கடந்தவாரத்தில் சில புதிய கதைப்புத்தகங்களை வாசித்தோம். இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு வாசித்து காட்டினால் எளிதாக இருக்கும் என்று நினைத்து எடுத்து வைத்திருந்தேன். என் பர்த்டே வர்றதுக்கு இன்னும் எவ்ளோ டேஸ்ப்பா இருக்கு என்று பப்பு கேட்டதும் தான் உறைத்தது இன்னும் ஒரு சில மாதங்களில் பப்பு ஐந்து வயது சிறுமி என!
தான் வளர்க்கும் தங்க மீன்களுடன் தானும் ஒரு மீனாக மாறி ஒரு நாளை செலவழிக்கும் சிறுவனின் கதை. எளிய கதைதான். உடனே பப்புவுக்கு மீன் ஆக்டிவிட்டி செய்யும் ஆசை வந்துவிட்டது.
மேலிருப்பது பப்பு வரைந்தது. நெளிகோடுகளும் அதனை பின்னர் பிரஷ் கொண்டு தீற்றினாள். கீழிருப்பது நான் வரைந்தது. இந்த மீனைக் கண்டதும் அவள் வரைந்ததன் மேல் திருப்தியில்லாமல் இதில் வரைய விருப்பப்பட்டாள். ஆனால் இதில் வரையும்படி எதுவுமில்லாததால் கடைசியில் விரல்களில் வண்ணத்தை (thump print) ஒட்டி செதிள்களை தீற்றினாள்.
இரண்டு மீன்கள் வரைந்ததில் சரியாக வரவில்லை என்று நினைத்து வண்ணக்காகிதங்களை வெட்டித்தரச் சொன்னாள். நான் நன்றாக வரைவதாக அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட பப்பு என்னையே மீன் வரையச் சொன்னாள்.
பேஸ்டிங் மட்டும் பப்பு!
மீன்குழம்பும் வறுவலும் சாப்பிட்ட ஒரு சனிக்கிழமை மதியம் இப்படியாக கழிந்தது.
14 comments:
ஹ்ம்ம்...மீன் நல்ல வெந்திருக்கு...மன்னிக்கவும் :-) :-) வந்திருக்கு ஓவியத்தில்....!
சின்ன வயது மீன் தொட்டி...மற்றும் தொட்டியில் இருக்கும் வண்ண மீன்களுடன் பேசியது இப்போது நினைவில்...! :-) :-)
:) அது வஞ்சரம் மீனா இருக்குமோ?
//இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு வாசித்து காட்டினால் எளிதாக இருக்கும் என்று நினைத்து எடுத்து வைத்திருந்தேன்//
இனிமே அவளே ப்ளாக் எழுதுவா போலயே!
கடைசி வரில டெரர்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க.
Finding Nemo பாத்தாச்சா
இந்த புக்ஸ் எல்லாம் எங்க வாங்குறீங்க முல்லை?
//நான் நன்றாக வரைவதாக அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட பப்பு
என்னையே மீன் வரையச் சொன்னாள்//
நம்பிட்டோம்
neenga montisory mudichrkeengala ...
engarnthu intha idea laam varuthu?
நீ வரைந்த மீனும் நன்றாக இருக்கிறது பப்பு:)!
ennachu ennoda comment varavae illa?
மீன் சாப்பிட்டவுடனே யு மீன் மீன் வரையனும்னு தோணிருச்சா?
mullai blogku leave -aaa?
வண்ணத்து மீன்கள் அருமை!!!
போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.நன்றி!
இந்த புத்தகம் உட்பட சிறுவர் இலக்கியம் சார்ந்தவற்றை வாங்குமிடம் குறித்த தகவல்களையும் பகிர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
விஷ்ணுபுரம் சரவணன்
Post a Comment