Thursday, April 22, 2010

மொசைக் ஆர்ட்

பப்புவின் பிறந்தநாளுக்கு வாங்கிய அலங்கார கலர் பேப்பர்கள் அடங்கிய பாக்கெட் ஒன்று இருந்தது. (bleeding paper தனியாகக் கிடைப்பதில்லையே இப்போதெல்லாம், ஏன்?) அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டச் சொன்னேன்.

தண்ணீரில் நனைத்தால் அது சாயம் போகுமென்று பப்புவுக்குத் தெரியாது. என்னச் செய்யப் போகிறோமென்று சொன்னதும்,'என்ன ஆகுமென்ற'ஆர்வத்தோடே வெட்டினாள். தண்ணீரைத் தொட்டு ஒவ்வொரு பேப்பர் துண்டுகளாக ஒட்டினாள்.


ஒரு குட்டித்தூக்கம்.

எழுந்துப் பார்த்த போது, காய்ந்த பேப்பர்கள் காற்றிலடித்துச் சென்றுவிட சாயங்கள் ஒட்டிய மொசைக் ஆர்ட் கிடைத்தது.

கேள்வி-பதில் கார்னர்:

உறவினர் ஒருவருக்கு வரும் ஞாயிறு திருமணம். பப்புவுக்கு அவர் முருகன் மாமா. ”முருகன் மாமா கல்யாணத்துக்கு போகணும்” என்று பேசிக்கொண்டிருந்தோம். இரண்டு நாட்களுக்கு முன்பு ஃபோன் செய்தவரிடம் பேசிக்கொண்டிருந்தாள் பப்பு. அவர் கல்யாணத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு

“கல்யாண கேர்ல் இருக்காங்களா?” - பப்பு

"இல்ல பப்பு..சனிக்கிழமைதான் வருவாங்க.." - அவர்

"அப்போ நீங்க மட்டும் கல்யாணத்துலே இருக்கீங்களா? கேர்லுக்கும் பாய்க்கும்தான் கல்யாணம் நடக்கும். நீங்க ஏன் தனியா கல்யாணத்துலே இருக்கீங்க?" - பப்பு

"அப்பாக்கிட்டே ஃபோனைக் கொடு.." - அவர்

சிறிது நேரம் கழித்து, பப்பு கேட்டாள்,

”எனக்கு கல்யாணம் நடந்தா என்னா ஆகும்?”

ஒரு செகண்ட் யோசித்துவிட்டு, புத்திசாலித்தனமாக சொல்வதாக என்னைநானே பாராட்டிக்கொண்டு சொன்னேன்.

”நீ ஆஃபிஸ் போவே, பப்பு”

“ஹேய், உனககு தெரியாது, கல்யாணம் நடந்தா எனக்கு பாப்பா பொறக்கும்”

(ஹப்பாடா....முன்னாடி வேறமாதிரி சொல்லி என்னை தர்மசங்கடப்படுத்திக்கிட்டிருந்தே,இப்போ நீயே புரிஞ்சுக்கிட்டே... ;-)... பைதிவே,பப்பு, இதெல்லாம் நான் உனக்கு சொல்லியே கொடுக்கலையே!)

20 comments:

நட்புடன் ஜமால் said...

கேள்வி கார்னர் - செம கார்னர் ... :)

ராமலக்ஷ்மி said...

//ஹேய், உனககு தெரியாது//

:))!

ஆர்ட் அருமை.

☀நான் ஆதவன்☀ said...

பப்பு வளர்கிறாளே மம்மி! :))

தமிழ் தொலைகாட்சிகளை பார்க்க விட்டாலே போதும் குழந்தைகளுக்கு எல்லா விசயமும் தெரிஞ்சுடும். அவ்வளவு கேவலமான நிகழ்ச்சிகள் தானே இப்பெல்லாம் வருது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பைதிவே,பப்பு, இதெல்லாம் நான் உனக்கு சொல்லியே கொடுக்கலையே!//

:))

சிலதெல்லாம் எப்படிதெரியும்ன்னு கேட்டா எனக்காவே தெரியும்ன்னு பெருமையா முகபாவனையோட வரும் ப்தில்..

வல்லிசிம்ஹன் said...

பப்பு ஆர்ட் காலரி வைக்கலாம் முல்லை . ரொம்ப அழகா இருக்கு.
நல்லவேளை இதோடு நிறுத்தினாள் பப்பு!!
எங்க வீட்ல ஒரு வாண்டு இருந்தது. அது எங்களோடு உட்கார்ந்து தூர்தர்ஷன் படமெல்லாம் பார்க்கும். ஒரு ஹிந்திப் படத்தில் காதலர்கள் பாடினார்கள். அடுத்த ஒரு மரம் பூச்சொரிவதைக் காண்பித்ததும்,அது தன் அம்மாவிடம் சொன்னது,'பாரு இந்த லேடி இப்ப வாஷ் பேசின்ல வாமிட் பண்ணும்'':)

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...

நான் முன்னம் கொடுத்த கருத்துரை வரவில்லையா...

ஜெகநாதன் said...

மொசைக் ஆர்ட் நல்ல சூட்சுமம்..
பப்புக் குட்டி நல்ல சூட்டிகை :)))

தாரணி பிரியா said...

பப்பு வளர்ந்துட்டே வர்றா ஆச்சி :). மொசைக் ஆர்ட் அழகா இருக்கு.

சின்ன அம்மிணி said...

கேள்வி பதில் ரசித்தேன்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

நசரேயன் said...

// சின்ன அம்மிணி said...
கேள்வி பதில் ரசித்தேன்

3:31 PM//

நானும்

கையேடு said...

மொசைக் ஆர்ட் கலக்கல்.

//இதெல்லாம் நான் உனக்கு சொல்லியே கொடுக்கலையே//

நண்பர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. "பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர் அல்ல, சமூகமும் ஆசிரியரும்தான்."

அம்பிகா said...

மொசைக் ஆர்ட் அழகு.
//இதெல்லாம் நான் உனக்கு சொல்லியே கொடுக்கலையே//
:-))

செல்வநாயகி said...

மொசைக் ஆர்ட் அழகு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))

கேள்வி பதில் கார்னர் - ஒன்னும் சொல்றதிக்கில்லை ;)

அமிர்தவர்ஷினி அம்மா said...

mosaic art சூப்பர், ஐடியா கொடுத்ததற்கு நன்றி.

Jeeves said...

:)) பாவம் நீங்க.. நிறைய பப்பு கிட்ட கத்துக்க வேண்டி இருக்கு.

கோமதி அரசு said...

பப்புவுன் கை வண்ணத்தில் உருவான ‘மொசைக் ஆர்ட்’ அருமை.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

"நான் வளர்கிறேனே மம்மி”
:)))

இரசிகை said...

:)