Sunday, February 21, 2010

ஐ ஃபார் ...

...ஐடிகார்ட்!

ஸ்கூல்லே காலேஜ்லே கொடுப்பார்களே - லாமினேட் பண்ணின ஐடிகார்டு. அது இல்லீங்க...இது வேற! பட்டையா இல்லேன்னா உருண்டையாக பஞ்சு மாதிரி கயிறுலே கம்பெனி பேரு எழுதி கழுத்திலே போட்டிருப்பாங்களே..அந்த ஐடி கார்ட்!

கொஞ்சம் பட்டையான கயிறு, அதில் எழுத்துகள் அழிஞ்ச மாதிரி எழுதி இருந்தா - டிசிஎஸ். உருட்டிய கயிறாக இருந்தால் அது சிடிஎஸ். கொஞ்சம் பெரிய பட்டையாக இருந்தால் பொலாரிசிஸ். இப்படி எழுத்துகள் சரியா தெரியாவிட்டாலும், ஐடி கார்டு தொங்கும் கழுத்துகளை பார்த்தே கண்டு பிடித்துக்கொண்டிருப்போம் , நானும் லதாவும். எங்கே? பஸ் ஸ்டாப்பிலேதான்.

இந்த ஐடி கார்டு போட்டவர்கள் பஸ் ஸ்டாப்பை விட்டு தள்ளி நிப்பார்கள், அவர்கள் கம்பெனி பஸ்ஸுக்காக. கையிலே டப்பர்வேர். சிலர் கையில் ஃபைல் இல்லேன்னா டோராவோட பேக்பேக். 'காக்கா வாயிலே வடை ' கண்ட நரியாக நாங்களும் ஐடி கார்டையும் வால்வோ பஸ்ஸையும் பார்ப்போம். ஆனால், ரெசஷனில் கிடைத்ததோ சென்ட்ரல் கவர்ன்மெட் ப்ராஜக்ட் அசிசிஸ்டெண்ட் வேலை. அதில் கிடைத்த ஐடி கார்டை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு பர்ஸுக்குள் வைத்துக்கொண்டோம். அதுவோ, ஸ்கூல் பசங்க ஐடி கார்டே பரவாயில்லை என்பது போல இருந்தது! எங்கள் ஸ்டாம்ப் சைஸ் ஃபோட்டோவை ஒட்டி அதில் எந்த டிபார்ட்மெண்ட், சயிண்டிஸ்ட். இன்.சார்ஜ் கையெழுத்து/கைட் கையெழுத்து, அப்புறம் அட்மின் பொறுப்பாளரின் ஐடிகார்டு, பத்தாததற்கு எங்களின் கையெழுத்து! இதை யாருக்காவது கழுத்தில் மாட்டிக்கொள்ள ஆசை வருமா?! (அப்படிப்பட்ட ஐடி கார்ட் சுமந்து இண்ட்டெலிஜென்ட் சிஸ்டம் கோட் அடிச்சத்து தனிக் காவியம்! )

காலேஜுலே கான்வெகேஷனுக்கு வந்த சீனியர்ஸ் நிறைய கதை சொல்லி போயிருந்தார்கள். அடுத்த மாசம் நான் யூஎஸ் போறேன், எங்க ப்ராஜக்ட் அப்படி, இப்படி -ன்னு. மறக்காம சொல்றது, 'ப்ராஜக்ட்க்கு வரும்போது உன்னோட ரெஸ்யூம் அனுப்பு'ன்னு விசிட்டிங் கார்டு கொடுப்பாங்க. அப்படி கொடுக்கும்போது அவங்க பையிலே இருக்கற ஐடி கார்டும் எங்க கண்லே படும். அதையும் ஒரு பார்வை பார்த்துட்டு, எப்படியும் நாமளும் யூ எஸ் போகப்போறோம்னு இமெயில் ஐடி கூட நாங்க usa.net லே வைச்சிருந்தேன். எங்க பிசிஏ பேட்சே அப்புறம் usa.net க்கு மாறினது பொறுக்காம அந்த சர்வரே படுத்துடுச்சு, கொஞ்ச நாள்லே.

அதை விடுங்க, ஐடி கார்டு விஷயத்துக்கு வருவோம். எப்படியாவது, ஒரு ஐடி கார்டு பாக்கியம் கிடைக்கணும்னு சென்னையிலே இருக்கற ஒரு கம்பெனி விடாம நாங்க ரெஸ்யூம் கொடுத்து முடிச்சிருந்தோம். ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒரு மெயில் பார்வர்டு இருந்தது - excel ஃபைல்லே சகட்டுமேனிக்கு எல்லா கம்பெனிகளின் HR மெயில் ஐடி, கன்சடல்ன்ஸி ஐடி எல்லாம் இருக்கும். அது வழிவ்ழியா சுத்தி எப்படியாவது ப்ரெஷர்ஸ் கையிலே கண்டிப்பா மாட்டிக்கும். அப்போ ஃப்ரெஷ்ர்ஸுக்கு உதவ சேத்தனாஸ் -ன்னு ஒரு க்ரூப்பே இருந்தது. சேத்தனா - அவங்க எத்தனை பேரு லைஃப்லே ட்யூப்லைட்
போட்டு பொட்டு வைச்சிருக்காங்கன்னு தெரியாது...ஆனா, தினமும் சேத்தனாக்கு நன்றி சொல்லி மெயில் வந்துக்கிட்டிருக்கும். தினமும், எங்கே வேலை காலி, ஃப்ரெஷ்ர்ஸ் எங்கே தேவைன்னு அருமையா கடமையா அனுப்புவாங்க. இப்படி சேத்தனா புண்ணியத்துலே எங்க ரெஸ்யூம் எல்லா கம்பெனி டேட்டாபேஸிலேயும் இருந்தது. ஆனா, யாரும் கூப்பிடத்தான் இல்லை.

ஒரு சில ஐடிக்கு CV அனுப்பினதும் உடனே ரிப்ளை வரும். அது தானியங்கி மறுமொழிதான். ஆனா அதுக்கே அன்னைக்கு ராத்திரி கலர் கலர் கனவா வரும். ஐடி கார்டை மாட்டிக்கிட்டு டப்பர்வேர் வச்சிக்கிட்டு பஸ்ஸுக்கு நிக்கற மாதிரி எல்லாம்! ஆனா , அந்த தானியங்கி மறுமொழிக்கு அப்புறம் எந்த மெயிலும் வராது. குறைஞ்சது - 2+ வருட முன் அனுபவம் இருக்கணுமாமே! ஆறு மாசம் எக்ஸ்பிரியன்ஸ் வைச்சிருக்க நாங்க எங்கே....

அப்போ வொர்க்கிங் உமன்ஸ் விடுதியிலே தங்கியிருந்தோம். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை நானும் லதாவும் அழுக்குத் துணியை மூட்டை கட்டிக்கிட்டு ஆம்பூருக்கு போய்டுவோம். 'வரோம்'னு பெரிம்மாவுக்கு மெசேஜ் அனுப்பினா போதும் (மறக்க முடியுமா....Nokia 3210) . சப்பாத்தியும் சிக்கன் க்ரேவியும் செஞ்சு வைச்சுக்கிட்டு பெரிம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க. ம்ம்ம்ம்....ஓக்கே என்ன சொல்ல வந்தேன்...சென்னை டூ ஜோலார்பேட்டுக்கு லிங்க்-ன்னு ஒரு ட்ரெயின் இருக்கும். சென்னையிலேருந்து சாயங்காலம் 5.50 க்கு கிளம்பி 9.45 க்கு எங்க ஊரிலே நிக்கும். துரித கட்டை வண்டி.

அதுலே எங்க கண்லே படறவங்க எல்லாம் கழுத்துலே இந்த ஐடி கார்டோடவே வந்திருப்பாங்க. என்னவோ அதை கழட்டத்தான் நேரம் இல்லாத மாதிரி. ' ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிலே நாங்களும் சேருவோம். அப்போ ஐடியோடவே நாங்களும் வீட்டுக்கு போய் இது மாதிரி சீன் போடல... எங்க பேரை...யானைக்கு தும்பிக்கைன்னா மனுஷனுக்கு நம்பிக்கை' அப்படின்னு மனசுக்குள்ளே நினைச்சுப்போம். ட்ரெயின்லே ஏறி உட்கார்ந்தபின்னும் அதை கழட்ட மாட்டாங்க. ஆனா, அதுலேயும் ஒரு நல்லது இருந்தது. ஏன்னா, நாங்க போய் அவங்க வசிக்கற ப்லாட்பார்ம், ஏரியா (domain) வெல்லாம் விசாரிக்கறதுலே அவங்க விசிட்டிங் கார்டை (அதை பிசினஸ் கார்டுன்னு சொல்லனுமாம்) கொடுத்து சிவி அனுப்ப சொல்லுவாங்க. திங்கட்கிழமை அவங்க ஆபிஸ்லே போய் நிக்கறாங்களோ இல்லையோ..அதுக்கு முன்னாடி அவங்க மெயில் பாக்ஸை எங்க சிவி போய் தட்டிக்கிட்டிருக்கும். பலனென்னவோ பூஜ்யம்தான்.

கடைசிலே, நந்தனத்துலே இருந்த ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிலே நானும் அடையாரிலே லதாவும் செட்டில் ஆனோம். ஐடிகார்டும் கைக்கு வந்தாச்சு.நேவி ஃப்லூ கயிறு. அதுலே என்னோட ஃபோட்டோ போட்டு எம்ப்லாயி கோட் , ப்ளட் க்ரூப் எல்லாம் இருந்தது. தாலிக்கு தமிழ்சினிமாவிலே கொடுக்கற மரியாதைதான்..கண்ணுலே ஒத்திக்காத குறை. கூடவே வந்தது - விசிட்டிங் கார்டு..ச்சே..பிசின்ஸ் கார்டு. ஆனா, அதை எங்கே கொடுக்கறதுன்னு தெரியாம (கடைசிலே ஏதோ லோன் வாங்கதான் யூஸ் ஆச்சு!) முழிச்சுக்கிட்டு இருந்தப்போ பெரிம்மாவும், அம்மாவும் ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக்கிட்டாங்க. மீதி இருந்ததை ஸ்டெல்லா( ஜூனியர்) எடுத்துக்கிட்டா. அநேகமா எல்லா ஜூனியர்ஸ் கைக்கும் போயிருக்கும். ஒரு மாசத்துலே இன்னொரு பேட்ச் பிசினஸ் கார்டு அப்ளை பண்ணது நானாத்தான் இருப்பேன். HR -ஏ ஆடிப்போய்ட்டாங்க! பெரிம்மாஅதை எங்க ஸ்கூல்லே போய் என்னோட டீச்சர்ஸ்கிட்டே காட்டி என் அருமை பெருமையை ரெண்டு இன்ச் உயர்த்தினாங்க. அவங்க பையிலே எப்போவும் அவரசத்துக்கு உதவும் ரேஞ்சுலே ஒரு பதினைஞ்சு கார்டு இருக்கும்னா பார்த்துக்கோங்களேன்.

அந்த கம்பெனியை விட்டு வரும்போது ஆக்சஸ் கார்டை மட்டும் கொடுத்துட்டு, அந்த ஐடிகார்டை HR - கிட்டே கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்.

'எந்த கம்பெனியிலேயும் ரெண்டு வருசத்துக்கு மேலே இருக்கக் கூடாது, தாவிக்கிட்டே இருக்கணும்' - ன்னு ஒரு உன்னத நோக்கத்தோடதான் வேலைக்கு போகவே ஆரம்பிச்சோம். ' ஏன்னா அப்போதான் ஸ்டேக்னண்ட் ஆக மாட்டோம்'னு ஒரு காரணம் வேற. அதன்படி - அடுத்த ரெண்டாவது வருசத்துலே பெங்களூர் தாவல். அங்கேயும் ஒரு ஐடி கார்டு - போன தடவை இருந்த பரவசம் இங்கே மிஸ்ஸிங். ஆனா ஏதோ கலெக்‌ஷன் மாதிரி அந்த விசிட்டிங் கார்ட் மட்டும் சேர்ந்துகிட்டு இருந்தது. அதுலே ஒரு செட்டை என் தம்பி சீட்டு கட்டாவும், பப்பு இப்போ ஏபிசிடி விளையாடவும் எடுத்துகிட்டாங்க.

பெங்களூர்லே ஆட்டோக்காரங்க கடமைன்னா காட்பாடியா இருப்பாங்க.சாயங்காலம் ஆறுமணிக்கு மேலே ஐந்து நிமிஷம் ஆகி இருந்தாலும் ஒன் அண்ட் அ ஹாஃப்-ன்னு சொல்லுவாங்க. அதாவது ஒன்றரை பங்கு சார்ஜ். அதனாலே நானும் கலைவாணியும் ஐடி கார்டை கழட்டி பைக்குள்ளே வச்சிக்கிட்டு ஆட்டோக்காரர்கிட்டே பேரம் பேசுவோம். அப்போதான் ஐடிகார்டு மேலே இருந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமா குறைந்திருக்கணும்னு நினைக்கறேன். சரி, பெங்களுரை நாம முன்னேத்தினது போதும், இனி சிங்காரச் சென்னைக்குத்தான் என் சேவைன்னு முடிவு செஞ்சு இங்கே வந்து சேர்ந்தப்புறம் - கொஞ்ச நாள் வரைக்கும் ஐடி கார்டை மேலே மோகம் இருந்துக்கிட்டு தான் இருந்தது. ஆனா, ஆட்டோவிலே போகணும்னா மட்டும் அதை மறைச்சு பைக்குள்ளே வச்சிக்கிறதுன்னு போய்ட்டு இருந்தப்போதான் ஒரு நாள் ஹெச் ஆர்கிட்டே இருந்து மெயில் ஒன்னு வந்தது - அதாகப்பட்டது, ஐடி கார்டு தொலைந்தால் ரூபாய் 250 கொடுத்தால் புதிது வாங்கிக்கணும்! அதுக்கு ரெண்டு நாள் முன்னேதான் கிளிப்லேருந்து என்னோட ஐடிகார்டு கழண்டு நல்ல வேளையா ஸ்கூட்டிலேயே விழுந்திருந்தது. 'எதுக்குடா வம்புன்னு' அப்போ கைப்பைக்குள்ளே போட்டதுதான்.

க்ளிப் டைப் ஐடி கார்டு வந்தப்பறம் பழைய ஐடி கார்டோட மகிமை இல்லை. ஆனாலும், ஐடி கார்டு மாட்டின கழுத்தை எங்கேயாவது பார்க்க நேர்ந்தா மட்டும் லேசான கொசுவத்தி மட்டும். ஏன்னா, ‘ஐடி கார்டைவிட ஏடிஎம் கார்டுதான் முக்கியம்'னு லைஃப் உணர்த்தினதாலே கூட இருக்கலாம். (நல்லாத்தானே போய்கிட்டிருந்தது எதுக்கு இந்த பஞ்ச் -ன்னு கேக்கறீங்களா...ஹிஹி..எல்லாம் நெஞ்சை பஞ்சாக்கி பஞ்சை பஞ்சராக்கும் கலைதான்!)

பைதிவே, நேத்து ஒரு கால். என்னோட பிசினஸ் கார்டை வாங்கின அதே ஸ்டெல்லா-கிட்டேருந்து.... 'ஹேய், முல்லை எனக்கு ஒரு வேலை வாங்கித்தாயேன்னு'! (இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது!!)

“பையனுக்கு ஐஞ்சு வயசாகிடுச்சு..வீட்டுலே இருந்து பார்த்துக்க வேணாம். எல்லோரும் வேலைக்கு போறத பார்த்தா எனக்கும் ஆசையா இருக்கு, ப்லீஸ், ஒரு வேலை வாங்கி கொடு முல்லை-ன்னு ஒரே அழுகை! அதுலே சுத்த ஆரம்பிச்ச கொசுவத்திதான்! என்ன பண்றது...நானும் ஐ ஃபார் ஐம்பது காசு, ஐ லவ் யூ, ஐஸ் ஐஸ்-ன்னு சிலபல க்ளிசரின் முயற்சியை வச்சிருந்தேன். என்னையும் மீறி இந்த பஞ்சராக்கும் இடுகை வந்துடுச்சு...நண்பர்களே மன்னிப்பீர்களாக! :-)

38 comments:

சின்ன அம்மிணி said...

ஒரு ஐடி கார்ட்ல இவ்வளவு இருக்கா. எனக்கு இந்த ஐடி கார்டு கழுத்துல மாட்டற குடுப்பினை இல்லை :)

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

//எங்க பிசிஏ பேட்சே அப்புறம் usa.net க்கு மாறினது பொறுக்காம அந்த சர்வரே படுத்துடுச்சு, கொஞ்ச நாள்லே.//

சிரிப்பை அடக்க முடியாமல் ரசித்துத் சிரித்தேன்.

மிக அருமையாக இருந்தது.

வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்.
ந.முத்துக்குமார்

மயில் said...

தாலிக்கு தமிழ்சினிமாவிலே கொடுக்கற மரியாதைதான்..கண்ணுலே ஒத்திக்காத குறை. //

:)) நல்லாருக்கு பாஸ் :))

ச.செந்தில்வேலன் said...

நல்ல கொசுவத்திங்க.

இந்த ஐ.டி. கார்டை அலுவலகத்தில் நுழையும் பொழுது அல்லது பேருந்தில் ஏறும் பொழுது மாட்டிக்கொண்டால் போதுமானது என்பதே என் கருத்து. தேவையில்லாமல் பிறர் கவனத்தை எதற்காக ஈர்க்க வேண்டும்? முன்னனி நிறுவனங்களில் பணிபுரிவது பெருமைபடவேண்டிய விசயம் என்றாலும், எப்பொழுது மாட்டிக்கொண்டு திரிவதில் எனக்கு உடன்பாடில்லை.

மேலும் பெரும்பாலான நிறுவனங்களில் கைவிரல் ரேகை மூலம் தான் அனுமதி வழங்கும் முறை வந்தாயிற்று.

இய‌ற்கை said...

:-) nalla than suthi irukeenga:-)

Uma Rudhran said...

//தாலிக்கு தமிழ்சினிமாவிலே கொடுக்கற மரியாதைதான்..கண்ணுலே ஒத்திக்காத குறை.// கண்ணு கலங்கிடுச்சுங்க :)

முகிலன் said...

நல்ல பதிவு..

நானும் பெங்களூர் போன புதிதில் ஐடி கார்டை கழுத்தில் கட்டிக் கொண்டே திரிந்தது நினைவுக்கு வருகிறது.

கொஞ்ச நாளில் அது வெறுத்து பைக்குள் ஐடி கார்ட் இருக்கும். கேட்டால் எடுத்து காட்டுவது என்று மாறிப்போனது.

இப்போது? லேப்டாப் பேகில்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா ஒரு ஐடிக்குப் பின்னால இவ்வளவு கதையா:) நான் அஞ்சே வருஷம் வேலை பார்த்த கம்பனில ஒரு 1000 பாயிண்ட்ஸ் ஸ்கோர் செய்தால்தான் பிசினஸ் கார்ட் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க,. என்வேலை பேரு ,கம்பனி,போன் # எல்லாம் போட்டு என் தம்பி கிட்ட கொடுத்து நாங்களே ப்ரிண்ட் செய்துகிட்டோமே:)
போகிற இடத்தில எல்லாம் ,கார்ட் கொடுத்தப்புறம்தான் பிசினஸே பேசுவது.! அப்புறம் அந்த கம்பனி ல கொடுத்த கார்ட் கூட அவ்வளவா ரசிக்கலை. இன்னும் இருக்கு 150. நீங்க சொல்கிற நல்ல ஐடியா படி எங்க பாப்பாவுக்கு விளையாடக் கொடுத்துவிடுகிறேன்.:)
கொசுவத்தி எல்லாப் பக்கமும் போய்விட்டு வருது நல்லா இருக்கு.

☀நான் ஆதவன்☀ said...

//(இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது!!)//

:))))))) பாஸ் பதிவு முழுக்க சிரிச்சுட்டே படிச்சேன். கலக்கல் பாஸ்

☀நான் ஆதவன்☀ said...

//.நண்பர்களே மன்னிப்பீர்களாக! :-)//

மன்னித்தோம்ம்ம்ம்ம்ம்ம் :))

அன்புடன் அருணா said...

இப்போதான் நர்சரிலேயே மாட்டி விட்டுர்றாங்களே!

பா.ராஜாராம் said...

:-)))

நட்புடன் ஜமால் said...

இப்படியெல்லாம் பார்க்கவே தோன்றியதில்லை - பாவம் லைஸன்ஸு கட்டி விட்டு இருக்காங்கன்னு நினைச்சுக்குவேன் (எனக்கு கிடைக்காத பொறாமையோ)

நல்ல கொ.வ

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நகைச்சுவையான் கொசுவத்தி . :)

அருணா சொன்னமாதிரி இப்பல்லாம் நர்சரியிலே மாட்டிவிட்டறாங்க...

ஈரோடு கதிர் said...

:-))

அமுதா கிருஷ்ணா said...

கொசுவர்த்தி நல்லாயிருக்கு முல்லை..

சுரேகா.. said...

:)

நசரேயன் said...

// மீதி இருந்ததை ஸ்டெல்லா( ஜூனியர்) எடுத்துக்கிட்டா. அநேகமா எல்லா ஜூனியர்ஸ் கைக்கும் போயிருக்கும். ஒரு மாசத்துலே இன்னொரு பேட்ச் பிசினஸ் கார்டு அப்ளை பண்ணது நானாத்தான் இருப்பேன். HR -ஏ ஆடிப்போய்ட்டாங்க! பெரிம்மாஅதை எங்க ஸ்கூல்லே போய் என்னோட டீச்சர்ஸ்கிட்டே காட்டி என் அருமை பெருமையை ரெண்டு இன்ச் உயர்த்தினாங்க. அவங்க பையிலே எப்போவும் அவரசத்துக்கு உதவும் ரேஞ்சுலே ஒரு பதினைஞ்சு கார்டு இருக்கும்னா பார்த்துக்கோங்களேன்.//

என்ன ஒரு கொலைவெறி

நசரேயன் said...

//பைதிவே, நேத்து ஒரு கால். என்னோட பிசினஸ் கார்டை வாங்கின அதே ஸ்டெல்லா-கிட்டேருந்து.... 'ஹேய், முல்லை எனக்கு ஒரு வேலை வாங்கித்தாயேன்னு'! (இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது!!)//

விடுங்க.. அவங்க உங்க கடைப்பக்கம் எல்லாம் வந்தா இப்படி எல்லாம் கேட்க மாட்டாங்க

நசரேயன் said...

//நானும் ஐ ஃபார் ஐம்பது காசு, ஐ லவ் யூ, ஐஸ் ஐஸ்-ன்னு சிலபல க்ளிசரின் முயற்சியை வச்சிருந்தேன்//

க்ளிசரின் வாங்க காசு கொடுத்தாலும் நாங்க அழமுடியாது

நசரேயன் said...

//
சின்ன அம்மிணி said...
ஒரு ஐடி கார்ட்ல இவ்வளவு இருக்கா. எனக்கு இந்த ஐடி கார்டு கழுத்துல மாட்டற குடுப்பினை இல்லை :)//

அம்மணிக்கு ஒரு பெட்டி ஐடி கார்டு பார்சல் பண்ணுங்க

ஆயில்யன் said...

//சப்பாத்தியும் சிக்கன் க்ரேவியும் செஞ்சு வைச்சுக்கிட்டு பெரிம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க. ம்ம்ம்ம்....ஓக்கே என்ன சொல்ல வந்தேன்//

எங்க சொல்லவந்தீங்க? அதான் பாதியிலயே வுட்டுபுட்டு கிரேவிக்கு பாஞ்சுட்டீங்களே!

ஆயில்யன் said...

//ஒரு மாசத்துலே இன்னொரு பேட்ச் பிசினஸ் கார்டு அப்ளை பண்ணது நானாத்தான் இருப்பேன். HR -ஏ ஆடிப்போய்ட்டாங்க!//

டெரர் பாஸ்! ஐ லைக் இட்!

ஆயில்யன் said...

/பெரிம்மாஅதை எங்க ஸ்கூல்லே போய் என்னோட டீச்சர்ஸ்கிட்டே காட்டி என் அருமை பெருமையை ரெண்டு இன்ச் உயர்த்தினாங்க.//

இந்த பில்ட்-அப் வேலையெல்லாம் பெரிம்மாவோட பார்டா?

ஆயில்யன் said...

//ஐடி கார்டைவிட ஏடிஎம் கார்டுதான் முக்கியம்//

நோட் பண்ணுங்கப்பா!
நோட் பண்ணுங்கப்பா!!
பிச்சு உதறுறாங்கப்பா!!!

ஆயில்யன் said...

/ஐ ஃபார் ஐம்பது காசு, ஐ லவ் யூ, ஐஸ் ஐஸ்-ன்னு சிலபல க்ளிசரின் முயற்சியை வச்சிருந்தேன்//

அடி ஆத்தீய்ய்ய்ய் இனி உங்களோட வாசகர்களை அழவைச்சு பார்க்கறதுன்னு ஐடியா பண்ணியாச்சா ரைட்டு!

ஆயில்யன் said...

சரி போதும் வாங்க உங்க வாசகர்கள் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம் :)

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

ஒரு ஐடி கார்ட்ல இவ்வளவு இருக்கா. எனக்கு இந்த ஐடி கார்டு கழுத்துல மாட்டற குடுப்பினை இல்லை :)//

ம்ஹுக்கும் போடுற கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும்போது இப்பவும் நீங்க எதோ ஐ.டி கம்பெனியில பிசியா ஒர்க் பண்ற மாதிரிதானே இருக்கு ! :))

ஆயில்யன் said...

// ☀நான் ஆதவன்☀ said...

//(இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது!!)//

:))))))) பாஸ் பதிவு முழுக்க சிரிச்சுட்டே படிச்சேன். //

ஆதவன் படிச்சேன்னு சொன்னதை நான் 100% சத்தியமா நம்பிட்டேன் பாஸ்!

அகநாழிகை said...

ரசிக்கும்படியான பதிவு. நல்லா எழுதியிருக்கீங்க.

//தாலிக்கு தமிழ்சினிமாவிலே கொடுக்கற மரியாதைதான்..கண்ணுலே ஒத்திக்காத குறை//

:)

மாதேவி said...

ஐடி கார்ட் நகைச்சுவை :)

Deepa said...

தம்மாத்தூண்டு கார்டைப் பத்தி எய்த இம்மா மேட்டர் வெச்சிகீறியே?
கேடிம்மா நீ!
அல்லா‌மே சூப்ப‌ர்
:)

சின்ன அம்மிணி said...

//ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

ஒரு ஐடி கார்ட்ல இவ்வளவு இருக்கா. எனக்கு இந்த ஐடி கார்டு கழுத்துல மாட்டற குடுப்பினை இல்லை :)//

ம்ஹுக்கும் போடுற கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும்போது இப்பவும் நீங்க எதோ ஐ.டி கம்பெனியில பிசியா ஒர்க் பண்ற மாதிரிதானே இருக்கு //

ஆயிலு , ஊர்ல இருந்து வந்தாச்சா.

அம்பிகா said...

தாலிக்கு தமிழ்சினிமாவிலே கொடுக்கற மரியாதைதான்..கண்ணுலே ஒத்திக்காத குறை. //

:-)))

Padmaja said...

என் கொசுவர்த்தியும் சுத்த ஆரம்பிச்சுடுச்சு....
எங்க ஆபீஸ் நுங்கம்பாகதுல இருந்தது. பப்ளிக் டிரன்ச்போர்ட்..
என் பிரென்ட் ஐடி கார்டு எ பஸ் ல கூட கழட்ட மாட்டா ..
அப்போ தானே நாலு பேருக்கு தெரியும்... எவளோ கஷ்டப்பட்டு படிச்சு இந்த வேளைக்கு வந்தோம்... னு டயலாக் வேற..
இப்போ போடவே தோனல.. எப்பவும் உள்ள தான் இருக்கு.. அதுக்கு நான் வச்சிருக்க பேரு "நாய் பெல்ட்"..

ஆயில்யன் said...

// சின்ன அம்மிணி said...

//ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

ஒரு ஐடி கார்ட்ல இவ்வளவு இருக்கா. எனக்கு இந்த ஐடி கார்டு கழுத்துல மாட்டற குடுப்பினை இல்லை :)//

ம்ஹுக்கும் போடுற கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும்போது இப்பவும் நீங்க எதோ ஐ.டி கம்பெனியில பிசியா ஒர்க் பண்ற மாதிரிதானே இருக்கு //

ஆயிலு , ஊர்ல இருந்து வந்தாச்சா./

வந்துட்டேன் பாஸ் வந்துட்டேன் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நிறைய பஞ்ச் டயலாக்லாம் வெச்சு சிரிக்க சிரிக்க எழுதியிருக்கீங்க.

தீஷு said...

இப்போ ஸ்கூலயே ஐடி கார்டு போடனும் முல்லை.. நல்ல பதிவு