Thursday, February 25, 2010

பப்பு டைம்ஸ்

(வீட்டுக்கருகில் இருந்த பஸ் ஸ்டாப் வரை சென்றபின் ஸ்கூட்டியில் திரும்பிக்கொண்டிருந்தோம்.)

ஆச்சி, என்னை இங்கேயே விட்டுடு, நானே நடந்து வீட்டுக்கு வந்துடுவேன், தனியா.

ரோட்-லாம் க்ராஸ் பண்ணனும். நீ பெரிய பொண்ணானதும் தனியா போலாம். இப்போ அம்மாக்கூடத்தான் போணும்.

நீ தூங்கும்போது நான் தனியா போலாமா?

சொல்லிட்டுதான் போணும். தூங்கிட்டு இருந்தாலும் எங்கே போறேன்னு சொல்லிட்டு போணும். செகண்ட் ஸ்டாண்டர்டு வந்தாதான் நீ தனியா போலாம். இப்போ அம்மாகூடதான் போணும்.

நீ தூங்கிட்டு இருக்கும்போது வடலூர் ஆயாக்கூட போலாமா?

ம்.வடலூர் ஆயாகூட போலாம். பெரியவங்க கூடல்லாம் போலாம்.

வடலூர் ஆயா மெதுவா நடப்பாங்களே. நீ தூங்கும்போது நானே கதவை திறந்துக்கிட்டு தனியா போலாமா?!

(வேணாம் பப்பு, வலிக்குது, அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்)

தனியா போனாலும் அம்மாக்கிட்டே சொல்லிட்டுதான் போணும். போய் கேட்டை தெறந்துவிடு. (நல்லவேளையா வீடு வந்துடுச்சு....)

பப்பு ஆயாவின் மருநது டப்பாவை தரமறுக்க நாலு திட்டு வாங்கிவிட்டு அழத் தொடங்கியிருந்தாள். “ஒரே அட்டகாசம், மருந்துலெல்லாம் விளையாடலாமா...#$#%#$ “ என்று நானும் பொறுப்பிஸ்ட் அவதாரம் எடுத்திருந்தேன். அழுகையை நிறுத்திவிட்டு சொன்னாள்,

அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?சில ?கள் :

ஏன் கல்யாணம் நடக்குது? ஏன் பாய்க்கும் கேர்லுக்கும் கல்யாணம் நடக்குது?

ஓல்ட் மெக்டோனால்டு ஃபார்ம்லே பாத்ரூம் இருக்குமா? (ரொம்ப முக்கியம்!!)

எனக்கு ஏன் றெக்கை இல்ல?

நம்ம உடம்புல எதை வெட்டினா வளரும்? (வீட்டுக்கருகில் இருந்த மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தார்கள். கிளைகள் திரும்ப வளரும் என்ற சொல்லப்போக, இந்த கேள்வி முளைத்தது!)

39 comments:

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

இண்ட்ரெஸ்ட்டிங்ஸ்

-------

சிறு வயதில் எங்கள் ஊரு போகையில் அண்ணன் மட்டும் முன்னமே இறங்கி நடந்து போய் விடுவார் தாத்தா விட்டுக்கு, நான் வாப்பா(தந்தை)வோடு தான் போகனும் குதிரை வண்டியில்

அந்த நினைவு வந்திடிச்சி.

ராமலக்ஷ்மி said...

//அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?//

இது:)!

//?கள்//

கண்ணைக் கட்டுதே...!

☀நான் ஆதவன்☀ said...

//(நல்லவேளையா வீடு வந்துடுச்சு....)//

அடடா வீடு வந்திருச்சே :(

ஈரோடு கதிர் said...

//அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?//

அழகு

சின்ன அம்மிணி said...

இதையெல்லாம் நிஜமாவே ஒரு புக்கா போடலாம் ஆச்சி :)

அமைதிச்சாரல் said...

//அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?//

அதானே :-))))

பல்பு கோடிசூரிய பிரகாசமாய் எரியுது ஆச்சி. :-))))

தமிழ் பிரியன் said...

வூட்ல பல்பு நிறைய ஸ்டாக் சேர்ந்து இருந்தா கொஞ்சம் அனுப்பி வைங்க..:-))

ஐந்திணை said...

HA-HA-HA

Deepa said...

//ஓல்ட் மெக்டோனால்டு ஃபார்ம்லே பாத்ரூம் இருக்குமா? (ரொம்ப முக்கியம்!!)//
:)))))

//வடலூர் ஆயா மெதுவா நடப்பாங்களே. நீ தூங்கும்போது நானே கதவை திறந்துக்கிட்டு தனியா போலாமா?!//
:))))
//ஏன் கல்யாணம் நடக்குது? ஏன் பாய்க்கும் கேர்லுக்கும் கல்யாணம் நடக்குது?//

"தெரியலியே பப்பு, தெரியல" (நாயகன் கமல் பாணியில்)

Deepa said...

//இதையெல்லாம் நிஜமாவே ஒரு புக்கா போடலாம் ஆச்சி :)//
Brilliant idea

க.பாலாசி said...

கேள்விகளை படிக்கும்போது எனக்கே அழுகை வருது.... அவ்வ்வ்வ்வ்வ்..........

ஆடுமாடு said...

ஆச்சி, இப்ப உள்ள பிள்ளைலுவோ, எடக்கு மடக்காத்தான் கேள்வி கேட்குவோ.

ஆனாலும் உங்க பேத்தி ச்சோ ஸ்வீட்!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

எல்லாத்துக்கும் பொதுவா :D

ஆயில்யன் said...

//ஆடுமாடு said...

ஆச்சி, இப்ப உள்ள பிள்ளைலுவோ, எடக்கு மடக்காத்தான் கேள்வி கேட்குவோ.

ஆனாலும் உங்க பேத்தி ச்சோ ஸ்வீட்!//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :))

Deepa said...

//ஆடுமாடு said...
ஆச்சி, இப்ப உள்ள பிள்ளைலுவோ, எடக்கு மடக்காத்தான் கேள்வி கேட்குவோ.

ஆனாலும் உங்க பேத்தி ச்சோ ஸ்வீட்!
//

பேத்தியா???
முல்லை! சொல்லவே இல்ல?
:)))))

சந்தனமுல்லை said...

பின்னூட்டமிட்ட ஜமால், ராமலஷ்மி, கதிர், நான் ஆதவன் பாஸ், சின்ன அம்மிணி, அமைதிச்சாரல், தமிழிப்பிரியன், ஐந்திணை, தீபா, பாலாசி, ஆடுமாடு, மழை ஷ்ரேயா, ஆயில்ஸ் அனைவருக்கும் நன்றி!

ஆடுமாடு சார், ஏதாவது பிரச்சினைன்னா பேசி தீர்த்துக்கலாம்...பாருங்க..இந்த பயபுள்ளைக எப்படி சிரிக்குதுங்கன்னு!! அவ்வ்....! 'ஆச்சி'ன்றது வீட்டுலே கூப்பிடர பெயர். சிதம்பரம்,பண்ருட்டி, கடலூர் வட்டாரங்களில் சின்ன பெண்ணை 'ஆச்சி'ன்னு சொல்றது வழக்கம்! அந்த ஆச்சி நானு......:-))

க.இராமசாமி said...

cute thingings by papu.

கோமதி அரசு said...

’பப்புவின் கேள்விகள் ஆயிரம்” என்று புக் போடலாம் முல்லை.

Dr.Rudhran said...

//இதையெல்லாம் நிஜமாவே ஒரு புக்கா போடலாம் ஆச்சி :)//
Brilliant idea//

i agree, and await.

அம்பிகா said...

\\சிதம்பரம்,பண்ருட்டி, கடலூர் வட்டாரங்களில் சின்ன பெண்ணை 'ஆச்சி'ன்னு சொல்றது வழக்கம்! அந்த ஆச்சி நானு......:-))\\
இது ரொம்ப நல்லாயிருக்கு முல்லை.

அன்புடன் அருணா said...

இவ்வ்ளோ சீக்கிரமாஆஆஆஆஅவாஆஆஆ வீடு வந்துருச்சி??????

ஆடுமாடு said...

ஸாரி, மேடம், விவரம் தெரியாம எழுதிட்டேன்.

மீண்டுமொரு ஸாரி.

இய‌ற்கை said...

//அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?//

athane? theriyathu???

அமுதா said...

:-)

நாணல் said...

:) பப்பு பப்பு தான்....

செல்வநாயகி said...

///ஆனாலும் உங்க பேத்தி ச்சோ ஸ்வீட்!///

:)) true:))

நசரேயன் said...

//
ஆடுமாடு said...
ஆச்சி, இப்ப உள்ள பிள்ளைலுவோ, எடக்கு மடக்காத்தான் கேள்வி கேட்குவோ.

ஆனாலும் உங்க பேத்தி ச்சோ ஸ்வீட்!
//

இடுகையை விட .. இந்த பின்னூட்டம் கலக்கல்

//'ஆச்சி'ன்றது வீட்டுலே கூப்பிடர பெயர். சிதம்பரம்,பண்ருட்டி, கடலூர் வட்டாரங்களில் சின்ன பெண்ணை 'ஆச்சி'ன்னு சொல்றது வழக்கம்! அந்த ஆச்சி நானு......:-))
//

சின்ன பெண்ணை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சின்ன அம்மிணி said...

//ஆடுமாடு said...

ஆச்சி, இப்ப உள்ள பிள்ளைலுவோ, எடக்கு மடக்காத்தான் கேள்வி கேட்குவோ.

ஆனாலும் உங்க பேத்தி ச்சோ ஸ்வீட்!
//

இதைவிட ரிப்பீட்டு சொன்ன ஆயிலை என்ன பண்ணலாம் :) பஸ்ல கவனிச்சுக்கலாமா :)

பா.ராஜாராம் said...

பப்பூஸ்..

தீபாஸ்..

ஆடு மாடூஸ்..

:-))))

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... ரொம்ப நாளைக்கப்புறம் பப்பு டைம்ஸ் வாசிக்குறேன். அழகு, வழக்கம் போல்.

சந்தனமுல்லை said...

பின்னூட்டமிட்ட க.ராமசாமி, கோமதி அரசு, டாக்டர் ருத்ரன், அம்பிகா அக்கா, அருணா, இயற்கை, அமுதா, நாணல், செல்வநாயகி,நசரேயன், சின்ன அம்மிணி, பாராஸ், விக்னேஷ்வரி அனைவருக்கும் நன்றிகள்.

ஆடுமாடு சார், சாரியெல்லாம் எதுக்கு...நான் அந்த ஆச்சியில்லன்னு தெரிஞ்சுக்கிட்டா போதும்..:-) அப்புறம், மேடம்-ல்லாம் வேணாம், முல்லைன்னே சொல்லுங்க இல்லன்னா ஆச்சின்னு கூட சொல்லலாம்...:-))


நசரேயன்...நறநற...:-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

☀நான் ஆதவன்☀ said...
//(நல்லவேளையா வீடு வந்துடுச்சு....)//

அடடா வீடு வந்திருச்சே :( //

அதானே வீடு வந்திருச்சே, வரலைனா இன்னும் எப்படி சமாளிபிகேஷன் நடந்திருக்கும்னு கத்துக்கிட்டு இருக்கலாம் :)

கலை said...

//அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?//

அதானே? இது கூட இந்த அம்மாக்களுக்கு தெரியுதில்லைப்பா :).

//
ஏன் கல்யாணம் நடக்குது? ஏன் பாய்க்கும் கேர்லுக்கும் கல்யாணம் நடக்குது?//

பொறுத்திருங்க. இன்னும் நிறைய கேள்வியெல்லாம் வர இருக்கு. பதில் எப்படி கொடுக்கிறதுன்னு தெரியாத கேள்விக் கணைகளால் நான் இங்க திண்டாடிக்கிட்டு முழிச்சிட்டிருக்கேன். நான் பெறும் இன்பம் பெறுக இவ்வையகம். :)

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால இப்படி . இரண்டு ஆண்டுகளுக்கு முதல் இருந்த நிலமை இது . இப்ப எல்லாமே நேரடிக் கேள்விகள்தான். தாங்க முடியலை சாமி. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆடுமாடு said...
ஆச்சி, இப்ப உள்ள பிள்ளைலுவோ, எடக்கு மடக்காத்தான் கேள்வி கேட்குவோ.

ஆனாலும் உங்க பேத்தி ச்சோ ஸ்வீட்! //

அட ராமா, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தமிழன்-கறுப்பி... said...

:))

மாதேவி said...

"சில ?கள் :
புத்திசாலிப் பப்பு.
பயப்படாதீர்கள் பதிலையும் விரைவில் அவளே கூறிவிடுவாள்.

கானா பிரபா said...

சூப்பர்

தீஷு said...

அழகு முல்லை..

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

கொஞ்ச நாட்களாகவே பப்பு டைம்ஸ் படிக்கும் போதே எனக்கு (எதிர் காலத்தை நினைச்சா..)கண்ணை கட்டிகிட்டு வருது... :((