Monday, December 06, 2010

ஏழு நிறப்பூ மேனியா

பப்புவுக்குதான்.

ஏழுநிறப்பூ வைச்சு என்ன பண்ணுவேன்னு கேட்டதுக்கு, பாட்டை (பற்ப்பாய்..பற்ப்பாய்..பூ இதழே) பாடிட்டு

1."ரெயின்போவை கீழே வர வை"

திரும்ப பாட்டை பாடிட்டு,

2. "நான் இப்போவே பீச்சுக்கு போகணும்" ன்னு சொன்னதும் பீச்சுக்கு போய்டுவாங்களாம்.

அப்புறம், இன்னொரு தடவை பாட்டு,

3."எனக்கு விங்ஸ் வேணும்"

அப்புறமும்.....திரும்ப பாட்டு...

4."வர்ஷினி, மெரில், வெங்கடேஷ், அர்ஷித் கைலாஷ், லஷ்மி கார்த்திகா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் மேஜிக் ஸ்டிக் வேணும்..."

ம்ம்..நான் அந்த புக்கை படிச்சப்போ உலகத்துலே இருக்கிற எல்லா விளையாட்டு சாமானும் என்கிட்டே வரணும்னு ஆசையயிருந்துச்சு. (அதுவும் ஷேன்யாவோட ஆசையிலேருந்து காப்பியடிச்சதுதான் - உபயம் : நந்தலாலா)

பளிச்சுன்னு ஒரு க்ளிக் ‍‍ எனக்குத்தான்...ஹிஹி..

"நாம செடி வளர்க்கலாமா பப்பு, விதையெல்லாம் போட்டு "

பப்புவும் செம குஷியாகிட்டா.அப்போ, உப்பு-மிளகா தூள் சகிதம் மாங்காய் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். "ஆச்சி, இந்த மாங்கா சீட் வளர்க்கலாமா" - பப்புதான்.
வீடு தாங்காதுன்னு, உன்னோட விளையாட்டு சாமான்லே வளர்க்கலாம்னு சொன்னேன்.


பப்புவே, ஒழுங்கா இருக்கிற விளையாட்டு சாமானைத் தேடி எடுத்துட்டு வந்ததும், 'பெயின்ட் பண்ணிட்டு காஞ்சதும் மண் போட்டு சீட் போடலாம்'னு ஐடியா பண்ணோம். ஒரு மணி நேரம் - பப்புவுக்கு நல்ல டைம் பாஸ். எனக்கும் லேப்டாப்.
அடுத்த நாள் (டிச 3) காலையில எழுப்புறதுக்கு நல்ல சாக்கு இருந்துச்சு. மண்ணு போட்டு விதை போடலாம்னு சொன்னதும் பப்பு துள்ளி குதிச்சு எழுந்தாச்சு.ஆனா, அன்னைக்கு நேரம் இல்லாததாலே (ஹிஹி...எவ்ளோ பெரிய தொட்டி!!) முடியலை. சாயங்காலம் வந்து மண்ணை நிரப்பிட்டு கடுகு, வெந்தயம் (அகெய்ன்..ஹிஹி) எல்லாம் எடுத்துக் கொடுத்தேன். மண் - கடுகு-மண் போட்டு மூடியாச்சு.

சூரிய வெளிச்சம் வேணும்னு ஜன்னல்கிட்டேயும் வைச்சோம். மூன்லைட்லே வளருமா, இல்லே மூன்லைட் பட்டுச்சுன்னா குட்டியாகிடுமான்னு அடுத்தக் கேள்வி....

'எப்போ வரும், எப்போ வரும்'ன்னு ஒரு மணிநேரத்துக்கு ஒரு தொணப்பல்.
'மூணு நாளைக்கு அப்புறம்தான்'னு சொல்லி வைச்சேன்.

என்ன முக்கியமான விஷயம்னா, அதுலே ஏழு நிறப்பூ பூக்கப் போகுதுன்னு பப்பு நினைச்சுக்கிட்டிருக்கிறதுதான். 'செடி வந்துடுச்சா'ன்னு செடியை பத்தி பேசியே சாப்பாட்டு நேரமெல்லாம் ஓடுச்சு.

நேத்து காலையிலே பார்த்தா ஒரு தொட்டிலேருந்து கொஞ்சமா வெள்ளையா தலையை நீட்டி எட்டி பாக்குது - கடுகு செடிகள்.


(இன்று காலை)

எங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தாங்கலை. ஏன்னா, கடுகெல்லாம் முளைக்குமான்னு ஒரு சந்தேகம்..ஆயாக்கிட்டே கேட்டா என்னை ஏதாவது நக்கல் பண்ணுவாங்களோன்னு வேற...சரி, இது வரலேன்னா பச்சைபயறு போட்டு அடுத்த முயற்சி செய்யலாம்னு மனசுக்குள்ளே திட்டம் போட்டு வைச்சிருந்தேன். நல்லவேளையா..கடுகே முளைச்சுடுச்சு.

இந்த அஞ்சு நாளும் காலையிலே எழுந்துக்க, பப்பு மூடை மாத்த இந்த ஆக்டிவிட்டி உபயோகமா இருந்துச்சு. அதுலே ஏழு நிறப்பூ வராதுன்னு தெரியும்போது பப்புக்கு ஏமாற்றமா இருக்குமேன்னு தோணினாலும் தினமும் கொஞ்சமா தண்ணியை தெளிக்கிறது, அதை கவனிச்சுக்கிறதுன்னு நல்ல அனுபவமா இருந்துச்சு.

ஒரு ஏழு நிறப்பூ இருந்தா, அந்த செடியிலே ஒரு ஏழுநிறப்பூ பூக்கணும்னு கேக்க ஆசையாயிருக்கு. :-)

9 comments:

ராமலக்ஷ்மி said...

//ஒரு ஏழு நிறப்பூ இருந்தா, அந்த செடியிலே ஒரு ஏழுநிறப்பூ பூக்கணும்னு கேக்க ஆசையாயிருக்கு. :-)//

அது சரி:))!

நல்ல பகிர்வு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொத்தமல்லி விதைகள் போடுங்க..உபயோகமாகமாவும் இருக்கும்..அவ அதை சாப்பிடவும் செய்யலாமே..

Sriakila said...

விளையாடிட்டேத் தோட்டம் போடலாம்னு இதத்தான் சொல்வாங்களோ..

இது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். இந்தச் செடிய ரொம்ப பத்திரமா வச்சுக்கோங்க.

என்னோடக் குழந்தையின் சேட்டையைக் குறைப்பதற்கும் இந்த ஐடியா உதவும்னு நினைக்கிறேன்.

அம்பிகா said...

\\ஒரு ஏழு நிறப்பூ இருந்தா, அந்த செடியிலே ஒரு ஏழுநிறப்பூ பூக்கணும்னு கேக்க ஆசையாயிருக்கு.\\
so nice

Karthik's Thought Applied said...

silla peru rendu line yezuthitu "yezuthalar" nu sollranga....neenngalammm yevvalavoo yeluduringa....unmmaiyillayae neenga than periya yezuthalar......yenna sollringa mullaii :)

அமைதிச்சாரல் said...

பப்புவோட தோட்டம் நல்லாருக்கு.. ஏழு நிறப்பூ சீக்கிரமே பூக்கட்டும் :-))

valarmathi said...

so sweet pappu!

மாதேவி said...

இப்படி எல்லாமா பப்புவை ஏமாத்துவீங்க :)

கடுகு சிறியமஞ்சள்பூ பூக்கும் :)

அன்புடன் அருணா said...

ஜீபூம்பா!ஒரு ஏழு நிறப்பூ பார்சேல்!!!!