பப்புவுக்கு சமீப காலமாக ஆச்சர்யமூட்டும் விஷயங்கள், வயிறு, இதயம்,மரணம் மற்றும் சாமி.வயிற்றில் ஒரு மிக்ஸி இருப்பதாகவும் அது இடையறாது அரைப்பதாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறாள். யோகா செய்யும்போது தலைகீழாக நின்றால், மிக்ஸி இதயத்தின் அருகில் வந்து முட்டிவிட்டால் செத்துவிடுவோமே என்றெல்லாம் சந்தேகப்படுகிறாள். ஓரளவுக்குப் புரிய வைத்தப்பிறகும், வயிற்றில் இருக்கும் மிக்ஸி இன்னும் ஓடுவதை நிறுத்தவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, பப்புவுக்கு வந்த கனவில், வானம் கீழே, தரைக்கு வந்திருக்கிறது.வானம் தரைக்கு வந்ததும், மேகங்களும் கீழே வந்துவிட்டன. மேகத்திலிருந்து சாமியும் இறங்கி தரைக்கு வந்திருக்கிறார். பள்ளியில் ப்ரேயர் முடிந்ததும் கைகளைக் கூப்பி சாமி கும்பிடச் சொல்வார்கள் போல. அதிலிருந்து இந்த கனவு ஆரம்பித்திருக்கலாம்...
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மரண ஊர்வலத்தை தெருவில் பார்த்திருக்கிறாள். அதிலிருந்து பலவிதக் கேள்விகளும், குழப்பங்களும் அவளை வாட்டி எடுக்கின்றன. இதயம் துடிக்காவிட்டால், மூச்சு விடாவிட்டால் மரணம் என்பது முன்பே தெரியும் என்றாலும் எந்த வயதில், எப்படி, ஏன் என்று பல கேள்விகள்,கவலைகள். அதில் ஒன்று, அவளுக்கு முன்பே நான் செத்துவிடுவேனா என்பது... அவளை விட்டுவிட்டு நான் இறக்க மாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறேன். வயதானால்தான் இறந்துவிடுவார்கள் என்றும் சொன்னேன். ஆயா இறந்துவிடுவார்களா என்று உடனே அடுத்த கவலை வந்துவிட்டது, அவளுக்கு. (வருமுன் காப்போம்ன்றதே என்கிட்டே கிடையாது, எப்போதான் கத்துக்கப்போறேனோ!!) இல்லை, நூறு வயது வரைக்கும் இருப்பார்கள் என்றாலும் ஆயா ஒன் ஹண்ரட் அன்ட் ஒன்..... தாண்டி இருக்க வேண்டும் என்றாள். ஆயாவும் சரியென்று சொல்லியிருக்கிறார்கள்.
அன்றிரவு, இரவு ஆயா மருந்துண்ணும் வேளையில், அருகில் வந்து நின்றுக்கொண்டு 'ஆயா, நீங்க செக்க மாட்டீங்க, நான் சாமிக்கிட்டே வேண்டிக்கிட்டேன்' என்று சொல்லியிருக்கிறாள்.
இப்படியாக, சாமி பப்புவை சுற்றிவர ஆரம்பித்திருக்கிறது!
Tuesday, February 22, 2011
Monday, February 21, 2011
மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்; மரத்தை வெட்டியவன்...?
தூர்தர்ஷனில் மரத்தை காப்பாற்ற ஒரு விளம்பரம் வரும்.ஒரு சிறுமி மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு வெட்ட விடவே மாட்டாள். நானும் அப்போது சிறுமியாக இருந்ததால், எங்காவது மரம் வெட்டினால் அச்சிறுமியைப் போல செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். பெரும்பாலும், மின்சார வாரியத்திலிருந்து வந்து எங்கள் தெருவிலிருக்கும் தூங்குமூஞ்சி மரங்களின் கிளைகளை சீவிவிட்டு செல்வார்கள். அப்படி உண்மையாகவே மரங்களைக் காப்பதற்காக நடந்த சிப்கோ இயக்கத்தை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.
தற்போது, ஐடியா மொபைலை உபயோகித்து மரங்களை காக்க விளம்பரங்கள் வருகின்றன. 'மரம் வளர்ப்போம்', 'ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினால் வீட்டுக்கே மரக்கன்று வரும்', 'மரம் வளர்ப்பதை ஊக்குவிப்போம்' என்று சமீப காலங்களில் அதிகமாக மரம் வளர்ப்பதைப் பற்றி விளம்பரங்களைக் காண முடிகிறது. சமூக ஆர்வலர்கள், இத்தனை மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன் என்றும் எத்தனை மரம் நடும் கேம்பெய்ன்களில் பங்கேற்றிருக்கிறேன் என்றும் புள்ளிவிவரப் பேட்டிகள் தருகிறார்கள். பார்ப்பவர்களை, ஏதோ அவர்கள்தான் காடுகளை அழித்து விட்டதைப் போல குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்கிறார்கள்.

சிலமாதங்கள், முன்பு ஏதோ ஒரு டிவியில் காலைமலர் பார்த்தேன். அதில் பேசிய ஒருவர், இந்தத் தலைமுறைதான் காடுகளை அழிக்கிறது என்பது போல பேசினார். நகரவாசிகளும், டவுன்வாசிகளும் மொட்டை மாடிகளிலும், பால்கனிகளிலும் தொட்டிகளில் செடிகொடிகளையும், கேக்டஸ்களையும் வளர்த்து குற்றவுணர்ச்சியை போக்கிக் கொள்ளுகிறார்கள். சமூகத்திற்கு நல்லது செய்த திருப்தியைத் தேடிக்கொள்கிறார்கள்.
இன்னும் பல கேம்பெய்ன்கள் இருக்கின்றன - எனர்ஜியை சேமிப்போம், தண்ணீரை சேமிப்போம், குளோபல் வார்மிங். குளோபல் வார்மிங்குக்காக ஒரு மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இருப்பது என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது. இதில் பங்கேற்ற பலரும் தம் மனசறிய ஒரு செடியைக் கூட பிடுங்கி யெறிந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், இந்த குளோபல் வார்மிங்கிற்கும், காடுகளை அழித்ததற்கும் நாம்தான் முக்கிய காரணம் என்பது போல இந்தப் பிரச்சாரங்கள் நம்மை எண்ண வைக்கின்றன. அன்றாடம் மின்வெட்டோடும், வீட்டிற்கு இரண்டு குடம் என்று அளந்து வரும் மெட்ரோ தண்ணீரிலும் ஏற்கெனவே அவதியோடு வாழும் அப்பாவி பொதுமக்களிடம் எதற்கு இந்தப் பிரச்சாரம்? எதற்கு இந்த உறுதிமொழிகள்?
எண்ணெய் கம்பெனிகளும், காஸ் கம்பெனிகளும் இயற்கை வளங்களை அராஜகமாகக் கொள்ளையடிப்பதோடு, சுற்றுச்சூழலையும் மாசுப்படுத்துகின்றன. சென்னையின் ஹுண்டாய் நிறுவனம், ஒரு நிமிடத்திற்கு ஒரு கார் வீதம் நாள் முழுக்க இடையறாது உற்பத்தி செய்கிறது.சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயநிலங்கள் ஏக்கர் ஏக்கராக அழிக்கப்படுகின்றன. டௌ கெமிக்கலின் கழிவுகள் இன்னமும் அகற்றப் படாமல் இருக்கின்றன. மாசடைந்த அந்த நீரைத்தான் பொதுமக்கள் இன்னமும் உபயோகப் படுத்துகிறார்கள். எஃகு நிறுவனங்களும் ஆலைகளும் நிலத்தடி நீரை மாசுப்படுத்துகின்றன.
ஆனால், இந்நிறுவனங்களுக்குத்தான் கடன்களோடு, சலுகைகளும் அரசால்வாரி வழங்கப்படுகின்றன. மின்சார உபயோகம் குறித்து எந்தக் கவலையும் இவர்கள் கொள்ளத் தேவையில்லை. அதோடு வரிவிலக்குகளும் உண்டு.நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகள் அந்தக் கம்பெனியின் முதலீட்டை விட அதிகம்.
இறுதியில், அந்த கம்பெனிகள்தான் நமது எல்லா வளங்களையும் கொள்ளையடித்துவிட்டு நமக்கே உபதேசம் செய்கின்றன. பொதுமக்கள்தான் இவற்றிற்கெல்லாம் பொறுப்பு என்பதைப் போல பிரச்சாரம் செய்கின்றன. தங்களை மதிப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக இந்த பிரச்சாரங்களுக்கு நிதி வழங்குகின்றன. ஒருகையால் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் வளங்களைச் சுரண்டுகின்ற்ன. ரெட்டி சகோதர்களுக்குத் தாரை வார்க்கப்பட்ட கனிமவளங்களையும் அதற்காக பாழாக்கப்பட்ட மலைப்பகுதிகளையும் பார்த்திருப்போம்.
நாமா காடுகளை வெட்டி அழிக்கிறோம்? மலைகளை, இயற்கை வளங்களை வீணாக்குகிறோம்?
பன்னாட்டுக்கம்பெனிகளும் தரகு முதலாளிகளும் தங்கள் லாபத்திற்காக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாமல்லவா தண்டனைகளை அனுபவிக்கிறோம்?அவர்களது அராஜகத்திற்கு, நம்மோடு சேர்ந்து நமது வாரிசுகளும் அல்லவா பலியாகிறார்கள்? தனியார் மயமென்றும் தாராள மயமென்றும் நமது நாட்டை மலிவுவிலைக்கு விற்றுவிட்டு நமக்கே நமது குடிநீருக்கு விலை வைத்து அல்லவா விற்கிறார்கள்?
இயற்கையெழில் கெடுகிறதென்று மலைப்பிரதேசங்களில் குப்பைகளைக் கொட்ட வேண்டாமென்று பொதுமக்களை வலியுறுத்துகிற அரசும், என் ஜி ஒ க்களும் டாடாவின் ஆலைகள் மற்றும் சுரங்கங்களின் கழிவு மலைகளை அகற்ற எந்த நெருக்கடியையும் தருவதில்லை. இதுதான் நாட்டின் வளர்ச்சி என்று நம்மை ஏற்றுக்கொள்ள வைப்பதோடு, வளர்ச்சி தேவையெனின் இவ்விளைவுகள் தவிர்க்க இயலாதது என்று நாமே இயல்பாக மனமுவந்து ஒப்புக்கொள்ள வைக்கும் நோக்கங்கள்தான் இவை.
உண்மையாகப் பார்த்தால், இந்த நிறுவனங்களே குளோபல் வார்மிங்குக்கு பொறுப்பு. ஆனால், என்ன நடக்கிறது? மரம் நடுவோம் என்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்றும் பிரச்சாரங்களை என் ஜி ஓ நிறுவனங்கள் மூலம் மேற்கொள்கின்றன. இந்தத் திசைத்திருப்பலால், அப்பாவி பொதுமக்களும் இவ்வளங்கள் முழுவதும் பாழானதற்கும் குளோபல் வார்மிங்குக்கும் தாம்தான் காரணம் என்பது போல மறுகுகின்றனர். ஆனால், நடப்பது என்ன?
போபாலில் மக்கள் தங்களது இழப்பீட்டுக்காகவும், நீதி கேட்டும் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும்போது டௌ கெமிக்கல் இஸ்கான் (ISKON Food Relief foundation) என்ற என் ஜி ஓ வோடு இந்தியாவின் பட்டினியைப் போக்கவும் படிப்பறிவுக்குமான செயலில் இணைந்துள்ளது.
இந்த என் ஜி ஓ நிறுவனங்கள், ஏன் பன்னாட்டுக் கம்பெனிகளின் இரட்டை நிலையை அம்பலப்படுத்தாமல், அவர்களிடமிருந்தே நிதியை பெற்றுக்கொள்கின்றன?
நந்திகிராமிலும், குஜராத்திலும் விவசாயிகளிடமிருந்து ஏக்கர் கணக்கில் வேட்டையாடியதோடு, அம்மக்களின் வாழ்க்கையையும் குலைத்துவிட்டு விதர்பா விவசாயிகளுக்கு உதவுவதாக நடிக்கிறது டாடா குழுமம். (A sustainable ray of hope : The Tata trusts have been working to help improve the agricultural practices of farmers in India)
போபாலில், விஷக்கழிவுகள் இன்றும் கூட முற்றிலும் அகற்றப்படாத நிலையில் குஜராத்தில் சுத்தமான குடிநீருக்காக தனது நீர் சுத்தகரிப்பு சாதனத்தை நிறுவியுள்ளது. இவை எல்லாம் யாரை ஏமாற்ற?
Dow India Promotes Clean Drinking Water at Kadodara in Gujarat : Donates Fourth Water Purification Facility in Dahej

பர்மாவில், அண்மைக்காலமாக பல வனப்பகுதிகள் ஆலைகளுக்காக துரிதமாக அழிக்கப்படுவதாக ட்விட்டரில் செய்தியாளர் ஒருவர் கவலையுடன் எழுதியிருந்தார். இப்படி மூன்றாம் உலக நாடுகளின் வளங்களையும் இயற்கையையும் வரைமுறையில்லாமல் தனியார்மயம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. அதை மறைக்க 'சுற்றுச்சூழலைக் காப்போம்' என்றும் 'காடு வளர்ப்போம்' என்றும் பிரச்சாரங்களுக்கு பிச்சையிடுகின்றன.
சுற்றுச்சூழலைப் பற்றிய பொறுப்புணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது.மாசற்ற உலகை நமக்கு பின்வரும் சந்ததியினருக்கும் விட்டுச் செல்வது நமது சமூகக் கடமை. அது மரக்கன்றை வாங்கி நடுவது அல்லது குளோபல் வார்மிங்காக ஒரு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்துவது மட்டுமே முடிவும் அல்ல, தீர்வும் அல்ல. என் ஜி ஓ நிறுவனங்களின் முகமூடியை கிழிப்பதுடன், பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களது பசிக்காக, நமது சொத்துகளை கபளீகரம் செய்வதற்கு எதிராக அணி திரள்வதில்தான், அந்த பொறுப்புணர்வும் கடமையும் முழுமையடைய முடியும்.
Sunday, February 20, 2011
அம்மா தேக்...ஆ..தேக்...
சிலநாட்கள் முன்பு வண்டியில் செல்லும்போது "ஸ்டாலின் ஸ்டாலின்" என்று கத்தியபடி வந்தாள். அவள் கைகாட்டிய இடத்தில் ப்லெக்ஸ் பேனரில் மு.க.ஸ்டாலின் சிரித்துக்கொண்டிருந்தார். எப்படி தெரியும் என்று கேட்டபோது 'எனக்கே தெரியும்' என்றாள். (சரி, எங்கேயோ தப்பு நடந்திருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.) அப்போது ஏதோ கூட்டம் போல...மெயின் ரோடெங்கும் பேனர்கள்...அவளது கத்தல்களும் அடங்கவில்லை.
நேற்று, வெளியில் சென்றபோது 'அம்மா பாரு, அம்மா பாரு' என்றாள். கத்தாம மெதுவா சொல்லு, என்ன பாக்க சொல்றே என்னை? என்றால், 'அதோ அம்மா' என்று கைகாட்டினாள். பார்த்த திசையில் ஜெயலலிதாவின் உருவம். அதிர்ச்சியாகிவிட்டேன். அதற்குக் காரணமிருக்கிறது. பப்புவின் அப்பா வழி உறவினர்கள் அம்மா ஆதரவுதான். அவர்கள் பக்கத்து குடும்ப விழாக்கள் அனைத்தும் அம்மாவின் படத்தோடும் ஆசியோடும்தான் தொடங்கும். சமீபத்திலும் அப்படி ஒரு நெருங்கிய குடும்பம் வந்து மணவிழாவிற்கு அழைத்து சென்றிருந்தனர். ஒருவேளை அவர்கள் பப்புவுக்கு ஏதாவது சொல்லியிருப்பார்களா என்றெல்லாம் டவுட். ஏனெனில், ஒருமுறை அப்படி நடந்து,'எதுக்கு இப்பவே அதெல்லாம் அவளுக்கு, நல்ல தலைவர்களைப் பத்தி சொல்லிக்கொடுங்க என்று மெருகாகச் சொல்லியிருந்தேன். இதெல்லாம்தான் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் காரணம்.
"எப்படி தெரியும் பப்பு? " என்று விசாரித்தால், "ஹேய்ய்ய், எனக்கே படிக்கத் தெரியுண்டி, அங்கே பாரு அ ம் மா எழுதியிருக்கு இல்ல, எனக்கு படிக்க தெரியாதா" என்று அவளது தன்மானத்துக்கு வந்த சோதனையாக நினைத்து கோபமாக பதில் சொல்லவே.... ஓ..யெஸ்..இப்போதான் அவளுக்குப் படிக்கத் தெரியுமே!! :-))

Tuesday, February 15, 2011
"கம்யூனிசமும் குடும்பமும்"
பேஸ்புக்கில், எனது சீனியரின் சுவரில் எழுதப்பட்டிருந்தது ஒரு வாசகம்...
"ஒரு பெண்ணிடம் எதைக்கொடுக்கிறீர்களோ அதையே இருமடங்காக பெறுவீர்கள்" என்பது போல.அதாவது, 'ஒரு பெண்ணிடம் வீட்டைக் கொடுத்தால் அதை இனிய இல்லமாக்கித் தருவாள், மளிகைச்சாமான்களைக் கொடுத்தால் உணவாக்கித் தருவாள், குப்பைக்கூளத்தைக் கொடுத்தால் அதையும் இருமடங்காக உங்களுக்கே தருவாள்' என்பதாக.
"பெண் என்பவள்" என்று ஆரம்பிக்கும் எந்த விளக்கங்களிலும் எனக்குப் பெரிதாக் ஆர்வம் இல்லாவிட்டாலும், இதில் ஒரு விஷயம் பெரிம்மாவை,அம்மாவை, ஆயாவை, அத்தைகளை அவர்களது வாழ்க்கைமுறையை நினைவூட்டியது. ஆயா ஒரு நிமிடம் கூட சும்மா இருந்து பார்த்ததில்லை. அவரது கைகளிலிருந்து யாருக்காவது ஏதாவதொன்று பிறந்துக்கொண்டே இருக்கும், எம்ப்ராய்டரி போட்ட கைக்குட்டைகள், ஹெம்மிங் செய்ய்த சட்டைகள், பித்தான்கள் சீர் செய்யப்பட்ட துணிகள், டெலிஃபோன்களுக்கான வூலன்விரிப்புகள், வாயில்தொங்கல்கள் என்று இந்த லிஸ்ட் நீளும்.
அதே போல, பெரிம்மாவும் அம்மாவும்...விடுமுறை நாட்களெனில் எங்களுக்கான தின்பண்டங்கள் செய்து டப்பாக்களில் அடுக்கி வைப்பது,ஊறுகாய் செய்வது, வத்தல் செய்வது, அலமாரிகளை தூசு தட்டுவது, துணிகளுக்கு கஞ்சி போட்டு(ஹா...எவ்வளவு லாங் ப்ராசஸ் அது, அந்த புடவைகளுக்கிடையே ஒளிந்து விளையாடுவது ஜாலி !!) எனது சட்டைத்துணிகளில் ஓவியங்கள் வரைவது என்று அன்றாடப்பணிகளுக்கிடையில்தான் இந்த லிஸ்ட்.
என்றைக்காவது சகுந்தலா அம்மா வராவிட்டால் பெரிம்மாவின் கைகளோ, அம்மாவின் கைகளோ ஊரிலிருந்து நீண்டு வந்து சாப்பாட்டை செய்து வைத்தாலென்ன என்று நினைத்துக் கொள்வேன். நான் மட்டும் இருக்கும்போது, ஒன்றுமே இல்லாதது போல எனக்குத் தோன்றும் வீடு, அவர்கள் வந்துவிட்டாலோ அட்சயப்பாத்திரமாகி விடும். எனக்கும், குட்டிக்கும் எந்த நுண்கலைகளையும் கற்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஆர்வமும் இல்லை. முன்பெல்லாம் ஊரிலிருந்து வந்தால் ஊறுகாய் முக்கியமான இறக்குமதி. இப்போது இருக்கவே இருக்கிறது, மதர்ஸ் ரெசிப்பி ஊறுகாய் வகைகள். தின்பண்டங்கள், சிப்ஸ் வேண்டுமா, அருகிலிருக்கிறது அடையார் ஆனந்தபவன்.
"ஆனால், முதலாளித்துவம் இதையெல்லாம் மாற்றிவிட்டது. முன்பு எவையெல்லாம் குடும்பத்தின் மடியில் செய்யப்பட்டனவோ, இன்று அவையெல்லாம் பெரிய அளவில் பட்டறைகளிலும், தொழிற்கூடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெண், இயந்திரத்தால் புறந்தள்ளப்பட்டுவிட்டார்." என்று கம்யூனிசமும் குடும்பமும் என்ற கட்டுரையை, 1920 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை வாசித்தபோது தோன்றிய கொசுவத்திதான் மேலே இருப்பது.
இது உண்மைதான் என்றாலும், குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்லும்போது யாருக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது?
ஒருமுறை, நாங்கள் இதுவரை வாழ்க்கையில் சந்தித்த டேமேஜர்களைப் பற்றியும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றை/ கற்றுக்கொள்ள கூடாதவ்ற்றை பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு, வெற்றிகரமான மேனேஜராகவும் இருந்த ஒரு பெண்தான் ரோல்மாடல் என்றாள் வந்திதா. அவர் குழந்தைகளை எட்டு மணிக்கு பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலக வேலைகளை முடித்துவிட்டு மூன்று மணிக்கு திரும்ப காரில் சென்று அவர்களை வீட்டில் விட்டுவிட்டு கவனிப்பார். ஆனால், எதிலும் ஸ்லிப் ஆனதில்லை. இவை நடுவில் குழந்தைகளுக்கான கோச்சிங் கிளாஸ்கள். இதை கேட்கும்போதே உங்களுக்கு தலை கிறுகிறுக்கிறதா? எனக்கும்.
எல்லாவற்றிலும் அவர் சூப்பர்வுமனாக திகழ்ந்ததே அவரை எனக்குப் பிடிக்கக் காரணம்,நானும் அப்படியே இருக்க விரும்புகிறேன் என்றும் கூறினாள் வந்திதா.
வந்திதாவுக்கும் இரண்டு குழந்தைகள். அவளும் அவர்களுக்காக சமைக்கிறாள். குழந்தைகளை டிராப் செய்து பிக்கப் செய்கிறாள். அவர்கள் வீட்டிலிருக்கும் போது அவளும் வீட்டிலிருந்து கவனித்துக் கொள்கிறாள். நடுஇரவில் வீட்டிலிந்தபடியே மீதி வேலையை முடிக்கிறாள். கணவர் சமையலில் ஏதாவது உதவி செய்ய வந்தால் எனக்குப் பிடிக்காது என்பதும் அவளது கூற்று.மேலாகப் பார்த்தால் இதில் தவறொன்றும் இல்லை என்றே தோன்றினாலும், முதலாளித்துவம் வீட்டு வேலைகளைக் குறைக்காமல் மேலும் மேலும் பாரத்தையல்லவா சுமத்துகிறது?
இதைச் சொன்னால், சம்பாதிப்பது ஆண்களில் வேலை, குடும்பத்தைப் பராமரிப்பது பெண்களின் வேலைதானே, நாம்தானே அதில் புகுந்து நானும் சம்பாரிக்கிறேன் என்று வருகிறோம், இதில் அவர்களது உதவியை எப்படி எதிர்பார்ப்பது என்றும் சொன்னாள்.

(image courtesy: குருத்து )
ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த அமைப்பு உதவியாக இருந்தாலும் இன்றும் அதுவே சரியாகுமா? அப்படியே குழந்தைகளை பராமரிக்க க்ரெச்சோ, சமையலுக்கு ரெஸ்டாரெண்டுகளையோ அல்லது ஆள் வைத்துக்கொள்வதோ என்றாலும் அனைவருக்கும் அது ஒத்துவருவதில்லை. காசு இருப்பவர்களால் மட்டுமே இவற்றை அனுபவிக்க முடியும்.சலிப்பூட்டும் அன்றாட அலுவல்களிலிருந்து விடுதலையும் அடைய முடியும். ஆனால், பெரும்பாலான பெண்கள் வீட்டிலும் வேலை செய்துக்கொண்டு, வெளியிலும் வேலை செய்துக்கொண்டுதான் எனது நண்பர் ஒருவர் சொல்வது போல 'இரட்டைச்சவாரி' செய்கின்றனர். அதோடு இவ்வேலைகளுக்கு பணிமதிப்போ சம்பளமோ இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேல், கொஞ்சமும் மரியாதையோ மதிப்போ இல்லாமல் மிதியடி போலத்தான் பெண்கள் குடும்ப அமைப்புக்குள் வாழ்கின்றனர்.
கம்யூனிச சமூகத்தில் இப்பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வுகள் இருக்கின்றன. இவ்வேலைகள் அனைத்தும் சமூகத்தால் பகிர்ந்துக்கொள்ளப்படுகின்றன. கூட்டுசமையலில் யார் வேண்டுமானாலும் பங்கேற்று சாப்பிட முடியும். பொது சலவை நிலையத்தில் துணிகள் துவைத்து சலவை செய்து தரப்படும். உழைக்கும் பெண்ணின் மீது இவ்வேலைகள் கடமைகள் என்ற பெயரில் சுமத்தப்பட மாட்டாது. வீட்டு வேலைகள் கம்யூனிசசமூகத்தால் பகிர்ந்துக் கொள்ளப்படுவதால் பெண்ணுக்கு ஓய்வுநேரத்தை பயனுள்ள வகையில் அவர் செலவழிக்கலாம்.
முக்கியமாக, குழந்தை வளர்ப்புக்கு, அவர்களது அறிவு வளர்ச்சிக்கு அரசே பொறுப்பேற்கும்.இதுவும் முதலாளித்துவ சமூகத்தில் ஒரு குறிப்பிட்டசாரார் மட்டுமே அனுபவிக்கக்கூடியதாக இருந்து வருகிறது. உழைக்கும் மக்களின் குழந்தைகள் புழுதியிலும் மண்ணிலும் வளர வேண்டியிருக்கிறது. பொதுக்கல்வி மற்றும் சமூகநலத்துறை குடும்பத்திற்கு உதவி செய்யும். மொத்தத்தில் சமூகமே குழந்தைக்கு உணவளித்து வளர்த்து கல்வியும் அளிக்கிறது. அதே சமயம், தங்கள் குழந்தைக்கு கற்பிப்பதில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பும் பெற்றோரருக்கும் வசதியுண்டு. மொத்தத்தில், கணவன் இல்லாவிட்டால் உலகமே இருண்டு விட்டது என்ற நிலையில்லாமல், பெண் தனது தேவைகளுக்கு சமூகத்தைச் சார்ந்து , தன்னால் செய்ய இயன்ற வேலையைச் செய்து வாழ்வார்.
இதை வாசிக்கும்போதே, இது போன்ற அமைப்பு நமக்கும் இருந்தாலென்ன என்று பெருமூச்சு. சமையலைக் குறித்து நானும் கவலைக் கொள்ளத்தேவையில்லை. அபி, ஒவ்வொரு மதியமும் தனது பிள்ளைக்கு சோறூட்ட வீட்டிற்குச் சென்று அவசரம் அவசரமாக அலுவலகம் திரும்பவேண்டியதில்லை. குழந்தைகளில் பள்ளி அட்மிசனுக்காக யாரும் அலைய வேண்டியதில்லை. சலிப்பூட்டும் வீட்டுவேலைகளை லிஸ்ட் போட்டு வேண்டா வெறுப்பாக யாரும் செய்ய வேண்டியதில்லை. ஹ்ம்ம்.....நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், கற்பனைக்கெட்டாத கனவு போலவும் ஏன் எனக்குத் தோன்றுகிறது?
என் வாழ்நாளில் கைகெட்டாத கனவு போல தோன்றினாலும் என் மகளின் காலத்திலாவது இந்த குடும்ப அமைப்புமும்,சமூகமும் சாத்தியப்படட்டும்!
இங்கு நான் பகிர்ந்திருப்பது பகுதிதான். அலெக்ஸான்ட்ரா கொலந்தாயின் முழுக் கட்டுரையின் தமிழாக்கத்தை வாசிக்க :
நூல்: கம்யூனிசமும் குடும்பமும்
விலை: ரூ 20
வெளியீடு: பெண்கள் விடுதலை முன்னணி
41, பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை 95
போன்: 98416 58457

Sunday, February 13, 2011
நீண்ட பயணத்தில்....
பள்ளி முழுத்தேர்வுகள் வருகிறதென்றால் ரொம்பவும் ஜாலி. பரிட்சைக்குப் பிறகு பாடங்களை மறந்து விடலாம் என்ற நினைப்பே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள்தான் கொஞ்சம் கிலி. லீவும் கொஞ்சம், அதோடு படித்த பாடங்களை மறக்கவும் கூடாது. அதோடு மட்டுமா,அந்த கேள்வித்தாட்களுக்கு விடையும் எழுத வேண்டும்...அது ஒரு மகா கடியான வேலை. அதுவும், எழுத ஆரம்பிக்கும் போது கையெழுத்து மிகவும் சீராக, நிறுத்தி, நிதானமாக கோடெல்லாம் போட்டு ஆரம்பிக்கும்...முடிக்கும்போது பார்த்தால் நமக்கே,நமது கையெழுத்து புரியாது...இதில், மிகவும் பாவப்பட்டது சமூக அறிவியல்தான்.
எப்போதும் கடைசிப்பரிட்சையாகத்தான் இது அமையும். லீஸ்ட் பாதர்ட் பரிட்சையாகவும். அதோடு, அப்பரிட்சைக்கு முன்பாக கண்டிப்பாக லீவு இருக்கும். அப்போது படித்துக்கொள்ளலாம், இதெல்லாமா நமக்கு உதவப் போகுது என்றுதான் அதை தள்ளிவைப்போம். ' வாழ்க்கைக்கு உதவப்போறது அறிவியல்தான், சமூக அறிவியல் என்றாலே கதைதான்' என்றும் எங்கள் மனதில் ஊறிப் போயிருந்தது. வகுப்புகளும் அதற்கேற்றாற்போல்தான் நடக்கும். வரலாறை யாராவது ஒருவர் எழுந்து சத்தமாக வாசிக்க வேண்டும், டீச்சர் அதை விளக்குவார். சிலசமயங்களில் விளக்கமும் தேவைப்படாது. அறிவியல், கணக்கு போல முன்னால் படித்த பாடங்களை நினைவுக்கு கொண்டு தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியதாக இல்லாமல், எல்லாம் நிகழ்ச்சிப்போக்குகளாகவே எங்களுக்குத் தோன்றியதும் ஒரு காரணம்.
புவியியல் சுத்தம்...கொஞ்சம் கூட சுவாரசியமாக இருக்காது. அது போல, வகுப்பு நேரங்களும்..புவியியல் வகுப்பு நேரங்கள் வெள்ளி மாலை அல்லது புதன் கிழமை விளையாட்டு நேரம் முடிந்தபின் என்று கடைசியாகத்தான் இருக்கும்...அதோடு, அதில் என்ன எழுதினாலும் எப்படியாவதுமார்க் கிடைத்துவிடும். மேப் மட்டும் சிரத்தையாக பார்த்துக்கொண்டால் போதுமானது. அதேபோல வரலாறுக்கு வருடங்கள் மட்டும் முக்கியம் என்ற விதியின்படி முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் , ஒத்துழையாமை இயக்கம் எல்லாம் ஒரே கடம்தான். அதுவும் வருடங்கள் வந்தால் அதை ஸ்கிப் பண்ணிவிட்டு படிப்பது எனக்குள் ஒரு வழக்கமாகி இருந்தது. வாயில் நுழையாத பெயர்களாக இருந்தாலும்....
எதற்கு இந்த கொசுவத்தியென்றால், சமீபத்தில் "நீண்ட பயணத்தில் தலைவர் மாவோவுடன்" என்ற புத்தகத்தை வாசித்தேன். (அப்போதும் வருடங்களை ஸ்கிப் பண்ணிவிட்டு வாசித்தேன்) சீனாவில் செம்படை நடத்திய நீண்ட பயணம். அதில் தலைவர் மாவோவுடன் உதவியாளராக பணியாற்றியவரின் பதிவே இந்நூல்.

மாவோவின் எளிய வாழ்க்கை முறையையும் அவருடனான அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார், சென் சேங் பெங். பனி மலைகளையும், பாலைவனங்களையும், சதுப்பு நிலங்களையும், காடுகளையும், காட்டாறுகளையும் கடந்து சுமார் 12500 கிலோ மீட்டர்கள் நடந்தே பயணம் செய்கிறார்கள். செல்வந்தர்களிடமிருந்தும், நிலப்பிரபுகள், வட்டிக் காரர்களிடமிருந்தும் நிலத்தையும், செல்வத்தையும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கிறார்கள். ஆட்சியாளர்களின் ஏகாதிபத்தியத்தைக் குறித்து வழியெங்கும் பிரச்சாரம் செய்கிறார்கள்.செம்படைக்கு வழியெங்கும் விவசாய மக்கள் ஆதரவு தருகிறார்கள். 1934 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த பயணம் எண்பதாயிரம் படை வீரர்களோடு11 மாநிலங்களைக் கடந்து 1936யில் வெற்றியடைந்தது. இயற்கையான தடைகள்,அதோடு எதிரிகளின் தாக்குதல்கள், உள்கட்சி போராட்டங்கள், தோழர்களின் இறப்புகளையும் சமாளித்து செம்படையின் புரட்சிகர பயணம் விடுதலைக்கான பயணமாக அமைகிறது.
பயணத்தில், யீ என்ற சிறுபான்மை இனத்தவரையும் பழங்குடியினரையும் சந்திக்க நேரிடுகிறது.அவர்கள சந்திக்கும் முன்னால் படையினர் மிகுந்த கலவரத்துக்குள்ளாகின்றனர். ஏனெனில், அம்மக்கள் மிகவும் ஆபத்தானவர்கள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லப்பட்டிருந்ததே காரணம். ஆனால், அவர்களை சந்திக்கும்போது அம்மக்கள் அன்பாக வரவேற்று இயல்பாக பழகுகின்றனர். காட்டுமிராண்டிகள் என்று சொல்லப்பட்ட , ஹான் இன மக்களுக்கு புரியாத மொழி அம்மக்கள் சகோதரர்களாகின்றனர். இரு இன மக்களுக்கும் வெறுப்பு ஏற்படும் ராணுவத்தால் வேண்டுமென்றே பரப்பட்ட அவதூறே அறிந்துக்கொள்கின்றனர். இது இன்றைக்கும் நமது நாட்டிலேயே கூட காணக்கூடியதாக உள்ளது, இல்லையா!

சுருக்கமான நூலாக இருந்தாலும், செம்படையின் நெடிய பயணத்தைப் பற்றியும், முன்னணி படைகளின் அயராத பணிகளையும்,அவர்களது தன்னம்பிக்கையையும் அறிய முடிகிறது. நீண்ட பயணத்தின் வழியை இங்கு காணலாம்.
இன்று,நமது நாட்டிலும் நெடிய பல பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால்,அவை மக்களின் விடுதலையை குறித்து பேசாமல், மத உணர்வுகளைத் தூண்டும் ரத யாத்திரைகளாக அமைந்துவிடுகின்றன.
Saturday, February 12, 2011
வேளச்சேரி டைம்ஸ்: மருந்துகளும், மருத்துவமும் யாருக்கானவை?
ஆயாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோது நடந்தது இது.சளியோடு, இன்னும் சில இன்ஃபெக்சன்களையும் அவர் கொண்டிருந்தார். பரிசோதித்த மருத்துவர், மருந்துகளை எழுதித் தந்தார். எப்போதும் அருகிலிருக்கும் மருந்துக்கடையில் வாங்குவதுதான் வழக்கம். மருந்துக்கடையில், அவர் எழுதித்தரும் அதே மருந்துகள் இல்லையெனில் அதே மருந்துக்கலவையில் மாற்று மருந்துகளைத் தருவார்கள். அது போன்ற சமயங்களில் டாக்டரிடமும் அந்த மருந்துகளை காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்வதும் வழக்கம். சமயங்களில், சரி என்பார். சில சமயங்களில் வேண்டாமென்றும், அவர் குறிப்பிட்ட அதே மருந்தை வேறு இடங்களில்/கடைகளில் கிடைக்கிறதாவென பார்த்து வாங்கவும் சொல்வார்.இது வழக்கம்தான். (ஆயா, இதய நோயாளியாதலால் அவர் வாழ்வதே மருந்துகளின் உபயத்தில்தான். எனவே, எந்த ரிஸ்க்கும் எடுப்பதில்லை.)
இன்ஃபெக்சன் கல்லீரலில் இருப்பதாகவும், அது மைல்ட் டிபி என்றும் கணித்தார். அதற்காக இரண்டு மருந்துகளை எழுதித்தந்தார். அதோடு, ஒவ்வொரு நாளும் அழைத்து வந்து காண்பிக்கும்படியும்.மருந்துக்கடையில் அவர் எழுதித்தந்த மருந்துகள் சுத்தமாக இல்லை. அந்த மருந்துகள் வருவதில்லை என்றும் கூறிவிட்டார்கள். கண்ணுக்குத் தென்பட்ட மருந்துக்கடைகளில் விசாரித்தேன். அங்கும் இல்லை.சற்று நேரத்தில் அந்த வட்டாரத்தில் இருந்த அனைத்து கடைகளனைத்திலும் விசாரித்து முடித்திருந்தேன். எந்த மருந்து கடைகளில் இல்லை.
அப்படி கிடைக்காத பட்சத்தில், டாக்டரிடம் சொன்னால் அவர் மாற்றி எழுதித்தருவார். ஆனால்,இப்போதோ, அதே மருந்துதான் வேண்டும், அது சாதாரண மருந்துதான், எல்லா மருந்துக்கடைகளிலும் இருக்க வேண்டும் என்றும், பல பெரிய மருத்துவமனைகளில் இலவசமாகவே தரக் கூடியதுதான்,கண்டிப்பாக மருந்துக்கடைகளில் இருக்கும் என்றும் டாக்டர் உறுதியாகக் கூறினார்.. மருந்துக்கடைகளிலேயே, வேறு எங்கு கிடைக்குமென்று விசாரித்து அவர்கள் குறிப்பிட்ட பெரிய பெரிய மருந்துக்கடைகளிலும் விசாரித்தேன். டாக்டர் குறிப்பிட்ட ஒரு மருந்து(மாத்திரை) மட்டும்கிடைத்தது. விலை மிகவும் குறைவாக இருந்தது. பத்து மாத்திரைகள் முப்பது ரூபாய்க்குள்தான் என்று நினைவு. எங்கேயும் கிடைக்காததைப் பார்த்து, அது விலையுயர்ந்த மருந்துகள் போல என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
கிடைத்த மாத்திரையை எடுத்துக்கொண்டு திரும்பவும் டாக்டரிடம் சென்றால்,அந்த மருந்தை தனியாக உட்கொள்ளக் கூடாது என்றும், கண்டிப்பாக இன்னொரு மருந்துடன்தான் உட்கொள்ள வேண்டுமென்றும் வேறு ஏரியாக்களில் முயற்சி செய்யும்படியும் கூறினார். அப்படி என்ன மருந்து அது, ஏழு மலை ஏழு கடல் தாண்டியும் கிடைக்காத மருந்து என்று ஆச்சரியம் மேலிட விசாரித்தப்போது, அது மிகவும் சாதாரண மருந்து, அதாவது விலை மிகவும் குறைவு என்பதால் ஸ்டாக் வைத்துக் கொள்வதில்லை, அதிக விலையுள்ள மருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுப்போம் என்ற மாதிரி ஒரு மருந்துக்கடையில் பதில் வந்தது.
அடுத்த ஏரியாவிலும் கிடைக்காமல் வெறுத்துப்போய் மறுபடியும் டாக்டரிடம் வந்து சேர்ந்தேன். மருந்துப் பெயர்களை அடித்துவிட்டு, 'இந்த காம்பினேஷன்லே எந்த மருந்து கிடைத்தாலும் வாங்கிக்கொண்டு வாருங்கள்' என்று எழுதிக்கொடுத்தார். அது ethambutal 800+ வேறு ஒரு மருந்து. நினைவில் இல்லை.கடைசியில் இது மட்டும் வேறு ஏரியாவில் கிடைத்தது. mycobutal 800 & isokin 300. mycobutal 800, ஏழு மாத்திரைகளின் விலை, மொத்தமே ரூபாய் 15க்குள். சாதாரண மருந்து என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்தது. வழக்கமாக மருந்து வாங்கும் கடையில் குறிப்பிட்ட மருந்துகளைச் (அவர்களிடம் இல்லையென்றால்) சொன்னால் வரவழைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் சொல்லும் நாள் சென்று வாங்கிக்கொள்ளலாம். இந்த மருந்துகளை வாங்கி வைக்கும்படி கூறிவிட்டு கடுப்புடன் வந்துவிட்டேன்.
டிபி இன்ஃபெக்சனுக்கான மருந்து ஒரு மருந்துக்கடையில் கிடைக்காவிடில் கூட பரவாயில்லை,எந்த மருந்துக்கடைகளிலுமே கிடைக்காதது...இதில் அப்போலோ போன்ற மருந்துக்கடைகளும் அடக்கம்!அதுவும் விலை குறைந்த மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்வதில்லை என்ற காரணம் வேறு....எனில், இந்த மருந்துக்கடைகள்தான் யாருக்கு? ஒரு பிராண்ட் இல்லையெனில், இன்னொரு பிராண்ட் மருந்தை எடுத்து தருபவர்கள் சப்ளையே இல்லை என்றும் ஸ்டாக் இல்லையென்றும் கூறுகிறார்களெனில் இந்த மருந்து உற்பத்தி கம்பெனிகளும்தான் யாருக்கு? இதே டாக்டரை பல மெடிக்கல் ரெப்புகள் படையெடுத்து வந்து சந்திப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்படி சாதாரண மருந்துகளை லாபி செய்ய மாட்டார்களா?அரசு மருத்துவமனைகளை விட இந்த தனியார் மருத்துவர்களிடம் செல்லும் சாதாரண மக்களே அதிகம்.அதோடு, மருந்துக்கடைகள் என்பவை விலையுயர்வான மருந்துகளையே வைத்திருப்போம் என்றால் அதற்கு அர்த்தம் என்ன?
இந்த ஆதங்கத்தைக் நண்பரிடம் கொட்டிக்கொண்டிருந்தேன்.அவரது தம்பி மெடிக்கல் ரெப். மருந்துக்கம்பெனிகள்->டாக்டர்கள்-> மருந்துக்கடைகள் இவர்களுக்கிடையே நிலவும் உறவு குறித்துக் கூறினார்.மருந்துக்கம்பெனிகள் டாகட்ர்களின் மொத்த டேட்டாபேசை வைத்திருக்கின்றன. மெடிக்கல் ரெப்புகள் டாக்டர்களை சந்தித்து மருந்துகளை பரிந்துரைக்கும்படி கூற வேண்டும். அதோடு, ஆர்டரும் பிடித்து வரவேண்டும். இம்மருந்துக்கம்பெனிகள் மருத்துவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்றன. சும்மா இல்லை, இரண்டு வருடங்களுக்கு இவர்களின் மருந்துகளை பரிந்துரைத்தால் விலையுயர்ந்த கார், ஐந்து வருடங்களெனில் ஃப்ளாட் என்று பரிசுகள். வாஷிங் மெஷின்கள், ஹோம் தியேட்டர் என்று நீளும் பரிசுப் பட்டியல்கள், வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் அவர்களது கிளினிக்குக்குத் தேவையான எக்யூப்மென்ட்கள் என்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நீளுகின்றன. இந்த மருந்துகளின் உண்மையான விலை கடையில் விற்கப்படும் விலையில் 30 சதவீதம்தான். மெடிக்கல் ரெப்புகளின் சம்பளமோ குறைவு. இப்படி ஆர்டர் பிடித்து வந்தால் அவர்களுக்கும் விதவிதமான பரிசுகள். கடைசியில், சுரண்டப்படுவதோ அப்பாவி நோயாளிகள்தான்.
இந்தியாவில் மருத்துவத் துறை வளர்ந்து வருகிறது என்று அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள்,அதற்கேற்றவாறு உலகின் பல மூலைகளிலிருந்தும் இங்கு வந்து சகல வித நோய்களுக்கும் சிகிச்சை பெற்று முகம் மலர சிரிக்கும் குழந்தைகள், ஆபரேஷன் செய்த தடமே இல்லாமல் மூட்டுவலி குணமாகும் மாயம், மெடிக்கல் டூரிசம்...... இப்பெருமைமிகு இந்தியாவில்தான் மலேரியா காய்ச்சலால் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள்.( அதிகம் பேர் என்றால் தென்கிழக்கு ஆசியாவிலேயே 70 சதவீதம்.)போலியோவை இன்னும் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. பெண்கள், குழந்தைப் பிறப்பின்போது எமர்ஜென்சி உதவி இல்லாமல், அவசியமின்றி உயிரிழக்கிறார்கள்.
எனில்,ரன்பாக்ஸிகளும் கேடிலாக்களும் கேஃபிலாக்களும் அப்பாவி நோயாளிகளின் பிணி தீர்க்கவா மருந்துகளைத் தயாரிக்கின்றன?சாதாரண மக்களுக்கா? சாதாரண மக்களுக்கு வரும் சாதாரண நோய்களுக்கா?

Thursday, February 10, 2011
பப்பு டைம்ஸ்
அவ்வப்போது பப்பு உதிர்த்த சில முத்துகள்
* எனக்கு ஃபைவ் இயர்ஸ்..அர்ஷித் கைலாசுக்கும் ஃபைவ் இயர்ஸ்..நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.
*ஆச்சி, நான் தொடறதெல்லாம் வெள்ளியாகணும், ஆச்சி......
*நானு, வர்ஷினி, தேஷ்னா மூணுபேரும் கல்யாணம் பண்ணிக்காம ஆண்ட்டியாக(டீச்சர்) போறோம்
*ஒரு புத்தகத்திலிருந்த பாடலை எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டாள். (எதையாவது கொஞ்சம் செய்துமுடித்துவிட்டால், அவ்வளவுதான்அப்புறம், கலாமின் மறுஅவதாரமாகி விடுவாள்....2020இல் இந்தியா வல்லரசாகுமா மாதிரி ஒரே கனவுதான்.....)
"ஆச்சி,நான் படிச்சிட்டேன் ஆச்சி, அப்புறம் என்ன ஆவேன்"
இந்த புக் ஃபுல்லா படிச்சிடுவே...
"அப்புறம் என்ன பண்ணுவேன்?"
"இன்னும் நிறைய புக்"
"அப்புறம்"
"இதைவிட இன்னும் நிறைய புக் படிப்பே"
"அப்புறம்"
"இன்னும் நிறைய்ய புக்"
"படிச்சிட்டு, என்ன ஆவேன்?"
"இந்த உலகத்துல எல்லா புக்கும் படிச்சிட்டு சயின்டிஸ்ட் ஆயிடுவே"
"வேணாம்,ஆச்சி கொஞ்சம் புக் படிச்சிட்டு நான் நர்ஸாவே ஆவறேன்!!"
*"பப்பு, அம்மா சொல்றதைக் கேட்டு பால் குடிச்சிட்டு ஹாப்பியா இருக்கணும்னு நினைக்கறியா?இல்ல, திட்டு வாங்கிட்டு சாட் ஆ இருக்கணும்னு நினைக்கிறியா?"
"ம்ம்ம்ம்ம்....பால் குடிக்காம ஹாப்பியா இருக்கணும்னு நினைக்கறேன்."
*பப்புவின் சமீபத்திய ஃபேவரிட் விடுகதைகள்...
நாங்கள் சொன்னவை போக அவளாகவே சிலவற்றை நூற்பாள்.
1.டைமண்ட் கீழே விழாது, அது என்ன?
2. சொன்னால் ஆடாது, ஆனால் எல்லாரையும் அங்குமிங்கும் ஆட வைக்கும், அது என்ன?
அவளது விடைகள்:
ம்ரதித்சட்ந
ல்சஞ்ஊ தகாக்கே சுச்பே றல்சொ

Friday, February 04, 2011
#tnfisherman : இன்றிரவு உலகளாவிய பிரச்சாரம்

மீனவர்கள் கொலைகளுக்கெதிராக #tnfisherman என்ற டேகில், ட்விட்டரில் பிரச்சாரம் நடந்து வருவதை அறிவோம். இன்றிரவு, 9 மணிக்கு ’உலகளாவிய பிரச்சாரம்’ மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு, http://www.savetnfisherman.org/
இன்று, 9 PMக்கு, தவறாமல், அனைவரும் #tnfisherman டேக்கைகொண்டு மீனவர் கொலைகளுக்கெதிரான நமது கண்டனக்குரல்களையும்,எதிர்ப்புகளையும் பதிவு செய்வோம்.
உதவிக்கு ட்வீட்கள்: http://www.savetnfisherman.org/twits-in-english-tweetem/
Subscribe to:
Posts (Atom)