Thursday, June 19, 2008

"பார்த்த முதல் நாளே" வின் கடைசி நாள்!!

கமலின் "பார்த்த முதல் நாளே" பாடல் வந்த நாளிலிருந்து பப்புவுக்கு மிகவும் இஷ்டம்.
அவளுக்காகவே நாங்கள் சன் மியுசிக் சானலில் டீவியை வைத்திருப்போம்.அந்த பாடல் இசைக்க ஆரம்பித்த உடன் தலையை ஆட்டி ரசிப்பாள். இது ஒரு ஒன்றேகால் வயதிலிருந்து தொடர்ந்தது. பாடலில் அவர்கள் இருவரும் தண்ணீரில் குதிக்கும்போது,பாட்டு முடிய போது என்பாள், அந்த இசையை வைத்து!

யாராவது சானலை மாற்றிக்கொண்டிருக்கும்போது அந்த பாடல் வந்துவிட்டால், ஒரு மைக்ரோ செகண்ட் கேட்டால் கூட பாடலை வைக்க சொல்லுவாள். நாங்களும், அந்த பாடல் வரும்போது, அவள் வெளியில் இருந்தால் கூப்பிட்டுவிடுவோம். இது ஒரு இரண்டு வயது வரை தொடர்ந்தது!!
ஒரு நாள், அந்தபாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது,

"மாமா அக்காவ ஏன் தூக்கறாங்க"
"மாமா அக்காவ ஏன் தொரத்தறாங்க?"
"மாமா அக்காவ ஏன் தண்ணில தூக்கிப்போடாறங்க"

என்று கேட்க ஆரம்பித்தாள். அன்றிலிருந்து ஆரம்பித்தோம், அந்த பாடலுக்கு சென்சார் !!!


சின்னசிறு கேள்விகள்தான்..ஆனால் பப்புவின் வளர்ச்சிப்படிகளை எப்படி உணர்த்திவிடுகின்றன!!!

4 comments:

கயல்விழி முத்துலெட்சுமி said...

;) நான் வளர்கிறேனே மம்மியா ??

வல்லிசிம்ஹன் said...

எங்க வீட்டுக்கு ஒரு பொண்ணு ஒளியும் ஒலியும் பார்க்க வரும்.
அப்பொழுது பூக்கள் பாடல் காட்சியில் காண்பித்தால் அடுத்தப்பல பழம் வரும் அப்புறம் பாப்பா வரும் என்றாளே பார்க்கலாம்.:)

பார்த்துக் கவனிக்காவிடில் நம்மை மிஞ்சிவிடும் பசங்க.

வல்லிசிம்ஹன் said...

எங்க வீட்டுக்கு ஒரு பொண்ணு ஒளியும் ஒலியும் பார்க்க வரும்.
அப்பொழுது பூக்கள் பாடல் காட்சியில் காண்பித்தால் அடுத்தப்பல பழம் வரும் அப்புறம் பாப்பா வரும் என்றாளே பார்க்கலாம்.:)

பார்த்துக் கவனிக்காவிடில் நம்மை மிஞ்சிவிடும் பசங்க.

Thamizhmaangani said...

ஹாஹாஹா.. பப்பு ரொம்ப smart!! அனுபவத்தை சொன்ன விதம் ரொம்ப நல்லா இருந்துச்சு, ரசித்து படித்தேன்! தொடரட்டும் பப்புவின் குறும்புகள்!! :))