப்புகளைப் படித்து மனதில் மலரும் நினைவுகளாக அசை போட்டு ஆனந்திப்பது தனி சுகமே !

அப்பவே நல்லா எழுதி இருக்கீங்க டைரி

நல்வாழ்த்துகள் முல்லை - பப்பு நலமா

குசும்பன் said...

//என்னை ஃபாலோ பண்றியான்னு கேட்டேன், அவன்கிட்டே. ஸ்கூல்லே பார்த்து இருக்கேன், அந்த மூஞ்சியை. ஆமான்னு சொன்னான். போலீஸ் ஸ்டேஷ்ன்லே சொல்லிடுவேன்னு //

ஒரு இளைஞன் ஒரு இளைஞியை பாலோ செய்வது சகஜம் தானே?

தீஷு said...

நல்ல பகிர்வு முல்லை!!!