அவ்வப்போது பப்பு உதிர்த்த சில முத்துகள்
* எனக்கு ஃபைவ் இயர்ஸ்..அர்ஷித் கைலாசுக்கும் ஃபைவ் இயர்ஸ்..நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.
*ஆச்சி, நான் தொடறதெல்லாம் வெள்ளியாகணும், ஆச்சி......
*நானு, வர்ஷினி, தேஷ்னா மூணுபேரும் கல்யாணம் பண்ணிக்காம ஆண்ட்டியாக(டீச்சர்) போறோம்
*ஒரு புத்தகத்திலிருந்த பாடலை எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டாள். (எதையாவது கொஞ்சம் செய்துமுடித்துவிட்டால், அவ்வளவுதான்அப்புறம், கலாமின் மறுஅவதாரமாகி விடுவாள்....2020இல் இந்தியா வல்லரசாகுமா மாதிரி ஒரே கனவுதான்.....)
"ஆச்சி,நான் படிச்சிட்டேன் ஆச்சி, அப்புறம் என்ன ஆவேன்"
இந்த புக் ஃபுல்லா படிச்சிடுவே...
"அப்புறம் என்ன பண்ணுவேன்?"
"இன்னும் நிறைய புக்"
"அப்புறம்"
"இதைவிட இன்னும் நிறைய புக் படிப்பே"
"அப்புறம்"
"இன்னும் நிறைய்ய புக்"
"படிச்சிட்டு, என்ன ஆவேன்?"
"இந்த உலகத்துல எல்லா புக்கும் படிச்சிட்டு சயின்டிஸ்ட் ஆயிடுவே"
"வேணாம்,ஆச்சி கொஞ்சம் புக் படிச்சிட்டு நான் நர்ஸாவே ஆவறேன்!!"
*"பப்பு, அம்மா சொல்றதைக் கேட்டு பால் குடிச்சிட்டு ஹாப்பியா இருக்கணும்னு நினைக்கறியா?இல்ல, திட்டு வாங்கிட்டு சாட் ஆ இருக்கணும்னு நினைக்கிறியா?"
"ம்ம்ம்ம்ம்....பால் குடிக்காம ஹாப்பியா இருக்கணும்னு நினைக்கறேன்."
*பப்புவின் சமீபத்திய ஃபேவரிட் விடுகதைகள்...
நாங்கள் சொன்னவை போக அவளாகவே சிலவற்றை நூற்பாள்.
1.டைமண்ட் கீழே விழாது, அது என்ன?
2. சொன்னால் ஆடாது, ஆனால் எல்லாரையும் அங்குமிங்கும் ஆட வைக்கும், அது என்ன?
அவளது விடைகள்:
ம்ரதித்சட்ந
ல்சஞ்ஊ தகாக்கே சுச்பே றல்சொ
12 comments:
//பால் குடிக்காம ஹாப்பியா இருக்கணும்னு//
அப்படிப் போடு பப்பு:)!
நூற்ற விடுகதைகளும் வல இடமாய் விடைகளும் அருமை:)!
//ஆச்சி, நான் தொடறதெல்லாம்
வெள்ளியாகணும்//
எனக்கு ஒரு ரெண்டு கிலோ வெள்ளி வேணும்
//ம்ரதித்சட்ந
ல்சஞ்ஊ தகாக்கே சுச்பே றல்//
டமிலா?
நல்லாயிருக்கு :). நர்ஸ் ? வித்தியாசமான ஆசை.
எப்படித்தான் நியாபகம் வெச்சு எழுதுறீங்களோ !!
Just like mom so smart to pick the given options and form own option. so sweet you have a ownderful daughter..
natchchaththirap pathivu.vaalththukkal
//
ஆச்சி, நான் தொடறதெல்லாம் வெள்ளியாகணும், ஆச்சி
//
இந்த கோரிக்கை மட்டும் நிறைவேறிடுச்சு, என்னோட கோரிக்கை கண்டிப்பா சக்சஸ்
பப்பு ப்ளீஸ் ப்ளீஸ் என்னைய பளபளன்னு வெள்ளியாக்கிடு? :)
\\"ம்ம்ம்ம்ம்....பால் குடிக்காம ஹாப்பியா இருக்கணும்னு நினைக்கறேன்."\\
so nice pappu.
//"வேணாம்,ஆச்சி கொஞ்சம் புக் படிச்சிட்டு நான் நர்ஸாவே ஆவறேன்!!"//
//"ம்ம்ம்ம்ம்....பால் குடிக்காம ஹாப்பியா இருக்கணும்னு நினைக்கறேன்//
;-))
சரி பப்பு... நான் ரெண்டு விடுகதை சொல்றேன். சொல்றியா?
தோ-வில் தொடங்கும். சை-யில் முடியும். அதை சாப்பிடலாம். அது என்ன?
அடித்தால் கிணிகிணி-ங்கும். அடிக்காவிட்டால் சும்மா இருக்கும். அது என்ன?
விடை: 43-ம் பக்கம் பார்க்க.
Very cute. Pappu is developing her imagination skills :)
Neenga papuva vida moosam :) Antha answers a thirupi vasika enaku konjam time eduthichu :)
பப்பு டீச்சர் ஆண்ட்டியா :) குட்.
மகளுக்கும் சிறுவயதில் ஆன்டிக் கனவுதான் சீலை உடுத்தி வீட்டில் ப்ளைக்போட்டில் பாடம் நடத்துவாள். சில நேரம் கதிரைக்கு அடியும் விழுந்திருக்கு :)
Post a Comment