பப்பு ஊஞ்சலில் அமர்ந்து ரைம்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அருகில் நின்றுக் கொண்டிருந்த என்னை அமர சொன்னாள்.
காலை நேரம்....கிளம்ப வேண்டும்...ம்ம்ம்....சிறிது நேரம் அவளுடன்
அமர்ந்தபின், சரி, நான் போய் கிளம்பறேன்" என்றேன்.
உடனே என் மடியில் படுத்து கொண்டு,
"நீ இப்ப போக முடியாது" என்ற போது வாயடைத்து போனது!!
(ஒன்றரை வருடத்திற்கு முன்பு வாங்கிய ரைம்ஸ் சிடி, இப்போது புண்ணியம்
கட்டிக்கொள்கிறது, அவள் கவனத்தை திசை திருப்ப! )
"ஆபீஸ் போகாதே" என்று காலியிலிருந்து அழுகை. (திங்கள் கிழமை காலை!!)
ஆபீஸ் வருவதற்காக கிளம்பி கதவருகில் நின்றேன். பப்பு
திடீரென ஓடி வந்து கிரில் கதவில் கால் வைத்து ஏறி இரண்டு கதவுகளையும்
சிரமப்பட்டு இணைத்து தாழ்ப்பாள் போட்டுவிட்டு, என்னை திரும்பி பார்த்து
சிரித்த போது எனக்கும் தோன்றியது.. "போகத்தான் வேண்டுமா?"
Thanks baby, என் வாழ்வின் அவசியம் மிச்சமிருக்கிறது உன்னிடம்!!
No comments:
Post a Comment