சாப்பிட சொன்னால் கண்டுக்கொள்ளாமல் அவள் இஷ்டத்துக்கு அங்கு செல்வதும்
இங்கு செல்வதுமாக இருந்தாள். சற்று குரலை உயர்த்தி, இப்போ சாப்பிட வரலைன்னா
அடிதான் என்றேன்.
கொஞ்சம் லேசாக மிரட்டினாலே பப்புவின் தன்மானம் பாதிக்கப்பட்டுவிடும்.சுர்ரென்று கோபம்.
நானும் விடாமல் 'இப்போ வரப்போறியா,இல்ல அடி குடுக்கட்டுமா' என்றேன்.
'நான் சாப்பிடமாட்டேன்.உனக்கென்ன?' - பப்பு
'உனக்கென்ன எனக்கென்னன்னுல்லாம் பேச கூடாது.பேட் மேனர்ஸ்.' - அடியேன்
'நான் பேட் மேனர்ஸா இருந்தா உனக்கென்ன? - பப்பு
'இன்னொரு வாட்டி உனக்கென்னன்னு வாயில் வரக்கூடாது.' என்றேன் கண்டிப்ப்பான குரலில்.
'what for you?' - பப்பு,என் குரலுக்கு சரியாக,சுவற்றிலடித்த பந்துபோல.
'ம்ம்..ஓகே..கடகடன்னு சாப்பிடு.' _ அவள் ஏதோ சொல்கிறாள் என்று நினைத்துக்கொண்டு,நான்.
'What for you?'
அப்புறம் தான் பல்பு பளிச்!பளிச்!!
உனக்கென்ன வோட இங்கிலீஷ் வெர்சன் தான் அதுவென்று!
2 comments:
/ஓகே..கடகடன்னு சாப்பிடு./
எனக்கு உடனே புரிஞ்சிடுச்சே:)!
wow....:)
Post a Comment