”நீ எழுதி தா-ப்பா”
”ஆ, குட்டிக்கு எழுதினது பத்தாது இப்போ நீயா? ஹோம் ஒர்க்லாம் அவங்கவங்கதான் செய்யணும்.”
அவ்வளவுதான் கோபம்...கண்களில் நீர்..
"நீ ஏன் குட்டி மாமாவுக்கு எழுதி தந்தே? எனக்குதான் நீ எழுதி தரணும். நான் உன் ஃப்ரெண்டே இருக்க மாட்டேன்"
அவ்வ்வ்!
"இல்ல, பப்பு. குட்டி மாமாவும் இதே மாதிரி கேட்டப்போ எழுதி கொடுத்தேனா..அவங்க ஆன்ட்டி செம திட்டு. ஏன் இவ்ளோ அசிங்கமா எழுதி இருக்கே....அழகா எழுதணும்...உன் ஹேன்ட் ரைட்டிங் மாதிரி இல்லையே..இதுன்னு குட்டி மாமாவை செம திட்டு. அதுலேருந்து மாமா ஹோம் ஒர்க் மாமாவேதான் எழுதுவாங்க..நீயும் உன் ஹோம் ஒர்க் நீயே எழுது..."
#ஸ்ப்பா!! மூச்சு விடாம சொன்ன இந்த டயலாக்கு ஏதோ லேசா பலனிருந்தது.

பப்பு, வீட்டுக்கு விளையாட வந்த நண்பனிடம், "ஹேய், உனக்கு தெரியுமாப்பா, ஃபேன் சுத்தும்போது பேன்லே ஏறி உட்கார்ந்தா ஆஃபிரிக்காவுக்கு போகலாம்"
#டிக்கெட் வாங்கணும்னா... சாரி.....வேணும்னா எங்க வீட்டுக்கு வாங்க...

"ம்ம்ம்....அம்மா வேணும்..ம்ம்.." சும்மாதான், அழற மாதிரி ஆக்டிங், என்னை ஏமாத்தறதுக்கு.
அதாவது கொஞ்சினது பத்தாதுன்னு சிக்னலிங்!
நானும், "பப்பு வேணும்..ம்ம்..பப்பு வேணும்"
"ஹேய், நான் என்ன உனக்கு அம்மாவா?!"ன்னு நிஜமாவே அழுகை...
#பாப்பாங்க மட்டும்தான் அம்மாவுக்காக அழுவாங்களா என்ன? அவ்வ்வ்வ்
க்ளோப்-லே விரலால ட்ரேஸ் செஞ்சு கண்டங்களைச் சொல்லி விளையாடிக்கிட்டிருந்தப்போ,”ஹை, பப்பு எப்படி தெரியும் உனக்கு?”
”எப்படி தெரியாம இருக்கும்?!!” - பப்பு
#பவ்வ்வ்வ்வ்

இதுதான் சமீபமா பப்புவுக்கு பிடிச்ச புத்தகம். ஆங்கில எழுத்துகள் அறிமுக புத்தகம். என்ன ஸ்பெஷல்னா, A is for ZebrA, B ன்னா craB....u..gnU...விலங்குகள் பெயரா இருக்கிறதாலே பப்புவுக்கு ஆர்வமா இருக்கு. Worth reading.
15 comments:
வித்யாசமான புத்தகம் நன்றி
கொடுத்து வச்சவங்க பாஸ் நீங்க...ஆப்ரிக்காவுக்கு ப்ளைட் இல்லாம விசா இல்லாம போலமா பாஸ் :)))))))
pappu pinre
//
#ஸ்ப்பா!! மூச்சு விடாம சொன்ன இந்த டயலாக்கு ஏதோ லேசா பலனிருந்தது.//
உண்மைக்கு எப்பவுமே வரவேற்பு/பலனிருக்கும் பாஸ் பை தி பை நீங்க நொம்ப்ப்ப அழகா எழுதுவீங்கன்னு குட்டி மாமா எப்பூடி நம்ம்ம்ம்பி ஏமாந்தாரு ? #அடுத்த இண்ட்ரஸ்டிங்க் ஸ்டோரிடெல்லவும்
//ஹை, பப்பு எப்படி தெரியும் உனக்கு?”
”எப்படி தெரியாம இருக்கும்?!!” - பப்பு
டாப்பு :))
:))) Just Luvvvvvd this post!
High light:
”எப்படி தெரியாம இருக்கும்?!!” - பப்பு
ithu avvvv illa girrrrrrrrrrrrr!
ஒன் டிக்கெட் ப்ளீஸ்:)!
ஏ இஸ் ஃபார் சீப்ரா. அட இது நல்லா இருக்கே.
பப்பு அம்மா உங்களுக்கு அவங்களை சமாளிக்கவே தெரியலை:0)
உலகத்துல அத்தனை குழந்தைகளும் இப்படியே அம்மாவை
மிஸ் செய்து அழுவாங்க போல எங்க பேரனும் இதே
தான்.
//கானா பிரபா said...
pappu pinre
//
ஹய்யோ ஹய்யய்யோ பெரிசு இங்கீலிசுலயெல்லாம் கலக்குதுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)
ரொம்ப ரசிச்சேன் :-)))
//ஹை, பப்பு எப்படி தெரியும் உனக்கு?”
”எப்படி தெரியாம இருக்கும்?!!” - பப்பு//
அதானே!
மருமகள் பப்புவுக்கு வாழ்த்துக்கள்.
முல்லை நலமா ?
பப்பு அசத்துங்க :)
#பவ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ் இப்போ பவ்வ்வ்வ்
ஆகிருச்சா, நடுவுல எவ்ளோ கேப் விட்டுருக்கேன் :))))))))
சூப்பர் புத்தகம்! பப்லிஷர் பேர் தெரிஞ்சா சொல்லுங்களேன் முல்லை.
Post a Comment