Wednesday, April 07, 2010

குப்புறபடுத்து குமுறவைக்கும் ஒரு யதார்த்த(!) முயற்சி

“பொறுப்பு பொறுப்பு”-ன்னு சொல்றாங்களே, அது உனக்கு கொஞ்சமாவது வந்திருக்கா?

”இத்தனை வருஷமா உயிர் வாழ்ந்து என்னத்தை சாதிச்சிருக்கே?”

”குறிக்கோளோட வாழணும்னு யாராவது சொல்லும்போதெல்லாம், அப்படின்னு ஒண்ணு இதுவரைக்கும் உனக்கு இல்லவே இல்லையே, அதை பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்திருக்கியா”

”வளர்ந்து நான் அதுவா இருப்பேன்..இதுவா இருப்பேன்னெல்லாம் கனவு கண்டு எல்லாரையும் நம்ப(!) வைச்சியே, அதுலே எதுவாவது ஆகியிருக்கியா”

“என் பர்த்டே அன்னைக்குத்தான் வேர்ட்ஸ்வொர்த்தும் பொறந்தார்ன்னு சொல்லிக்கிறியே...வேர்ட்ஸ்வொர்த் அப்படி சொல்லிக்க முடியுமான்னு கொஞ்சமாவது யோசிச்சியா?”

-இப்படி முகத்திலறையும் (!) கேள்விகளை சில சமயங்களில் என்னை நானே கேட்டுப்பேன்...அந்த 'சில சமயம்' வருஷத்திலே ஒரு தடவைதான்னாலும் இந்தக் கேள்விகள் என்னை ரொம்ப ஃபீல் பண்ண வைச்சுடும்..

நேத்து சாயங்காலமும் அப்படி ஒரு சமயமாகி போனதுலே இப்படி கேள்வி கேட்டு குமுறிக் குமுறி ஃபீல் பண்ண வேண்டிய நேரமா போச்சு...ரொம்ப ஃபீலிங்ஸ்-னா உடனே படுத்துத் தூங்கிடறதுதானே என்னோட பழக்கம்...சோ, படுத்து தூங்கிட்டேன்...இந்த மாதிரி ஸ்டுப்பிட் கேள்விகளை கனவுலே கூட யாரும் என்னைக் கேக்கலை...

ஆனா, இன்னைக்குக் காலையிலே என்னை எழுப்பின ஃபோன் கால்கள், வந்த மெசேஜ்-கள் எல்லாம் ‘ச்சே..நீ அவ்ளோ யூஸ்லெஸ் இல்லே முல்லை'ன்னு நம்பிக்கைக் கொடுத்தப்புறம்தான் படுக்கையிலேருந்து எழுந்திருச்சேன்..(இல்லை...தூக்கத்தை கெடுத்திட்டீங்களே-ன்னு நான் திட்டவே இல்லை..;-) )

ஓக்கே...இப்போவரைக்கும் இந்த போஸ்ட் என்னன்னே தெரியாம படிக்கறவங்களுக்கு...ஒரு யூஸ்லெஸ் ஆளோட பர்த்டே இன்னைக்கு.. அதனாலேதான் இந்த கேவிக்கேவி கண்ணீர் வர வைக்கும் முயற்சி..:-)


பிறந்தநாள் கொண்டாடறதை எல்லாம் 16 வயசோட ஏறக்கட்டியாச்சுன்னாலும், காலேஜ்லே அதுக்கு வேற மீனிங் கிடைச்சது..நடுராத்திரி முகத்துலே
தண்ணியை கொட்டி எழுப்பி, கேக்கை முகத்துலே அப்பி,அதே போஸோட ஃபோட்டோ எடுத்து, என்னைத் தவிர மீதி எல்லோரும் ஹீரோயின் மாதிரி போஸ் கொடுத்து, தூங்கறவங்க எல்லாரும் பதறியடிச்சு எழுந்துக்கறா மாதிரி ‘ஹாப்பி பர்த்டே'ன்னு கத்தி..அதுக்கெல்லாம் பிராயசித்தமா ‘ட்ரீட்'ன்னு அனனிக்கு முழுக்க என் பர்சை காலி பண்ணி.... (‘இந்த பர்த்டே கொண்டாடறது எல்லாம் வேஸ்ட்..இதுலே என்னோட பங்கு ஒண்ணும் இல்லே..”ன்னு எவ்ளோ கதறி இருப்பேன்!!)


சில சமயம் பிறந்தநாட்கள் பற்பல நினைவுகளை கொண்டுவந்து விடுகின்றன இதுபோல...ஒருவேளை வயசாய்டுச்சுனா இப்படிதான் ஆகும்போல..'என்ன சேர்த்து வைச்சிருக்கே..என்ன சாதிச்சிருக்கே'-ன்னு !

அப்போதான் மனசுக்குள்ளே ஒரு சின்னக் குரல் 'குழந்தைங்க குழந்தைங்களா இருந்தா போதும்... குழந்தைங்கள்ளாம் என்ன பெரிசா சாதிக்கணும்'..

அந்த சின்னக்குரலுக்கு என் நன்றி! :-)


அதனாலே, வயசாகுதேன்னு ஃபீல் பண்ணலை...Because I am not. And probably, never will be.

50 comments:

Uma said...

There is a difference between growing old and growing. I wish you keep growing and not growing old:) Many More happy returns of the day! Have a ball today, you deserve it!

பைத்தியக்காரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அதனாலே, வயசாகுதேன்னு ஃபீல் பண்ணலை...Because I am not. And probably, never will be//

all (old) blood, same blood.:)


//ஓக்கே...இப்போவரைக்கும் இந்த போஸ்ட் என்னன்னே தெரியாம படிக்கறவங்களுக்கு...ஒரு யூஸ்லெஸ் ஆளோட பர்த்டே இன்னைக்கு.. அதனாலேதான் இந்த கேவிக்கேவி கண்ணீர் வர வைக்கும் முயற்சி..:-)//

Happy Birthday, Sister.:)

வல்லிசிம்ஹன் said...

ஹெல்லொ ஏப்ரில் பேபி. சேம் ப்ளட். எனக்கு இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வரப் போகிற டே பற்றி எனக்கு ஒரு வாரமாக் கவலை. என்னய்யா பண்ணிட்டேன்னு.
உங்க பதிவைப் பார்த்து நான் என்னைத் தேத்திக்கிட்டேன் முல்லை.முல்லை பிறந்த ஏப்ரில் மாசம் நானும் பொறந்திருக்கேனெ!!
ஹாப்பி பர்த்டே கண்ணா.
நல்லா இருக்கணும் .மனம் நிறைந்த ஆசிகள்.
பப்புச் செல்லத்துக்கும் உங்க கணவருக்கும் இப்படி ஒரு பொக்கிஷம் கிடைத்தது அவங்க செய்த அதிர்ஷ்டம்.
உங்க அம்மாவுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

Deepa said...

:-))
Wish you a very happy Birthday my dear friend!
இன்று போல் என்றும் என்றென்றும் உன் "யதார்த்த" எழுத்துக்களால் அனைவரையும் குமுற வைக்க வாழ்த்துகிறேன்!

அப்புறம், 45 எல்லாம் ஒரு வயசா? இதுக்குப் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு! ;-)

அமுதா said...

Happy b'day mullai. பர்ஸ் நிறைஞ்சு தானே ஆபீஸ் வர்ற?

அம்பிகா said...

அன்பான பிறந்தாநாள் வாழ்த்துக்கள் முல்லை.

\\அப்போதான் மனசுக்குள்ளே ஒரு சின்னக் குரல் 'குழந்தைங்க குழந்தைங்களா இருந்தா போதும்... குழந்தைங்கள்ளாம் என்ன பெரிசா சாதிக்கணும்'..

அந்த சின்னக்குரலுக்கு என் நன்றி\\

வெரிகுட். நானும் இப்படித்தான் சொல்லிட்டு இருக்கேன். யாரும் கேக்க மாட்டேங்குறாங்க.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////////”இத்தனை வருஷமா உயிர் வாழ்ந்து என்னத்தை சாதிச்சிருக்கே?” /////////


இவளவு நாட்கள் உயிர் வாழ்ந்து இந்த பதிவை படிக்க வந்ததே பெரிய சாதனைதானுங்க .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////அப்போதான் மனசுக்குள்ளே ஒரு சின்னக் குரல் 'குழந்தைங்க குழந்தைங்களா இருந்தா போதும்... குழந்தைங்கள்ளாம் என்ன பெரிசா சாதிக்கணும்'..////////////


அடேயப்பா இதுவேரையா !
கலக்கல் பகிர்வுக்கு நன்றி !

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ் !!!


பை தி பை இந்த கேக் எடுத்து மூஞ்சில அப்பி விளையாடுற க்ரூப்புல்ல நீங்களும் உண்டா?

சென்ஷி said...

:))

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முல்லை.

பாபு said...

happy birthday

அமைதிச்சாரல் said...

//வயசாகுதேன்னு ஃபீல் பண்ணலை...Because I am not. And probably, never will be.//

எதுக்கு ஃபீல் பண்ணணும்ங்கிறேன்???.. நான் கூட ஃபீல் பண்ணியதே இல்லை :-)). பண்ணவும் மாட்டேன்.

ஆனா.. நல்லாவே குமுறவெச்சிட்டீங்க. இப்ப நானும் தூங்கப்போறேன்..அதுக்கு முன்னால "ஆப்பி பத்டே ஆச்சி".கேக்கை பப்பு பூசிவிடுவா :-)))

குடுகுடுப்பை said...

அதனாலே, வயசாகுதேன்னு ஃபீல் பண்ணலை...Because I am not. And probably, never will be.
//

நீங்க சொல்ற்து சரிதான் அக்கா.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Karthik's Thought Applied said...

Wish u a very happy Bday....

G3 said...

//'குழந்தைங்க குழந்தைங்களா இருந்தா போதும்... குழந்தைங்கள்ளாம் என்ன பெரிசா சாதிக்கணும்'..
//

??!!!#$#%$^$^

Porandhanaalngaradhaala pozhachu ponga.. gummiya adutha postla vechikkarom :P

Appy Bday aachi :)))

☀நான் ஆதவன்☀ said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ் :)

ராமலக்ஷ்மி said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை.

@ அமுதா,

காலி பண்ணிடுங்க, பர்சை:))!

ப்ரியமுடன்...வசந்த் said...

:)

பிறந்தநாள் வாழ்த்துகள் முல்லை ...

KVR said...

பிறந்தநாள் வாழ்த்துகள் முல்லை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்//

http://thenkinnam.blogspot.com/2010/04/blog-post_6689.html

ஹை அப்ப தேன்கிண்ணத்துல சரியான பாடல் தான் ஒலிபரப்பப்பட்டுள்ளது முல்லை. வாழ்த்துக்கள்..

கோமதி அரசு said...

முல்லை,பிறந்தநாள் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்!!

என்றும் குழந்தைமனதுடன் இருக்க
ஆசிகள்!!

அஹமது இர்ஷாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

theja amma said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் -
thejamma

மாதவராஜ் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை. உங்களிடமிருந்து மேலும் மேலும் நல்ல எழுத்துக்கள் தொடர்ந்து வரட்டும்!

கையேடு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்ங்க

சின்ன அம்மிணி said...

//அதனாலே, வயசாகுதேன்னு ஃபீல் பண்ணலை..//

அதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்படி.:)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி!

கானா பிரபா said...

அதனாலே, வயசாகுதேன்னு ஃபீல் பண்ணலை...Because I am not. And probably, never will be. //

அஸ்கு புஸ்கு, இப்படி எல்லாம் சொல்லி சமாளிப்பிகேஷனா, செல்லாது செல்லாது,

இனிய பிறந்த நாள் வாத்துக்கள் ஆச்சி

திகழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

பதி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முல்லை !!!

//அப்புறம், 45 எல்லாம் ஒரு வயசா? இதுக்குப் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு! ;-) //

இந்த மாதிரி வயசை குறைச்சு சொல்லுறவங்களை எப்பவுமே கூட வச்சுக்கிட்டாத் தான் எப்பவுமே இளமையா உணரமுடியும்னு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவாங்க !! :-)

பா.ராஜாராம் said...

//'குழந்தைங்க குழந்தைங்களா இருந்தா போதும்... குழந்தைங்கள்ளாம் என்ன பெரிசா சாதிக்கணும்'..//

அதானே... :-)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை!

கண்ணகி said...

ஆப்பி பர்த்டடே முல்லை..

க.பாலாசி said...

//வேர்ட்ஸ்வொர்த் அப்படி சொல்லிக்க முடியுமான்னு கொஞ்சமாவது யோசிச்சியா?”//

ஆகா.... இப்டியெல்லாமா யோசிப்பீங்க... ???

வாழ்த்துக்கள்ங்க....

padma said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

எறும்பு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:)

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் :)

அன்புடன் அருணா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பூங்கொத்தோடு!

நேசமித்ரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நசரேயன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

சொல்ல மறந்துட்டேன் நரைத்த முடிக்கு டை அடிச்சா கொஞ்சம் வயசு குறைந்த மாதிரி இருக்கும்..

காமராஜ் said...

முல்லை...
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!

முகிலன் said...

இப்ப என்ன உங்களுக்கு ஒரு 60 வயசிருக்குமா? இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிக்கிட்டு..

எஞ்சாய் பண்ணுங்க வாழ்க்கையை...

:))))

பிறந்த நாள் வாழ்த்துகள் முல்லை.

மணிநரேன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..:)

இராமசாமி கண்ணண் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

காயத்ரி சித்தார்த் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை..

காலைலயே சொல்லனும்னு நினைச்சேன்.. நம்மூர்ல தான் கரண்ட்டுக்கும் நமக்கும் பூர்வ ஜென்ம பகையாச்சே.. :)

அகஆழ் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் முல்லை !!!

லதானந்த் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

காயத்ரி சித்தார்த் said...


காலைலயே சொல்லனும்னு நினைச்சேன்.. நம்மூர்ல தான் கரண்ட்டுக்கும் நமக்கும் பூர்வ ஜென்ம பகையாச்சே
//


கரண்ட்டுக்கும் காலைல வாழ்த்துச் சொல்றதுக்கும் என்ன சார் சம்பந்தம் , ஓ இவங்க தான் சன் டிவியில் பிறந்த நாள் சொல்ற அக்காவா?

ஆர்க்காட்டார் பேரவை
மின் ஒழிப்பு வாரியம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

Belated birthday wishes mullai :)