”கொன்னே புடுவேன்”
”என்ன பப்பு சொல்றே?”
”நவ்ஜோத் இல்ல ஆச்சி, ’என் தம்பிக்கு யாராவது பை சொன்னீங்களோ கொன்னே புடுவேன்’னு சொன்னான்.”
ம்ம்....
”ஆச்சி, நான் இப்டி குடுமி போட்டிருக்கேன் இல்ல, அது ஃப்வுண்டெய்ன் குடுமியாம். வேதா ரெண்டு குடுமி போட்டிருக்கா இல்ல, அது இண்டிகேட்டர் குடுமியாம். தனுஷ் சொல்றான்….திருட்டு பையன்…”
”பப்பு அப்டில்லாம் சொல்லக்கூடாது பப்பு. என்ன பேச்சு இதெல்லாம்”(அவ்வ்வ் நான் ஏன் அப்பப்போ தேஞ்சுபோன ரெக்கார்டு மாதிரி ஆகிடறேன்!)
”இல்லப்பா, புவனேஷ்வரி ஏறினாதான் அடுத்து நவ்ஜோத் ஏறமுடியும். (?) புவனேஷ்வரி ஏறிட்டு தூங்கும்போது என்னா பண்ணுவான், மெதுவா பின்னாடி போய் ஸ்னாக்ஸ் பாக்ஸ் தெறந்து சாப்பிட்டுடுவான்.”
பேருக்கு பேரு சரியா போயிந்தி.....?
”இங்க பாருப்பா, வேதாக்கு மட்டும் முடி வளந்தா போதுமா, எனக்கு முடி வளர வேணாமா, சொல்லு ஆச்சி”
”ஏன் பப்பு, உனக்கும்தான் முடி வளரணும்..”
”வேதா பேரிச்சம்பழம்ல்லாம் எடுத்துசாப்ட்டுடறா, எனக்கு குடுக்கவே மாட்டேங்கறா…அவளுக்கு மட்டும் முடி வளரணுமா? எனக்கு முடி வளர வேணாமா?”
ரொம்ப நல்ல புள்ளைன்னுதானே நினைச்சீங்க பேரிச்சம்பழத்துலேருந்து எஸ்கேப் ஆகறதுக்கான வழி…இது!
”இந்த லஷ்மி பாருப்பா,”
....
”ஒரு நாள் குடுமி போட்டுட்டு வந்தா அடுத்த நாளும் குடுமி போட்டுட்டு வரக்கூடாதாம். அதுக்கு, அடுத்தநாள்தான் குடுமி போட்டு வரணுமாம்…நான் என் இஷ்டத்துக்கு நான் என்ன வேணா பண்ணுவேன்…அவளுக்கென்ன?அப்டி சொல்லலாமாப்பா…அவங்கவங்க இஷ்டம்தானே…அவ ஏன் சொல்றா…”
ஒரு விசாரணைக் கமிஷன் பார்சல்ல்ல்ல்....
9 comments:
:-))))))))
\\”ஆச்சி, நான் இப்டி குடுமி போட்டிருக்கேன் இல்ல, அது ஃப்வுண்டெய்ன் குடுமியாம். வேதா ரெண்டு குடுமி போட்டிருக்கா இல்ல, அது இண்டிகேட்டர் குடுமியாம்.\\
அடடா! இப்பவே எப்டியெல்லாம் பேரு வைக்கிறாங்க...
”(அவ்வ்வ் நான் ஏன் அப்பப்போ தேஞ்சுபோன ரெக்கார்டு மாதிரி ஆகிடறேன்!)
:-)))
கமெண்ட போட்டு ரொம்ப நாளாச்சு முல்லை. ஆபிஸ்ல இருந்தா ரீடர்ல படிக்கிறதோட சரி. தமிழ்ல கமெண்ட் போட முடியாது.
பப்புவோட வளர்ச்சியை நல்லா பதிவு செய்றீங்க முல்லை!! அவளுடைய வாசித்தல், உங்க ஆயாவுக்காக வேண்டுதல் என ஒவ்வொரு பதிவுலும் அவள் வளர்ச்சி நன்றாகத் தெரிகிறது.
பப்புக்கு வாழ்த்துகள்!!!
//நான் என் இஷ்டத்துக்கு நான் என்ன வேணா பண்ணுவேன்…அவளுக்கென்ன?அப்டி சொல்லலாமாப்பா…அவங்கவங்க இஷ்டம்தானே…அவ ஏன் சொல்றா…..
ஸ்ஸஸஸஸஸஸபா... முடியல :-))))))).(ஆனா, அவளுடைய சுதந்திர உணர்ச்சியை ரசிச்ச்சேன்)
Hi Pappu, me the coming with visaranai commission :)
முடி பிரெச்சனை தீக்க முடியாத பிரச்சனை தான். ரொம்ப துரு துறுன்னு இருக்க, பப்பு இங்க பார்சல்.... அவ்வவ்
அட ஏன்பா? எல்லாரும் பப்புவை டிஸ்டர்ப் பண்றீங்க!???
- //பாருப்பா//, //”இல்லப்பா, // , //அப்டி சொல்லலாமாப்பா//
:)
இதை காது குளிர கேட்டதுபோல கற்பனையில் இருந்தாலும் , நேரில் பேசுவதை கேக்கணும்போல தோணுது..
:) அசத்துங்க பப்பு.
Post a Comment