மூன்றாம்/நான்காம் வகுப்பு படிக்கும் போதும்,அதற்கு பின்னும் கூட இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறோம்.இது சிறுமிகளின் பிரத்யேக விளையாட்டு!! இருவர் எதிரெதிரில் அமர்ந்துக் கொண்டு பாடலுக்கேற்ப கைகளை தட்டவேண்டும்.
சிலசமயம் இருமுறை, மேலும் கீழும், கிராஸாக...ஆனாலும் வேகமாக! இதற்கு, இருவரும் sync-லிருப்பது அவசியம்!! நிறைய பாடல்களுண்டு!!
இப்போதெல்லாம், இதை சிறுமிகள் விளையாடுகிறார்களா அல்லது,
தொல்பொருள் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டதா எனத் தெரியவில்லை!!
ஆனால், 80/90 களில் வளர்ந்தவர்கள் இதை விளையாடாமலிருந்திருக்க முடியாது!!
eena meena macaracca, rare i dominacca,
yucapacca,
cheekapacca,
rom pom push
இன்னும் பெரிய பாடல்கள் இருக்கின்றன!! அதில், "லாலிபாப் ஐஸ்கிரிம் ஆன் த டாப்" என்று வரும்!! யாருக்காவது ஞாபகமிருந்தால், பகிர்ந்துக் கொள்ளலாம்!!
அர்த்தமில்லதா வார்த்தைகள்தான்..ஆனால் பாடிக்கொண்டே கிளாப் செய்து முடித்திருக்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியும், சிரிப்புமாய்...ஸ்கூல் டேஸ்னா ஸ்கூல் டேஸ்தான்!!
4 comments:
நாங்க இதை கொஞ்சம் மாத்தி பாடுவோம்.
ஈனா,மீனா ஐக்கசா
டிப் டோ நக்கபா
நக்க புக்க இக்க சே
டிப் டோ அஒஉட்
ஸ்டேஷன் மாஸ்டர், ஸ்டேஷன் மாஸ்டர் கித்னா பஜே
ஹாப் பாஸ் டிரைன், பாம்பே சக்கர டிரைன்
an old man came
and asked my name
சிக்கா லிக்கா சிக்கா லிக்கா, is my name
நான் இப்போ கூட என் கணவர இத கத்துக்கிட்டு விளையாட சொல்லி அமர்க்களம் பண்ணேன். ம்ஹூம் அவருக்கு விவரம் பத்தலைங்க.
//நான் இப்போ கூட என் கணவர இத கத்துக்கிட்டு விளையாட சொல்லி அமர்க்களம் பண்ணேன்//
:)))))))
ice cream soda ,sugar on the top,tell me he name of ice cream shop- abcdefghijklmnopqrsuvwxy and z this is the name of ice cream shop.
என் பொன்ணு நிறைய பாட்டு வச்சிருக்கா பாடி பதிவிட சொல்றேன்..
Post a Comment