Thursday, April 29, 2010

பப்புவின் வானவில்”ஆனந்தியின் வானவில்” என்ற கதையை படித்துக்கொண்டிருந்தோம். ஆனந்தி வானவில்லை பார்க்க தோட்டத்திற்கு வருவாள். வானவில்லின் வர்ணங்களை எடுத்து தோட்டத்து பூக்களுக்கும், செடிகளுக்கும்,வண்ணத்துப் பூச்சிகளுக்கும்,சூரியனுக்கும் கொடுப்பாள். இதுதான் கதை.

எல்லாப் பக்கங்களிலும் வானவில் கண்ணைப் பறிக்கும். 'ஆனந்தி'என்று சொல்லாமல், 'பப்பு' என்று மாற்றி படிக்கும்படி சொல்லுவாள். அவளே கற்பனை வானவில்லிருந்து வண்ணங்கள் எடுத்து அடிப்பதாக ஆக்‌ஷன் வேறு.'வானவில் செய்லாமா' என்று இருவரும் ப்லீடிங் பேப்பரை வெட்டினோம். வானவில் போல வரையத்தான் (வளைச்சு..வளைச்சு) கோடுகள் போட்டேன். நல்லவேளையாக பப்பு அந்த கோடுகளை ஃபாலோ செய்யாமல், மேலே மேலே ஒட்டினாள்.நடுநடுவே, ஒவ்வொரு வண்ணக்காகிதம் ஒட்டும்போதும், “ஹவ் மெனி கலர்ஸ் ஆர் தேர் இன் த ரெயின்போ” என்ற பாடலை பாடிக்கொண்டாள். (என்னையும் கூடவே பாட சொன்னாள்!!பொது நலன் கருதி..)முடிவில், சிவப்புக்கு இடமில்லாமல் போகவே, ஓரத்தில் மட்டும் ஒட்டினாள். ஒன்றரை மணிநேரம் பொழுதுபோக்குக்கு இந்த வானவில் க்யாரண்டி!

28 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

good idea

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் ரசித்தேன் . பகிர்வுக்கு நன்றி !

அமுதா said...

அழகான வானவில்

ராமலக்ஷ்மி said...

மிக அருமை பப்பு.

//சிவப்புக்கு இடமில்லாமல் போகவே, ஓரத்தில் மட்டும் ஒட்டினாள்//

அதுதான் இன்னும் அழகு:)!

அம்பிகா said...

\\'ஆனந்தி'என்று சொல்லாமல், 'பப்பு' என்று மாற்றி படிக்கும்படி சொல்லுவாள். அவளே கற்பனை வானவில்லிருந்து வண்ணங்கள் எடுத்து அடிப்பதாக ஆக்‌ஷன் வேறு.\\

அழகு...வெரிகுட் பப்பு..!

அமைதிச்சாரல் said...

வானவில் க்யூட்டா இருக்கு.

சின்ன அம்மிணி said...

படத்தில இருக்கமாதிரி பூனைக்குட்டி ஒண்ணும் பப்புவுக்கு வாங்கிக்குடுங்க

ஆயில்யன் said...

//ராமலக்ஷ்மி said...

மிக அருமை பப்பு.

//சிவப்புக்கு இடமில்லாமல் போகவே, ஓரத்தில் மட்டும் ஒட்டினாள்//

அதுதான் இன்னும் அழகு:)!///


அக்கா சொன்னதுதான் கரீக்ட்டு :)

ஆயில்யன் said...

//வானவில் போல வரையத்தான் (வளைச்சு..வளைச்சு) கோடுகள் போட்டேன்///

முதல்ல ஒழுங்கா அழகா கோடு போடறது எப்படின்னு கத்துக்கோங்க பாஸ் அரைவட்டம் அடிக்க தெரியல என்னமோ ஆம்பூருக்கும் வடலூருக்கும் ரோடு போட்ட மாதிரி இருக்கு !

ஹுஸைனம்மா said...

அழகு வானவில்!!

பா.ராஜாராம் said...

சூப்பர்டா பப்பு.

//(என்னையும் கூடவே பாட சொன்னாள்!!பொது நலன் கருதி..)

ரிஸ்க் எடுத்துருக்க பப்பு. :-)

நட்புடன் ஜமால் said...

நல்ல கிரியேட்டிவிட்டி :)

? said...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக்கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில், ஹாட் சிப்ஸ் அருகில், சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குறைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குறைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குறைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குறைஞர் கூட்டமைப்பு.


ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குறைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

மாதேவி said...

பப்புவின் வர்ணவானவில் அழகு.

கோமதி அரசு said...

பப்புவின் வானவில் அழகு.

இராமசாமி கண்ணண் said...

அழகான வானவில்

அன்புடன் அருணா said...

ஒரு வானவில் போல
உன் வாழ்வினில் வந்தாள்!

நசரேயன் said...

//(என்னையும் கூடவே பாட சொன்னாள்!!பொது நலன் கருதி..)//

உங்க பாட்டை கேட்ட உடனே எல்லாரும் ஏரியா வை விட்டு காலி பண்ணிட்டு ஓடி இருப்பாங்களே?

டம்பி மேவீ said...

nice :)

V.Radhakrishnan said...

வெகு அருமை. பப்புவின் கை வண்ணத்தில் வானவில் கொள்ளை அழகு.

naathaari said...

ப்புப்புவின் கிரியேட்டிவிட்டி நம்பமுடியாத அளவுக்கு வளர வாய்ப்பளிக்கும் முல்லைக்கு நன்றி
பப்பு ரசிகர்மன்றம்
தமிழ் மாநில தலைமயகம்

இரசிகை said...

AZHAGU...!

அமைதிச்சாரல் said...

//ரிஸ்க் எடுத்துருக்க பப்பு.//

ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் பப்புவுக்கு ரஸ்க் சாப்புடுறமாதிரி :-)))))))

KVR said...

good one. creative....

விந்தைமனிதன் said...

\\'ஆனந்தி'என்று சொல்லாமல், 'பப்பு' என்று மாற்றி படிக்கும்படி சொல்லுவாள். அவளே கற்பனை வானவில்லிருந்து வண்ணங்கள் எடுத்து அடிப்பதாக ஆக்‌ஷன் வேறு.\\

ரசித்தேன். குழந்தையே ஒரு வானவில்தான்.. இல்லையா?

நானானி said...

பப்புவின் கைகளால் வெட்டி ஒட்டிய வானவில் அழகு. வளர்க இத்திறமைகள்.

வல்லிசிம்ஹன் said...

Orijinal rainbow vai vida azhakaa irukku. kalakkittaanga PAPPU.

தீஷு said...

வானவில் சூப்பர்..