மொத்தம் 16 குட்டீஸ் - 3 வயதிலிருந்து 10+ வயது வரை!!
பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் - வாழ்த்துகளும்! :-)
இந்நேரம், ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும். )
அடுத்தது, குட்டீஸ் செய்ய வேண்டியது( தேவைப்பட்டால், பெற்றோர் உதவியுடன்)
1. வரையுங்கள்/பெயிண்டிங் செய்யுங்கள்
2. தங்கள் அன்பு நண்பருக்கு அனுப்புங்கள்
3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.
4. மடலிலோ அல்லது முகவரி பெற்று தபால் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உலகை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!
5. ரிப்பீட் - முதல் ஸ்டெப்பிலிருந்து!
குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!
என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-)
(அம்மாக்கள் வலைப்பூவிலும் வெளியாகியது.)
6 comments:
அழகான முயற்சி!! நன்றாகத் தொடரட்டும். சில வருடங்களில் எங்கள் மகனிற்கும் உதவியாக இருக்கும்.
மற்றொரு பூங்கொத்து முல்லை!
நல்ல முயற்சி..வாழ்த்துகள்...
குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!
]]
nice :)
//அன்புடன் அருணா said...
மற்றொரு பூங்கொத்து முல்லை!
//
Repeat!
Great going Mullai.
Best wishes to all the kutties!
:)
//////3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல. ///////
ஏலே மக்கா அறிமுகத்தோட அப்படியே ஐஸ்கிரீம் சேர்த்துட்டியல !
மிகவும் பயனுள்ள பதிவு அருமை . தொடருங்கள் வாழ்த்துக்கள் !
Post a Comment