நேற்று இரவு, படுக்கையில் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருந்தாள், பப்பு. அவளது
பள்ளியில் பழங்கள் தினம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை பழங்கள் கொண்டு வந்து
அவர்களே தோல்நீக்கி, வெட்டி, விதைகள் நீக்கி கலவை செய்யவேண்டும். நடந்த
கலாட்டாக்களை சொல்லிக்கொண்டிருந்தவள், அவளது வகுப்பு தோழர்களுக்கிடையிலான
பாலிடிக்சையும் சொல்ல ஆரம்பித்தாள். அது வழக்கமான ஒன்றுதான். கேட்டு கேட்டு
எனக்கே அத்துபடி. ஆனால்,யார் எப்போது கட்சி மாறுவார்கள் என்று அவர்களுக்கே
தெரியாததுதான் அதன் சுவாரசியம்.அப்படி, எல்லோரும் ஒரு குழுவாகி ஒரே பையனை
மட்டும் டார்கெட்டாக்கியதை சொல்லிக்கொண்டிருந்தாள். இதற்கெல்லாம்,
பப்புவும் விதிவிலக்கல்ல என்றாலும் மற்றவர்கள் தவறு செய்யும் போது நாம்
புனிதர்கள் ஆகி தத்துவங்கள் உதிர்ப்பதில் குறைந்தவர்களல்லவே! ;-) அப்படி,
பப்பு உதிர்த்த தத்துவம்
"we can even live without brother or sister. But, can we live without friends?""
:-)
என் கால்களை பிடித்து ஆடிக்கொண்டிருந்தபோது, பப்பு சிந்தித்தது
"ஆச்சி, நம்ம காலை முன்னாடி மடக்க முடியாது, கையை பின்னாடி மடக்கமுடியாது....இல்ல ஆச்சி? "
#வில்லேஜ்_விஞ்ஞானி ;-)
"ஆச்சி......நான் முஸ்லீம்ப்பா!"
Saturday, March 29, 2014
பப்புவும் பொன்மொழிகளும்
பப்பு, எப்போது தத்துவங்களையும்,
பொன்மொழிகளையும் வீசுவாள் என்று கணிக்கவே முடியாது. 'கடையில பொருள்
வாங்கிவிட்டு எப்போவும் பில் வாங்கணும்' என்று சொல்லியிருப்பேன்.
என்றைக்காவது காசை கொடுத்துவிட்டு பேச்சு சுவாரசியத்தில் திரும்புகையில்
"இந்தாங்க பில்" என்பார் கடைக்காரர். அதை சுட்டி காண்பித்த, அடுத்த
நொடிகளில் ஒரு பொன்மொழி தயாராக இருக்கும். 'நாம செஞ்சுட்டுதான்
அடுத்தவவங்களுக்கு சொல்லணும்" என்பதாக!
"மேக் ஹே வென் த சன் ஷைன்ஸ் என்றால், நிறைய பேர், 'சன் வந்ததும் "ஹேய்"ன்னு கத்துறதுன்னு' நினைச்சுக்கிறாங்க. ஆனா அது இல்ல. சன் வரும்போது, நாம பயிரிட்டு ஹே செய்யணும்" என்றெல்லாம் பொன்மொழிகளும் விளக்கங்களும் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும்.
எனக்கோ, இந்த பொன்மொழிகள் எல்லாம் எதிர்பாராத நேரங்களில் வீசப்படும் பந்து போல...சிலது நேராக நம் கைக்கு வந்துவிடும். பலது, மூக்கை பதம் பார்த்துவிட்டு போகும். இன்று அப்படியான ஒரு நாள். ஒன்றை சரியாக கேட்ச் பிடித்தாலும், இன்னொன்றுக்கு எனது மூக்கை கொடுத்தேன்.
பள்ளிக்கூடத்துக்கு கிளம்பியாகிவிட்டது. ஆனாலும், ஊரிலிருந்து வந்திருந்த மாமாவுடன் ஒரே கதை. பப்புவின் பள்ளியில் டீச்சர்களை "ஆன்ட்டி" என்று அழைக்கும் முறை பற்றி மாமாவும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். கதவை திறந்து வெளியே வருவதும்ம, பின்னர் திரும்பி உள்ளே சென்று மாமாவை கிண்டல் செய்வதுமாக இரண்டுமூன்று முறை நடந்துவிட்டது. இந்தமுறை, வெளியே வந்தவள், என்னை நிமிர்ந்து பார்த்து, சொன்னாள்.
"Parents are the first teachers; teachers are the second parents."
"நீ வந்தா வா , இல்லேன்னா போ, நான் ஸ்கூலுக்கு போறேன்"(!) என்று வண்டியை துடைக்கலானேன். பேசி முடித்து, வண்டியில் வந்து ஏறிக்கொண்டவள், கேட்டாள்,
"ஆச்சி, படிப்பு முக்கியமா, உயிர் முக்கியமா?"
நேரமாகிவிட்ட அவசரத்தில், எதை தேர்ந்தெடுத்து சொல்வது என்று தெரியாமல், பொதுவாக "ரெண்டுமே தான்" என்று சொல்லிவிட்டு, "நம்ம கண்ணு மாதிரி" என்றேன். நல்லவேளையாக தப்பித்தேன் என்று என்னை நானே மனதுள் மெச்சிக்கொள்ளவும் செய்தேன். ஆனால், இதற்குமுன் இப்படி ஒரு பொன்மொழியை கேள்விபட்டதும் இல்லை!
"கரெக்ட்" என்று பாராட்டும் கிடைத்தது. அடுத்ததாக, "எப்படிப்பா உனக்கு தெரியும்?", என்று ஒரு கேள்வியை வீசினாள், ஏதோ பொன்மொழிகளுக்கெல்லாம் தானே காப்புரிமை வைத்திருப்பதுபோல்.
"அதுக்குதான் எதையும் சொல்றதுக்கு முன்னாடி யோசிக்கணும்", என்று நானும் எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். ;)
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை...
"உயிர் இருந்தாதானே படிக்க முடியும்? இல்லேன்னா எப்படி படிக்க முடியும்? ஆனா, படிச்சாதானே வாழ முடியும்? இல்லேன்னா எப்படி வாழ முடியும்?" என்று விளக்கம் கொடுத்தவள், சற்று நேர அமைதிக்குப்பின்,
"நாலெட்ஜ் முக்கியமா? உயிர் முக்கியமா? என்று அடுத்த ஆயுதத்தை வீசினாள். திரும்பவுமா....இந்தமுறை நீயே ஜெயிச்சுக்கோ என்பது போல, "தெரியலையே" என்றேன்.
கையில் காசு;வாயில் தோசை என்பதுபோல், கை மேல் விளக்கம்.... 'தெரியாது' என்றதும் உற்சாகக்குரலில் விளக்கம், "போத் ஆர் லைக் டூ ஐஸ். உயிரோட இருந்தாதானே நாலெட்ஜை ப்ராக்டிஸ் பண்ண முடியும். நாலெட்ஜ் இருந்தாதானே உயிரோட வாழ முடியும்"
:)

மன்னிப்பும் கூடவே ஒரு ஞானமும்
வெளியில் கிளம்ப வேண்டும்.
நேரமாகியும், அதைப்பற்றிய அக்கறை கொஞ்சமும் இன்றி விளையாடிக்கொண்டும்,
பேசிக்கொண்டும் இருந்தாள். "முகம் கை கால் கழுவு" "பையை எடுத்து வை"
"பாட்டில்லே தண்ணி எடுத்து வை" ம்ஹூம்! காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
அட்வைஸ் கலந்த திட்டுகளோடு சில பல மிரட்டல் கலந்த அடிகளோடு ஒருவழியாக
கிளம்பியாயிற்று.
எவ்வளவு நேரம்தான் உர்ரென்று இருப்பது. அவளுக்கு பேச வேண்டும். ஏதோ சொன்னாள். எனக்கு சரியாக கேட்கவில்லை. "என்ன சொன்னே" என்று திரும்ப கேட்டேன். "நீயே யோசிச்சு பாரு. நீ செஞ்சதுலே என்ன தப்பு இருக்குன்னு" என்றாள். அவ்வ்வ்வ்...'எங்கேயோ கேட்ட குரல் மாதிரி என் டயலாக் எனக்கேவான்னு' நினைத்தபடி "என்ன" என்றேன். அப்புறம்தான் புரிந்தது, அவள் முதலில் முணுமுணுத்தது, "சாரி கேக்கணும்னு தெரியாதா" என்பது. 'சாரி' என்றேன். நொடிகளில் சகஜமாகி கதையளக்க ஆரம்பித்துவிட்டாள்.
வீட்டுக்கு திரும்பி வரும்வழியில்தான் எனக்கு இந்த சந்தேகம் தலைதூக்கியது. பப்பு என்னைப் பற்றி நினைக்கும்போது அவளது மனதில் உடனடியாக நினைவுக்கு வரும் என்னைப்பற்றிய பிம்பது எது?கோபமான ஆச்சியா அல்லது ஃப்ரெண்ட்லியான ஆச்சியா? அவளிடமே அதை கேட்க முடிவு செய்தேன்.
"என்னை பத்தி நினைச்சா உனக்கு என்ன தோணும்?"
...... பதிலில்லை.
"நீ என்னை பத்தி திங்க் பண்ணுவே இல்ல...அப்ப உனக்கு எப்படி ஞாபகத்துக்கு வருவேன்?"
"நீ கோவ மூட்ல இருந்தா இது என்ன லூசு அம்மா? நினைச்சுப்பேன்.நீ ஜாலியா எனக்கு ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா சொல்லிக்கொடுக்கும்போது, "நல்லவேளை.... இது எனக்கு அம்மாவா வந்துச்சு...ப்பா..நான் இதுகூட வாழ்ந்துக்கறேன்ன்னு நினைப்பேன்."

பப்பு டைம்ஸ்
"ஆச்சி, உனக்கு தெரியுமா ? அ தி மு கா"
"அப்படின்னா என்னப்பா...எனக்கு தெரியாதே?!"
"தி மு கா மாதிரி அ தி மு கா...ஜெயலலிதா கட்சி...நேத்து வீட்டுக்கு வந்துச்சு"
"வீட்டுக்கு வந்துச்சா?எப்போ? எனக்கு தெரியாதூ!!"
"வீட்டுக்குன்னா வீட்டுக்கு இல்ல...பாஸ் பண்ணி போனாங்க..ரோட்ல எல்லாருக்கும் லெட்டர்ஸ்.."
"நீ வாங்கினியா? உனக்குதான் ஜெயலலிதா புடிக்குமே.."
"இல்லே....ஜெயலலிதா கொண்டு வந்து குடுத்தா வாங்கிக்கலாம். அதுதான், தூத்துக்குடி போயிருக்காங்களே!"
!!!
"ஆச்சி,ஒரு கேம்.யெஸ் ஆர் நோ?" - பப்பு
"யெஸ்" - பலியாடு
"யெஸ் சொல்லலாம்..ஒரே ஒரு நோ அலவுட்" -பப்பு
"ம்ம்ம்" - அதே பலியாடு
"ஜனவரி ஐ பீட் யூ?"-பப்பு
ஙே...."யெஸ்"
"பிப்ரவரி ஐ பீட் யூ?" -பப்பு
"யெஸ் "
"மார்ச்சு ஐ பீட் யூ" -பப்பு
"யெஸ்"
ஏப்ரல் மாதத்துக்கு ஏதோ இருக்கும் போல இருக்கு...கவனமாக இருக்கும்.
"ஏப்ரல் ஐ பீட் யூ"
எதுக்கும் யெஸ் சொல்லி வைப்போம்.
"யெஸ்"
"மே ஐ பீட் யூ?"-பப்பு
"ஓ நோஓஒ"
ஆகா...நல்லவேளை தப்பிச்சேன்!
I had a wife
Her name is life
In my life,
I stay with my wife!
- பப்புவுக்கு உதித்த தத்துவம்
#ஆர்டரின்_பேரில்_இங்கு_கவிதைகள்_செய்து_தரப்படும்:)

டெரரா இல்ல இருக்கு!!
கடையிலிருந்து வெளியில்
வந்தோம். வழியில், ஆங்காங்கே சிலர் கும்பலாக நின்றுக்கொண்டிருந்தார்கள்.
சில இளைஞர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். வழி,
குறுகலாக இருந்ததால், நாங்கள் கடக்கும்போது அவர்கள் சிரித்தது மிக சத்தமாக
கேட்டது.
"ப்பா....ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க!காதே வலிக்குது" என்றேன்.
"ஏன்னா, கேர்லும் கேர்லும் நடந்துபோனா அப்படிதான்" - பப்பு
என்ன்னாது?? இதெல்லாம், அதுக்குள்ளே உனக்கு தெரியுதா என்று மனதுள் நினைத்தபடி....ஆர்வக்குட்டியாகிவிட்டேன்.
"ஓ! அப்படி சிரிப்பாங்களா என்ன?" என்றேன்.
"இல்லல்ல...சும்மா சொன்னேன்." - பப்பு
"அப்போ பாயும் பாயும் போனா நீங்கள்ளாம் சிரிப்பீங்களா" - நாந்தான்.
"இல்ல...பாயும் கேர்லும் போனாதான் நாங்க சிரிப்போம்! தே போத் ஆர் இன் லவ்னு" - பப்பு
அவ்வ்வ்வ்! அராஜகமா இல்ல இருக்கு இது!
"அப்போ கேர்லும் கேர்லும் போனா?" - மீ தி அப்பாவி
"அவங்க ஃப்ரெண்னட்ஸ்" - பப்பு
"பாயும் பாயும் போனா?" - நாந்தான்.
"அவங்க எனிமீஸ்" - பப்பு
"அப்புறம், பாயும் கேர்லும் இப்படி பார்த்துகிட்டா சிரிப்போம் ஆச்சி... க்ளாஸ்லே, இங்கே பாரு, ஒரு பையன் மற்றும் இன்னொரு பெண்ணின் பேரை சொல்லி, அவங்க அப்படி பார்த்துக்கிட்டாங்க. அப்போ, நாங்க சிரிப்போம். அப்புறம், வெட்னஸ்டே வெட்டிங்டேன்னு சொல்லுவோம்" - பப்பு
அவ்வ்வ்வ்வ்வ்!எகொச!!
" வேற யார் யாரை அப்படி சொல்லி சிரிப்பீங்க?" - நேரடியா கேக்கமுடியாத சோகம் எனக்கு!
இன்னொரு பையன் மற்றும் பெண் பெயரை சொல்லி, எப்படி பார்த்துக்கொள்வது என்றும் டெமோ.
"அப்புறம், உனக்கு? நீ யாரை அப்படி பார்த்து சிரிப்பே?" - மீ
"நான் (இன்னொரு பையன் பெயரை சொல்லி) அவனும் அப்படி பார்த்துக்கிட்டோம். அவன் இல்ல ஆச்சி, இப்படி பார்த்தான் (கொஞ்சம் ஸ்டைலாக கழுத்தை எல்லாம் திருப்பி காட்டி) அப்போ, எல்லாம் சிரிச்சாங்க. வெட்ன்ஸ் டே வெட்டிங் டே!" - பப்பு
எனக்கு எப்படி இருந்திருக்கும்!! :-)))
ஆச்சரியமாகவும், ரொம்ப சிரிப்பாக இருந்தது. நான் சிரிப்பதை பார்த்து, அவளே தொடர்ந்தாள்.
" இங்க பாரு ஆச்சி, ஸ்னாக்ஸ் ஷேர் பண்ணுவோம் இல்ல..அப்புறம், ஏதாவது திங்க்ஸ் தொலைச்சுட்டா குடுக்கும்போது பார்த்து சிரிப்பாங்க இல்ல...அப்போ, எல்லாரும் சிரிப்போம்!"

இரண்டு நாட்களுக்கு முன், ரத்த பரிசோதனைக்கு செல்ல வேண்டியிருந்தது.
காலையிலேயே செல்ல வேண்டியிருந்ததால், இரவே பப்புவிடம் தயார்படுத்த
ஆரம்பித்தேன்..
"பப்பு, நீயேதான் காலையில ரெடியாயிருக்கணும். நான், காலையிலேயே டெஸ்ட்க்கு போணும். உனக்கு கிளம்ப ஹெல்ப் பண்ண முடியாது. எழுப்புனவுடனே எழுந்துக்கோ...நான் வந்ததும், நீ ரெடியா இருந்தாதான், ஸ்கூலுக்கு போக சரியா இருக்கும்..இல்லேன்னா, நீ லீவ்தான்..அப்புறம், ஸ்கூலுக்கு போக முடியாது"
.......
மாலையில், பரிசோதனை ரிப்போர்ட்டுகளை வாங்கிக்கொண்டு வந்தேன். அந்த ரிப்போர்டுகளை கையில் வைத்து புரட்டியபடி, பெரிம்மா கேட்டவற்றிற்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன். என் கைகளில் இருப்பதை பார்த்துவிட்டு ஓடிவந்தவள், மூச்சிரைக்க கேட்டாள்..
"ஹேய், ரிசல்ட் வந்துடுச்சாப்பா....எவ்ளோ நாள் உயிரோட இருப்பே?"
அவ்வ்வ்வ்வ்வ்!
"ஆச்சி,இங்க பாருப்பா... மாடு, டாக்ல்லாம் இருக்குல்லப்பா.... அது கண்ணுக்குல்லாம் கலர்சே தெரியாது. எல்லாம் பிளாக் &ஒயிட்டாதான் தெரியும். தெரியுமா? குடையெல்லாம் அது முன்னாடி நாம ஓபன் பண்ணா அதுக்கு எப்படி தெரியும்? கருப்பாக தெரியும் இல்ல ஆச்சி!ஆனா,மாடு க்கு ரெட் கலர் பார்த்தால் எப்படி முட்ட வரும்... அதுக்குதான் கலர் தெரியாதே? எப்படி ஆச்சி?"
??
இப்போ பப்புவோட டர்ன்னு நினைக்கிறேன்... #இது_கூடவா_உனக்கு_ தெரியாது?
"ஆச்சி,நானே ஒரு proverb உருவாக்கியிருக்கேன்ப்பா.சொல்லட்டா..
A kite without its tail can't fly.
Meaning-
A man without knowledge can't work."

#அவ்வ்வ்வ்வ்
"bye Pappu! Have a good day! I laaave you! - Me
"I can not say anything now because I Love you and I hate you" - Pappu
#அவ்வ்வ்வ்வ்
ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். நேற்றைய இரவில் நடந்த கொடூரமான விபத்தை பற்றி சொல்லி அப்போதுதான் சொல்லிமுடித்திருந்தார் , ஆட்டோக்காரர். கொஞ்ச தூரம் தள்ளி வந்துவிட்டாலும், அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, "என்னா பப்பு" என்று என்னையறியாமலேயே சொல்லிவிட்டேன். அவள் பாட்டுக்கு வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், "ஏன் ஆச்சி? ஏன் 'என்னா பப்பு'னு சொன்னே?" என்று குடைய ஆரம்பித்தாள். ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்தேன்.
சமாதானமாகாமல், 'ஏன் அப்படி சொன்னே?' என்று இழுத்தவள், "நான் நினைக்கிறது உனக்கு தெரிஞ்சுடுச்சா?அது ஆ- லே ஆரம்பிக்கும்தானே" எனக் கேட்டாள்.
பல்ப்!! இந்த விளையாட்டு நல்லா இருக்கே!
ஆமாம் என்பது போல தலையாட்டினேன்.
"என்ன நினைச்சேன் சொல்லு" - பப்பு
"நான் சொல்ல மாட்டேனே?" - நான்
"அப்போனா உனக்கு தெரியாதுன்னு அர்த்தம்" - பப்பு
"சரி, நீயே சொல்லு, என்ன நினைச்சேன்னு" - நான்
"அந்த லாரியிலே ஒரு ஆடு இருந்துதே, அதை பத்தி நினைச்சேன், எல்டர்ஸ் பண்ணலாம் இல்ல, அந்த வேலையை. ஏன் அந்த குட்டி பையன்தான் ஆட்டுக்கு வைக்கோல் எடுத்து ஃபீட் பண்ணிக்கிட்டிருக்கான்"
#அவ்வ்வ்வ்
"ஆச்சி, எனக்கு வரும் இல்ல...அடுத்த பர்த்டே, அதுக்கு நாம இங்லேண்ட் போலாமா?"

புரந்தர் கோட்டை முகவரி தெரியுமா உங்களுக்கு?
காலையில தட்டுல இட்லியை வைச்சுட்டு, 'நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள சாப்பிட்டுட்டு ரெடியா இருக்கணும்"னு சொல்லிட்டு போறேன்.
"சிவாஜீஈஈஈ...வீ ஹாவ் கேப்சர்ட் யுவர் புரந்தர் ஃபோர்ட்"
"ஏய்...இப்ப நிறுத்த போறியா இல்லையா? என்ன சொன்னேன் உன்கிட்டே?"
"யெஸ், ஐ நோ! ஐ ஹாவ் டூ திங்க் அபவுட் இட்.சம்பாஜிஈஈஈ..."
"நிறுத்து...அஞ்சு நிமிசத்துல வருவேன்...தட்டு காலியா இருக்கணும்"
......
#ஸ்ப்ப்ப்பா
இது முடிஞ்சுதுன்னு ஸ்கூலுக்கு போய்க்கிட்டு இருக்கோம்.
"ஆச்சி, சிவாஜியும், அக்பரும் ஒரே காலத்துல இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?யாரு வின் பண்ணியிருப்பா?" - பப்பு
"...சிவாஜிதான்!"
"எப்படி சொல்றே?" - பப்பு
"சும்மாதான்...சிவாஜி clever இல்ல.அதான் அப்டி தோணுச்சு"
"ஹிஹிஹி...இல்ல,ஆச்சி..ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகியிருப்பாங்க." - பப்பு
'அட.... இது எனக்கு தெரியாம போச்சே லுக் '
"சிவாஜி மவுடெய்ன் ராட்- னாலும், அக்பர்தான் வின் பண்ணியிருப்பார். அக்பர், வெறும் கையாலயே வாளை எல்லாம் உடைச்சிடுவார். ஔரங்கசீப்பை புடிக்கவே புடிக்காது. உனக்கு?" - பப்பு
#இதுவேறையா...ஸ்ப்பாஆஆஆஆ
ஆமா, புரந்தர் ஃபோர்ட் எங்க இருக்கு?
போகணுமாம்!!

மின்சார ரயில் நிலையத்தில் அவள் கைகாட்டிய ஹல்திராம்ஸ் பாக்கெட்டுகளை
மறுக்காமல் வாங்கி கொடுத்திருந்தேன். ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்தபிறகு,
மூன்று பாக்கெட்டுகளையும் ஒருதரம் பார்த்து, ஒன்றை தேர்ந்தெடுத்தபின், "
"ஆச்சி, நாம ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம். நாம ஃப்ரெண்ட்ஸ். எல்லா அம்மாவும், "அம்மா"னு கூப்பிடுன்னுதானே சொல்றாங்க....நீ? நீ என்னை ஃப்ரெண்ட் மாதிரிதானே வைச்சுக்கறே. you give me freedom right! "
அட! ஆமாம், அவளை ஒருநாளும் அம்மான்னு கூப்பிடுன்னு சொன்னதேயில்லை!! :-) :-)
அது இருக்கட்டும்! வாங்கியதும், "உனக்கு - எனக்கு" என்று அடித்து பிடித்து - எடுத்துக்கொள்வதுதானே நமது குடும்ப கலாச்சாரம்! அவளிடம், "நீயெல்லாம் ஒரு அம்மாவா?" என்று திட்டு வாங்கினால்தானே, எனக்கு நிம்மதியாக இருக்கும்! இன்னைக்கு என்ன ஒரே ஃபீலிங்ஸ்!! ;-)
அதைவிட, எல்லா பாக்கெட்டுகளையும் தீர்த்தபிறகு, சொன்னதுதான் ஹைலைட்!
"ஆச்சி, இனிமே இதெல்லாம் வாங்க வேண்டாம்ப்பா! வாங்கவே கூடாது!!புரிஞ்சுதா!"
வேளச்சேரி ரயில் நிலையம். ஓடிப்போய் வரிசையில் இடம் பிடித்தவளால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு ஆன்ட்டி "ம்ம்...ஸ்மார்ட்டா நடந்துக்கறே" என்று சிரித்து, அவளையே முன்னால் நிற்க சொன்னார்.
சிரித்தபடி, பப்புவை பின்னுக்கு இழுத்து, 'நீங்க வாங்கிக்கோங்க' என்று அவரிடமும், "அவங்கதானே முன்னாடி வந்தாங்க' என்று பப்புவிடமும் சொல்லிவிட்டு, டிக்கெட் எடுத்து பெட்டியில் அமர்ந்தோம்.
எப்பவும்,வேகமா போய் இடம் பிடிக்க சொல்லும் ஆச்சி ஏன் இன்னைக்கு ரொம்ம்ம்ப நல்லவளாட்டாம் ஆக்ட் பண்ணுது (?!)என்று குழம்பிய பப்பு கேட்டாள்,
"யூ குட் யூஸ் தட் ஆர்ப்பசுனிட்டி, ரைட்?"
;-)))

நூற்றாண்டுகள் என்பது பற்றி
பேசிக்கொண்டிருந்தோம். இப்போதுவரை, முழு ஆண்டையும் 'ஒன் தவுசண்ட் அன்ட் ..'
அல்லது 'டூ தவுசண்ட் அன்ட் ...' என்று சொல்லிதான் பழக்கம். பல்லவர்களைப்
பற்றி வேறு சமீபத்தில் பேச்சு வந்திருந்தது. அவர்கள் 8ஆம் நூற்றாண்டு
என்றதும்,
"ஆச்சி, எனக்கு ரொம்ப புடிச்ச கிங்க்ஸ் அக்பரும், சிவாஜியும்தான். ஏன் ஆச்சி, நாம இயர்சை அக்பர் இயர்ஸ், ஜோதா இயர்ஸ், சிவாஜி இயர்ஸ், நர்சிம்ம பல்லவா இயர்ஸ்ன்னு வைச்சிக்கலாம் இல்ல. அப்போ 1350ன்னு சொல்றதை விட நல்லா இருக்கும் இல்ல. இதை, அப்படி வைச்சிக்கலாம்னு யாரும் யோசிக்கலையா?" - பப்பு
"சொல்லுவாங்களே, 'அக்பர் காலத்துலே' இல்லேன்னா 'பாண்டியர்கள் காலத்துலே'ன்னு சொல்லுவாங்களே...அப்பன்னா என்ன அர்த்தம்...அவங்க இருந்த இயர்ஸ்ன்னுதானே அர்த்தம்."
"அது இல்ல ஆச்சி...இயர்சே இல்லாம, அப்படியே மாத்திட்டா நல்லா இருக்கும் இல்ல...ஈசியா" - பப்பு
#நாட்டாம_தீர்ப்பை_மாத்து
"ஆச்சி, எனக்கு ரொம்ப புடிச்ச கிங்க்ஸ் அக்பரும், சிவாஜியும்தான். ஏன் ஆச்சி, நாம இயர்சை அக்பர் இயர்ஸ், ஜோதா இயர்ஸ், சிவாஜி இயர்ஸ், நர்சிம்ம பல்லவா இயர்ஸ்ன்னு வைச்சிக்கலாம் இல்ல. அப்போ 1350ன்னு சொல்றதை விட நல்லா இருக்கும் இல்ல. இதை, அப்படி வைச்சிக்கலாம்னு யாரும் யோசிக்கலையா?" - பப்பு
"சொல்லுவாங்களே, 'அக்பர் காலத்துலே' இல்லேன்னா 'பாண்டியர்கள் காலத்துலே'ன்னு சொல்லுவாங்களே...அப்பன்னா என்ன அர்த்தம்...அவங்க இருந்த இயர்ஸ்ன்னுதானே அர்த்தம்."
"அது இல்ல ஆச்சி...இயர்சே இல்லாம, அப்படியே மாத்திட்டா நல்லா இருக்கும் இல்ல...ஈசியா" - பப்பு
#நாட்டாம_தீர்ப்பை_மாத்து
வேளச்சேரி ரயில் நிலையம். ஓடிப்போய் வரிசையில் இடம் பிடித்தவளால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு ஆன்ட்டி "ம்ம்...ஸ்மார்ட்டா நடந்துக்கறே" என்று சிரித்து, அவளையே முன்னால் நிற்க சொன்னார்.
சிரித்தபடி, பப்புவை பின்னுக்கு இழுத்து, 'நீங்க வாங்கிக்கோங்க' என்று அவரிடமும், "அவங்கதானே முன்னாடி வந்தாங்க' என்று பப்புவிடமும் சொல்லிவிட்டு, டிக்கெட் எடுத்து பெட்டியில் அமர்ந்தோம்.
எப்பவும்,வேகமா போய் இடம் பிடிக்க சொல்லும் ஆச்சி ஏன் இன்னைக்கு ரொம்ம்ம்ப நல்லவளாட்டாம் ஆக்ட் பண்ணுது (?!)என்று குழம்பிய பப்பு கேட்டாள்,
"யூ குட் யூஸ் தட் ஆர்ப்பசுனிட்டி, ரைட்?"
;-)))
'சம்பவக்கதை'
'அதை செய்யாதே, இதை செய்யாதே. செய்யக்கூடாது" என்றெல்லாம் சொன்னால் நானே
கேட்டதில்லை. இதில், பப்பு மட்டும் எப்படி கேட்பாள். அப்படியே சொன்னாலும்,
பூமராங்காய் திரும்பி வரும் 1008 கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை
யார் சுமப்பது! அந்த மாதிரி சமயங்களில், அவளிடம் சிலபல "பகீர் கதைகளை"
எடுத்து விடுவதுண்டு.
பபுள்கம் சாப்பிட்டு, பெரிய முட்டை விட்டு, அது தொண்டையில் மாட்டிக்கொண்ட சிறுமியின் கதை, பெரியவங்க இல்லாதப்போ கிச்சனில் நுழைந்து குறும்பு செய்த சிறுவனை போலீஸ் பிடித்த கதை, ஊற வைத்த அரிசி சாப்பிடும் பழக்கம் கொண்ட ஒரு பெண்ணுக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்த கதை, சாப்பிடும்போது பேசிக்கொண்டே இருந்த சிறுமிக்கு காற்று போகும் பாதையில்உணவு மாட்டிக்கொண்ட கதை என்று திகில் கதைகள் பல ரூபத்தில் வரும். எனக்குத்தான் கதைகளே தவிர, பப்புவை பொறுத்த வரை, இவையெல்லாம் எப்போதோ யாருக்கோ நடந்த சம்பவங்கள்!!
இப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், என்னையே திடுக்கிட வைத்தது ஒரு 'சம்பவக்கதை'.
வாஷ்பேசினில், முகம் கழுவிக்கொண்டிருந்த பப்புவிடம், 'வாஷ்பேசின் பக்கத்துலே, எப்பவுமே ஃபேஷ் வாஷ் இருக்கும்னு நினைச்சுக்க கூடாது பப்பு, அது ஹேண்ட் வாஷா கூட இருக்கும். நம்ம வீட்டுலன்னு இல்ல, எங்க போனாலும், நீ இத நோட் பண்ணனும்' என்று சொல்லி வைத்தேன். முகம் கழுவிக்கொண்டு, தலை பின்னிக்கொள்ள வந்த பப்பு லைட்டாக ஆரம்பித்தாள்.
"ஆமா, ஆச்சி, ஒரு பொண்ணு வாஷ்பேனில் முகம் கழுவ போச்சு. அங்க இருந்த பாட்டிலை, எடுத்து பார்க்காம, முகத்துல போட்டு முகம் கழுவுச்சு. தேச்சப்பறம்தான் அதுக்கு தெரியுது, அது சோப் இல்லன்னு...அது என்னது? அவங்க அம்மா சர்ஃப் எக்சலை வைச்சிருக்காங்க..அதை எடுத்து போட்டுக்கிச்சு. அதுக்கு எப்படி இருக்கும்? ஒரே அழுகை!வேணுமா? (தேவையா? என்பதன் பொருள்)"
அவ்வ்வ்வ்வ்!!
இந்த பொண்ணு நெஜமாத்தான் சொல்லுதா இல்ல என்னை கிண்டல் பண்ணுதா?
#இனிமே_ஏதாவது_சம்பவத்தை_சொல்லுவியா?_சொல்லுவியா? ;-)
காலையில் அரக்க பரக்க எழுப்பினாலும், ஆற அமர, ஏழு மணிக்கு குறைந்து எழவே மாட்டாள். அப்படியே எழுந்தாலும், அரைக்கண்ணை மட்டும் திறந்து, 'நைட்லாம் நான் தூங்கவே இல்லப்பா. இப்போதான் தூங்கவே ஆரமிச்சேன்' என்று யோசிக்காமல் சொல்லுவாள்.
பல் துலக்க நிற்கும்போதுதான், 'ஆச்சி எனக்கு ஒரு பயங்கரமான கனவு. என்னா தெரியுமா' என்று ஆரம்பிக்கும்போதே, எனக்கு பிபி ஏறும். ஈவு இரக்கம் பார்க்காமல், 'கட் கட்' சொன்னால்தான், நேரத்துக்கு கிளம்ப முடியும். ('இதெல்லாம் வழியில சொல்லு. இப்போ என்ன பண்ணனுமோ அதை பண்ணு')
இன்றும், அப்படியான ஒரு நாள்.
'ஒரு பயங்கரமான கனவுப்பா' என்று ஆரம்பித்தாள். நேற்று இரவு, நாய்கள் குரைத்த சத்தத்தில் நடு இரவில் விழித்துக்கொண்டவள் கொஞ்ச நேரம் தூங்கவில்லை. 'தட்டி குடு,ஆச்சி' என்று சொன்னபடி புரண்டு கொண்டிருந்தாள். (நாமே தட்டி கொடுத்தால், 'என்னை என்ன, பேபின்னு நினைச்சியா' என்று சண்டைக்கு வருவாள்!!ஸ்ப்ப்பா!)
தூக்க கலக்கத்தில், வழக்கம்போல, 'தவுஸன்ட் ஆடுங்க வேலியை தாண்டி குதிக்குமே, அந்த ஆடுங்களை ஒன்னொன்னா கவுண்ட் பண்ணு' என்று சொல்லிவிட்டு திரும்பி தூங்கிவிட்டேன்.
பேய் கனவைத்தான், அவ்வப்போது, பயங்கரமான கனவு என்பாள்.சரி, நாய்கள் குரைத்ததால் விழிக்கவில்லை போல, பேய் கனவால்தான் பயந்து விழித்திருக்கிறாள்... கேட்போம் என்று லேசாக அசந்துவிட்டேன்.
"கொடி ஏத்தணும். ஓகே! அது ரொம்ப ஹைட். அது வரைக்கும் ஏத்தணும். அதை நான் தான் ஏத்தணும்னு பிரபா ஆண்ட்டி சொல்லிட்டாங்க. மாஸ்டருக்கு கூட எப்படி ஏத்தணும்னு தெரியல. நாங்க ஏத்த ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும் போது ஒரு பேய் வந்துடுச்சு." - பப்பு
.....
(இப்படி கேப் விட்டிருக்கும்போதே சுதாரிச்சு இருக்கணும்!)
"ம்ம்ம்" - மீ
"வந்து, என்னை எழுப்பி விட்டுடுச்சு அந்த பேய்." - பப்பு
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
#நானாதான்_வாலண்டியரா_வந்து_ஏமாந்துட்டேனா?!

Sunday, March 23, 2014
பப்புவும் அலமாரியும்
எவ்வளவுதான் ஹேர்பேண்ட், ரப்பர் பேண்ட், தலைமுடிக்கு போடும் கிளிப்புகள் இருந்தாலும், நேரத்துக்கு ஒன்றும் கிடைக்காது. கையில் இருக்கும் கிளிப்பின் இணையை இங்கேதான் எங்கேயோ பார்த்தோமே என்று இருக்கும். ஆனால், சரியான நேரத்துக்கு அதுவும் கிடைக்காது. சோபாவிலும் புத்தக அலமாரியிலுமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். சரி, இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று இறங்குவேன். பப்புவிடமும், சொல்லி வைப்பேன். இனிமே, ஸ்கூல்லேருந்து வந்ததும் ஒழுங்கா எல்லாத்தை ஒரு இடமா வைக்கணும். எல்லாம் ஒரு நாள் மட்டுமேதான். திரும்பவும் அதே கதை! இன்று சோபாவின் மேல் கிடந்த ஹேர்பேண்டையும், ஒற்றை கிளிப்பையும் பார்த்தவுடன் அதே வீரம் வந்தது. (அவ்வப்போது இந்த ஆவேசம் வந்தாலும் ஓரிரு நிமிடங்கள் பொறுமை காத்தால் போதும்..அந்த ஆவேசத்தை கடந்துவிடலாம். )
சரி, அதை மட்டும் தேடி தேடி ஒரு டப்பாவில் வைப்பதோடு, பப்புவின் அலமாரியையும் சேர்த்தே சுத்தம் செய்துவிடலாம் என்று திடீர் ஐடியா. ஓகே! முதலில் அந்த அலமாரியை சுத்தம் செய்யலாம். பிறகு இந்த ஹேர்பேண்டையும், கிளிப்பையும் வைத்துக்கொள்ளலாம் என்று தோன்ற, அலமாரியை டார்கெட் செய்தேன்.

அந்த அலமாரி, பப்பு பிறக்கும் சமயம் செய்தது. மூன்று அடுக்கு கொண்ட ஒரு சிறிய அலமாரி. கிட்டதட்ட, பப்புவின் தற்போதைய உயரம் இருக்கும். பப்பு பிறந்த சமயத்தில், ஹக்கீஸ், ஜட்டிகள் வைக்க உபயோகப்பட்டது. சற்று வளர்ந்ததும், அவளது உடைகளை அடுக்கி வைத்திருந்தேன். அவளது உடைகள் வளர்ந்து பெரிதாகி, இடம் கொள்ளாமல் போனதும், புத்தகங்கள் அந்த இடத்தை வந்தடைந்தது. கொஞ்ச காலம் கழித்து புத்தகங்களும் வேறு இடத்துக்கு மாறின. அதே காலத்தில்தான் பப்பு ரகசியங்களையும், பொக்கிஷங்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டத்துக்கு வந்திருந்தாள். சரி, இதுதான் சரியான சமயம் என்று அந்த அலமாரியை பப்புவின் பெயருக்கு மாற்றினேன்.
அவ்வளவுதான். அதற்குபிறகு, அந்த அலமாரியை தொடுவதற்கு கூட யாருக்கும் உரிமையில்லாமல் போயிற்று. சீவி சீவி குட்டியாகிப்போன பென்சில்கள், பலூன்கள், பிய்ந்து போன பலூன் துண்டுகள், உடைந்து போன க்ரேயான்கள், பென்சில் சீவல்கள், ஸ்கெட்ச் பேனாக்கள், கோலிகள், காந்த துண்டுகள், அவளது டப்பாக்கள்,பெரிய உண்டியல் ஒன்று, காசு வைக்க தனி கைப்பைகள் என்று சகலமும் நோவாவின் கப்பல் போல அடைத்து வைக்கப்பட்டிருந்தன.விட்டுவிட்டேனே அதோடு, சிறு சிறு விளையாட்டுப்பொருட்களும்.
அந்த அலமாரிக்கு அருகே நின்று கொண்டு என்ன செய்வாளோ தெரியாது...உள்ளே எதையாவது வைப்பதும், திணிப்பதும், அது கீழே விழுவதும், பின்னர் திணிப்பதும்...என்று ஒரே ரகசிய பெட்டகமாக இருக்கும். ஒரு அலமாரி என்பது பப்புவின் முக்கியமான இடமாக சில நாட்களில் மாறிப்போனது. பப்புவுக்கு தான் பொக்கிஷமாக நினைக்கும், தனக்கு மட்டுமேயான ரகசியங்களை அடைகாக்கும் கூண்டை கொடுத்தது நல்லதாக போயிற்று என்று எனக்கும் ஒருகட்டத்தில் புரிந்தது. அதாவது, இந்த வீடே பப்புவுடையதாக, அவளது பொருட்களால் நிரம்பியிருந்தாலும், மற்றவர்கள் யாரும் உபயோகிக்காத ,அவளுக்கு மட்டுமேயான ஒரு இடம் ஒரு கட்டத்தில் அவளுக்கு தேவைப்படுகிறது என்பதை யதேச்சையாக நான் புரிந்துக்கொண்டது எவ்வளவு நல்லது!
"பப்பு, இன்னைக்கு உன்னோட கப்போர்டை நாம சுத்தம் செய்யலாம்ப்பா...நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். நீ எதெது எங்கெங்க வைக்கலாம்னு சொல்லு." என்று லைட்டாக அடி போட்டேன். முதலில், "அதெல்லாம் நானே பார்த்துக்கறேன் " என்று முரண்டு பிடித்தது. அதனால், திட்டத்தை மாற்றினேன். முதலில் அவளது உடை வைக்கும் அலமாரியை சுத்தம் செய்யலாம் என்றேன். ஆடு சிக்கி விட்டது. ;-) வீட்டுக்கு அணிந்து கொள்பவை, வெளியில் அணிந்து கொள்பவை, சிறியதாகிப்போனவை என்று பிரித்து அடுக்கினோம். அவளே மடித்து கொடுத்தாள். சொல்ல சொல்ல அடுக்கியும் வைத்தாள். இப்போது லைட்டாக ஆரம்பித்தேன். "இங்கியே எவ்வளவு தூசி இருக்கு, உன்னோட அந்த கப்போர்டையும் அடுக்கிடலாம்ப்பா...இதே மாதிரி நீயே அடுக்கு..நியூஸ் பேப்பர் மட்டும் நான் போட்டு தர்றேன்..சாப்பிட்டுட்டு பண்ணலாம்" என்றதும் முழு மனதுடன் அனுமதித்தாள்.
அவள் சாப்பிட்டுவிட்டு, நான் சாப்பிடும்போது, பாயை எடுத்து விரித்து அலமாரியிலிருந்த பொருட்களை அதில் பரப்பினாள். சாப்பிட்டு முடித்து நானும் போய் சேர்ந்துக்கொண்டேன். முதல் அடுக்கிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. பிங்க் கலர் பென் ஹோல்டர், அழுக்கேறிய ஒரு நீல டப்பா, உண்டியல், மரத்தினாலான புதிர் விளையாட்டு, ஒற்றை ஒற்றையாக ஹேர்பின்கள், ரப்பர் பேண்ட்கள், ஜிகினா பொட்டலங்கள், ஒரு ஸ்டாப்ளர், அட்டைப்புதிர் பாகங்கள், வண்டி வண்டியாய் பென்சில் சீவல்கள் விதவிதமான கலர்களில் மற்றும் சிறிய சிறிய நோட்டுகள்... இன்னபிற! ஒவ்வொரு டப்பாவாக கவிழ்த்து பின்னர் அவற்றையே அதில் அடுக்கினோம். இதற்கு மேலும் சிறியதாக பென்சில்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கும் அளவின் பென்சில்கள் சீவப்பட்டு இருந்தன.
அடுத்த அடுக்கில், கோலி குண்டுகள், வளையல்கள், புதிர் பாகங்கள், மேலும் புதிர் பாகங்கள், செஸ் காய்கள், அதன் பெட்டி ...ஆ..இதென்ன.... பித்தளை டபரா செட் இரண்டும் இங்கிருந்தன! கும்பகோணம் பயணத்தில், ஞாபகமாக வாங்கியது. அதற்கு பிறகு அதனை காணவே இல்லை என்பது அவற்றை பார்த்தபிறகுதான் ஞாபகத்துக்கு வந்தது. டபராக்களை பார்த்தபின் ஏற்பட்ட, எனது அதிர்ச்சிக்கு பப்புவின் "ஹிஹி " என்ற சிரிப்பே பதிலாக கிடைத்தது. என்ன செய்வது. சுத்தம் செய்து பின்னர் அதே பொருட்களை அங்கேயே வைத்தோம். சுத்தம் செய்வது என்பது இங்கு அலமாரியின் அடுக்கில் 'பேப்பரை மாற்றுவது மட்டுமே' என்று பொருள் கொள்க!
அதற்கு அடுத்த அலமாரிக்கு வந்தோம். அங்கு அடுக்கடுக்காக அட்டை டப்பாக்கள்! ஒவ்வொன்றாக எடுத்து கவிழ்த்தோம். சற்று நேரத்தில் பாய் முழுக்க வெவ்வேறு வடிவங்களில் க்ரேயான்களும், வண்ண பென்சில்களும். ஒவ்வொன்றாக பிரிக்கலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தோம். க்ரேயான்களை தனி டப்பாவிலும், பென்சில்களை தனி டப்பாவிலும் பிரித்தாகிவிட்டது. தற்போது மீதம் இருந்தவை ஸ்கெட்ச் பேனாக்கள், கற்கள், கிளிஞ்சல்கள், கலர் பேனாக்களின் மூடிகள்! ஸ்கெட்ச் பேனாக்களை பார்த்தேன்...ஓ மை காட்.அதில் பேனா முனை என்ற ஒன்று இல்லவே இல்லை. அதை எடுத்து குப்பையில் போடபோனேன்.
"ஹேய், அது எனக்கு வேணும்ப்பா..." வாங்கிக்கொண்டாள். எதற்கு என்றதற்கு, அதற்கு உள்ளிருப்பதை எடுத்து விளையாடுவாளாம். ஐயோ! ஸ்கெட்ச் உள்ளிருக்கும் பஞ்சு போன்ற பொருட்களையும் பார்த்தேன். ம்ம்... அவற்றையும் சேர்த்து பென்சில் டப்பாவில் 'வைத்தோம்'. அடுத்த டப்பாவை கொட்டினேன். அய்யய்யோ! புதிர் பாகங்களுக்கு கீழே ஒரே மாவாக கொட்டியது!!

எதிலிருந்து இப்படி கொட்டுகிறது? சப்பாத்தி மாவை எடுத்து வைத்திருக்கிறாளா? டப்பாவை சுத்தம் செய்துவிட்டு புதிர்களை அதில் அடுக்கி வைத்தோம். அப்போது அகப்பட்டது...இதுதான் அந்த மாவுக்கு காரணம்! சப்பாத்தி உருட்டும் கட்டை ஒன்று! கொண்டபள்ளி சொப்பு சாமான்! உளுத்து கொட்டியிருக்கிறது. அதை பற்றி கொஞ்சம் லெக்சர் பப்புவுக்கு கொடுத்து விட்டு அடுத்த டப்பாவுக்கு வருகிறேன். சிறு சிறு கற்கள்...கடலிலிருந்து மேடம் கொண்டு வந்த பொக்கிஷங்கள். சில சிப்பிகளில் வண்ணங்கள் அடிக்கப்பட்டிருந்தன. சில கிளிஞ்சல்களில் நூல் கோர்க்கப்பட்டு கழுத்தில் போட்டுக்கொள்ளும் மாலை போன்று இருந்தது. உடைந்த பறவை, எங்கோ குடித்த ஜூசின் மேல் செருகியிருந்த சின்னஞ்சிறு குடை! வேறு வழியின்றி எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன்.

இதையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு, அலமாரியை பார்த்தேன்.
இந்த புதிர்பாகங்களை எல்லாம் எதற்கு எடுத்து வைத்தோமென்றே தெரியவில்லை. சிலதெல்லாம், பப்பு இரண்டரை வயதில் வார்த்தைகளை கற்றுக்கொள்ள ப்ளென்ட் கார்ட்ஸ் போன்றவை. அவைகளில் சில உடைந்தும் இருந்தன. எல்லா புதிர்களும் முழுமையானவையாகவும் இல்லை. இவற்றை வைத்து அவள் விளையாடுகிறாள் என்றும் சொல்லமுடியாது. ஆனால், தூக்கிப்போட மனமில்லை.
சொல்லப்போனால், எல்லாம் குப்பையே! ஆனாலும், அவரவர் குப்பை அவரவருக்கு முக்கியம்! ஊரில், பெரிய ஹோல்ட் ஆலிலும், ட்ரங்கு பெட்டியிலும் நான் சேமித்து வைத்திருக்கும் குப்பைகள் போலவே!அது ஏன், நமது குப்பை நமக்கு பொக்கிஷமாகவும் அடுத்தவரின் பொக்கிஷங்கள் நமக்கு குப்பையாகவும் தோன்றுகிறது?!
இதையெல்லாம் முடித்து, பாயை எடுத்து தட்டுகிறேன்... அதிலிருந்து சிதறும் குப்பைகளையும் பொறுக்குகிறாள் பப்பு. காலியான பவுடர் டப்பா எதற்கு என்று எடுத்து வைக்கவில்லை. அது அவளது மைக்காம்! ஆமாம், பவுடர் டப்பாவின் கழுத்தில் அலங்காரங்கள் செய்து வைத்திருக்கிறாள். என்ன சொல்வது!
நமக்கு அல்பமாக தோன்றும் ஒன்று பப்புவின் கண்களில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். இறுதியாக, தூசியை மட்டும் தட்டிவிட்டு பாயை அலச போடுகிறேன். அதற்குள் , அந்த இடத்தை பெருக்கி வைத்திருக்கிறாள் பப்பு. அப்போதுதான் கவனித்தேன், அந்த அலமாரியில், அவளது ஹேர்பேன்டுகளையும், பின்களையும் வைக்கவில்லை என்பதையும் அதில் வைக்க அங்கு இடமேயில்லை என்பதையும்!
Thursday, March 06, 2014
வடக்கு பக்கம் தெற்கு
காலையில்,
பள்ளிக்கூட பையை எடுத்து மாட்டும் போதுதான் கவனித்தேன். பையின்
ஜிப்பிலிருந்து, ஒரு கீ செயின் ஆடிக்கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால்
காம்பஸ்.
"காம்பஸை ஏன் ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போறே?" - நாந்தான். ('ஒன்னு புதுசா வாங்கிடக்கூடாது. உடனே ஸ்கூல்ல எடுத்துட்டு போய் காட்டி, அதை ரிப்பேராக்கிட்டு வரணும்!' - மைண்ட்வாய்ஸ்)
" மாஸ்டர் கேட்டாருப்பா" - பப்பு
"என்னது, காம்பஸையா? எதுக்கு கேட்டாரு?" நாந்தான். (இந்த இடத்துலே டவுட் வரணுமே!) ;)
"இல்லப்பா, நான் நார்த் சவுத் பார்த்துக்கிறதுக்கு" - பப்பு
"அதுக்கு எதுக்கு, இது இப்போ?..எடுத்து வை..நாம ஊருக்கு எங்கியாவது போகும்போது எடுத்துக்கிட்டு போலாம். சொன்னா கேளு" - மீ
"இல்லப்பா, நான் எங்கே இருக்கேன், எந்த டிரக்ஷன்லே போறேன்னு பார்த்துக்கிறதுப்பா..ஸ்கூல்ல எங்கே இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாம் இல்ல" - பப்பு
"நீயே யோசிச்சிக்கோ! இது கண்டிப்பா ஸ்கூலுக்கு வேணுமான்னு! ஸ்கூல் போற வரைக்கும் உனக்கு டைம்" -
என்று சொல்லிவிட்டு விட்டுவிட்டேன்.
மாஸ்டர் காம்பஸை ஏன் கேட்டார்? அதான், எப்படியும் ஸ்கூல் போற வரைக்கும் டைம் இருக்கே!

"சரி, ஸ்கூல் வந்ததும் காம்பஸை எடுத்து குடுத்துடு, வீட்டுல பத்திரமா வைக்கிறேன். காம்பஸ் கிடைக்காம எங்கெல்லாம் தேடினோம்...கஷ்டப்பட்டு வாங்கினதுதானே!" - மீ
"இல்லப்பா..மாஸ்டர் நார்த் எதுன்னு கேட்டா எனக்கு தெரியலை...அதான்.." பப்பு
ஓ!! அதுதானா விஷயம்!..ம்ம்...அதுக்கு காம்பஸ்!
"என்னது...உனக்கு தெரியாதா? நீதான் படிச்சிருக்கே இல்ல...மறந்துட்டியா? சொல்லு...சூரியனை பார்த்து நில்" - மீ
"எனக்கு தெரியும்...எங்க ஸ்கூல்ல இருக்கு" - பப்பு
"ம்ம்..சொல்லு" - மீ
"சூரியனை பார்த்து நில்...உன் இரண்டு கையையும் இரண்டு பக்கம் நீட்டு" - பப்பு
"ம்ம்.." - மீ
"உன் இடக்கு பக்கம் வடக்கு..
வடக்கு பக்கம் தெற்கு" - பப்பு
"ம்ம்?? என்னது?" - அதிர்ச்சியுடன் மீ!
"ம்ம்...தேற்கு?" - பப்பு (சரியா சொல்றாங்களாம்!)
"ம்ம்ம்ம்?" - மீ
"வடக்கு பக்கம் தேற்கு?" - பப்பு (கான்ஃபிடன்ட்டாக வந்தது பதில்)
"என்னப்பா சொல்றே?" - மீ ( 'கன்ட்ரோல் த கோவம்...இப்போ கோவப்பட்டு பிரயோசனம் இல்ல...' - மைண்ட்வாய்ஸ்)
ரொம்ப கஷ்டப்பட்டு, வந்த துக்கத்தை தொண்டைக்குள்ளேயே அழுத்தி முழுங்கினேன்.
"போப்பா..எனக்கு தமிழ்லே சொல்லவே தெரில... இங்கிலீஷ்லே சொல்லித்தா..அதை" - பப்பு
"அதை எப்படி இங்கிலீஷ்லே சொல்லுவாங்க...நீதான் புரிஞ்சுக்கணும். நார்த்னா என்ன" - மீ
"அதை ஃபுல்லா எனக்கு இங்கிலீஷ்லே சொல்லு..." - பப்பு
"சூரியனை பார்த்து நில், உன் இரண்டு கைகளையும் இரண்டு பக்கம் நீட்டு..இதெல்லாம் நீயே இங்கிலீஷ்லே சொல்லிக்கோ. ரைட் ஹான்ட் எது? அதுதான் வலது. வலது பக்கம் தெற்கு. லெஃப்ட் ஹாண்ட் தான் இடது. இடது என்ன? - மீ
"இடக்கு பக்கம் வடக்கு" - பப்பு (திரும்ப...திரும்ப...)
"இடக்கு இல்ல..இடக்கை பக்கம் வடக்கு" - மீ
.....
"இதுகூட தெரியலையா உனக்கு? ஏன் மாஸ்டர் கேட்டப்போ சொல்லலை?" - மீ
"மாஸ்டர் கிளாஸ் ரூம்லே கேட்டாருப்பா..அங்கே எப்படி எனக்கு ஈஸ்ட் வெஸ்ட்ல்லாம் தெரியும்? சூரியனை பார்த்தாதானே தெரியும்" - பப்பு
ஓ!!
ஒருவழியாக, பள்ளியும் வந்துவிட்டது. வாசலிலியே, காம்பஸை எடுத்து என்னிடம் தருமளவு மனம் மாறிவிட்டாள்.
"இரு, நான் பார்த்துட்டு குடுத்துடறேன்" என்று காம்பஸை எடுத்து நேராக நின்று பார்த்தாள். அது சவுத்வெஸ்ட் என்று காட்டியது. :))
காம்பவுண்டிற்கு, உள்ளே சென்று பார்க்கலாம் என்று அவளது வகுப்பறை இருக்கும் திசையில் நிற்க வைத்து, திசைகளை பார்த்துக்கொண்டோம். நார்த்தை மட்டுமே அவள் கவனித்தாள். மீதி கவனமெல்லாம், குழந்தைகளை விட்டுச்செல்லும் பெற்றோர்கள் இதை கவனிக்கிறார்களா என்றுதான்! அடக்கமட்டாமல், "இதான் உங்க கிளாஸ்லேருந்து நார்த், இது ஈஸ்ட்" என்று மீதியை நாந்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.
உடனே, காம்பஸை தன் கைகளால் பொத்தி என் கைகளில் புதைத்துவிட்டு,
"சரி சரி...எனக்கு தெரியும்...ஈஸ்ட் ஆர் வெஸ்ட்..ஹோம் ஈஸ் த பெஸ்ட்...நீ இப்போ வீட்டுக்கு போ!" என்று சொல்லிவிட்டு படிகளில் ஏறத்துவங்கினாள்!!
"காம்பஸை ஏன் ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போறே?" - நாந்தான். ('ஒன்னு புதுசா வாங்கிடக்கூடாது. உடனே ஸ்கூல்ல எடுத்துட்டு போய் காட்டி, அதை ரிப்பேராக்கிட்டு வரணும்!' - மைண்ட்வாய்ஸ்)
" மாஸ்டர் கேட்டாருப்பா" - பப்பு
"என்னது, காம்பஸையா? எதுக்கு கேட்டாரு?"

Subscribe to:
Posts (Atom)