Saturday, March 05, 2011

பாடல் அறிமுகம் - “பாரடா உனது மானிட பரப்பை”

பாடல்களை/இசையை இதுவரை எனது உள்ளார்ந்த உணர்வுகளுக்காகவும், பொழுதுபோக்காகவும், சிலசமயத்து அற்ப உணர்வுகளுக்காகவும கேட்டு வந்திருக்கிறேன். ஒரு பதிவில் தோழர் போதெம்கின் (தோழர் கோவன் பற்றிய இடுகை என்று நினைக்கிறேன்) அவர்கள் சில பாடல்களை அறிமுகப்படுத்தினார். கேட்கும்போது மிகுந்த மனவெழுச்சியை தந்த, உணர்வுகளை தட்டியெழுப்பிய பாடல்.

Paarada Unathu Maanida Parappai - 1 by sandanamullai

தேர்தல் போய் தேர்தல் வந்தாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைநிலை மாறிவிடுமா? நாடோடிகளாக பிழைப்பு நடத்தும் மக்களின் அவலம்தான் தீர்ந்துவிடுமா? இந்த தொழிலாளிகளின் உடலுழைப்பில் வந்த கட்டிடங்களில் அமர்ந்துக்கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு அவர்களைப் பற்றி நினைத்துப்பார்க்க முடிகிறதா? ”அதெல்லாம் அவங்கவங்க விதி” என்று ஒற்றை வார்த்தையில் அடக்கும் சாமர்த்தியமும், ”அதுக்குத்தான் அவங்களுக்குன்னே நிறைய ஸ்கீம் இருக்கே, ஒரு ரூபா அரிசி ….இப்போ வீடுன்னு நிறைய சலுகை கொடுக்கறாங்களே” என்றும் ’கருணை’யும்தானே நம்மில் பெரும்பான்மையினருக்கு இருக்கிறது? ”நம்ம பொழப்பையே பாக்க முடியல, இதுக்கு மேல நாம் என்ன செய்துவிட முடியும்” என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதோடு முடிந்துவிடுகிறது – நமது சமூக பொறுப்பு!

தன்னலம் பாராமல், மக்களோடு இணைந்து போராடுவதே உண்மையான நேசமாக இருக்க முடியும். மதம், இனம், நிலம், வர்க்கம் பாராமல் கொடுமை களுக்கெதிராகவும் வன்முறைகளுக்கெதிராகவும் நிற்பதே விடுதலைக்கான செயல்பாடாக இருக்கும். தமது சொந்த அற்ப சுகங்களை முன்னிறுத்தி அடிமைகளாக வாழாமல், தாம் சுரண்டப்படுவதை அறியாமல் வாழும் மக்களை அரசியல் உணர்வு பெறச்செய்வதே நமது கடமை.

இப்பாடலின் மற்றொரு வெர்சனும் இருக்கிறது. அப்பாடலைப் பற்றி அடுத்த இடுகையில் பகிர்ந்துக்கொள்கிறேன். பாரதிதாசன் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது - அவர் பாரதியாரால் கவர்ந்திழுக்கப்பட்டு தனது பெயரை மாற்றிவைத்துக்கொண்டார், மரபுக்கவிதைகள் எழுதுவார் என்பதைத் தவிர! பாரதியார் அளவுக்கு பாரதிதாசனை நமது பாடநூல்களும், மற்றநூல்களும் கண்டுக்கொள்வதில்லையோ?!

2 comments:

Anonymous said...

அருமை ..................

எண்ணங்கள் 13189034291840215795 said...

தன்னலம் பாராமல், மக்களோடு இணைந்து போராடுவதே உண்மையான நேசமாக இருக்க முடியும். //

சுருக்கமா தெளிவா சொல்லியுள்ளீர்கள்..