Monday, April 26, 2010

பப்பு vs கவிதா

பள்ளி விடுமுறை விட்டவுடன், பப்பு என்னைப் பற்றி அதிகமாக கேட்க ஆரம்பித்து விட்டதாக முல்லை சொன்னார்கள். நானும், 'ஒரு நாள் அவளுடன் விளையாட வருகிறேன்' என்று சொல்லி வையுங்கள் என்றேன். எதிர்பார்க்காமல் பப்பு என்னை தொலைபேசியில் அழைக்க, ஆச்சரியத்துடன், சந்தோஷத்துடனும் அவளுடன் பேச ஆரம்பித்தேன்.

இந்த குழந்தையை நான் சந்தித்தது 3 வயதாக இருக்கும்போது. முத்துலட்சுமியை சந்திக்க சென்ற போது முதல் முறையாக பார்த்தேன். அப்போதிருந்து அவளை எனக்கு தெரிந்திருந்தாலும், அன்று அவளுடன் பேசிய போது என்னுள் தோன்றியது.. "பப்பு வளர்ந்துவிட்டாள், தெளிவாக பல விஷயங்கள் பேசுகிறாளே.." என்ற ஆச்சர்யம்தான். குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள்.


போனில் அவள் பேசிய சில...

நீங்க இப்ப என்ன செய்யறீங்க.. ?
ஏன் எங்க வீட்டுக்கு வரல? எப்ப வருவீங்க..?
எங்க வீட்டுக்கு வர வழி தெரியுமா? (வழி தெரியும் என்ற பதிலுக்கு பிறகு)
எப்படி தெரியும்..?
யார் சொல்லிக்கொடுத்தா? எப்ப வழி தெரிந்து தனியா நீங்க வந்து இருக்கீங்க? ஆச்சியும் நானும் தானே உங்களை கூட்டுட்டு வந்தோம்.. (
மறக்க முடியுமா...எந்த லெஃப்ட் எந்த ரைட் சொல்லுங்க..பாப்போம்!!) எப்படி வரணும்னு சொல்லுங்க.. - என்று அவளின் சந்தேகம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

வெயில்ல வாரதீங்க. .வெயில்ல வெளியில போகக்கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா?
வெயில் போனவுடனே சாயங்காலம் வாங்க...

நான் புது விளையாட்டு எல்லாம் கத்துக்கிட்டு இருக்கேன், அது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? நான் அதை எல்லாம் உங்களுக்கு சொல்லித்தரேன்,


(இதுல கவனிக்க வேண்டியது "வாங்க போங்க" என்பது அவள் பேச்சில் மரியாதை சேர்ந்திருந்தது, முன்பு ஒருமையில் அழைப்பாள் முல்ஸ் க்கு தர்மசங்கமாக இருக்கும், என்னிடம் "சாரி கவிதா ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க.. :) )


நேற்று முன் தினம், ஒரு வழியாக பப்புவுடன் விளையாட சென்றுவிட்டேன். உடன் ஆயாவையும் பார்த்து பேச எனக்கு ஆசை. முல்ஸ் முன்னமே சொல்லியிருக்க, பப்பு எனக்காகவே காத்திருந்தாள். உள்ளே நுழையும் போதே..


”நீங்க இதுக்கு முன்னமே இங்க வந்தீங்களா” என்றாள்..

”இல்லப்பா இப்பத்தான் வரேன்”

”ஆச்சி நீங்க காலையில வருவீங்கன்னு சொன்னாங்களே..”

“ஓ... ஆனா நீந்தான் என்னை வெயிலில் வர வேண்டாம் னு சொன்ன...அதான் இப்ப வந்தேன்...”

உடனே அவளின் புது விளையாட்டை விளையாட என்னை அழைத்தாள். எடுத்து சென்ற கேக், சாக்லெட்-ஐ அவளே பிரிட்ஜில் வைக்க உதவி செய்தாள்.

பாயை விரித்து போட்டு, விளையாட்டு பொருட்களை கொண்டு வந்தாள். இருவரும் மண் சொப்பு வைத்து விளையாட ஆரம்பித்தோம். நடுவே ஆயாவிடம் கதை. முல்ஸ் எழுதிய "காப்பி" பதிவை பற்றி ஆயாவிடம் கேட்க ஆயா காப்பியை பற்றி விபரமாக சொன்னார்கள். ஆயாவிடம் என் கவனம் செல்லக்கூடாது என்பதில் பப்பு கவனமாக இருந்தாள்.

பிறகு எனக்கு விளையாட ஒரு பாப்பா பொம்மை எடுத்து வந்து கொடுத்தாள். பெயர் என்ன என்று கேட்டேன். ஏதோ ஒரு ஆண் குழந்தையின் (நீளமான) பெயரை சொன்னாள். நான் பெயர் பெரியதாக இருக்கிறது அதுவும் இது பெண் குழந்தை பொம்மை அதனால் பெண் பெயர் சொல்லு என்றேன்.

உடனே ஒரு குட்டி யோசனை. ஆனால் பெயர் எதுவும் சொல்லாமல்-

”அப்பன்னா என் பெயர் "குறிஞ்சி மலர்" பெரிய பெயரா இருக்கா?”

”ம்ம்.. ஆமா.. ஸ்கூல் ல எப்படி கூப்பிடறாங்க... குறிஞ்சி ன்னா மலர் ன்னா?”

”இல்லையே எல்லாருமே குறிஞ்சி மலர் தான் கூப்பிடறாங்க..”

”ஓ..நிஜமாவா. .அப்ப சரி.. பெரிய பெயரா அவங்களுக்கு தெரியல போல.. நானா இருந்தா குட்டி ஆக்கிடுவேன்.”

”அப்பன்னா என் பேரு பெரிய பேரா?”

”ம்ம்ம் ஆம்மா பெரிசா தான் எனக்கு தெரியுது...”


********

பப்பாளி பழம் கட் பண்ண சொல்லி, சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.

”அது எப்படி நீங்க வெட்டிக்கொடுத்தா இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு? சூப்பர் டேஸ்ட் சூப்பர் டேஸ்ட்.. இந்தாங்க சாப்பிட்டு பாருங்க....” (அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப் படறதுலே பப்பு என்னை மாதிரியே...)

ஆயா புருவத்தை உயர்த்தி, 'பேச்சை பாத்தியா' ன்னு சிரிச்சாங்க..


நானும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டு... ”அப்படியா?” என்றேன்..

”ஆமா அன்னைக்கு ஆச்சி கட் பண்ணாங்க டேஸ்டாவே இல்லையே..”

”கட் பண்றாதால டேஸ்ட் மாறாது பப்பு, சில பழம் ருசியா இருக்காது, சில பழம் நல்லா ரைப் ஆகி ருசியா இருக்கும் , அதனால் யார் கட் பண்ணாலும், இந்த பழம் டேஸ்டாத்தான் இருக்கும்”- என்றேன். (விளையாட்டுக்குச் சொல்றதையெல்லாமா சீரியஸா எடுத்துக்குவாங்க..ஹைய்யோ...ஹைய்யோ!)

***********

”உங்க வீட்டில விளையாட நிறைய பசங்க இருக்கு இல்ல.. அந்த பசங்களை எல்லாம் நீங்க தூக்குவீங்களா?”


”ம்ம்..மாட்டேன் ..நான் தூக்கினாலும் அதுங்க.. இருக்காது. .இறக்கி விடும் னு சொல்லும்..”


”ஏன் இறக்க சொல்லும்?”

”அதுங்களுக்கு நாம தூக்கினா பிடிக்காது... தூக்கிட்டா ஃபிரியா விளையாட முடியாது இல்லையா?”

”அந்த குழந்தைகள் எல்லாம் எவ்வளவு பெருசு?”

”2 குழந்தை உன்னை விட சின்னது... 2 குழந்தை உன்னை விட பெருசு...”

”அவங்க எல்லாம் ரொம்ப வெயிட்டா இருப்பாங்கன்னு தான் தூக்க மாட்டீங்களா?”

”ம்ம்ம்ம்..ஆமா வெயிட்டா இருந்தாலும் தூக்க முடியாது..”

”அப்ப நீங்க யாரை த்தான் தூக்குவீங்க.. ? நவீன் அண்ணாவை.. ? ஆயா வை? என்னை? ஆச்சியை?”

”யாரையுமே என்னால தூக்க முடியாது.. எல்லாரும் வெயிட். .வேணும்ன்னா உன்னை தூக்கலாம்..”

”ஆமா நான் கூட யாரையும் தூக்க மாட்டேன்..”


”நவீன் போட்டோல பாத்து இருக்க இல்ல.. அவனை என்னால தூக்க முடியாது... ஆனா அவன் என்னை தூக்கி போட்டுடுவான்...”


”நான் பாத்ததில்லையே... (ஒரு சடன் கோபம்)....அப்பன்னா நான் உங்க வீட்டுக்கு வரும் போது அவனை நாம தூக்கி போட்டுடலாம் ...”


***********

”ஆயா கால் தோல் எல்லாம் சுருங்கி இருக்கே.. எனக்கு எப்ப அப்படி ஆகும். ” (என்னோட கைகளையும் பேசியவாறே பார்க்கிறாள்)


"ஆயாக்கு வயசாச்சு அதனால் தோல் சுருங்கி இருக்கு.... உனக்கு என்ன சின்ன குட்டி தானே.. உனக்கு ஒன்னும் ஆகாது..”

”நான் ஆயா வானா சுருங்கிடுமா..? நான் எப்ப ஆயா வா ஆவேன்..”

”முதல்ல ஆச்சியும் உங்க அப்பாவும் ஆயா தாத்தா ஆவாங்க(என்னா வில்லத்தனம்!)... அதுக்கு அப்புறம் நீ ஆவ.. ஆனா அதுக்கு ரொம்ப வருஷம் இருக்கு....”

”ஆச்சி தான் எனக்கு ஃபிரண்டு.... அப்பா ஃபிரண்டு இல்ல...”

”ஓ ஏன்.. அப்பா ஃபிரண்டு இல்ல..”

”அது அப்படித்தான்..ஆச்சி மட்டும் தான் எனக்கு ஃபிரண்டு.. !!” (Yay!!!)

குறிப்பு : பப்புவுக்கு விடுமுறை ஆரம்பித்ததும் கடந்த வாரத்தின் ஒரு நாளில் 'அணில்குட்டி அனிதா' புகழ் கவிதா வீட்டுக்கு வந்திருந்தார். (நீண்டநாட்களுக்குப் பிறகு..இல்லையா கவிதா..?! :-) ) அவர் எழுதிய அனுப்பிய மடலே மேலே நீங்கள் வாசித்தது!நெருக்கடியான வேளைகளில் நான் சாய்ந்துக்கொள்ளத் தேடும் தோள்கள் அவருடையது - 'அவசர' மற்றும் 'திடீர்' உதவிக்கு அழைப்பதும் அந்தத் தோள்களிலிருந்து நீளும் கரங்களையே! (ஹேய்..கவிதா...கொஞ்சம் கவிதையா ட்ரை பண்ணியிருக்கேன்ப்பா....கண்டுக்காதீங்க...:-) ) நன்றியெல்லாம் சொல்லி உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

அப்புறம், அந்த ப்ராக்கெட்-குள்ள இருக்கிறதெல்லாம் என்னோட கமெண்ட்ஸுன்னு சொல்லியாத் தெரியணும்!

30 comments:

ஆயில்யன் said...

பதில் மரியாதைக்கு ஆச்சி சாக்லெட் செஞ்சு கொடுத்தாங்களாமே சொல்லவேஏஏஏஏஏஎயில்ல ! [அதை சாப்பிட்டதிலேர்ந்து யார்க்கிட்டயும் பேச கூட மாட்டிக்கிறீங்களாமே?] :)))))))))))

கவிதா | Kavitha said...

//(ஹேய்..கவிதா...கொஞ்சம் கவிதையா ட்ரை பண்ணியிருக்கேன்ப்பா....கண்டுக்காதீங்க...:-) ) //

அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூப்பிடற மாதிரி எழுதிட்டு.. கவிதையாம்..(சொன்னாத்தான் தெரியுது) கடவுளே இந்த கொடுமையெல்லாம் யாரும் கேக்கவே மாட்டாங்களா?

கவிதா | Kavitha said...

//பதில் மரியாதைக்கு ஆச்சி சாக்லெட் செஞ்சு கொடுத்தாங்களாமே சொல்லவேஏஏஏஏஏஎயில்ல ! [அதை சாப்பிட்டதிலேர்ந்து யார்க்கிட்டயும் பேச கூட மாட்டிக்கிறீங்களாமே?] :)))))))))))//

ஆச்சி வீட்டில் இல்லைன்னு கன்ஃபார்ம் ஆ தெரிஞ்சப்பிறகு தான் போனேன் ஆயில்ஸ்.. சோ.. எனக்கு நோ டேமேஜ்..

அடுத்து - இந்த சாக்late, ஆம்பூர் பிரியாணி எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம் தருவேன்னு சொல்லுவாங்க. .ஆனா தரமாட்டாங்க... !!

கவிதா | Kavitha said...

//(அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப் படறதுலே பப்பு என்னை மாதிரியே...) //

எங்க கண்ணை கொஞ்சம் மூடுங்க.. லைட்டா !@#$%^^&*!@#@#$$% !

கவிதா | Kavitha said...

//(மறக்க முடியுமா...எந்த லெஃப்ட் எந்த ரைட் சொல்லுங்க..பாப்போம்!!) //

அதை முதல்ல முன்னூறு தரம் நீங்க நோட் புக் ல எழுதுங்க... உங்களுக்கே ஒழுங்கா சொல்லதெரியல... இதுல என்னையவா? நாங்க எல்லாம்...
........................
வேணாம் எல்லாருக்கும் என்னை பத்தி அல்ரெடி தெரியும்.. :) அதனால விட்டுடறேன்..

கவிதா | Kavitha said...

//நேற்று முன் தினம், ஒரு வழியாக பப்புவுடன் விளையாட சென்றுவிட்டேன். //

ஏன்ப்பா போனவாரம் எழுதி அனுப்பினது ப்பா ..இதை கூட எடிட் செய்யாம போட்டு வச்சி இருக்கீங்க..?!!

கவிதா | Kavitha said...

//(விளையாட்டுக்குச் சொல்றதையெல்லாமா சீரியஸா எடுத்துக்குவாங்க..ஹைய்யோ...ஹைய்யோ!)
//
ஆமா ஆச்சி கட் பண்ணி கொடுத்தா கேவலமா இருக்கும் னு பப்பு சீரியாஸா த்தான் சொன்னா .. நான் தான் எங்க பப்பாளி கட் பண்ண ஒவ்வொரு தரமும் என்னை கூப்பிட போறான்னு ஒரு பயத்துல உங்களுக்கு சப்போர்ட்டு பண்ணேன் பாருங்க என்னை சொல்லனும்..!!

கவிதா | Kavitha said...

//அப்புறம், அந்த ப்ராக்கெட்-குள்ள இருக்கிறதெல்லாம் என்னோட கமெண்ட்ஸுன்னு சொல்லியாத் தெரியணும்!//

ம்ம்ம்ம்ம்ம்...கவனிச்சிக்கிறேன்..!!

சின்ன அம்மிணி said...

//”நான் பாத்ததில்லையே... (ஒரு சடன் கோபம்)....அப்பன்னா நான் உங்க வீட்டுக்கு வரும் போது அவனை நாம தூக்கி போட்டுடலாம் ...”
//

பப்பு, நல்லா சாப்பிட்டு ஸ்ட்ராங்கா ஆகணும். அப்பதான் அதெல்லாம் நடக்கும்.

நல்ல அனுபவந்தான் கவிதா :)

ஹுஸைனம்மா said...

அது ஏன் இந்தியா Vs. பாக் மாதிரி "பப்பு vs கவிதா"?? பப்பு with கவிதான்னு எழுதிருந்தா நல்லாருக்கும்.

//குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள்.//

ம்ம்.. ஆமா..

V.Radhakrishnan said...

அழகிய கவிதை சோலை.

நட்புடன் ஜமால் said...

ஒரு சடன் கோபம்) - விழிகள் விரிய ...

நட்புடன் ஜமால் said...

ஆயாவிடம் என் கவனம் செல்லக்கூடாது என்பதில் பப்பு கவனமாக இருந்தாள்.
]]

ஹா ஹா ஹா ...

பா.ராஜாராம் said...

கவிதையான இடுகை முல்லை.

//”ஆச்சி தான் எனக்கு ஃபிரண்டு.... அப்பா ஃபிரண்டு இல்ல...”//

ஏன்னா...அப்பா பிரன்ட்ல(front) இல்ல.அப்படித்தானே பப்பு? :-)

பா.ராஜாராம் said...

ஒஹ்..

ஆச்சியும் பிரன்ட்ல இல்லையா?

நான்தான் தப்பா புரிஞ்சுட்டேன்.சாரிடா பப்பு.

கன்னத்துல போட்டுக்கிட்டேன்.சரியா? :-)

மாதேவி said...

மழலை அமிர்தம்.

”அது எப்படி நீங்க வெட்டிக்கொடுத்தா இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு?"

அம்மாவுக்கு வெட்டத்தெரியலை பப்புதான் பழக்கணும் :)))

கோமதி அரசு said...

கவிதா,பப்பு நட்பு வாழ்க!

முல்லை,கவிதா நட்பு வாழ்க!!

கவிதா | Kavitha said...

//கவிதையான இடுகை முல்லை.//

ராஜாராம் சார், அதை எழுதினது முல்லை இல்லைங்க.. கவிதாங்க.. ..

முன்னமே அவங்க கவிதைன்னு எதையோ சொல்லி கன்பியூஸ் செய்து இருக்காங்க.. நீங்க வேறையா?

கவிதா | Kavitha said...

//கன்னத்துல போட்டுக்கிட்டேன்.சரியா? :-)//

பத்தாதுங்க.. ஒரு 2 மணி நேரம் முட்டி போடுங்க...


பப்பு பேரவை
மடிப்பாக்கம் & வேளச்சேரி கிளை

கவிதா | Kavitha said...

//அழகிய கவிதை சோலை.//

பப்பு வும் கவிதா வும் இருந்தாவே அப்படித்தாங்க...

குறிப்பா அங்க ஆச்சி இல்ல.. !!

கவிதா | Kavitha said...

//ஒரு சடன் கோபம்) - விழிகள் விரிய ...//

அட ஆமாம்.. கூடவே ஒரு கூர்மையும் பார்வையில் இருந்தது.. !! :)

கவிதா | Kavitha said...

//கவிதா,பப்பு நட்பு வாழ்க!

முல்லை,கவிதா நட்பு வாழ்க!!//

:) நன்றிங்க..

(கண்ணு வைக்கற மாதிரியே இருக்கு கோமதி அரசு காலடிமண்ணை எடுத்து 3 பேரும் சுத்தி போட்டுக்கனும் முதல்ல...)

ராமலக்ஷ்மி said...

//”ஆமா அன்னைக்கு ஆச்சி கட் பண்ணாங்க டேஸ்டாவே இல்லையே..”//

//விளையாட்டுக்குச் சொல்றதையெல்லாமா சீரியஸா எடுத்துக்குவாங்க..ஹைய்யோ...ஹைய்யோ!)//

:)))))!

பா.ராஜாராம் said...

//ராஜாராம் சார், அதை எழுதினது முல்லை இல்லைங்க.. கவிதாங்க.. .. //

கவிதையான இடுகை,என்றுதானே சொல்லியிருக்கேன்.இங்கு கவிதாவின் எழுத்து சைலென்ட்தானே மக்கா.(உஷ்...எப்படியெல்லாம் கிளம்புறாய்ங்கியா) :-)

சரிங்க...

கவிதையான எழுத்து கவிதா.

அப்ப இடுகை கவிதை இல்லையா?என முல்லை கிளம்பாமல் இருக்க,எல்லாம் வல்ல ஆஞ்சனேயரை வேண்டுகிறேன். :-)

//பத்தாதுங்க.. ஒரு 2 மணி நேரம் முட்டி போடுங்க...//

:-))

சவுதி அரேபியா பப்பு பேரவை தற்காலிகமாக கலைக்கப்பட்டது.(முட்டில்லாம் போட சொல்றாய்ங்கையா பேரவைல) :-)

க.பாலாசி said...

குழந்தைகள் உலகத்த படிக்கும்போதுகூட சுகமாத்தான் இருக்குங்க....

SanjaiGandhi™ said...

ஹ்ம்ம்.. பப்புக்கு ஓசில அணில் பிரியாணி காத்துட்டு இருக்குன்னு சொல்லுங்க :)

நசரேயன் said...

பப்பு கிட்ட பலப் வாங்க இன்னொரு ஆள் சிக்கிட்டு போல இருக்கு

கோமதி அரசு said...

கவிதா என்னுடைய காலடி மண் வேண்டுமா?
அப்ப அமெரிக்கா வாங்க .

மணிநரேன் said...

இடுகைக்கும், பா.ரா-வின் பின்னூட்டத்திற்கும் ......:)

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...

பக்கத்தில் உட்கார்ந்து ரசித்தது போல் இருந்தது...