Thursday, April 08, 2010

குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ்

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து நான் வந்தால் போதும்..கதவை திறக்க ஓடி வருவாள். உள்ளே நுழையும் முன், ”ஆபிஸிலே என்ன சாப்பிட்டே, லஞ்ச் பாக்ஸ்லே இருந்ததையெல்லாம் ஃபுல்லா சாப்பிட்டியா” என்று அவளிடம் விசாரணை நடப்பதுபோல என்னிடமும் விசாரணை நடத்துவாள். சென்ற வாரத்தில் ஒரு நாள் உள்ளே நுழைந்த என்னை கண்டுக்கொள்ளாமல், அவளது பையை எடுப்பதும் எதையோ எடுத்துப் பார்ப்பது பின் மறைத்து வைத்துக்கொள்வதுமாக இருந்தாள்.

'எனக்கும் காட்டு பப்பு, என்னது அது' என்றதற்கு 'நான் உன் ஃப்ரெண்ட் இல்ல, தேஸ்னா ஃப்ரெண்ட்” என்று மறைத்து வைத்துக்கொண்டாள். கலர்கலராக ஒரு பேப்பரில் ஏதோ வரைந்திருந்தது. ரொம்ப கேட்டால் ஓவராக பிகு பண்ணிக் கொள்வாள் என்று லூசில் விட்டுவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து 'நான் உனக்கு மட்டும் காட்டறேன், அப்பாக்கு கிடையாது' என்று சொல்லிவிட்டு காட்டினாள். ஒரு அட்டையில் கேட்டர்பில்லர், மரம், பூ, தென்னை மரம் என்று குட்டி குட்டியாக படங்கள் வரைந்து வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. தேஷ்னா, பப்புவுக்குத் தந்ததாம் அது. அவங்க அப்பா வரைஞ்சதும் தேஷ்னா கலரடிச்சு பப்புவுக்கு கிஃப்ட் கொடுத்தாளாம்.

வீட்டிலிருக்கும் பழைய டைரிகள் எல்லாம் இப்போது பப்பு வசம். எழுதுவது, வரைவது, பெயிண்டிங் அப்புறம் கிழிப்பது என்று எல்லாவற்றும் எளிது. திடீரென்று பேப்பர் கேட்கும்போது தேடி அலைய தேவையில்லை. அன்றிரவு படுக்கையில் பார்த்தால் பாதி படுக்கையை டைரியிலிருந்து கிழித்த பேப்பர்கள் நிறைத்திருந்தது. டைரி முன் அட்டையும் பின் அட்டையுமாக இளைத்திருந்தது. 'பப்பு என்னது இது..ஏன் இப்படி கிழிச்சு வைச்சிருக்கே' என்றதற்கு நாளைக்கு தேஷ்னாவுக்கு தருவதற்கு இவள் வரைந்துக் கொண்டிருக்கிறாளாம். எல்லாவற்றிலும் ஏதேதோ கிறுக்கல்கள். பேனாவால், க்ரேயான்ஸ்-ஆல்... 'அய்யோ..இதை எப்போ க்லீன் பண்ணி எப்போ படுக்கிறது' என்று ஆயாசமாக இருந்தது.

”போதும்,எடு பப்பு” என்று கெஞ்சியதற்கு பிறகு பெரிய மனசு பண்ணி எல்லாவற்றையும் அடுக்கி வெளியே எடுத்துச்சென்றாள். அடுத்த நாள் காலை லஞ்ச்பாக்ஸ் வைக்க பையை திறந்தபோது அந்த பேப்பர் கட்டுகள் - கலை கல்வெட்டுகள் பையை நிறைத்திருந்தன. இரவு பையில் வைத்துச் சென்றிருக்கிறாள் போல.

இது இப்போது தினமும் நடக்கும் வழக்கமாகிவிட்டது. தினமும் ஏதாவது பேப்பர் கொண்டு வருவதும், இவள் ஏதாவது ஆர்ட் ஒர்க் செய்து எடுத்துச் செல்வதுமாக! எல்லாம் தேஷ்னா,சுதர்சன்,கீர்த்தி, அர்ஷித் கைலாஷ்-க்கு கொடுப்பதற்காம். க்ரூப் இப்போ பெரிசாகிடுச்சுன்னு நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் எனது இந்த ஐடியாவிற்கு வித்திட்ட தேஷ்னாவிற்கு ஒரு தேங்ஸ்! :-)

இந்த ஐடியா ஒன்றும் புதிதில்லை. pen friends என்ற பெயரில் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிமுகமானதுதான்.

இதே பேனா நண்பர்கள் தங்களது டிராயிங் மற்றும் பெயிண்டிங்குகள், வண்ணங்கள் மூலம் தங்கள் உலகை பரிமாறிக்கொண்டால் எப்படி இருக்கும்?
அதுவும் குட்டீஸ்?!

ஒரு கடிதமாக இருக்கலாம் அல்லது புதிதாக கற்றுக்கொண்ட வார்த்தையாக இருக்கலாம் ஏன் கதையாகக் கூட!

உங்களுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் பத்து வயதிற்குள் குட்டீஸ் இருந்தால் எனக்கு ஒரு மடலிடுங்கள். ”குட்டீஸ் பேனா நண்பர்கள்” என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு, தங்கள் குழந்தையின் பெயர்,வயதுடன் மின்மடலிடுங்கள்.மேலும் , gender preference இருந்தாலும் தெரிவியுங்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை வரை இந்த ஆஃபர் உண்டு. எத்தனை பேர் சேர்கிறார்கள் என்பதையும் குட்டீஸின் வயதைப் பொறுத்தும் கொண்டு மேட்ச் செய்து உரியவர்களிடம் தெரிவிக்கிறேன்.அப்புறம் என்ன..குட்டீஸ்-கள் டிராயிங்குகளை/
கடிதங்களை ஸ்கேன் செய்து மின்மடல் மூலம் பரிமாறிக்கொள்ளலாம்..அல்லது முகவரிகளைப் பெற்றுக்கொண்டு கடிதங்களாகவும்(surface mail) பரிமாறிக் கொள்ளலாம்..அது உங்கள் வசதி! என்ன சொல்றீங்க?

பதிவரின் குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாசகரின் குழந்தையாகக் கூட இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் குட்டீஸுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால், டிராயிங்/கடிதங்களை அனுப்பவும் பெறவும் ஆர்வமிருந்தால் mombloggers@gmail.com என்ற ஐடிக்கு மடலிடுங்கள். அடுத்த சனிக்கிழமை அறிவிப்புகள் வெளியாகும்.

இன்னும் வேறு ஐடியாக்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

ஒன்றரை மாசம் லீவு..எப்படியாவது பொழுதை போக்கணும் இல்லே.. எது எப்படியாயினும், தேஷ்னாவுக்கும் பப்புவுக்கும் எனது அன்பும் நன்றிகளும்!
(Cross posted in ammaakalin valaipoo too!)

16 comments:

வல்லிசிம்ஹன் said...

peran allowed?he is only 3 and quarter:)

முகிலன் said...

அப்பாக்களும் அனுப்பலாமா? இல்லை அம்மாக்கள்/பாட்டிகள் மட்டும் தானா?

சந்தனமுல்லை said...

வல்லியம்மா தாராளமா அனுப்பலாம். :-)

முகிலன் - அப்பாக்கள்,தாத்தாக்களும் குட்டீஸை என்ரோல் பண்ணலாம்! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல முயற்சிப்பா..

இரசிகை said...

very good idea...!

vaazhthukal..:)

விக்னேஷ்வரி said...

அவளிடம் விசாரணை நடப்பதுபோல என்னிடமும் விசாரணை நடத்துவாள்.

பேப்பர் கட்டுகள் - கலை கல்வெட்டுகள் பையை நிறைத்திருந்தன. //

ரசித்தேன்.

வாசகரின் குழந்தையாகக் கூட இருக்கலாம். //
அது யாருங்க வாசகர்? ;)

நல்ல ஐடியா. குட் வொர்க் முல்லை.

அம்பிகா said...

நல்ல முயற்சி முல்லை. வாழ்த்துக்கள்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அடேயப்பா கலக்கல் !. அருமையான யோசனைதான்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நல்ல ஐடியா!

ஜெயந்தி said...

குழந்தைகளுக்கான விளையாட்டு நல்ல முயற்சி! பாராட்டுக்கள்!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ரைட்டு..:)

கலை said...

மிகவும் நல்லதொரு முயற்சி சந்தன முல்லை. ஒரு குட்டியை நானும் பதிவு செய்யலாம்னா, 11 வயசாச்சே :)

அபி அப்பா said...

nattu one seat pls!

அமைதிச்சாரல் said...

நல்ல முயற்சி முல்லை.. பப்புவோட கல்வெட்டுகளை இருட்டடிப்பு செய்தது ஏனோ!!! நாங்க நிறைய ரசிக,ரசிகைகள் இருக்கோம்ப்பா...

ஆயில்யன் said...

ஹம்ம்ம்ம்!

சந்தனமுல்லை said...

நன்றி முத்து!

நன்றி ரசிகை..:-)


நன்றி விக்கி...

நன்றி அம்பிகா அக்கா


நன்றி பனித்துளி சங்கர்


நன்றி சாந்தி லட்சுமணன்

நன்றி ஜெயந்தி..

நன்றி ஷங்கர்

நன்றி கலை..என்ன பெரிய ஹார்ட் & ஃபாஸ்ட் ரூல்...:-) ருல்ஸே பிரேக் பண்றதுக்குதானே...கண்டிப்பா அனுப்புங்க..12 வயசுக்குள்ள-ன்னு மாத்திக்கலாம்..Glad to have your Kutty angel too! :-)

நன்றி அபி அப்பா


நன்றி அமைதிச்சாரல், எடுத்து வச்சிருக்கேன்..சீக்கிரம் போடறேன்..என் கண்ணுலே கூட காட்டாம ஸ்கூலுக்கு கொண்டு போறாங்க மேடம்..என்ன பண்றது..:-)