Thursday, June 05, 2008

பப்புஸ்பீக்

பப்புவுக்கு ஒரு ஸ்லைஸ் பிரட் கொடுத்தேன். சில சமயங்களில் வெறும் பிரட்டை அப்படியே,
சாப்பிடுவாள்.

"ஆச்சி, ஜாம் வேணும்"

(ஜாம் பாட்டிலை கண்ணில் காட்டாமல்)தடவியாயிற்று.

"ஆச்சி, ஜாம் வேணும்"

பிரட்டில் இருந்த ஜாமை எல்லாம் கையால் சுரண்டி சுரண்டி..

"பப்பு, அப்படி செய்யக் கூடாது. எறும்பு கையை கடிக்கும், டர்ட்டி..டர்ட்டி.. மடிச்சு சாப்பிடு"


ம்ஹூம், கேட்டபாடில்லை. ஜாம்தான் காலியாகிக்கொண்டிருந்தது.

"அவ்ளோதான், ஜாம் காலியாயிடுச்சு"

பிரட் சாப்பிட்டபின், இன்னொரு ஸ்லைஸ் கேட்டாள். அதில், ஜாம் தடவியிருந்ததை பார்த்து கேட்டாள்,

"கொஞ்சூண்டு ஜாம் இருந்துதா ஆச்சி.."


ஓ காட்...நீ எவ்ளோ innocentடா..(உன்னை போய் ஏமாத்தறேனே)!!

2 comments:

நிலா said...

:)

கயல்விழி முத்துலெட்சுமி said...

அய்யோ ஆமாம்ப்பா பாவம் பிள்ளை..நான் கூட என்பையன் கிட்ட மிட்டாய் தீந்துபோச்சுன்னு சொல்லிட்டு அப்பப்ப அந்த டப்பால கிடந்துச்சுடா ஒன்னே ஒன்னுன்னு பொய் சொல்லுவேன்.. வேற வழி..