பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கடந்த வாரத்தில் நிகழ்ந்தது - முதன்முறை ஒரு பெற்றோராக!!
வித்தியாசமாக இருந்தது. மாண்டிசோரி சாதனங்கள் பார்வைக்கு இருந்தன.
டீச்சர்களை ஆன்ட்டி என்றே அழைக்க வேண்டும்....குழந்தைகள் மட்டுமல்ல..நாமும்தான்!
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பப்புவிற்கு ஒரு நண்பி கிடைத்திருக்கிறாள்...பெயர் வெண்மதி!!
ஒரே வெண்மதி புராணம்தான்.. "வெண்மதி என்னா பண்ணுச்சி? etc etc!!"
ஆனால், பப்பு இமிடேட் செய்வது அவளது பள்ளி ஆயாவைதான்!!
"மூச்" என்று வாய் மேல் விரல் வைத்து காட்டிகிறாள்..ம்ம்..we have no
control over it!!
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
கோல்டிலாக்ஸ் - பப்புவின் புதிய ஒரு கதை இந்த வாரத்தில் - !!
ஹாஸ்டலுக்கு எனக்கு ஸ்வீட்ஸ்/ஸ்னாக்ஸ் குரியரில் அனுப்பும் என் பெரிம்மா இப்போது
பப்புவிற்கு பார்சல் அனுப்பியிருக்கிறார்கள் - புதுத் துணிகள்! என் பொறாமை எங்கே இப்போது..ம்ம்ம்ம்??
1 comment:
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
Post a Comment