Tuesday, April 13, 2010

கொலம்பஸ்..கொலம்பஸ்...

"(2-12 வயது) குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ்-க்கு பதிவு செய்ய விபரங்களுக்கு இங்கே செல்லவும்"


கம்(Glue) கூட வண்ணங்களைக் குழைத்து கம்பையிண்டு பண்ணி "கம்-பெயிண்டு" பண்றது (அப்புறம் பெயிண்டிங் பிரஷை எடுக்க நாங்க டக்காஃப் வார் நடத்தினது குடும்பக்கதை!), கம்-லே முதல்லே வரைஞ்சு அது காஞ்சதும் மேலே பெயிண்டிங் பண்றது...
இந்த மாதிரி நுண்கலைகளுக்கு அணுகவும் - "ஐடியாமணி" பப்பு!மேலே இருக்கிற படமும், கீழே இருக்கும் படமும் பப்புவின் கண்டுபிடிப்பு டெக்னிக்கில் வரையப்பட்டது. இந்த ப்ராசஸிலே என்ன வரைஞ்சோம்கிறதைதான் மேடம் மறந்துட்டாங்க - அட்ஜஸ்ட் ப்லீஸ்!


(இது சூரியனாம்! - கம் -லே வரைஞ்சு காய்ஞ்சதும் அது மேலே கலர்.)

இது மரம் . அப்லோடு பண்ணும்போது ரொடோட் ஆகிடுச்சு..கொஞ்சம் தலையை 45 டிகிரி கோணத்தில் காக்காய் போல வைத்துக்கொண்டு பார்க்கவும்...ஹிஹி!

தேஷ்னா, அர்ஷித் கைலாஷ், வர்ஷிணிக்கு கொடுக்கிறதுக்காக வரைஞ்சு, பையில் வைக்கிறதுக்கு முன்னாடி கிளிக்கியது. இதெல்லாம் என்னவா? என்னது இது சின்னப்புள்ளத்தனமா... கேட்டுக்கிட்டு..ஆர்ட்-னு சொன்னா அனுபவிக்கணும்..ஆராயக்கூடாது!
கட் பண்ணின ஸ்ட்ரா துண்டுகள்(20 ரூ பாக்கெட்!), ஐஸ் குச்சியை (50 குச்சிகள் 5 ரூபா!) உடைச்சு
அதிலே பெயிண்டை தொட்டு வரைஞ்சதுதான் இந்த பின்னவீனத்துவ மாடர்ன் ஆர்ட்!


அவளது பள்ளிக்கு இந்த வருஷத்தின் கடைசிநாள் இன்று . நாளையிலிருந்து விடுமுறை. அடுத்த வருஷத்திலேருந்து வெண்மதி வேற ஸ்கூலுக்கு போய்டுவான்னு ஒரே ஃபீலிங்ஸ்! உலகம் சின்னது பப்பு, சீக்கிரம் வெண்மதியை மீட் பண்ணலாம்! ஹாப்பி ஹால்ஸ், பேபி! :-)

15 comments:

அஹமது இர்ஷாத் said...

இஃகி இஃகி இஃகி........

ஆயில்யன் said...

//உலகம் சின்னது பப்பு, சீக்கிரம் வெண்மதியை மீட் பண்ணலாம்! //

ம் ஒ.கேய்ய்ய்ய் :)

//ஹாப்பி ஹால்ஸ//

அப்படின்னா என்னா ??

முல்ஸ் மாதிரி ஹால்ஸா?

சின்ன அம்மிணி said...

//இது சூரியனாம்! //

நான் சூரியன்னுதான் நிஜமாவே நினைச்சேன்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////அவளது பள்ளிக்கு இந்த வருஷத்தின் கடைசிநாள் இன்று . நாளையிலிருந்து விடுமுறை. அடுத்த வருஷத்திலேருந்து வெண்மதி வேற ஸ்கூலுக்கு போய்டுவான்னு ஒரே ஃபீலிங்ஸ்! உலகம் சின்னது பப்பு, சீக்கிரம் வெண்மதியை மீட் பண்ணலாம்! ஹாப்பி ஹால்ஸ், பேபி! :-) //////


நல்லவேளைக்கு முன்கூட்டியே சொன்னீங்க போங்க . பதிவு அருமை !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

☀நான் ஆதவன்☀ said...

மார்டன் ஆர்ட் நல்லா இருக்கு பாஸ் :)

பா.ராஜாராம் said...

:-)

//இது மரம் . அப்லோடு பண்ணும்போது ரொடோட் ஆகிடுச்சு..கொஞ்சம் தலையை 45 டிகிரி கோணத்தில் காக்காய் போல வைத்துக்கொண்டு பார்க்கவும்.//

//ஆர்ட்-னு சொன்னா அனுபவிக்கணும்..ஆராயக்கூடாது!//

பப்பு,வீட்டுக்குள்ளயே வச்சுருக்கடா எதிரியை. :-))

happy holidays baby!

இராமசாமி கண்ணண் said...

:)

Deepa said...

//கொஞ்சம் தலையை 45 டிகிரி கோணத்தில் காக்காய் போல வைத்துக்கொண்டு பார்க்கவும்.//
:)))LOL
ரொம்பக் குசும்பு தான் உனக்கு!

ப‌ப்புக்குட்டி! Happy Holidays...
உனக்குத் தாண்டா ஹாலிடேஸ். அம்மாவை நல்லா ட்ரில் வாங்கு ஓகே?!

SanjaiGandhi™ said...

//நாளையிலிருந்து விடுமுறை.//

வாழ்த்துகள் முல்லை :))

நிஜமா நல்லவன் said...

:))

அன்புடன் அருணா said...

/இந்த மாதிரி நுண்கலைகளுக்கு அணுகவும்/
அணுகிட்டோம்....ஃபீஸ் எவ்வ்ளோ????

முகிலன் said...

//நாளையிலிருந்து விடுமுறை//

ஆல் த பெஸ்ட்.

நசரேயன் said...

//"(2-12 வயது) குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்//

மனசளவிலே குழந்தையா இருக்கிறவங்களும் கலந்துக்கலாமா?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Jeeves said...

தெரியலைன்னா கேக்கனும். நீங்களா முடிவு பண்ணிக்கப்படாது. அந்த கருப்புக் கலர் கோடெல்லாம் போட்டது குதுரையாம். எங்கூட்டு பெரிய மனுஷி ஜெயஸ்ரீ கிட்ட கேட்டேன், அவங்க சொன்னாங்க


கருப்பு கலர்ல கோடு கோடா இருக்கிற படம் வந்து குதுரையாம். அதுக்கு கீழ இருக்கிறது ரெட் டொமாட்டாவாம்.

அதுக்கு கீழ இருக்கிறது ஃப்ராக்கு .. ஆனா அதுக்கு அப்புறம் என்னாருக்குன்னு தெரியலையாம் :(