Thursday, February 18, 2010

ஜூரம் வந்த குட்டீசை கவனித்துக் கொள்ள 101 வழிகள்

மூக்கு ஒழுக ஆரம்பிக்கும்போது கண்டுக்கொள்ளக் கூடாது.

அடுத்தநாள், தூதுவளை கொடுத்துவிட்டு 'சரியா போய்டும்' என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.

சளியிலிருந்து க்ரோசின் கொடுக்க வேண்டிய அளவு உடல் சூடாகும். இரண்டு முறை க்ரோசின் கொடுக்க வேண்டும் - நான்கு மணிநேர இடைவெளிகளில்!

'தண்ணியிலே ஏன் விளையாட விடறே..." என்றும்
'மிட்டாய், க்ரீம் பிஸ்கெட் வாங்கி கொடுக்காம இருக்கறது' என்றும் சண்டையிட வேண்டும்.

'கை கழுவாம எதையும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா' என்றும்
'ஸ்கூல்ல உன் பாட்டில்ல இருக்கற தண்ணியைதான் குடிக்கணும், சரியா' என்று மிரட்ட வேண்டும்.

'சாயங்காலமானா கதவை சாத்த வேண்டியதுதானே' என்று மாறி மாறி (கொசுவாக) கடித்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட சண்டை அனைத்தும் ஹாஸ்பிடலில் டாக்டருக்கு காத்திருக்கும்போது நிகழ்த்த வேண்டும்.

அரை-அரை நாளாக விடுப்பு எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேல் லீவு எடுக்க முடியாத நிலை வரும்போது - பொறுப்பான, சுயமரியாதை உள்ள, தன்னம்பிக்கையான, நார்மல் மனநிலை கொண்டவர் எப்படி நடந்துக் கொள்வாரோ அப்படி நடந்துக் கொள்ள வேண்டும்!

"பெரிம்மா, எப்போ வர்றீங்க? நாலு நாளா பப்புவுக்கு உடம்பு சரியில்லை,ஜூரம்"

"அம்மா, எப்போ வர்றீங்க?நாலு நாளா பப்புவுக்கு உடம்பு சரியில்லை,ஜூரம்"

- என்று போனுக்கு மறுமுனையில் இருப்பவர்களை கிறுகிறுக்க வைக்க வேண்டும்.

அப்புறம், அவர்கள் அடுத்த பஸ்ஸை பிடித்து வந்திறங்கியதும், அலுவலகம் வந்து ப்லாக் அடிக்க வேண்டும்.

27 comments:

சென்ஷி said...

//அவர்கள் அடுத்த பஸ்ஸை பிடித்து வந்திறங்கியதும், அலுவலகம் வந்து ப்லாக் அடிக்க வேண்டும்.//

என்னக் கொடுமை சார் இது.. ஆயிலு இதுக்கும் எதிர்வினை டைப் அடிக்க ஆரம்பிச்சிடுவாரே :)

மயில் said...

:) சரியா சொன்னீங்க பாஸ் :))

nanrasitha said...

செரி ஜூரத்தை தடுக்க 101 வழிகள் எங்கே ?

நசரேயன் said...

//அப்புறம், அவர்கள் அடுத்த பஸ்ஸை பிடித்து வந்திறங்கியதும், அலுவலகம் வந்து ப்லாக் அடிக்க வேண்டும்.//

ஒண்ணு இந்தா இருக்கு.. இன்னும் நூறு எங்கே?

க.பாலாசி said...

//அலுவலகம் வந்து ப்லாக் அடிக்க வேண்டும்.//

இதுதான் மிகமுக்கியம்...:-))

Deepa said...

ஒழுங்கா ப‌ப்புவைக் க‌வ‌னிக்காத‌தும் இல்லாம‌ ப‌ண்ண‌ அநியாய‌த்தை எல்லாம் பெருமையா வேற‌‌ ப்லாக் அடிச்சிருக்கியே உன்னை என்ன‌ ப‌ண்ற‌து??!

துபாய் ராஜா said...

//அப்புறம், அவர்கள் அடுத்த பஸ்ஸை பிடித்து வந்திறங்கியதும், அலுவலகம் வந்து ப்லாக் அடிக்க வேண்டும்.//

சண்டை(கள்) போட்ட டென்ஷனை இப்படிதானே குறைக்கமுடியும்... :))

பா.ராஜாராம் said...

ஹா.ஹா..

☀நான் ஆதவன்☀ said...

:))))

ஜூரம் வந்த குட்டீசை கவனித்துக் கொள்ள 101 வழிகள்ன்னு ஒரு பதிவும் போட வேணும் :)

முகிலன் said...

சீரியஸா எழுதியிருக்கீங்களோன்னு உள்ள வந்தா இப்பிடியா??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

போன வாரம் இவ்வளவும் நடந்திருக்கா.. :)

gulf-tamilan said...

:)))

தமிழ் பிரியன் said...

;-)))

அம்பிகா said...

ரொம்ப லேட்டா சொல்லி தர்றீங்களே!
குட்டீஸ் வளர்ந்துட்டாங்களே!

//நசரேயன் said...
//அப்புறம், அவர்கள் அடுத்த பஸ்ஸை பிடித்து வந்திறங்கியதும், அலுவலகம் வந்து ப்லாக் அடிக்க வேண்டும்.//

ஒண்ணு இந்தா இருக்கு.. இன்னும் நூறு எங்கே?//
ஆமாம். நூறு எங்கே?

ஆயில்யன் said...

// Deepa said...

ஒழுங்கா ப‌ப்புவைக் க‌வ‌னிக்காத‌தும் இல்லாம‌ ப‌ண்ண‌ அநியாய‌த்தை எல்லாம் பெருமையா வேற‌‌ ப்லாக் அடிச்சிருக்கியே உன்னை என்ன‌ ப‌ண்ற‌து??!///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

நல்ல கேளுங்க பாஸ்! :)

ராமலக்ஷ்மி said...

:))!

The Analyst said...

:)

பிரியமுடன்...வசந்த் said...

:)))))

பப்பு பாவம்...

கமலேஷ் said...

ஹா.ஹா..

சகாதேவன் said...

இதை எல்லாம் என் அம்மாவுக்கு சொல்ல அந்த நாளில் யாருமில்லை.
எனக்கு ஜுரம் என்றால், வாசுதேவநல்லூர் வைத்தியர் தந்த செந்தூரம் தேனில் குழைத்து தருவாள். க்ரோசின் எல்லாம் அப்ப உண்டா என்று தெரியாது. வெந்நீரில் ஹார்லிக்ஸ் கலந்து தருவாள். மறுநாள் காலை ஸ்கூலுக்கு போய்விடுவேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))

நட்புடன் ஜமால் said...

ஆஹா! கடைசீல சொன்னீங்க பாருங்க

ஹா ஹா ஹா ...

அமுதா said...

:-))

அமுதா said...

:-))

சின்ன அம்மிணி said...

ஆயா வந்தாங்களா இல்லை பெரியம்மா வந்தாங்களா பப்புவை பாத்துக்க

சந்தனமுல்லை said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள், மீதி நூறு எங்கேன்னு கேட்டிருக்கீங்க...நாங்க ஒரு வழி சொன்னாலே நூறு வழிகள் சொன்னமாதிரி..ஹிஹி! :-)

தீஷு said...

:-)))