Friday, June 27, 2008

Internation play school

வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் Internation play schoolஎப்படி இருக்கிறது எனப் பார்க்க சென்றேன்.வீடு. வெளியே ஒரு பெரிய பேனர் இருந்தது.
மாடிப்படிக்கு அருகில் இருந்த இடத்தில் நாற்காலி போட்டு அமரச் சொன்னார்கள்.
பேச ஆரம்பித்தோம்..

"என் குழந்தைக்கு 2 வயது 8 மாதங்கள். உங்கள் பள்ளியைப் பற்றி சொல்லுங்கள்."

அந்த இன்ஸ்டரக்டர்/பெண்

"கோர்ஸ் ஃபீஸ் 18000. அதை நீங்கள் தவணை முறையில் கட்டலாம்..
6000..6000..6000. பள்ளி சீருடை, தண்ணீர் பாட்டில், பை, காலணி எல்லாம் நாங்கள்
கொடுத்து விடுவோம்"

ஷாக்!!!

டைமிங்ஸ் என?

ஒரு வருடம்.

!!!

இல்லை. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம்?

காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

ஒரு கிளாஸ்-க்கு எவ்வளவு பேர்? இப்போ எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

20-24 பேர். 30 பேர் இருக்கிறார்கள்.

குழந்தைகளை எப்படி எங்கேஜ் செய்கிறீர்கள்?

2 மணி நேரம் எழுத்துகள், எண்கள், பாடல்கள் சொல்லிக் கொடுப்போம்.
1 மணி நேரம் விளையாட்டு.

ஷாக்!!!

ஓ..இப்போவே எழுத்துகள், எண்கள் சொல்லிகொடுத்துவிடுவீர்களா?
ஒகே. என்ன விளையாட்டுகள்?

இரண்டு கார்கள், ஒரு ஊஞ்சல், ஒரு ரோலர்கோஸ்டர் இருக்கிறது.
அதில் விளையாட விடுவோம்.

ஷாக்!!!

நான் உங்கள் கிளாஸ் ரூம், விளையாடும் அறையை பார்க்க வேண்டும்.

சாரி. தனியாக வந்தால் அனுமதிக்கமாட்டோம். குழந்தையோடு வந்தால்தான் பார்க்க முடியும்.

ஷாக்..ஷாக்!!!

ஏன்..பார்த்தால் தானே எனக்கு ஒரு ஃபீல் வரும். முடிவு எடுக்க முடியும்.

இல்லை மேடம். இது எங்கள் ரூல்!! குழந்தையை அழைத்து வாருங்கள். அப்போது அனுமதிக்கிறோம்.

--------x--x--x-------

அந்த பெண், எடுத்தவுடன் ஃபீஸை பற்றி பணம் கட்டுவதுதான் முதலில் எனபது போல் பேசியதும் எனக்கு பிடிக்காமல் போயிற்று. அதுவும் ஒருவருடத்திற்கு 1800 டூ மச்!!!

கடைசி வரை அவள், ஆண்குழந்தை என்றே நினைத்து பேசியது அதைவிட எரிச்சல்.
ஆண்தானா என்றுகூட கேட்டுக் கொள்ளவில்லை!!

கிளாஸ்ரூமை பார்க்க விடாதது மேலும் கடுப்பு! அந்த வீட்டில், மாடிப்படி அருகே ஒரு சிறிய கேட் போட்டிருந்தது. ஹாலில் மட்டுமே கிளாஸ் நடக்க முடியும்.அதில் 30 பேர்!!

இதில் இப்போதே படிப்பு என்றால்...ஒரு ஒப்புவிக்கும் இயந்திரமாகவே மாற்றி விடுவார்கள்!!!

--------x--x--x-------

சரியான அணுகுமுறை இல்லாததாலும், போதுமான இடவசதி இல்லாததாலும், அந்த பள்ளி பப்புவை இழந்து விட்டது!!

Updations :

எனது வீட்டிற்கு அருகில் இருக்கும் இந்த கிளை புதிதாக தொடங்கப்பட்டதாக, நண்பர் மூலமாக அறியப் பெற்றேன். அந்தக்கிளயில் எனக்கேற்பப்பட்ட அனுபவமே இந்தப் பதிவு!
இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளியின் பெயரும், சுட்டியும் நீக்கப்பட்டுள்ளது. ஒரு பெற்றோராக,
எனது உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறேன். ஏனெனில், அவள் வளரும் சூழலை
நல்லதாக அமைத்துத் தர வேண்சிய கடமை எனக்கிருக்கிறது, without spoiling her childhood.

5 comments:

Muhammad Ismail .H, PHD, said...

Dear Santhana Mullai,

Don't go such money minded schools and never allow to damage pappu's future. Start your home school for pappu at your home. "Mother's lap is first school for kid". So don't waste time and enjoy the learning with pappu. More info available at http://www.absolsoftec.com/netact/ (or) contact me . Insha Allah i will do my best. Wish to all best for pappu's learning.

~Muhammad Ismail .H, PHD,
+91.98424.96391

Thangamani said...

வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கூட குழந்தைகள், கல்வி இரண்டையும் பற்றிய அறிவே இல்லாதவர்கள் தான் பள்ளிகளை நடத்துகிறார்கள்; போதிக்கிறார்கள். கல்வி வியாபார நோக்கில் மட்டும் பார்க்கப்படும் போது எழுகின்ற பிரச்சனை. நீங்கள் பள்ளியின் பெயரை வெளியிட்டிருக்க வேண்டும். கொஞ்சம் கூட தயக்கமோ, வெட்கமோ இல்லாது இப்படியான பள்ளிகள் இருக்கும் போது அது அவசியம்!

partha said...

yes akka.Even i had the very same experience in my place and i didnt want her to join there becoz of the qualifications what u have given.

நாதாரி said...

முல்லை எங்கள் கோவையில் மாவட்ட கல்வி அதிகாரியாகபணியாற்றிய கார்மேகம் தனது பையனை மாநகராட்சி பள்ளியில்தான் படிக்கவைத்தார் அவரிடம் ஒரு நண்பர் வினவும்போது குழந்தைக்கான சுதந்திரத்தை விசாலப்படுத்தலில் அரசுபள்ளிகள் முண்ணனியிலேயே இருபாதாக உணர்வதாக தெரிவித்தார்

நாதாரி said...

முல்லை எங்கள் கோவையில் மாவட்ட கல்வி அதிகாரியாகபணியாற்றிய கார்மேகம் தனது பையனை மாநகராட்சி பள்ளியில்தான் படிக்கவைத்தார் அவரிடம் ஒரு நண்பர் வினவும்போது குழந்தைக்கான சுதந்திரத்தை விசாலப்படுத்தலில் அரசுபள்ளிகள் முண்ணனியிலேயே இருபாதாக உணர்வதாக தெரிவித்தார்