Thursday, June 13, 2013

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, வளைஞ்சி வளைஞ்சி போகாதே!" ‍-  பப்பு

டூ வீலர்ல பப்புவை ஸ்கூலுக்கு கூப்பிட்டுட்டு போகும்போது, கொஞ்சம் வளைஞ்சு பை பாஸ் பண்ணி சிக்னல்ல முன்னாடி போய் நின்னுட்டேன்.

"ஏன்? காலை இடிச்சுக்கிட்டியா?" - மீ

"இல்ல...வளைஞ்சு வளைஞ்சு போகாதே!" - பப்பு

"வளைஞ்சு போனா என்ன?" -  மீ

"வளைஞ்சு போனா குட் மேனர்ஸ் கிடையாது." - பப்பு


"..?!!.."

" நீ இப்ப க்யூல இருக்க. யாராவது வந்து உனக்கு முன்னாடி போய் நின்னா எப்படி இருக்கும்? குட் மேனர்ஸா அது? அது மாதிரிதான், பைக் பின்னாடி நாம இருந்தா, அது போனதுக்கு அப்புறமாதான் நீ போகணும். நீ வளைஞ்சு போனா அவங்களுக்கு எப்படி இருக்கும்?!" - பப்பு

"........" (அவங்களுக்கு எப்படி இருக்குமா?....நமக்கு லேட் ஆகிடும்.. மகளே!!அவ்வ்வ்  - மைன்ட் வாய்ஸ்!)

"உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க...சொல்லு...உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க....!" - - பப்பு

நான் ஏன் வாயை திறக்கறேன்?!!

போன வருசமெல்லாம், திடீர் திடீர்னு சில பைக் நம்பர்களை கொடுத்து போலீஸ்கிட்ட சொல்லு, சொல்லுன்னு ஒரே அட்டகாசம்.என்னன்னா, அவங்க எல்லாம், பைக்லே ஹெல்மெட் போடாம போனவங்களாம்.  காலையில பார்த்ததை மனப்பாடம் பண்ணி சாயங்காலம் நான் ஆஃபீஸ்லேருந்து வந்ததும் இந்த பஞ்சாயத்து நடக்கும்! இந்த வருசம் இப்படி ஆரம்பிச்சிருக்கு!!

ஆம், பப்புவுக்கு பள்ளிக்கூடம் திறந்துவிட்டது!

மாலையில், வீட்டுக்குச் சென்றதும் பப்புவிடம் 'எப்படி இருந்துச்சு ஃப்ர்ஸ்ட் டே?" என்றேன். வழக்கமாக சில சோகங்கள் இருக்கும். பழைய நண்பர்கள் பள்ளி மாறிச் சென்றிருப்பார்கள். ஆன்ட்டியும் மாறி இருப்பார்.  ஆயாம்மாவும் வராமல் போயிருப்பார். இப்படி, ஏதாவது ஒன்று இருக்கும். இந்த முறையும் அப்படி சில நண்பர்கள் பள்ளிக்கூடம் மாறிச் சென்றிருக்கிறார்கள். இப்போ எனக்கு, '16 ப்ஃரெண்ட்ஸ்தான்' என்றாள், சிரித்தபடி. ஹப்பாடா!!

"அப்புறம், ஆன்ட்டி என்ன சொன்னாங்க உங்களுக்கு? , பிரேயர்லே" என்றேன்.

"நான் ஒரு நியூஸ் சொன்னேன் இல்ல...அதைதான் இவங்களுக்கு  ஆன்ட்டி இன்னைக்கு சொல்லியிருக்காங்க. அதாம்மா, ஒரு பொண்ணு, +2 படிக்கிற பொண்ணு, டீவி பார்த்துக்கிட்டே  இருந்திருக்கு. அவங்க அம்மா அப்போதான் மளிகை சாமான் வாங்கிட்டு வந்து ஹால்ல வைச்சிருக்காங்க. அது டீவி பார்த்துக்கிட்டே பெப்சிபாட்டிலை திறந்து குடிச்சிடுச்சுன்னு சொன்னேன் இல்ல"  என்றார் பெரிம்மா.

அது  பாட்டிலில் பெப்சி இல்லை. அதில் இருந்தது ஆசிட். அந்த பெண்ணை இறுதியில் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டாள். :- ( பெரிம்மா சொல்லி இந்த செய்தியை கேட்டிருந்தேன். அதைதான் ஆன்ட்டியும், அவர்களுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லி அறிவுரை கூறியிருக்கிறார். என்ன அறிவுரை கூறியிருப்பார்? "டீவி பார்த்துக்கிட்டே சாப்பிடாதீங்க, அப்புறம் நீங்க என்ன சாப்பிடறீங்கன்னே தெரியாது." என்றுதானே சொல்லியிருப்பார்!

ஆன்ட்டி சொன்னதாக பப்பு சொன்னதை கேட்டு பெரிம்மா கொஞ்சம் கலங்கிதான் போய்விட்டார். இருக்காதா பின்னே?!

"அந்த அக்கா மாதிரி கம்ப்யூட்டர்(!) பார்த்துகிட்டு நீங்களே சாப்பிடாதீங்க. நீங்க கம்ப்யூட்டர் பார்க்கும் போது, வீட்டுல யார் இருக்காங்களோ அவங்களை ஊட்டி விட சொல்லுங்க.  நீங்களே சாப்பிடக்கூடாது. அப்பதான்,  தப்பு நடக்காது!!" ‍ அப்படின்னு ஆன்ட்டி சொன்னாராம்.

அவ்வ்வ்வ்வ்!!

ஆமா, குழந்தைகளைத்தான் சாட்சி சொல்ல கோர்ட்டில் கூப்பிடுவார்களாமே, அந்த வழக்கம் இன்னும் இருக்கிறதா என்ன? :-)


3 comments:

தியானா said...

//"உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க...சொல்லு...உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க....!" - - பப்பு

நான் ஏன் வாயை திறக்கறேன்?!!//

நாம வாயைத் திறந்தாலும் ஒழுங்கான பதில் வரமென்று நினைக்கிறீர்களா முல்லை? ஒரு பெரிய கதை வரும். அந்தக் கதையில் நம்ம என்ன கேள்வி கேட்டோமென்று மறந்து விடும்..:‍))

//ஆமா, குழந்தைகளைத்தான் சாட்சி சொல்ல கோர்ட்டில் கூப்பிடுவார்களாமே, அந்த வழக்கம் இன்னும் இருக்கிறதா என்ன? :‍)//

கொஞ்ச நாளில் அவர்களும் தற்பொழுதுள்ள குழந்தைகளைப் பற்றி தெரிந்து கொண்டு மாற்றி விடுவார்கள் :))

பூங்கோதை said...

I hope that girl is safe. :(

Pappu might still be telling the truth. She could've specifically asked her auntie, if its okay to be fed when watching computer, and got that answer. Slick, but factually true.

அன்புடன் அருணா said...

hahahaha! Nice twist!