Wednesday, June 04, 2008

நீயா நானா @ விஜய் டீவி

விஜய் டீவியின்,"நீயா நானா" வில் கடந்தவார விவாதம் மணமகள் Vs மணமகன்.
வரன் தேடும் மணமகன்களும் மணமகள்களும்.
பேச்சு சுவராசியமானதாக இருந்தது எப்போதும்போலவே.

"நீங்கள் மணமகளி/னின் ப்ரொபைல் பார்க்கும் போது, முதலில் பார்க்கும் மூன்று முக்கிய விஷயங்கள் என்ன ?" என கோபி கேட்டபோது வேலை,சம்பளம், குடும்பம்,சாதி, ஊர் etc என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் கூறினர்.

அந்த சமயத்தில், "சாதி எவ்ளோ பேர் முக்கியமா பார்ப்பீங்க" என்ற போது, சிலர் பதில் கூறினர். இதில், ஒருவர் மட்டும், "நான் கண்டிப்பா சாதி பார்ப்பேன், ஏன்னா நான் பிராமின். வேறயா இருந்தா வெஜிடேரியனான்னு தெரியாது"என்றார். பெண்கள் பகுதியில் ஒரு பெண்ணும், "நான் பிராமின். ஆனா வேற சாதியிலதான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்றார்.

இதில், என்னை உறுத்திய விஷயம் என்னவெனில், எல்லாருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு, எல்லாருமே அவரது விருப்பு/வெறுப்புகளை பேசினர். ஆனால் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் அவரவர் சாதியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் மட்டும் "நான் பிராமின்" என தம் சாதியை பொதுவான சபையில் சொல்லிக் கொள்ள வைத்தது எது அல்லது யார்?

நிகழ்ச்சியில் பேசின மற்றவர்கள் யாரும் தம் சாதியை சொல்லிக்கொள்ளவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அவர்களை தம் சாதியை சொல்லாமல் மவுனம் காக்க வைத்தது எது அல்லது யார்?

7 comments:

பாபு said...

"நான் பிராமின்" proves Non-Brahmins are higher.

புகழன் said...

//அவர்கள் மட்டும் "நான் பிராமின்" என தம் சாதியை பொதுவான சபையில் சொல்லிக் கொள்ள வைத்தது எது அல்லது யார்?

அவர்கள் மட்டும் "நான் பிராமின்" என தம் சாதியை பொதுவான சபையில் சொல்லிக் கொள்ள வைத்தது எது அல்லது யார்?
//

இவ்விரு கேள்விகளுக்கும் ஒரே பதில்
“அவர்களின் சாதி”

தமிழ்நெஞ்சம் said...நீயா? நானா?
விஜய் டிவியில் கோபிநாத் கலக்கும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியினை இணைய வாயிலாக இங்கே கண்டு மகிழலாம். இணையிறக்கமும் செய்யலாம். முடுக்கி வசதியும் உண்டு.ஆழியூரான். said...

"தகுதி பார்த்து கல்வி, வேலை வாய்ப்புல இடம் கொடுக்கனும். சாதி பார்க்கக் கூடாது", "இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா.?" என்ற புலம்பித் தீர்க்கும் பார்ப்பன பன்னாடைகளின் மனங்களில் தாங்களின் உயர்சாதி திமிர்த்தனம் ஊறிப்போயிருக்கிறது. அவர்கள் பேசும் முற்போக்கின் அளவுக்கு ஏற்ப பார்ப்பனத்தனத்தின் சதவிகிதம் கூடி, குறைகிறதே ஒழிய முற்றாக ஒழிந்துவிடவில்லை‍‍ சில விதிவிலக்குகளைத் தவிர.!

Thamizhmaangani said...

இங்கே சிங்கையில் வரும் ஞாயிற்றுகிழமை தான் ஒளிப்பரப்பு செய்யபடும். ரொம்ப eagera waiting.ஆனா நீங்க சொன்னதும் யோசிக்கவச்சிடுச்சு...

இவர்கள் பார்க்காமல் இருந்தாலும், இவர்களின் பெற்றோர்கள் கண்டிப்பா பார்ப்பார்கள்.

"நான் பிராமின்" என்று இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல.ஏற்கனவே,"உங்களுக்கு எப்படிப்பட்ட மருமகள்/மாப்பிள்ளை வேண்டும்" என்ற நிகழ்ச்சியில் ஒரு பக்கம் இளையர்களும் இன்னொரு பக்கம் பெற்றோர்களும் இருக்க, இளையர்கள் அணியில் இருந்த ஒரு பெண்ணும் இதே வார்த்தையை கூறினார்!!!

ம்ம்ம்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை. சரி அந்த கதையவிடுங்க... 'நீயா நானா' கோபிக்கு எந்த மாதிரி பொண்ணு வேண்டும்?? :)) ஹாஹா..

(ஏற்கனவே அவருக்கு கல்யாணம் ஆச்சுனு மட்டும் சொல்லிடாதீங்க, என் மனசு சுக்குநூறா போயிடும் ;((

மங்களூர் சிவா said...

:)

சுடர் said...

//பெண்கள் பகுதியில் ஒரு பெண்ணும், "நான் பிராமின். ஆனா வேற சாதியிலதான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்றார்.//


அந்த பொண்ணு வேற சாதியில கல்யாணம் பன்னிக்க சொன்ன காரணத்த கவனிச்சீங்க்களா.வீரமான ஆம்பளையா வேணும் அது எங்க சாதில இல்ல அதனாலாதான் சொன்னுச்சே
ஆமா உண்மையாவே பிராமின் சாதில வீரமானவங்க இல்லையா?? தெரிஞ்சவங்க சொல்லுங்க பிளீஸ்