Friday, February 12, 2010

பப்பு டைம்ஸ்

பொதுவாக இதுவரை வீட்டில் சாமி கும்பிடுவதோ படைத்ததோ இல்லை. அம்மா வந்தால் அது நல்லநாளாக (!) இருந்தால் இலை போட்டு படைப்பார். பப்பு பார்க்க இலை போட்டு படைத்தது கடந்த பொங்கலின் போதுதான். எல்லாவற்றையும் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த பப்பு, இலையில் சாப்பாடு போட்டதும் சாமி நிஜமாகவே அலமாரியிலிருந்து வந்து சாப்பிடப் போகிறார் என்று நினைத்துக் கொண்டாள். படைத்து முடித்த பின்னும் நெடுநேரம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தாள். பப்புவின் அத்தை சாப்பிட அழைத்துக்கொண்டேயிருந்தார்.
‘நாம் போய் சாப்பிட்டு வந்துடலாம், அதுக்குள்ளே சாமியும் சாப்பிட்டிருக்கும்' என்ற அத்தையிடம், 'ஏன் சாமி நாம போனப்புறம் சாப்பிடும்' என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அத்தை அவளது கையை பிடித்து அழைத்த போது, அலமாரியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஒரு விரலை உயர்த்தியபடி சொல்லிச் சென்றாள்,

”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி”
புத்தகத்தை மிதித்து விட்ட பப்புவிடம் 'சாமி, தொட்டு கும்பிடு' என்றார் அம்மா.
'ஏன் ஏன்' என்று கேட்டுக்கொண்டிருந்த பப்புவிடம் அம்மா விளையாட்டுக்காக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார். பப்பு கேட்டாள்,

‘ஏன், சாமி பாவமா?'படம் பார்த்து வித்தியாசங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருந்தோம். இரண்டு படங்களிலும் இருந்த ஹெலிகாப்டரைப் பார்த்து சொன்னாள்,

இதுலே ஸ்பீடா சுத்துது...இதுலே ஸ்பீடா சுத்தல!
இதோட தமிழ் ட்ரான்ஸ்லேஷனை சொல்றீங்களா, ப்ளீஸ்?!

i smallgirl that time come one doras no...this time y not come?

33 comments:

அமைதிச்சாரல் said...

//i smallgirl that time come one doras no...this time y not come?//

பப்பு அளவுக்கெல்லாம் எங்களுக்கு இங்கிலிபீசு வராதுங்க. :-(

//ஏன், சாமி பாவமா?//

ச்சோ ஸ்வீட்!!.

நசரேயன் said...

///இதோட தமிழ் ட்ரான்ஸ்லேஷனை சொல்றீங்களா, ப்ளீஸ்?!

i smallgirl that time come one doras no...this time y not come?//

நானே இன்னும் இப்படி தானே இருக்கேன் பப்பு

அகஆழ் said...

ஒவ்வொன்றும் ரசிக்கும் படியாக இருக்கிறது.

//”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி” //
ஹ..ஹ..ஹா

சின்ன அம்மிணி said...

//”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி” //

சாமி ஜாக்கிரதை :)

சின்ன அம்மிணி said...

அப்ப வந்த டோர ஏன் இப்ப வரலைன்னு கேக்கறாளா பப்பு

செல்வநாயகி said...

//இதுலே ஸ்பீடா சுத்துது...இதுலே ஸ்பீடா சுத்தல//

:))

மாதவராஜ் said...

ஆஹா...
:-))))
குழந்தைகளின் பாதத்துளிகள் பட கடவுளும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இதுலே ஸ்பீடா சுத்துது...இதுலே ஸ்பீடா சுத்தல!//

புத்திசாலி.. :)

தமிழ் பிரியன் said...

என்னை மாதிரியே பப்பு இங்கிலீஸ் பேசுறாங்க... ;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:O))

ஏன் ஆச்சி.. அழகான கவிதைய மொழிபெயர்த்துக் கெடுக்கணுமா நாங்க? :O)

Deepa said...

//சாமி பாவமா?//

//”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி” //

:-)))))))

சமத்து பப்பு!

அமுதா said...

:-)

Uma said...

நரேனின் முதல் லாலிபாப் -
"இத துல்லா டினிஷ் பண்ண முத்யாது" (f இன்னும் வரவில்லை "f"an is referred to as "t"an)
"ஏண்டா?"
"கட்சீல குச்சி இக்குமே?"
!!!
After reading about pappu, I understand that he is just on the right track :)

பிரியமுடன்...வசந்த் said...

”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி” //

க்யூட் பப்பு...

//i smallgirl that time come one doras no...this time y not come?//

:))))

பின்னோக்கி said...

ஒவ்வொன்றும் கவிதைகள். கூடிய விரைவில், அவளும், நம் உலகத்திற்கு வந்து விடுவாள். கவிதைகள் அரிதாகிவிடும் அப்பொழுது.

தமிழ் மொழி பெயர்ப்புக்கு இன்னும் சில வருடங்கள் கழித்து, பப்புவிடமே கேட்டு விடலாம் :)

ஆயில்யன் said...

//”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி” /

அப்படின்னா ஆச்சியும் கூட பப்புவை இப்படித்தான் மிரட்டியிருக்காங்களா? அவ்வ்வ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

படம் பார்த்து வித்தியாசங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருந்தோம். இரண்டு படங்களிலும் இருந்த ஹெலிகாப்டரைப் பார்த்து சொன்னாள்,

இதுலே ஸ்பீடா சுத்துது...இதுலே ஸ்பீடா சுத்தல! //

ஆஹா! இந்த மாதிரி வேகமா இதுவரைக்கும் யாரும் வித்தியாசம் கண்டுபிடிச்சிருக்க மாட்டாங்க
small girl & sweet girl pappu.

‘ஏன், சாமி பாவமா?'

choo chweeeet

நட்புடன் ஜமால் said...

பப்பு டைம்ஸ் - வளரிங்ஸ் ...

அன்புடன் அருணா said...

கலக்குறா பப்பு!

ராமலக்ஷ்மி said...

//ஆயில்யன் said...

//”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி” /

அப்படின்னா ஆச்சியும் கூட பப்புவை இப்படித்தான் மிரட்டியிருக்காங்களா? அவ்வ்வ்//

அதே அதே:)!

//இதுலே ஸ்பீடா சுத்துது...இதுலே ஸ்பீடா சுத்தல! //

:))))!

முகிலன் said...

ச்சோ ஸ்வீட்ட்ட்ட்ட்....

நான் சின்னப் பொண்ணா இருக்கும்போது வந்த டோரா இப்போ ஏன் வர்றதில்லை?

ட்ரான்ஸ்லேஷன் சரியா ஆச்சி?

அம்பிகா said...

//”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி” //

:-)))))))

கலை said...

//”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி” //

:))))) பப்பு ரொம்பவே அழகாக சிந்திக்கிறா.

குழந்தைகளின் சிந்தனைகளே தனிதான். ஒரு தடவை மகள் இப்படி படைப்பதை பார்த்து விட்டு, @அவர்தான் சாப்பிடுறதே இல்லையே. எதுக்கு படைக்கிறாங்க" என்று கேட்டாள். சாப்பிடக் கூடியவர்கள் சாப்பிட எதுவுமில்லாமல் இருந்தாலும் கண்டுகொள்ளாதவர்கள்கூட, ஆண்டவனுக்குப் படைப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்னொரு குழந்தையின் கேள்வி சமய பாடத்தில் வந்த சந்தேகம் இது. அழுது கொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு உமாதேவியார்தானே பால் கொடுத்தாங்க. ஆனா அவங்களுக்கு தேவாரம் பாடாமல் சிவபெருமானுக்கு ஏன் பாடினார்.
அவர்கள் சிந்திக்குமளவுக்குக் கூட பெரியவர்கள் சிந்திக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் வளர வளர, அவர்களையும் அப்படியே மாற்றி விடுகிறோம்.

துபாய் ராஜா said...

:))

காமராஜ் said...

//கலக்குறா பப்பு!//

ஆமா ஆமா,.
0
இன்னும் அந்த ஆங்கிலத்துக்கு டிக்சனரி போடவில்லை.
அதுதான் அம்மாக்கள் இருக்கிறார்களே.

அழகு செல்லம் பப்பு.

கையேடு said...

//இதுலே ஸ்பீடா சுத்துது...இதுலே ஸ்பீடா சுத்தல//

கற்பனைக்கெட்டாத கற்பனை.. கலக்குறாங்க பப்பு..

//இல்லேன்னா அடி விழும் சாமி”//

சாமி பாவம்தான்.. :)

குடுகுடுப்பை said...

அதுக்குதான் சாமி எங்கியோ இருக்கார்னு சொல்லிரனும்.
இல்லாங்காட்டி வீட்டில ஒருத்தர் பேருல சாமி வரது மாதிரி பேரு வெச்சுக்கனும்.

முகில் நல்லா சாப்பிட்டா முகில்சாமி.
நீங்க நல்லா சாப்பிட்டா சாமியம்மாள்னு பேர மாத்தி வெச்சுக்கங்க, அர்த்தமுள்ள படையலா இருக்கும்.

பா.ராஜாராம் said...

பப்பு,

வளராமல் இரேன்.

:-)

☀நான் ஆதவன்☀ said...

ஹெலிகாப்டர் வேகமா சுத்துறதை நினைச்சு நினைச்சு சிரிச்சுட்டுருக்கேன் பாஸ்.. :)))))

மாதேவி said...

பப்புவிடம் தான் கத்துக்கணும். ரசித்தேன். பாராட்டுக்கள்.

க.பாலாசி said...

//”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி”//

இந்த மழலைச்சொல்லுக்கே சாமி ஃபுல்லா சாப்பிட்ருக்கணுமே...

ரௌத்ரன் said...

:))

தீஷு said...

//இதுலே ஸ்பீடா சுத்துது...இதுலே ஸ்பீடா சுத்தல//


இது ரொம்ப சூப்பர்..