சிலநாட்கள் முன்பு வண்டியில் செல்லும்போது "ஸ்டாலின் ஸ்டாலின்" என்று கத்தியபடி வந்தாள். அவள் கைகாட்டிய இடத்தில் ப்லெக்ஸ் பேனரில் மு.க.ஸ்டாலின் சிரித்துக்கொண்டிருந்தார். எப்படி தெரியும் என்று கேட்டபோது 'எனக்கே தெரியும்' என்றாள். (சரி, எங்கேயோ தப்பு நடந்திருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.) அப்போது ஏதோ கூட்டம் போல...மெயின் ரோடெங்கும் பேனர்கள்...அவளது கத்தல்களும் அடங்கவில்லை.
நேற்று, வெளியில் சென்றபோது 'அம்மா பாரு, அம்மா பாரு' என்றாள். கத்தாம மெதுவா சொல்லு, என்ன பாக்க சொல்றே என்னை? என்றால், 'அதோ அம்மா' என்று கைகாட்டினாள். பார்த்த திசையில் ஜெயலலிதாவின் உருவம். அதிர்ச்சியாகிவிட்டேன். அதற்குக் காரணமிருக்கிறது. பப்புவின் அப்பா வழி உறவினர்கள் அம்மா ஆதரவுதான். அவர்கள் பக்கத்து குடும்ப விழாக்கள் அனைத்தும் அம்மாவின் படத்தோடும் ஆசியோடும்தான் தொடங்கும். சமீபத்திலும் அப்படி ஒரு நெருங்கிய குடும்பம் வந்து மணவிழாவிற்கு அழைத்து சென்றிருந்தனர். ஒருவேளை அவர்கள் பப்புவுக்கு ஏதாவது சொல்லியிருப்பார்களா என்றெல்லாம் டவுட். ஏனெனில், ஒருமுறை அப்படி நடந்து,'எதுக்கு இப்பவே அதெல்லாம் அவளுக்கு, நல்ல தலைவர்களைப் பத்தி சொல்லிக்கொடுங்க என்று மெருகாகச் சொல்லியிருந்தேன். இதெல்லாம்தான் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் காரணம்.
"எப்படி தெரியும் பப்பு? " என்று விசாரித்தால், "ஹேய்ய்ய், எனக்கே படிக்கத் தெரியுண்டி, அங்கே பாரு அ ம் மா எழுதியிருக்கு இல்ல, எனக்கு படிக்க தெரியாதா" என்று அவளது தன்மானத்துக்கு வந்த சோதனையாக நினைத்து கோபமாக பதில் சொல்லவே.... ஓ..யெஸ்..இப்போதான் அவளுக்குப் படிக்கத் தெரியுமே!! :-))
10 comments:
:)))))
தலைப்பு செம பாஸ் :)
விடு முல்லை.
அதனதன் வயதிலே அவர்கள் தெரிந்துகொள்ளும் சுதந்திரம் வேண்டும்.
என்பையன் சிம்பு ரசிகன். என்னால் தாங்கவே முடியாத கொடூரம் அது.அடே ப்ளீஸ் தயவு செய்து அஜித், மாதிரியானவங்களைக்கூட ஏத்துக்கோ என்று சொன்னேன் சண்டை வந்துவிட்டது.
இப்போ சென்னையில் தான் படிக்கிறான். சே படம் பொறித்த டீ சர்ட் போட்டுக்கொண்டு வந்தான்.
சே சம்பந்தப்பட்ட தரவுகளை கூர்ந்து கவனிக்கிறான்.
இது வலர்சிதைமாற்றத்தின் இன்னொரு பகுதி.
குழந்தையை குழந்தையாக இருக்க அனுமதிப்போம்.
//நல்ல தலைவர்களைப் பத்தி சொல்லிக்கொடுங்க//
இது ரொம்ப கஷ்டமான வேலையாச்சே..
// .என்பையன் சிம்பு ரசிகன். என்னால் தாங்கவே முடியாத கொடூரம் //
இப்படியே..எல்லாரும் சொன்னா...அவர அப்புறம் யாருதான் ரசிப்பாங்க பாஸ்.
நல்லதும் தெரிந்து கெட்டதும் தெரிந்து நல்லதை செலெக்ட் செய்யட்டும் பப்பு!
Loved it!
//"ஹேய்ய்ய், எனக்கே படிக்கத் தெரியுண்டி, //
:-))) LOL!
:))))))
எப்படியோ படிக்க கற்றுக் கொண்டால் சரிதான்..
:)
Naan valarkirenay mummuy...
Post a Comment