
ஹூஹூ! வாழ்த்துகள் குட்டீஸ் - ஆர்வத்துடன் அனுப்பிய பெற்றோருக்கும்! குட்டீஸ் பேனா நண்பர்கள் - இதுவரை ஏழு குழந்தைகள் பதிவு செய்திருக்கின்றனர்.
2 வயதிலிருந்து 12 வயதுவரை இருக்கும் சிறுவர் சிறுமியர் - ஆர்ட்/வரைவதில் விருப்பம் கொண்ட பேனா நண்பர்கள் மூலமாக தங்கள் உலகை பரிமாறிக் கொள்ள விருப்பமிருப்பின் வருகிற வெள்ளிக்கிழமைக்குள்ளாக எனக்குத் தெரிவிக்கவும். (வயது வரம்பு முன்பு பத்து வயதுவரை என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது மாற்றியிருக்கிறேன். )
1. தங்கள் குழந்தையின் பெயர், வயதுடன் (மற்றும் gender preference இருந்தாலும்) mombloggers@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினால் நலம்.
2. பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் தங்கள் குழந்தைகளை பதிவு செய்யலாம்.
2. தங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற இன்னொரு குழந்தையுடன் மேட்ச் செய்து விபரங்களை வருகிற சனிக்கிழமை தங்களுக்கு மடல்மூலம் தெரிவிக்கிறேன்.
3. அடுத்தது, தங்கள் பேனா நண்பருக்கு வரையுங்கள். உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்.
4. மின்மடல் மூலமாகவோ அல்லது தபால்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பமும் வசதியும் சார்ந்தது. கூடவே, கடிதங்கள்அனுப்புவதும்.
5. நேரமும், விருப்பமுமிருப்பின், பேனா நண்பர் தங்களுக்கு அனுப்பியதை தங்கள் தளத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். அந்த சுட்டியை அனுப்பினால் மகிழ்வேன். அல்லது mombloggers@gmail.com முகவரிக்கு அனுப்பினால், ”அம்மாக்கள் வலைப்பூ”வில் பகிர்கிறேன்.
குழந்தைகளோடு நேரத்தை பகிர்ந்துக்கொள்வோம். டீவியிலிருந்து கொஞ்ச நேரம் திசைதிருப்புவோம். அவர்களுக்குள் இருக்கும் கற்பனைத் திறனை அறிவோம். அனைவருக்கும் நன்றிகள்!!
12 comments:
முயற்சி & குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் !
நல்லதொரு முயற்சி. வாழ்த்துகள்.
Good start mullai! A bouquet!!!!!
நல்ல முயற்சி, வாழ்த்துகள்
சந்தோஷமாயிருக்கிறது.
குழந்தைகளின் உலகம் விரிகிறது.
வாழ்த்துக்கள்.
பாஸ்..அந்த பட்டியலில் ரெண்டு பேர் மிஸ் ஆகுது..
1. ஆயில்யன் (8 3\4 வயது)
2. தமிழ் பிரியன் ( 7 1/2 வயது)
நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்! எங்கள் வீட்டிலும் ஒரு வாண்டு இருக்கு.. ஆனா நாம இருந்து ஆர்கனைஸ் செய்தால் தான் முடியும் போல இருக்கு.. :-)
நம்ம வாண்டுக்கு 1 1/4 வயசுதான் ஆவுது.. அடுத்த சம்மருக்கு சேத்துவிடலாம்
வாழ்த்துக்கள்!!!பேனா நண்பர்களாகச் சேர்ந்திருக்கும் குட்டீஸுக்கும் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் முல்லைக்கும்!
(சுவரிலும் தரையிலும் கிறுக்கும் ஓவியங்களையும் அனுப்பி வைக்கலாமா?
;-) எங்கள் வீட்டுக் குட்டி அது தான் செய்கிறாள்.)
good one boss
//பாஸ்..அந்த பட்டியலில் ரெண்டு பேர் மிஸ் ஆகுது..
1. ஆயில்யன் (8 3\4 வயது)
2. தமிழ் பிரியன் ( 7 1/2 வயது)//
பாஸ் எட்டு கழுதை & ஏழரை கழுதை வயசாகுன்னு சொல்லுவாங்களே? அந்த வயசா பாஸ்? :))
நன் முயற்சி
வளரட்டும் ஹாஜர் சேர்த்திடுவோம்
:)
குழந்தைகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Post a Comment