ஊருக்கு உபதேசம்??
பப்பு வீட்டிற்கு வெளியில் நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு நாய் சிறுநீர் கழிப்பதை பார்த்து விட்டு, கத்தினாள்
"பாத்ரூமுக்கு போ..பாத்ரூம்ல போய் உச்சா போ"
*************************************************
பப்புதான் அம்மா !!
பப்புவின் தற்போதைய அபிமான விளையாட்டு இது!
ஆபீஸ் செல்வது, அதுவும் ஒரு துண்டினை அணிந்துக் கொண்டு. (அதன் பெயர் "தொப்பட்டா", அவளது மொழியில்) என்னிடம், "நான் ஆபீஸ் போறேன், அழாம வீட்டில அத்தை கூட இரு! " என்று சொல்லிவிட்டு இரண்டு அடிகள் செல்வது. பின், என்னிடம், "பப்பு வேணும்னு அழு!!" என்பது. நான் அழுவது போல், பாவனை காட்டியதும், "சாயங்காலம் வந்துடுவேன்,
அழாம இரு!!" என்று சொல்லிவிட்டு, திரும்பி வருவது!!
"ஆபீஸ்ல் போய் என்ன பண்றே"
"தூங்கறேன்!" - character assassination !?!
*************************************************
பப்புவை ஆட வைக்கும் இசை, கடந்த சில வாரங்களாக :
15 comments:
:) அட.. ஒவ்வொன்னுக்கும் கமெண்ட் சூப்பர்..
எங்க வீட்டுல எல்லாரையும் ஆட்டுது இந்த பாட்டு..
கலக்கல் பாட்டு, நானும் இந்தப் பாட்டு உள்ள டிவிடி தொகுப்பு வாங்கினேன், எனக்கு தான் ;-)
நான் மடகஸ்கார்,பைண்டின் நீமோ, லயன் கிங் வகையறா எல்லாம் பார்ப்பேனாக்கும்.
/
பப்புதான் அம்மா !!
பப்புவின் தற்போதைய அபிமான விளையாட்டு இது!
ஆபீஸ் செல்வது, அதுவும் ஒரு துண்டினை அணிந்துக் கொண்டு. (அதன் பெயர் "தொப்பட்டா", அவளது மொழியில்) என்னிடம், "நான் ஆபீஸ் போறேன், அழாம வீட்டில அத்தை கூட இரு! " என்று சொல்லிவிட்டு இரண்டு அடிகள் செல்வது. பின், என்னிடம், "பப்பு வேணும்னு அழு!!" என்பது. நான் அழுவது போல், பாவனை காட்டியதும், "சாயங்காலம் வந்துடுவேன்,
அழாம இரு!!" என்று சொல்லிவிட்டு, திரும்பி வருவது!!
"ஆபீஸ்ல் போய் என்ன பண்றே"
"தூங்கறேன்!"
/
ஆமா நீங்க ஆபீஸ்ல செய்யறது பப்புவுக்கு எப்படி தெரிஞ்சது!?!?!?
:)))))))))
பப்பு பெரிய் ஆள் தான் ஒத்துக்கிறேன் ;)
Pappu baby, you have got wonderful taste.
ask ammaa to get you the BEE movie.:)
Santhanamullai, pl excuse my English.
No tamizh fonts yet.
:-)))))))) awesome video .. என்ன பாட்டுங்க இது ?
பப்பு,
உன்னொட அம்மா விளையாட்டு நல்லா இருக்கு - அம்மா ஆபீஸ்லே போய் தூங்கறாங்களா ? உனக்கும் தெரிஞ்சிடுச்சா - ம்ம்ம்ம்ம்
ஆஹா கலக்கல் பப்பு....
(எஙக் பாப்புக்கு அந்த மழலை மாறி...
இப்பல்லாம், தொப்பட்டா எடுத்து சேலை கட்டிப்பார்க்க ஆரம்பிச்சாச்சு (8 வயது:)
ரொம்ப டச்சிங்!, வாழ்க்கையின் உன்னதமான தருணங்கள்!
//"ஆபீஸ்ல் போய் என்ன பண்றே"
"தூங்கறேன்!" - character assassination !?!
//
:)
பப்பு கலக்குறா...:)
\\\\
"ஆபீஸ்ல் போய் என்ன பண்றே"
"தூங்கறேன்!"
/
ஆமா நீங்க ஆபீஸ்ல செய்யறது பப்புவுக்கு எப்படி தெரிஞ்சது!?!?!?
:)))))))))
\\\\
அதானே...!
ரிப்பீட்டு...:)
Excellent video......who is the music director? wat cartoon is that?
பப்பு சிம்பிளா உங்கள குளோஸ் பண்ணிட்டாள்
வரான் வரான் பூச்சாண்டி பாட்டு குழந்தைகளின் ஆல் டைம் விருப்பமாகிக் கொண்டு வருகிறது!
lovely character assassination !
Post a Comment